Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கான பயணம் மீள்பரிசீலனை செய்யப்படும் - நவிப்பிள்ளை

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை  இலங்கைக்கான தனது பயணத்தை மீள்பரிசீலனை செய்திருப்பதாக ஐ.நா சபையின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முற்பகுதியில் இலங்கை வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த உத்தேச யோசனை இப்போது மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஐ.நா சபை வட்டாரங்களில் இருந்து நேற்று செய்திகள் வெளியாகியுள்ளன.

"இலங்கையின் தற்போதுள்ள அரசியல் மற்றும் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து ஆணையாளர் அலுவலகம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இலங்கைகு நேரடிப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேரடியாக நிலைமைகளை ஆராய திட்டமிட்டிருந்தார்.

எனினும் இலங்கையின் அரசியல் நிலைமைகள் இப்போதைக்கு சீராக இல்லையென்பதை சர்வதேச அமைப்புக்கள் ஐ.நாவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளன.

எனவேதான் ஆணையாளர் தனது இலங்கைக்கான பயணத்தை மீள்பரிசீலனை செய்துவருகிறார்'' என்று ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர்மட்ட இராஜதந்திரியொருவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து இந்த அதிகாரி தகவல் தெரிவிக்கையில் "கடத்தல், காணாமல்போதல், ஊடகங்கள் மீதான அடக்குமுறை, படுகொலைகள் என்பவற்றை ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளுக்கு (SPECIAL RAPPORTEUR) இலங்கை அரசு அனுமதியளிக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தக் கோரிக்கைகளுக்கு இலங்கை பதில் அனுப்பவில்லை.

எனவே விசேட பிரதிநிதிகளுக்கு முதலில் அனுமதி வழங்கினால் அதன்பின் இலங்கைக்கான தனது பயணம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் சிந்திக்கக்கூடும். இல்லையேல் ஆணையாளரின் பயணம் இடம்பெறாது'' என்றும் குறிப்பிட்டார் அந்த இராஜதந்திரி.

இதற்கிடையில் இலங்கையில் நீதித்துறை மற்றும் அதனுடன் சார்ந்த விடயங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஐ.நா. முழுமையான கவனத்தைச் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=423041721124637771

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.