Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

106 மேலதிக வாக்குகளினால் குற்றப்பிரேரணை நிறைவேற்றம்

Featured Replies

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு  எதிரான குற்றப்பிரேரணை அறிக்கை 106 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது.

 

அறிக்கைக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56734-2013-01-11-13-16-28.html

 

 

  • தொடங்கியவர்

Sri Lanka Chief Justice Shirani Bandaranayake is impeached

 

The Sri Lankan parliament has voted to remove Chief Justice Shirani Bandaranayake in a move analysts say could trigger a constitutional crisis.

 

The chamber, dominated by supporters of Sri Lanka's president, voted to impeach her by 155 votes to 49.

 

The government accuses her of corruption - an allegation she denies.

 

Recent court rulings said the process was unconstitutional and she may refuse to leave. But the president must now decide whether to enforce the sacking.

 

Critics of the government say that the judge is being victimised and the independence of the judiciary is being challenged. The government denies this.

 

The BBC's Charles Haviland in Colombo says that after the vote supporters of the government took to the streets and rallied outside her official residence to celebrate her sacking.

 

Our correspondent says that recent rulings from the Supreme Court and the Court of Appeal have quashed the whole impeachment process.

 

Reports say that the chief justice is already arranging her schedules for the next week in her current job in defiance of the vote.

 

The impeachment process has in recent weeks triggered protests by thousands of opposition supporters, lawmakers, lawyers and religious leaders.

 

It has also been criticised by human rights groups who have raised concerns over judicial integrity in the country.

 

Dr Bandaranayake, 54, faced an 11-member parliamentary committee in November which investigated 14 charges of financial and official misconduct against her. She was found guilty of professional misconduct the following month.

 

Her supporters say she has been targeted because she has made a series of rulings unfavourable to President Mahinda Rajapaksa.

 

http://www.bbc.co.uk/news/world-asia-20982990

  • தொடங்கியவர்

பிரதம நீதியரசரின் வீட்டுக்கு முன்பாக அமைச்சர்கள் .

 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பிரதம நீதியரசரின் வீட்டுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

 

கோல்டன் கீ வைப்பீட்டாளர்களே பிரதம நீதியரசரின் வீட்டுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா,மஹிந்தாநந்த அளுத்கமகே, டிலான் பெரேரா,லசந்த அழகிய வண்ண ஆகியோரே பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56747-2013-01-11-15-36-51.html

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் ஜனநாயகமே ஒரு கேலிக்கூத்து.. இப்ப அந்த நாடகத்தை மேற்குலகமும் கண்டு களிக்கவேண்டிய நிர்ப்பந்தம்.. :D

  • தொடங்கியவர்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு  எதிரான குற்றப்பிரேரணை அறிக்கை 106 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது.

 

அறிக்கைக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56734-2013-01-11-13-16-28.html

 

இதேவேளை, நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது குற்றப்பிரேரணை அல்ல எனவும் மற்றுமொறு குழுவை நியமிப்பதற்கான அங்கீகாரமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இன்றிரவே ஜனாதிபதி - சபாநாயகர் சந்திப்பு; கடிதமும் சமர்ப்பிக்கப்படும் .

 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான கடிதத்தை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று இரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கையளிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதம நீதியரசரை பதிவியிலிருந்து நீக்குவதான தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்ட கடிதத்தை பிரதம நீதியரசருக்கு அனுப்பி வைப்பார் என்பதே அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது குற்றப்பிரேரணை அல்ல எனவும் மற்றுமொறு குழுவை நியமிப்பதற்கான அங்கீகாரமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56746-2013-01-11-15-33-05.html

  • தொடங்கியவர்

டியூ, கஜதீர, திஸ்ஸ, ரஜீவ், ஆகியோர் வாக்களிக்கவில்லை:ரங்கா எதிர்த்து வாக்களிப்பு .

 

குற்றப் பிரேரணைக்கு எதிரான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், அமைச்சர்களான டியூ குணசேகர, சந்திரசிறி கஜதீர மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் அந்த வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

 

அத்துடன், ஆளுங்கட்சி எம்.பி.யான ரஜீவ விஜேசிங்க வாக்களிக்கவில்லை, எதிரணி உறுப்பினரான ஸ்ரீ ரங்கா  எதிர்த்து வாக்களித்தார் இதன் போது ஐக்கிய தேசியக்கட்சியினர் மேசையில் தட்டி வரவேற்றனர்.

