Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஃபிஸ்கல் க்ளிஃப்': அமெரிக்க பொருளாதாரம் தேறுமா.. வீழுமா? முடிவு அரசியல்வாதிகள் கையில்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
'ஃபிஸ்கல் க்ளிஃப்': அமெரிக்க பொருளாதாரம் தேறுமா.. வீழுமா? முடிவு அரசியல்வாதிகள் கையில்!!
 
 
OBAMA-articleLarge.jpg


வாஷிங்டன் (யு.எஸ்): அதிபர் தேர்தல் முடிந்தவுடன், ‘ஃபிஸ்கல் க்ளிஃப்' எனப்படும் பொருளாதார தேக்க நிலைக்கான அறிகுறி, அமெரிக்காவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் வருமான வரியை குறைத்து சட்டம் இயற்றினார். அந்த வருமான வரிக்குறைப்பின் காலம் 2012 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
 
 
வரிக்குறைப்பை நீட்டிக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ, அமெரிக்கப் பாராளுமன்றத்தில் புதிதாக சட்டம் இயற்ற வேண்டும். அதுவும் டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாகவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு அதிபர் ஒபாமாவின் ஒப்புதல் கையெழுத்தும் இடப்பட வேண்டும். வரி கூடும்-பொருளாதாரம் சரியும் ஓருவேளை புதிய சட்டதிருத்தம் இயற்றப்படாவிட்டால், ஜனவரி 1ம் தேதி முதல் பழைய பில் க்ளிண்டன் காலத்து வரிவிகிதம் தானாகவே அமலுக்கு வந்துவிடும்.
 
 
ஏழை, பணக்காரர் பாகுபாடு இல்லாமல் அனைவரும் அதிக வருமான வரி செலுத்த வேண்டி வரும். புதிய சட்டம் மூலம் வருமான வரியை குறைக்கும் சட்டம் இயற்றித்தான் நிலைமையை சீராக்கமுடியும். என்னதான் பிரச்சனை? அதிபர் ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்தில் 250 ஆயிரம் டாலருக்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியை நிச்சயமாக உயர்த்துவோம்.
 
அதற்கு கீழே உள்ளவர்களுக்குட் தற்போதைய (புஷ் ஆட்சிக்கால) வரியே நீடிக்கும் என்று வாக்கு கேட்டு வெற்றிபெற்றார். அதான் ஆட்சியை பிடித்து விட்டாரே, அப்புறம் என்ன நிறைவேற்றி விட்டு போகவேண்டியதுதானே என்றால், காங்கிரஸ் சபையில் ஒபாமா கட்சியினருக்கு பெரும்பான்மை பலம் இல்லை.
 
 
காங்கிரஸ் சபையில் நிறைவேற்றி பின்னர் செனட் சபையிலும் வழி மொழியப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகே அதிபர் ஒபாமா கையெழுத்திட முடியும். செனட் சபை தீர்மானத்தை காங்கிரஸ் உறுதி செய்யவும் வழி வகை இருக்கிறது. குடியரசுக் கட்சியின் பிடிவாதம் பணக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கும்
 
 
குடியரசுக் கட்சியினர் பழைய புஷ் காலத்து வரியே அனைவருக்கும் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அதிபர் ஒபாமாவும், அவருடைய ஜனநாயகக் கட்சியினரும் அதற்கு உடன்படவில்லை. 250 ஆயிரம் வருமான வரம்பிலிருந்து 400 ஆயிரம் என, ஒபாமா தளர்த்திக் கொண்டார். மேலும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்பாக காங்கிரஸ் சபையில் தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் சபை தலைவர் ஜான் பேனர் ஒரு சமரசத் திட்டத்தை முன்வைத்துப் பார்த்தார்.
 
