Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு சென்ற கனேடிய அமைச்சர் சிறிலங்கா அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jason-kenney.jpg

சிறிலங்காவில் தொடர்ந்தும் மனிதஉரிமைகள் மீறப்படுவதாகவும், பொறுப்புக்கூறுவதற்கோ, அரசியல்தீர்வுக்கோ உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார் கனேடிய குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜாசன் கென்னி. 

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் இன்று காலை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

“சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசியல் ரீதியிலான நல்லிணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. 

மனிதஉரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இது தொடர்பாக கனடா அக்கறை செலுத்தி வருகிறது. 

சிறிலங்கா அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது இது தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளேன். 

போரின்போது இரு தரப்பினராலும் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். 

அத்துடன் அரசியல்தீர்வு தொடர்பாக உறுதியான முன்னேற்றங்களை வெளிப்படுத்த வேண்டும். 

உறுப்பு நாடுகளுக்கான கொமன்வெல்த் அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய சிறிலங்கா நடந்து கொள்ள வேண்டும். 

சிறிலங்காவில் மனிதஉரிமை மீறல்கள் தொடர்வது, அரசியல்தீர்வு எட்டப்படாதது, மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படாதது ஆகிய மூன்று காரணங்களாலும் தான் பெருமளவானோர் கனடாவுக்கு குடிபெயர்கின்றனர்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130107107555

இவ்வாறான கருத்துக்களையே பொதுநலவாய நாடுகளின் அமர்வில் கனடா கலந்து கொண்டால் தெரிவிக்கும்.
ஆனால், கலந்துகொள்ளாவிட்டால் மேலும் சிறப்பு.

இலங்கையில் விசாரிப்பு என்ற பேச்சுக்கே சர்வதேச நாடுகள் இடமளிக்கக் கூடாது. அவர்கள் தங்கள் தேவைக்காக சிராணியை பதவியில் தொடர்ந்து வைத்திருக்க பார்க்கிறாரர்கள். அது சாத்தியமானால்,அதன் பின், சிராணியின் முன் போர்க்குற்றம் என்ற வழக்கே எடுத்துவர வேண்டிய தேவை இருக்காது. சிராணி இராசபகசாக்காளால் அடிபணியபண்ணப்படாவிட்டாலும், தான் மக்களுடனும் அரசுடனும் ஒரே நேரத்தில் மோதுவதை தவிர்க்க, சிங்கள் மக்களுக்காக, அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்றும் புலிகள்தான் புரிந்தார்கள் என்றும்தான் தீர்ப்பு வழங்க போகிறார்.

 

சிராணிக்கு நடந்ததை பார்த்த எந்த ஒரு நீதிபதியும் அரசுக்கு எதிராக இனிமேல் தீர்ப்பு வழங்க மாட்டார்கள் என்பதை மேற்குலகம் புரிந்துகொள்ள வேண்டும்.

மனித உரிமை நிலவரம்: இலங்கைக்கு கனடா எச்சரிக்கை

 

இலங்கையின் மனித உரிமைகள் சூழ்நிலையில் திருப்தியளிக்கக்கூடிய முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டால், இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதை கனடியப் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் தவிர்ப்பார் என்பதை இலங்கையிடம் தான் தெளிவுபடுத்தியிருப்பதாக இலங்கை வந்துள்ள கனடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னடி கூறியுள்ளார்.


இலங்கையில் யுத்தத்துக்கு பின்னருங்கூட மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் நீடிப்பதாக கனடா உணர்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130107_canadalankahumanrights.shtml

ஆனால் இன்று காலை CMR இல் இந்த ஆள் கணக்க காசு கட்டி வரவேண்டாம் என்று சொன்னதை தான் ஒலி பரப்பினார்கள்

to Kenney.J@parl.gc.ca
cc min.dfaitmaeci@international.gc.ca

The Honorable Jason Kenney,
Minister of Citizenship and Immigration Canada
Ottawa, Ontario
K1A 1L1

 

January 7, 2013

Dear Hon. Minister Jason Kenney:


Re: HR violations still taking place in SL-Canada

I welcome your speech in Colombo where you had expressed Sri Lanka's violations of basic Human Rights. And like in any state, the minorities are hard hit by these violations.

Despite many assurances political solution for ethnic problem remain elusive. Only international pressure can only be fruitful. And for that we need a collective steps with real strings attached.