 

எனினும் லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த வை.ஜி.பத்மசிறி, அரசாங்கத்துடன் இணைந்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56741-2013-01-11-14-42-11.html

ஆளுங்கட்சி எம்.பி.யான ரஜீவ விஜேசிங்க வாக்களிக்கவில்லை - நியமன எம்.பி என்பதால்தான் அப்படி. தேர்தலில் நின்றிருந்தால் சிங்கள மக்களுக்கு வேண்டியது என்ன என்பது புரிந்திருக்கும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

டக்ளசும் கருணாவும் ஆதரவாக வாக்களித்திருப்பார்கள்.

இது தோற்கடிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது வெல்லப்பட்டதாலோ தமிழர்களுக்கு எந்தவிதமான மாற்றத்தினையும் கொண்டு வர மாட்டாது. இலங்கையின் நீதித் துறை தமிழ் மக்கள் மீதான அனைத்து அடக்குமுறைகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து வந்தது மட்டுமன்றி தமிழ் மக்களின் தாயக கோட்பாட்டினைச் சிதறடிக்கக் கூடிய அனைத்து விட சட்ட மூலங்களுக்கும் அங்கீகாரம் கொடுத்த ஒரு அமைப்பு. பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் போன்ற தமிழர்களை அழிக்க துணை புரிந்த அனைத்து சட்டங்களுக்கும் துணை நின்ற சிங்கள பேரினவாத இயந்திரம் தான் இலங்கை நீதித் துறை.

 

சர்வதேச அளவில் மகிந்த அரசுக்கு எதிரான கண்டனங்களைக் கொண்டு வர இது உதவலாம். ஆனால் அந்தக் கண்டனங்கள் இன்னொரு சிங்கள பேரினவாத அரசை ஆட்சியிலேற்ற மட்டுமே துணை நிற்கும். அத்துடன், சர்வதேச கண்டனங்களை தமிழர்களுக்கு சாதகமாக்கக் கூடிய ஒரு பலம் பொருந்திய அமைப்பு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எக்னமிஸ்ட் தமிழர்கள் இதை எதிர்த்து முழுமனதாக போராடவில்லை என்பது போல எழுதியிருந்தது. அதை மேற்கு நாட்டு அரசுகளின் விருப்பமாக கணிக்கலாம். இப்படி உசுப்பேத்து எதற்கும் பலன் படாது.

 

மேற்குநாடுகள் இலங்கையில் தமது அஜெண்டாவைத்தான் முன் வைக்கிறார்கள். இலங்கையின் எந்த நியாயமான பிரச்சனையிலும் தலையிடத் தயார் இல்லை. இது தொடர்ந்து சீனாவுக்குதான் லக்குகாக இருக்கும்.

 

இலங்கையில் சர்வாதிகாரம் தலைதூக்க இனப்பிரச்சனைதான் காரணம் என்பதை அவர்கள் ஒத்துக்கொள்ளத்தயாராக இல்லை. இலங்கையை குடியரசாக்கும் சட்டமூலம் கொண்டுவந்ததே பிறிவு கவுன்சில் அரைகுறையாக கோடீஸ்வரன் வழக்கில் நீதி தீர்த்தமையால் ஆகும். அன்று மேற்கு நாடுகள் இலங்கை குடியரசாவதை 100%மும் ஏற்றார்கள். சிற்றினத்துக்கான சோல்பரி பாதுகாப்பு அரசியல் அமைப்பிலிருந்து நீக்கப்ப்ட்டது.

 

இன்று சிராணி திவிநிகும எதிர்ப்புக்கு அரைகுறையாக நீதி தீர்த்தா. இதனால் அவர் பதவி நீக்கப்படுகிறார். அன்று இங்கிலாந்து நீதியரசர்களை பதவி நீக்க முடிய வில்லை. ஆனால் அரசியல் அமைப்பு திரும்ப எழுதப்பட்டது. 

 

திவிநிகுமவுடன் முரணும் 13ம் திருத்தம் இனி நீக்கப்படாவிட்டாலும் அதில் ஒரு பலனும் இல்லை.

 

 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

தமிழர்கள் சர்வதேசத்திற்கு கூற வேண்டிய விடயங்கள்:

 

- நீதித்துறை என்பதற்கு சுதந்திரம் இல்லை, இதனால் மேலும் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் - சிறுபான்மையினத்தவர்கள்

 

- சிங்களம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்தை கொண்டுள்ளது - அரசியல் தீர்வை முன்வைக்கலாம்

  • தொடங்கியவர்

மகிழ்ச்சி ஆரவாரம்...

 

H01(51).jpg

 

H06(4).jpg



http://tamil.dailymirror.lk/--main/56749-2013-01-11-16-05-54.html

  • தொடங்கியவர்

பிரதம நீதியரசரின் வீட்டின் முன் பால்சோறு சமைத்து கொண்டாட்டம்

 

IMG_8215.jpg

 

IMG_8159.jpg

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2512

IMG_8159.jpgகென்ன

 

என்ன இந்த பாவாடைக் கூட்டத்தை பார்க்க பயங்கர காடைக்கூட்டம் மாதிரியல்லவா இருக்கிறது.

