Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வாழ்வியல் கருவூலம் பாகம் இரண்டு

Featured Replies

  • தொடங்கியவர்

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். 429

 

வரக்கூடிய துன்பத்தை முன்னரே அறிந்து அதனின்றும் காத்துக் கொள்ளக்கூடிய அறிவை உடையவர்க்கு , அவர் நடுங்கக் கூடிய வகையில் வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை .

 

எனது கருத்து :

 

இதை எப்பிடி நம்பிறது ??? நாளைக்கு என்ன நடக்கும் எண்டு ஒருத்தனுக்கு தெரிஞ்சால் , இண்டைக்கு அவன் எப்பிடி நிம்மதியா இருக்கேலும் ?? ஒருகதைக்கு ஒருத்தன் பிறக்கேக்கை அவன் இன்னவயசிலை , இன்ன நேரத்திலை தான் சாவன் எண்டு அவனுக்கு தெரிஞ்சால் அவனாலை சந்தோசமாய் தன்ரை வாழ்கையை நடத்த முடியுமா ???

 

The wise with watchful soul who coming ills foresee; From coming evil's dreaded shock are free.


Il n'y a pas de malheur qui fasse trembler les hommes intelligents,
les quels ont la capacité de prévoir l'avenir et de se garer.

  • Replies 146
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். 430

 

அறிவுடையவர் எல்லாம் உடையவராவர் .அறிவில்லாதவர்கள் மற்ற எல்லாப் பொருள்களும் உடையவராயினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர் .

 

எனது கருத்து :

 

என்னதான் பெரிய காசுக்காறனாயோ இல்லை சமூகத்திலை செல்வாக்கு உள்ளவனாய் இருந்தாலும் , மண்டையுக்கை ஒண்டும் இல்லாட்டில் அவன் இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டிலும் ஒண்டுதான் எண்டு சொன்னாலும் , இண்டையான் நிலமையிலை இப்பிடிப்பட்ட மொள்ளைமாரியளின்ரை கையிலைதான் அதிகாரம் கிடக்கு .

 

The wise is rich, with ev'ry blessing blest; The fool is poor, of everything possessed.

 

Les hommes qui ont l’entendement ont tout, bien qu’ils ne possèdent rien; ceux qui sont privés de l’entendement n’ont rien, bien qu’ils possèdent tout.

 

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பொருட்பால் - அரசியல் - குற்றம் கடிதல்( The Correction of Faults - De la repression des défauts 431 -440 )

 

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. 431

 

ஆணவமும் ( மதமும் ) , வெகுளியும் , அற்பத்தன்மையும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம் மேம்பாட்டுத் தன்மையை உடையது .

 

எனது கருத்து:

 

ஒருத்தர் எப்பிடியும் செல்வாக்காய் இருக்கலாம் . ஆனால் அவருக்கு மண்டைக்கனம் , தொட்டதுக்கெல்லாம் சுடுதண்ணி ஊத்தின நாய் மாதிரி கோபப்படுகிறது , பொம்பிளை விசயங்களிலை அப்பிடி இப்பிடி இருக்கிறது , இவ்வளவும் இருந்தால் அவற்றை செல்வாக்கு செல்லாக்காசாய் போடும் பாருங்கோ .

 

Who arrogance, and wrath, and littleness of low desire restrain,

To sure increase of lofty dignity attain.

 

La prospérité (du Roi) qui n'a pas d'arrogance,
de colère et de luxure, va en florissant.

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. 432

 

ஈயாத லோபமும் , மாட்சியில்லாத மானவுணர்வும் , தகுதியில்லாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றமாகும் .

 

எனது கருத்து:

 

நீங்கள் சிலபேரை பாத்தியள் எண்டால் , தனக்கு சகுனப்பிழையெண்டாலும் எதிரிக்கு மூக்குடைஞ்சால் சரி எண்டு இருப்பினம் . அதோடை தன்ரைவயசிலையும் அனுபவத்திலையும் மற்றவன் மூத்தவன் எண்டு தெரிஞ்சும் அவனுக்குள்ள மரியாதையை குடுக்காத மண்டைக்கனம் . இதோடை ஒருத்தன் உதவி எண்டு வந்தால் கஞ்சாப்பித்தனம் விடுகிறது . இப்பிடியெல்லாம் இருக்கிற ஒராளுக்கு தலமைத்துவம் எண்டது சரிவராது பாருங்கோ .