 
அவரது சொந்த கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். எந்த முடிவும் எட்டாமலே கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு உறுப்பினர்கள் சென்று விட்டனர். பங்கு சந்தை வீழ்ச்சி அரசியல்வாதிகளின் வீண்பிடிவாதம், சரியான கொள்கை முடிவு எடுக்க முடியாத அரசு என்ற அவப்பெயருடன், நிலையற்ற தன்மையை உருவாக்கிவிடும். தொழில் நிறுவனங்களில் மூதலீடு செய்வதை குறைத்துக் கொள்வதுடன் வேறு நாடுகளுக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது.
 
 
புதிய வேலைவாய்ப்புகளை நிறுத்தி வைக்கவும் செய்வதால், பொதுமக்களிடம் அச்ச உணர்வு ஏற்பட்டு, சேமிப்பு அதிகரிக்கும். சந்தையில் விற்பனை குறையும், மீண்டும் பொருளாதார தேக்க நிலைக்கு கொண்டு போய்விடும் என வல்லுனர்கள் கடுமையாக எச்சரித்து வந்துள்ளனர். மீண்டும் பேச்சு வார்த்தை இந்நிலையில் இன்று, காங்கிரஸ் சபை மற்றும் செனட் சபையின் இரு கட்சி தலைவர்களையும் ஒபாமா அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
 
 
பேச்சு வார்த்தை முன்னேற்றமாக இருப்பதாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஒபாமாவும் செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செனட் சபையில் இரு கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் இயற்ற முயற்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை இந்த தீர்மான நிறைவேற்றப்பட்டால், காங்கிரஸ் சபையின் ஒப்புதல் பெற்று திங்கள் இரவுக்குள் அதிபர் ஒபாமா கையெழுத்திடவேண்டும். உடனடித் தீர்வுக்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே இது இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான பரபரப்பான காட்சிகளுடன் அமெரிக்க அரசியல் களம் விறுவிறுப்பாக காணப்படுகிறது. கூடவே பொருளாதார வல்லுனர்களும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்!

 http://tamil.oneindia.in/news/2012/12/29/world-us-leaders-hurry-avert-fiscal-cliff-167058.html
 
 
 
டிஸ்கி:

பொருளாதார நிபுணர் அவர்கள் இதன் தாக்கங்களை பற்றி எழுது மாறு கள உறவுகள் சார்பில் அன்புடன் அழைக்க படுகிறார் :icon_idea::rolleyes: :rolleyes:

 

வரவை விட செலவு அதிகம். எவ்வாறு சமன் செய்வது?, என்பதே கேள்வி.

எந்த முடிவையும் மூவர் அங்கீகரிக்கவேண்டும்:
- செனட் (  குடியரசு கட்சி பலத்தை கொண்டது)
- காங்கிரஸ் ( ஜனநாயக கட்சி பலத்தை கொண்டது)
- சனாதிபதி (ஒபாமா, ஜனநாயக கட்சி )

 

வரியை அதிகரிக்கவேண்டும். யாரின் வரியை எத்தனை வீதத்தால் அதிகரிப்பது என்பதே பிரச்சனை.


ஜனநாயக கட்சி அதிக செல்வந்தர்களின் மீதான வரியை உயர்த்த விரும்புகின்றது. குடியரசு கட்சி  அதை எதிர்க்கின்றது.

 

இரு கட்சிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. இருந்தாலும் அமெரிக்க மக்களின் எதிர்ப்பை இரண்டு கட்சிகளுமே விரும்ப மாட்டா.



அமெரிக்க கடன், பணவீக்கம், பிரச்சனைகள் : அழகான விளக்கம்

 

எவ்வாறு பொருளாதார ரீதியாக உலகம் அழிக்கப்படலாம் என்பதை மூன்று நிமிடத்தில் அறிந்துகொள்ள...

 

பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன என செய்திகள் கூறுகின்றன. அநேகமாக ஒரு தீர்வு முதலாம் திகதிக்கு முன்னர் எட்டப்படும்.

ஒரு தீர்வு எட்டப்படாவிட்டால் என்ன நடக்கும்?
 

முக்கியமாக பல வட்டிவீதங்கள் சடுதியாக அதிகரிக்கும். அதனூடாக பெறப்படும் பணமே பல அடிப்படை தேவைகளுக்கும்   பயன்படுவது.