Yours truly,

ஆனால் இன்று காலை CMR இல் இந்த ஆள் கணக்க காசு கட்டி வரவேண்டாம் என்று சொன்னதை தான் ஒலி பரப்பினார்கள்

 

 

இன்று கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் கோட்டலில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கைகளை கனடியக் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சு வெளியிட்டுள்ளது. இச் சந்திப்பில் பேசிய கனடிய குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

ஆட்கடத்தல்க் காரர்கள் மூலம் கனடா வர விரும்புபவர்களிற்கு நாங்கள் விடுக்கும் காட்டமான செய்தி யாதெனில், தயவு செய்து அப்படியான வழிகளில் கனடா வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள். உங்கள் பணத்தைக் கறக்கும் மேற்படி ஆட்கடத்தல்காரர்கள் உங்களை நட்டாற்றில் விடுகிறார்கள் என்பதையும் கவனத்திலெடுங்கள் என்று தெரிவித்தார்.

கனடா அகதிகள் விவகாரத்தில் காருண்யமாகச் செயற்படும் நாடு என்பது உண்மை. அதற்காக அந்த நடைமுறையை ஆட்கடத்தல்காரர்களினுடைய முயற்சிகளினூடாக மீற முயன்றால் நீங்கள் அவர்களிற்குக் கட்டிய காசை இழக்கின்றதைத் தவிர எதுவுமே உங்களிற்கு நடக்கப்போவதில்லை என்று காட்டமாகத் தெரிவித்தார்.

சிறீலங்கா உளவுப்பிரிவு மற்றும் படைத்துறைகளின் சேவைகளினால் மிக அண்மைக் காலங்களில் அவர்கள் பயணத்துறையை (இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டுமுன்பே) பயணங்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன. இது போன்றே கடந்த இரண்டு வருடங்களாக இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தடுக்கப்பட்டன என்பதையும் தெரிவித்தார்.

KenneySL-600x450.jpg

கனடியப் பிரதமர் இந்த ஆட்கடத்தல் முயற்சிகளைத் தடுக்க 12 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதைக் குறிப்பிட்ட கனடியக் குடிவரவு அமைச்சர் கனடிய உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்புப் பிரிவுகள் ஏனைய நாடுகளிலுள்ள அந்த நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுடன் தகவற் பரிமாற்றத்தில் ஈடுபட்டிக்கின்றன என்பதையும் தெரிவித்தார்.

இதேவேளை போரின் பின்னரான இணங்களின் மீள இணைதல் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றம் பெறவில்லையென்பது தொடர்பான கனடாவின் அக்கறையையும் பதிவு செய்ததுடன், பொதுநலவாய நாடுகளின் குறிக்கோள்களிற்கு ஏற்ப சிறீலங்கா இனங்கள் ஒன்றிணைந்து வாழுதல் என்ற தேசியப் பிரச்சினையில் ஒரு தீர்வைக் காண வேண்டுமெனவும், போரின் போது மனிதவுரிமை விவகாரங்களில் இரு தரப்பும் புரிந்த குற்றங்கள் ஆராயப்பட வேண்டுமென்றும், கனடா பிற நாடுகள் ஏற்படும் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பான வன்முறைகளிற்கு எதிராகவே செயற்படும் என்றும் தெரிவித்தார்.

r-JASON-KENNEY-5.jpg

அமைச்சரின் இந்தப் பயணத்தின் போது மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகள், கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தயபாய இராஜபக்ச ஆகியோரையும் சந்தித்தத்தோடு, கனடாவிலுள்ள சிறீலங்கா நட்புறவுக்கழகத்தின் ஏற்பாட்டின் பெயரிலான சில விழாக்களிலும் கலந்து கொண்டார்.

அத்தோடு அமைச்சர் ஜேசன் கெனி தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலைக்கான நிவாரண நிதியாக 19 ஆயிரம் டொலர்களை இலங்கையிலுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான கரிராஸ் அமைப்பிற்கு வழங்கியுள்ளார். இந்தத் தொகை இலங்கை நாணயத்தில் 1.9 மில்லியன் ரூபாய்களேயாகும்.

உண்மையான சிறிலங்கா அகதிகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் புகலிடம் தேடவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார் கனடாவின் குடியுரிமை, குடிவரவு, பல்கலாச்சார அமைச்சர் ஜாசன் கென்னி. 

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

“அவுஸ்ரேலியா, கனடாவை அடைவதற்கு உயிருக்கு ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்ப்பதற்காக உண்மையான சிறிலங்கா அகதிகள் இந்தியாவில் புகலிடம் தேடிக் கொள்ள வேண்டும். 

முன்னர், மோதல்களின் போது, பாக்கு நீரிணையைக் கடந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்ததைப் போன்று, அவர்கள் இப்போதும் அங்கு அடைக்கலம் தேடிக் கொள்ளமுடியும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.