 

A niggard hand, o'erweening self-regard, and mirth

Unseemly, bring disgrace to men of kingly brith.


L'avarice, le défaut de dignité et l'excès de joie sont les défauts du Roi.

  • தொடங்கியவர்

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். 433

 

பழிச்சொல்லுக்கு நாணுகின்ற பெருமக்கள் , தினை அளவான சிறு குற்றம் வந்தாலும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதிகுற்றம் செய்யாமல் காத்துக் கொள்வர் .

 

எனது கருத்து:

 

மானம் மரியாதை மனச்சாட்சிக்கு பயந்தவன் தனக்கு ஒரு சின்ன பிரச்சனை வந்தாலும் ஏதோ மலை கவிண்டு கொண்டுண்ட மாதிரி அதை பாதுகாத்து இருப்பினம் .

 

Though small as millet-seed the fault men deem;

As palm tree vast to those who fear disgrace 'twill seem.


Ceux qui redoutent le déshonneur, considèrent leurs défauts aussi petits qu'un grain de millet, comme s'ils sont aussi gros qu'un palmier.

 

  • தொடங்கியவர்

குற்றமே காக்க பொருள்ஆகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை. 434

 

தனக்கு இறுதி பயக்கும் ( அழிவைத்தரும் ) பகைக் குற்றமே , ஆதலால் அக்குற்றம் செய்யாமல் இருப்பதே நன்மைதரும் .

 

எனது கருத்து:

 

அப்பிடி எண்டால் ஐயன் , இந்தப்பூமி பந்திலை சமாதானமும் சந்தோசமும் கொண்ட சனமல்லோ இருக்கவேணும் ??? தான் செய்யிறது குற்றம் எண்டுதெரிஞ்சு தானே மகிந்துவும் அவனின்ரை கூட்டாளியளும் செய்யிறாங்கள் . இண்டைக்கு உலகம் அவங்களைத்தானே தூக்கி பிடிக்குது ?? சும்மா வயித்தெரிச்சலை கிளப்பாதையுங்கோ ஐயன் .

 

Freedom from faults is wealth; watch heedfully

'Gainst these, for fault is fatal enmity.


C'est une faute que de s'attirer une haine mortelle; il faut se garder d'une pareille faute: on acquiert ainsi un Bien.

 

  • தொடங்கியவர்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். 435

 

குற்றம் செய்வதற்கு முன்பே , வராமல் காத்துக் கொள்பவனுடைய வாழ்க்கை , நெருப்பின் முன்னே உள்ள வைக்கோல் போர் போல் அழிந்துவிடும் .

 

எனது கருத்து:

 

சில பேரை பாத்தியள் எண்டால் , கண்டதே காட்சி கொண்டதே கோலம் எண்டு எதிலையும் சீரியஸ் இல்லாமல் இருப்பினம் . இவையள் தரவளயின்ரை சீவியம் நெருப்புக்கு முன்னாலை இருக்கிற வைக்கல் பட்டறை மாதிரி அழிஞ்சு போடும் .

 

His joy who guards not 'gainst the coming evil day,

Like straw before the fire shall swift consume away.


La vie du Roi qui ne se gare pas des défauts, avant qu'ils ne l'atteignent, est détruite comme une meule de paille exposée à la flamme.

  • தொடங்கியவர்

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கின்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு. 436

 

முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி , பிறகு பிறருடைய குற்றத்தை ஆராய்கின்ற தலைவனுக் ஒரு குற்றமும் ஏற்படாது.

 

எனது கருத்து:

 

ஒரு தலமைத்துவத்திலை இருக்கிறவன் , எடுத்ததுக்கெல்லாம் மற்றவையை குற்றம் குறை கண்டுபிடிச்சுக் கொண்டிருக்காமல் , முதலிலிலை தன்ரை முதுகுக்கு பின்னாலை இருக்கிற ஊத்தையளை கிளீன் பண்ணிப்போட்டு , மற்றவையை குற்றம் சொன்னால் பிழை வராது எண்டு ஐயன் சொன்னாலும் , ஒருத்தருக்கு சரி எண்டு படுகிற குற்றம் மற்வருக்கு பிழையாய் படாதோ ஐயன் ???