 

ஆனால், வட்டியை அதிகரிக்க அதை யாரால் இன்றுள்ள நிலைமையில் கட்ட முடியும்??


நடுத்தர வர்க்கம்? இல்லை அதியுயர் பணக்காரார்?? - இங்கேதான் இழுபறி. யாரிடம் எவ்வளவு வீதம் அதிகரிக்கவேண்டும் என்பதே விவாத பொருள்.

ஒருவித உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் விபரங்கள் முழுமையாக வெளிவரவில்லை.

 

Fiscal cliff: Outline of a deal begins to emerge

 

The contours of a deal to avert the US "fiscal cliff" were emerging with just hours before a midnight deadline, according to reports.

 

  • The deal in the works would raise tax rates on families making more than $450,000 a year to 39.6pc, AP reported.
  • The tax on estates worth more than $5m would increase to 40pc from 35pc. 
  • Unemployment benefits would continue for one year. Without that extension, 2m people would lose benefits beginning in early January.

 

http://www.telegraph.co.uk/finance/economics/9773454/Fiscal-cliff-Outline-of-a-deal-begins-to-emerge.html

 இன்று வாக்கெடுப்பு நடக்காது எனவும் இந்த பொருளாதார சிக்கல் காலக்கெடுவை மீறி செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் நல்ல முடிவு கிடைத்தாலும் நாளை முதலாம் திகதி இதன் தாக்கம் இருக்கும், ஆனால், நாளை விடுமுறை  :D

 

Fiscal cliff deadline to pass as talks on deal continue – live updates

LIVE• Over the cliff: House says it will not vote tonight
• Senate continues work on deal
• Mitch McConnell says there's agreement on taxes
• Obama says fiscal cliff deal is 'within sight'

 

http://www.guardian.co.uk/world/2012/dec/31/fiscal-cliff-congress-deadline-live

அரசியல்வாதிகளின் இழுபறி காரணாமாக பல அமெரிக்கர்கள் கோபமும் எரிச்சலும் கொண்டுள்ளனர்.

 

 

fiscalclifffix.jpg

"பிஸ்கல் கிளிப்' தவிர்ப்பு மசோதா அமெரிக்க செனட் ஒப்புதல்

 

பணக்காரர்களுக்கு, அதிக வரி விதிக்க வழி செய்யும் மசோதாவுக்கு, அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா, நிதி பற்றாக்குறையை சமாளிக்க, செலவினங்களை குறைத்து, வரி விகிதங்களை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இந்த நடவடிக்கைக்கு, பிஸ்கல் கிளிப் என்று பெயர். பிஸ்கல் கிளிப் அமலானால், அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். பொருள்களின் விற்பனை குறைந்து, பொருளாதார பாதிப்பு ஏற்படும்.

 

இதனால், உள்நாட்டு உற்பத்தி சரியும் அபாயம் உள்ளது. அமெரிக்காவின் கடன் சுமை அதிகரிப்பதை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. இது தொடர்பாக, துணை அதிபர் ஜோ பிடன், எதிர்க்கட்சியினருடன் விவாதித்தார். இந்த பேச்சு வார்த்தையில், முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து, பிஸ்கல் கிளிப்பை முடிவுக்கு கொண்டு வரும் மசோதாவுக்கு, அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வாரம், இது தொடர்பான மசோதா, பார்லிமென்ட்டின் இருசபைகளிலும் நிறைவேற்றப்பட உள்ளது.

 

http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%9A-190900310.html

 தீர்வு எட்டப்பட்டது  :D

 

The US House of Representatives has passed a bill which avoids the prospect of the nation's economy going over the fiscal cliff.


The 257-167 bipartisan vote averts income tax increases for most US workers which had been scheduled to come into effect in the new year.


Read more: http://www.smh.com.au/business/world-business/us-reaches-fiscal-cliff-deal-20130102-2c4qp.html#ixzz2Gn1AfeNT

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.