Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயதாச எம்.பி.யின் வீட்டுக்கு ஜனாதிபதி விஜயம்

Featured Replies

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான விஜயதாச ராஜபக்ஷவின் வீட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

 

விஜயதாச ராஜபக்ஷ எம்.பி.யின் வீட்டின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்தி அறிந்ததை அடுத்தே ஜனாதிபதி அவரது வீட்டுக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.


இந்த விஜயத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் கலந்துகொண்டதாகவும், விஜயதாச எம்.பி.யின் வீட்டில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சுமார் 30 நிமிட நேரத்தை செலவிட்டு அவருடன் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இதனையடுத்து, பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனைத் தொடர்புகொண்ட ஜனாதிபதி, மேற்படி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/55166-2012-12-20-08-28-48.html

  • தொடங்கியவர்

விஜயதாச வீட்டில் துப்பாக்கிச் சூட்டு அடையாளம்; விசாரணையில் 'ரொகீ'

 

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான விஜயதாச ராஜபக்ஷவின் வீட்டுச் சுவரில் துப்பாக்கி ரவைகள் துளைத்துள்ளமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

அத்துடன், எம்.பி.யின் வீட்டு வளாகத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் மூன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.

 

நாவல, விஜயபா மாவத்தையில் அமைந்துள்ள விஜயதாச எம்.பி.யின் வீட்டின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், ரொகீ என்கிற மோப்ப நாயையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

 

அத்துடன், விஜயதாச எம்.பி.யின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு நேற்று நள்ளிரவு வாகனமொன்று வந்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவ்வீட்டுக்கு முன்னால் வைத்து எவர் மீதேனும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/55169-2012-12-20-09-01-13.html

  • தொடங்கியவர்

22122012-md-hr-2%20copy.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.