 

Faultless the king who first his own faults cures, and then

Permits himself to scan faults of other men.


De quoi peut on accuser le Roi, qui découvre d'abord ses défauts, les corrige, puis cherche à découvrir ceux de ses sujets?

  • தொடங்கியவர்

செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும். 437

 

செய்யத்தக்க நன்மைகளை செய்யாமல் செய்யாமல் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம் நிலைத்திராமல் அழிந்துபோய்விடும் .

 

எனது கருத்து:

 

நீங்கள் சிலபேரை பாத்திருப்பியள் , ஐஞ்சு சதம் மற்றவனுக்கு ஈயாமல் தங்களுக்களையே வைச்சிருப்பினம் . கடைசியிலை மண்டையை போடிற நேரம் ஒண்டும் கொண்டு போகப்போறேலை எண்டு தெரிஞ்சும் இப்பிடி இருப்பினம். கடைசியிலை இவையளின்ரை சொத்துப்பத்துகள் எல்லாம் ஏதோ ஒரு வழியிலை அழிஞ்சு போயிடும் .

 

Who leaves undone what should be done, with niggard mind,

His wealth shall perish, leaving not a wrack behind.


Le trésor du Roi qui par une parcimonie serrée, se refuse ce qui ne s'acquiert que par la richesse, se détruit sans profit.

  • தொடங்கியவர்

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க
நன்றி பயவா வினை. 439

 

எப்போதும் தன்னை உயர்த்திப் பேசுதல் கூடாது ; நன்மை தராத செயலை விரும்பவும் கூடாது .

 

எனது கருத்து:

 

ஆருக்கும் என்னவும் இருக்கலாம் மண்டைக்கனம் இருக்கக்கூடாது கண்டியளோ . இந்த மண்டைக்கனத்தாலை கவிண்டு கொட்டுண்டவை கனபேர் . இதே மண்டைக்கனம் தான் ஒருத்தரை ஏதாவது நல்லவிசையம் செய்ய விருப்பப்பட்டாலும் தடுக்கிற சாமான் . இந்த மண்டைக்கனம் ஒரு தலைமைத்துவத்திலை இருக்கிறவனுக்கு கூடவே கூடாது .

 

The greed of soul that avarice men call,  When faults are summed, is worst of all.

 

Ne vous surestimez jamais par arrogance. Ne désirez pas même par la pensée, les entreprises qui ne peuvent vous causer du bien.

 

  • தொடங்கியவர்

பற்றுஉள்ளம் என்னும் இவறுஅன்மை எற்றுஉள்ளும்
எண்ணப் படுவதுஒன்று அன்று. 438

 

யாருக்கும் உதவமல் பொருளின் மீது பற்றுக் கொண்ட உலோபித்தனம் , குற்றங்களில் பெருங்குற்றமாகும் .

 

எனது கருத்து:

 

ஒருத்தன் பிழைசெய்யிறதே பெரிய பாவம் . அதிலை தேடிற தேட்டங்களை மற்றவனுக்கு குடுக்காமல் பொத்திப் பொத்தி வைச்சிருக்கிற கஞ்சாப்பிக் குணம்தான் பிழையிலை பெரிய பிழை .

 

The greed of soul that avarice men call,  When faults are summed, is worst of all.


L'avarice qui consiste à thésauriser sans faire les dépenses indispensables ne doit pas être comptée parmi tous les défauts (est plue grande que ceux-ci).

 

 

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். 440

 

தம் விருப்பத்தை பிறர் அறியாத படி நுகர வல்லானாகில் , பகைவர் செய்யும் சூழ்ச்சிகள் பயன்ற்றுப் போகும் .