2009 மே 19திலும் இப்படித்தான் வெடி கொழுத்தி கொண்டாடியவர்கள்.

 

சிலாபம் கோவில் திருவிழாவை குழப்பியவர் ஏற்கனவே  குழம்பிப்போய் இருக்கிறார்.  

 

இராமநாதனின் வெற்றியை, தங்கள் வெற்றியாக மதித்து வண்டிலில் பூட்டியிருந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டு வண்டிய தங்கள் இழுத்து தங்கள் மனத்தின் பெருந்தனமையை காட்டிய சிங்கள மக்களை, டி.எஸ். சேனநாயக்கவினதும் பண்டாரநாய்க்காவினதும், வகுப்புவாத வெறி நெறிப்படுதல் ஒருவனின் வேதனையை இன்னொருவன் கொண்டாடுவதுதான் இன்றைய கீழ்த்தரமான சிங்கள-பௌத்த கலாச்சாரமென்றாக்கிவிட்டது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் குற்றப் பிரேரணை சபையில் வெற்றி; நாடாளுமன்றில் நேற்று கடும் வாதப்பிரதிவாதங்கள்
 
 இலங்கை ஜன நாயக சோஷலிசக் குடியரசின் முதல் பெண் பிரதம நீதியரசரான கலா நிதி ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவிநீக்கம் செய்யும் குற்றவியல் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
 
குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 20 பேர் சபைக்கு சமுகமளிக்க வில்லை.
 
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான கட்சிகள் குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அதே வேளை, ஆளுந்தரப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.
 
இதையடுத்து இந் தத் தீர்மானம் ஜனாதி பதிக்கு அனுப்பிவைக் கப்படும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்தார். நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமை யில் சபை கூடியது. அதன்போது நேற்றைய தினம் இரண்டாவது நாளாகவும் பிரதம நீதி யரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை விவாதத்துக்கு எடுத் துக்கொள்ளப்பட்டது.
 
ஆளும் மற்றும் எதிர்த் தரப்பினருக்கிடையே காரசாரமான வாதப்பிரதிவாதங்கள்   இடம்பெற்றுவந்த நிலையில், இரவு 7.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
 
இதன்படி, பிரதம நீதியரசரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் பிரேரணை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அனுப்பிவைக்கப்படவுள்ளது என சபாநாயகர் அறிவித்தார்.
 
சுயாதீனக் குழு ஆராயும்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தனக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிரேரணையை, நால்வர் அடங்கிய சுயாதீனக் குழுவொன்றினூடாக ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி இறுதி தீர்மானத்தை மேற்கொள்வார்.
 
ஆளுந்தரப்பின் 116 எம்.பிக்கள் கையொப்பமிட்ட, 14 குற்றச்சாட்டுகள் அடங்கிய  பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை, கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி கொண்டுவரப்பட்டது.
 
இந்தக் குற்றவியல் பிரேரணையை விசாரிப்பதற்காக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் 11பேர் அடங்கிய விசேட தெரிவுக்குழு கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டது.
 
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில், ஆளுந்தப்பின் சார்பில் 7 பேரும், எதிர்க்கட்சிகள் சார்பில் ஐ.தே.கவில் இவரும், ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தலா ஒவ்வொரு பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டனர்.
 
அத்துடன், தெரிவுக்குழு நியமிக்கப்பட்ட நாள்முதல் ஒருமாத காலத்துக்குள் இந்தத் தெரிவுக்குழு தமது விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் சபாநாயகரால் பணிக்கப்பட்டிருந்தது.
 
இதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த தெரிவுக்குழு முன்னிலையில் பிரதம நீதியரசர், நவம்பர் மாதம் 23ஆம் திகதி முதல்முதல் ஆஜரானார். தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை நிரூபிப்பதற்காக தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூற அவர் கால அவகாசம் கோரினார். அதையடுத்து தெரிவுக்குழுவால் அவருக்கு இருவாரகால அவகாசம் வழங்கப்பட்டது.
 
இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் நான்காம் திகதி இரண்டாவது தடவையாக தெரிவுக்குழு முன்னிலையில் சமுகமளித்த பிரதம நீதியரசர், தெரிவுக்குழு விசாரணைகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறவில்லை என்றும், தெரிவுக்குழுவின் ஆளுந்தரப்புப் பிரதிநிதிகளில் இருவர் தன்னை தகாத வார்த்தைகளால் நிந்தித்தனர் என்றும் தெரிவித்து தெரிவுக்குழு விசாரணைகளிலிருந்து அதிரடியாக வெளிநடப்புச் செய்தார்.
 