எனது கருத்து:

 

தான் என்ன செய்யப்போறன் எண்டதை மத்தவன் அறியாமல் செய்தால் பகையாளியாலை பிரச்சனை வராது எண்டால் , ஏன் இந்த போருகள் கன இடத்திலை தோல்வியிலை முடியுது???

 

If, to your foes unknown, you cherish what you love,

Counsels of men who wish you harm will harmless prove.


Le Roi qui a l'habileté de jouir des choses désirées, sans laisser deviner ses désirs et leur objet, rend vaines les machinations de ses ennemis.

  • தொடங்கியவர்

பொருட்பால் - அரசியல் - பெரியாரைத் துணைக்கோடல் ( Seeking the Aid of Great Men - Soutien des Grands. 441 -450 )

 

 

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். 441

 

அறத்தின் தன்மைகளை ஆராய்ந்து தன்னைவிட மூத்த ( சிறந்த ) அறிவுடையவர்களின் நட்பைக் கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ளவேண்டும் .

 

எனது கருத்து :

 

அப்பிடி போடுங்கோ ஐயன் . அதுதான் மகிந்து தன்னை விட மூத்த ஆக்கள் எண்டு இந்தியா சப்பட்டை எண்டு கனபேரோடை கூட்டு வைச்சுப் போட்டு , இப்ப விசாரிக்கப் போறம் எண்டு உலகநாடுகள் எல்லாரும் சொல்ல , மகிந்து குறூப் ஆளாக்கு காட்டிக்குடுக்காதை எண்டு பினைபடுனம் .

 

As friends the men who virtue know, and riper wisdom share,

Their worth weighed well, the king should choose with care.

Que (le Roi) recherche l'amitié des hommes intelligents plus âgés que lui et qui connaissent le prix de la vertu, en connaissance de la valeur de cette amitié et des moyens de l'obtennir.

  • தொடங்கியவர்

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். 442

 

வந்த துன்பத்தை நீக்கி , இனித் தன்பம் வராதபடி காக்கவல்ல தகுதியுடைய பெரியோர்களைத் துணையாக்கிக் கொள்ள வேண்டும் .

 

எனது கருத்து :

 

ஓ..... அப்ப இதைத்தான் டிப்பளொமெசி எண்டு சொல்லுறதோ ஐயன்??? நாங்களும் டிப்பொளமசியிலை கரைகண்டனாங்கள்தானே ??? அப்ப எங்கை சறுக்கினம் ???

 

Cherish the all-accomplished men as friends,

Whose skill the present ill removes, from coming ill defends.


Qu'il accorde toute satisfaction, à ceux qui sont capables de guérir les maux présents et de prendre des mesures pour en prévenir le retour et qu'il se les attache avec soin.

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். 443

 

பெரியாரை அவர்கட்கு உவப்பானதைச் செய்து தம்மவராக ஆக்கிக்கொள்ளுதல் ஒருவர் பெறக்கூடிய சிறந்த பேறுகள் யாவற்றுள்ளும் மிகச் சிறந்ததாகும் .

 

எனது கருத்து :

 

பெரியாக்கள் எண்டால் ஆர் பெரியாக்கள் ??? தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காறன் எண்டமாதிரி பெரியாக்கள் இருக்கினம் . இதுக்குள்ளை இவையளை குசிப்படுத்தி எங்களோடை வேறை சேர்க்க சொல்லிறியள் . வளைஞ்சு நெளிஞ்சு காரியம் செய்யிறவனுக்கு என்னமொரு பேர் கிடக்கு மொள்ளமாரி எண்டு .

 

To cherish men of mighty soul, and make them all their own,

Of kingly treasures rare, as rarest gift is known.


C'est une rare des rares fortunes des Rois, que celle d'honorer les hommes de telles qualités, en leur donnant ce dont ils ont besoin et de les rendre ainsi les leurs.

 

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாந் தலை. 444

 

தம்மிலும் அறிவில் மேம்பட்ட பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு அவர்வழியில் நடத்தல் ஒருவர்க்குரிய வலிமைகள் எல்லாவற்றிலும் சிறந்த வலிமையாகும் .

 

எனது கருத்து :

 

முதல்லை தலமைப்பதவியிலை இருக்கிறவன் குற்றம் குறையளை ஏத்துக்கொள்ளுறவனாய் இருந்தால்தான் ஐயன் நீங்கள் சொன்னது நடக்கும் . மகிந்தா மாதிரி தனக்கு சிங்சக் போடுறவையை பெரியாக்கள் எண்டு சொல்லி வைச்சிருந்தால் எப்பிடி அந்த அரசு உருப்படும் ???

 

To live with men of greatness that their own excels,

As cherished friends, is greatest power that with a monarch dwells.


C'est une force capitale (du Roi) que celle de gagner l'intimité de ceux qui lui sont supérieurs en sagesse et de suivre leurs conseils.

 

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.445

 

தக்க வழிவகைகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடப்பதால் , மன்னன் அத்தகையவரைத் தன் சுற்றமாகக் கொள்ளல் வேண்டும் .

 

எனது கருத்து :

 

இதைத்தான் இந்தக் கொள்கைவகுப்பாளர் எண்டு சொல்லுறவை தங்கடை விருப்பு வெறுப்புகளுக்கு ஏத்தமாதிரி தங்கடை அரசுகளை நடத்திக்கொண்டிருக்கினம் . அதிலையும் எங்கடை பக்கத்து நாட்டுக் கொள்கை வகுப்பாளர் சொல்லிவேலையில்லை .

 

The king, since counsellors are monarch's eyes,

Should counsellors select with counsel wise.


Puis qu'il faut gouverner, en considérant ceux qui l'entourent comme ses yeux, que le Roi les choisisse et s'assure de leur concours.

 

தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது தில். 446

 

தகுந்த பெரியோரின் குழுவில் உள்ளவனாக தகுதி பெற்ற ஒருவனுக்கு , பகைவர்களால் ஏற்படக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

 

எனது கருத்து :

 

படியாதவையை சவர் நிலத்துக்கு ஒப்பிடிறதும் , அவையை செத்தசவத்துக்கு ஒப்பிடிறதும் சரிதான் . ஆனால் எவ்வளவோ படிக்காத மேதையள் எக்கச்சக்கம்சாதனையளை செய்திருக்கிறாங்கள் ஐயன் .

 

The king, who knows to live with worthy men allied,

Has nought to fear from any foeman's pride.


II n'y a pas de mal. que les ennemis puissent faire à un Roi, qui a le concours des grands hommes et qui a le pouvoir de se conduire avec sagesse.

  • தொடங்கியவர்

இடிக்கும் துணையாரை ஆள்வரை யாரே
கெடுக்கும் தகைமை யவர். 447

 

கடிந்து அறிவுரை கூறும் பெரியவர்களின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கக் கூடிய எவருளர் ?

 

எனது கருத்து :

 

நீங்கள் சொல்லிறது " நான்" இல்லாதவனிட்டை எடுபடும் ஐயன் . "நான் " இருக்கிறவனிட்டை எடுபடாது .சும்மாவே சொல்லீச்சினம் கெடுகுடி சொல் களாது எண்டு .

 

What power can work his fall, who faithful ministers Employs, that thunder out reproaches when he errs.


Quels sont les ennemis, qui peuvent se flatter de nuire au Roi, qui sait apprécier le mérite des ministres qui lui reprochent ses fautes et gouverne suivent leurs bons conseils ?

 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும். 448

 

குற்றங் கண்டபோது வற்புறுத்தி அறிவுரை கூறித் திருத்தவல்ல பெரியோர்களைத் துணையாகப் பெற்றிராத அரசன் , கெடுக்கும் பகைவர் இல்லாவிட்டாலும் தானே கெட்டழிவான் .

 

எனது கருத்து :

 

ஒரு தலமைப் பொறுப்பிலை இருக்கிறவன் தன்னைச் சுத்தி ஜால்றா போடுற ஆக்களை வைச்சிருந்தால் , எதிரி அவனைப்பற்றி கனக்க யோசிக்கத் தேவையில்லை . அவனே கெட்டளிஞ்சு போவான் .

 

The king with none to censure him, bereft of safeguards all,

Though none his ruin work, shall surely ruined fall.


Se perd lui-même, sans avoir d'ennemis, le Prince qui n'est pas protégé, parce qu'il n'a pas de Ministres qui le réprimandent.

 

  • தொடங்கியவர்

முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை; மதலையாம்
சார்புஇலார்க் இல்லை நிலை. 449

 

முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை , அது போலத் தம்மைத் தாங்கும் துணையில்லாத அரசர்க்கு அதனால் வரும் நிலைபேறு இல்லை .

 

எனது கருத்து :

 

ஒரு தலமைத்துவத்திலை இருக்கிறவனுக்கு , அவன் பிழையள் விடுகிற நேரத்திலை அவனைச் சுத்திவர நல்ல புத்திமதி சொல்லிற ஆக்கள் வேணும் . இல்லாட்டில் கடலிலை போட்ட உப்பு மாதிரி போடும் அவனின்ரை பிழைப்பு .

 

Who owns no principal, can have no gain of usury;

Who lacks support of friends, knows no stability.


Point de bénéfice pour celui qui n'a pas de capital; de même point de stabilité, pour le Roi qui n'a pas de défenseurs qui le soutiennent.

  • தொடங்கியவர்

பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். 450

 

பலரோடு பகைத்துக் கொள்வதைவிட , நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிடுதல் பத்துமடங்கு தீமை உடையதாகும் .


எனது கருத்து :

 

இந்தக்காலத்திலை நல்லவனைத் தேடிப்பிடிக்கிறதே பெரிய காரியமாய் கிடக்கு . அப்பிடி ஐஞ்சாறு
பேர் கிடைச்சாலும் , அவையை மொக்குத்தனமாய் கைவிட்டால் ,கன சனங்களோடை பகை
வளர்க்கிறதை விட டேஞ்சரான விசையம் . இதுதான் உலகத்திலை இருந்த
சர்வாதிகாரிகளின்ரை கடைசிக்காலங்களிலை நடந்தது .

 

Than hate of many foes incurred, works greater woe

Ten-fold, of worthy men the friendship to forego.


Abandonner l'amitié des hommes de Bien est dix fois pire,
que s'attirer personnellement la haine de plusieurs.

 

 

  • தொடங்கியவர்

பொருட்பால் - அரசியல் - சிற்றினம் சேராமை (Avoiding mean Associations , La non-fréquentation des gens Vils (Fréquentation des gens).451 -460 )

 

 

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும் 451

 

பெரியோர் சிற்றினத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்குவர் :சிறியோர் அதையே சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வர்

 

எனது கருத்து :

 

இந்தக் குறளைப் பாக்க எனக்கு சிரிப்பாய் வருகுது . எப்பிடியெண்டால் படிச்சவன் பண்பானவன் செத்தாலும் குள்ளப் புத்தி உள்ள ஆக்களோடை சேரமாட்டான் அவையை எட்டத்திலைதான் வச்சிருப்பான் . ஆனால் இவை என்ன செய்வினம் அவன்தான் ராசா எண்ட கணக்காய் அவனுக்கு சாமரம் வீசிக்கொண்டிருப்பினம் .

 

The great of soul will mean association fear;

The mean of soul regard mean men as kinsmen dear.

 

La Grandeur redoute la Vileté. La Bassesse s'apparente à la Vileté.

  • தொடங்கியவர்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. 452

 

நீர் , தான் நிலத்தின் இயல்புக்கு ஏற்பத் தன் இயல்பு திரிந்து அந்நிலத்தின் தன்மையுடையதாகும் . அதுபோல மக்களுக்கு அறிவு ,அவர்கள் சேர்ந்த இனத்தின் இயல்புக்கு ஏற்ப அமையும்

 

எனது கருத்து :

 

இடம் அறிந்து சேர் எண்ட ஒரு சொலவடை இருக்கு . ஒரு தண்ணி நிலத்திலை சேரேக்கை தன்ரை குணத்தை நிலத்துக்கு ஏத்தமாதிரி மாத்திப்போடும் . அதேமாதிரித்தான் படிச்சவை எண்டு சொல்லுறவையின்ரை குணமும் சேருற இடத்தைப் பொறுத்து மாறி இருக்கும்

 

The waters' virtues change with soil through which they flow;

As man's companionship so will his wisdom show.

L'eau est altérée par la nature du sol qu'elle traverse et prend les propriétés de celui-ci : de même, l'intelligence des hommes est altérée par ceux qu'ils fréquentent' et s'approprie leurs caractères.

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல். 453

 

மக்களுக்கு இயற்கை அறிவு மனத்தால் உண்டாகும் இவன் இத்தன்மையன் என்று உலகினரால் அறியப்படும் சொல் அவன் சேர்ந்த இனத்தல் ஏற்படும்

 

எனது கருத்து :

 

ஒருத்தன் என்னதான் படிச்சு அறிவாளியாய் இருந்தாலும் , அவனை இன்னார் எண்டு சொல்லிறது அவன் சேர்ற கூட்டத்தை வைச்சுக் கொண்டுதான் . கர்ணன் துரியோதனனோடை சேந்தமாதிரி .

 

Perceptions manifold in men are of the mind alone;

The value of the man by his companionship is known.

 

Les sentiments de l'homme dépendent (de la tournure) de son esprit ; ainsi la réputation faite par lé monde à un homme est causée par la qualité de son entourage.

  • தொடங்கியவர்

மனத்து உள்ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்து உள்ள ஆகும் அறிவு. 454

 

அறிவு , ஒருவனது மனத்தில் உள்ளது போலக்காட்டினாலும் அவன் சேர்ந்த இனத்தை ஒட்டியதாகவே உண்டாகும் .

 

எனது கருத்து :

 

ஒருத்தன் நல்ல அறிவாளியாய் இருக்கலாம் பிழையில்லை . ஆனால் அவன் சேர்ந்த இடம் பிழையெண்டால் அந்த அறிவு சேர்ந்த இடத்தாலையே வெளியிலை வரும் . அதாலை இடம் பார்த்து உறவு கொள் எண்ட முதுமொழியையும் நாங்கள் பாக்கவேணும் பாருங்கோ .

 

Man's wisdom seems the offspring of his mind;

'Tis outcome of companionship we find.


Les sentiments semblent résider dans l'âme;
ils sont, en réalité, le résultat de l'entourage.

 

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும்.455

 

மனத்தின் தூய்மை, செய்யும் தொழிலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே இருக்கும்.

 

எனது கருத்து :

 

எங்கடை போராட்டத்திலை தம்பிக்கு பின்னாலை சேர்ந்த பெடியள் மாதிரி , ஒருத்தன் சேர்ந்த இடம் கிளீனாய் இருந்தால் தான் அவனின்ரை மனமும் செய்கையளும் கிளீனாய் இருக்கும் கண்டியளோ .

 

Both purity of mind, and purity of action clear,

Leaning no staff of pure companionship, to man draw near.


La pureté du coeur et celle de l'action proviennent toutes les deux de la pureté des gens de l'entourage.

  • தொடங்கியவர்

மனந்தூயார்க்கு எச்சம்நன்றுஆகும்; இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை. 456

 

மனம் தூய்மையாக உடையவர்களுக்கு மக்கட்பேறு நன்றாகும் . இனம் தூய்மையாக உள்ளவர்க்கு எல்லாம் நன்மையாக முடியும் என்பதாம் .

 

எனது கருத்து :

 

மனம்போல வாழ்க்கை எண்டு சொல்லுவங்கள் . அதுபோலத்தான் இனமும் கள்ளம் சூது வாது இல்லாமல் கிளீனாய் இருந்தால் , அந்த இனம் நினைச்சதெல்லாம் நடக்கும் என்று நீங்கள் ஒன்னாலும் , தமிழன் எந்த இடத்திலை ஐயன் குறைஞ்சு நிண்டவன் ???

 

From true pure-minded men a virtuous race proceeds;

To men of pure companionship belong no evil deeds.

 

Les purs de cœur ont une bonne postérité et à ceux qui ont un bon entourage, il n'y a pas d'action qui ne soit bonne.

 

  • தொடங்கியவர்

மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும். 457

 

இவ்வுலகில் வாழும் மக்களுக்கு மனம் நலமுடையதாக இருந்தால் அது செல்வத்தைக் கொடுக்கும் . சேரும் இனம் நல்லதாக இருந்தால் அது செல்வத்தோடு எல்லாப் புகழையும் கொடுக்கும் .

 

எனது கருத்து :

 

ஒருத்தனுக்கு மனம் நல்லாய் இருந்தால் அவனுக்கு தேவையான எல்லாமே கிடைக்கும் . அதோடை அவன் நல்லவையோடை சேர்ந்தால் அவினின்ரை கொடி எட்டி பறக்கும் எண்டு நீங்கள் சொன்னாலும் , இந்தக்காலத்திலை சந்தர்ப்பவாத கூட்டணியள் ஒண்டாய் சேர்ந்து மகிந்தாவை போல கெட்டவனையும் அல்லோ நல்லவனாக்கிறாங்கள் ஐயன் .

 

Goodness of mind to lives of men increaseth gain;

And good companionship doth all of praise obtain.


La pureté du coeur donna la prospérité aux hommes, tandis que la pureté de l'entourage procure toutes les gloires.

 

  • தொடங்கியவர்

மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து. 458

 

மன நன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும் .

எனது கருத்து :

 

ஒருத்தன் என்னதான் படிச்சு அறிவாளியாய் இருந்தாலும் அவன் சேர்ற கூட்டத்தாலைதான் அவனுக்கு வலிமை வருகிது எண்ட சொல்லுறியள் .ஆனால்பாருங்கோ இப்ப சந்தர்பவாதக் கூட்டணியள் தானே வலிமையளை கொண்டு வருகுது . உதாரணத்துக்கு சந்திரிகாவோடை சேர்ந்த 3 தமிழ் கல்விமான்கள் .

 

To perfect men, though minds right good belong,
Yet good companionship is confirmation strong.


Bien qu'ils possèdent la bonté du cœur par leurs bonnes œuvres (antérieures), le bon entourage est un Vigoureux soutien pour les Sages.

  • தொடங்கியவர்

மனநலத்தின் ஆகும் மறுமை ; மற்றுஅஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. 459

 

மனத்தின் நலத்தால் மறுமை இன்பம் உண்டாகும் . அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும் .

 

எனது கருத்து :

 

ஒருத்தன் நல்லமனசாலை சந்தோசப்பட்டாலும் அவன் சேர்ற கூட்டத்தாலை சிறப்பாய் இருக்கிது எண்டு சொல்லுறியள் . ஆனால் கூட்டு சேர்றது எண்டுறதே சூழ்நிலையளுக்கு ஏத்தமாதிரிதானே ஐயன் ??? மகிந்தா இந்தியாவுக்கு ஒரு வாலையும் சீனாவுக்கு ஒரு முகத்தையும் காட்டிறதும் ஒரு கூட்டுத்தான் .

 

Although to mental goodness joys of other life belong,

Yet good companionship is confirmation strong.

 

La bonté du cœur conduit aux délices du ciel et elle est fortifiée par le bon entourage.

 

நல்இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீஇனத்தின்
அல்லல் படுப்தூஉம் இல். 460

 

ஒருவனுக்கு நல்லோர் சேர்க்கையினும் சிறந்த துணையும் வேறு இல்லை . தீயோர் கூட்டுறவினும் துன்பம் தரும் கொடிய பகையும் வேறு இல்லை.

 

எனது கருத்து :

 

ஒருத்தனுக்கு நல்ல கூட்டுகள்தான் விடிவைத் தரும் கூடாத கூட்டாலை துன்பமும் பகையும் வரும் எண்டு சொல்லுறியள் ஆனால் இண்டைக்கு பொய் பித்தலாட்ட கூட்டுகள்தானே ஒருத்தனுக்கு விடிவை தருகிது அல்லாட்டில் எப்பிடி மகிந்தாவுக்கு வாழ்க்கை கிடைச்சுது????

 

Than good companionship no surer help we know;

Than bad companionship nought causes direr woe.
 

Il n'y a pas pour l'homme, de meilleur soutien que le bon entourage et il n'y a rien de plus préjudiciable, que le mauvais entourage.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.