டிசெம்பர் 7ஆம் திகதி இடம்பெற்ற தெரிவுக்குழு விசாணையில், பிரதம நீதியரசர் கலந்துகொள்ளவில்லை. அதனையடுத்து, குற்றவியல் பிரேரணையை தெரிவுக்குழு விசாரித்து வந்தபோது, ஆளுந்தரப்பினரால் விசாரணைகள் பக்கச்சார்பாக நடத்தப்படுகின்றன என்று தெரிவுக்குழுவின் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நால்வரும் விசாரணை நடவடிக்கைகளிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
 
தன்னிச்சையான அறிக்கை
அதன்பின்னர், ஆளுந்தரப்பின் 7 தெரிவுக்குழுப் பிரதிநிதிகளும் குற்றவியல் பிரேரணை தொடர்பில் தன்னிச்சையாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கைத் தயாரித்து, பிரதம நீதியரசர் குற்றவாளி என்று டிசம்பர் 8ஆம் திகதி அறிவித்தது.
 
பிரதம நீதியரசருக்கு எதிரான 14 குற்றச்சாட்டுக்களுள் 5 ஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஆளுந்தரப்பின் தெரிவுக்குழு பிரதிநிதிகள், அவற்றுள் 1, 3, 5 ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன என்றும் 2,5 ஆகியன நிராகரிக்கப்பட்டன என்றும் தெரிவித்தனர்.
 
இந்தத் தெரிவுக்குழு விசாரணை நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறுகோரி 7 ரிட் மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமனறில் தாக்கல் செய்யப்பட்டன.
 
அத்துடன், தெரிவுக்குழு அறிக்கையின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறுகோரி, டிசம்பர் 19ஆம் திகதி பிரதம நீதியரசர் தரப்பால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, 21ஆம் திகதி விசாரணைகளுக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரியதுடன், சபாநாயகர் உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்களை கடந்த 3ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு விடுத்தது.
 
கடந்த 3ஆம் திகதி  தமிழ்க் கூட்டமைப்பு, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மட்டும்  மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகினர். நிலையியல் கட்டளைகள், சட்டங்கள் அல்ல என்றும், தெரிவுக்குழுவும் அதன் அறிக்கையும் சட்ட வலுவற்றது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
தெரிவுக்குழு அறிக்கையை
இரத்துச் செய்யத் தீர்ப்பு
 
இதேவேளை, பிரதம நீதியரசரின் ரிட் மனு மீதான விசாரணையை 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. இதன்படி குறித்த மனுவை 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், தெரிவுகுழு அறிக்கையை இரத்து செய்யுமாறு தீர்ப்பளித்தது.
 
இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பினையும், சட்டத்தரணிகள், எதிர்க்கட்சியினர், சர்வதேச அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் கருத்திற்கொள்ளாது நேற்றுமுன்தினமும், நேற்றும் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தி, வாக்கெடுப்புக்கு விட்டு பிரேரணையை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
12 ஜனவரி 2013, சனி 8:30 மு.ப

பக்கத்து வீட்டு அல்சேசன் நாய் குரைக்கிறதை கேட்டு எங்கவீட்டு பெட்டை நாயும் போட்டிக்கு  குரைத்தது!

 

இதுதான் இலங்கையின் சர்வல்லமை படைத்த ஜனாதிபதிக்கும் பிரதம நீதியரசர் சிராணிக்கும் இடையில் நடக்கும் பலப் பரீடசை. மேற்கு நாடுகள் இலங்கையில் உள்ளே வர கதவை திறவென்றபோது அதை திறக்க  முயன்று தோற்றிருக்கிறது உயர்நீதிமன்று. 

 

சிராணி பதவிக்கு வந்த கதை வழமையான இலங்கையின் அரசியலில் ஒருபாகம்தான். அதில் அவர் "நான் ராஜபக்சா குடும்பத்தை விட படித்தானான்" என்ற மிடுக்கு நினைப்புக்கு இடமளித்தது தவறு. சிராணிக்கு ஒன்று தெளிவாக விளங்க வேண்டும்; "தான் மட்டும் அல்ல ,தேவையாய் இருந்தால் சட்டக் கல்லூரியில் சோதனை எழுதாமலே பாஸ் பண்ணிய நாமல் வரைக்கும் இலங்கையின் பிரதம நீதி அரசர் பதவில் வந்து அமரமுடியும்" என்பது. இந்த பதவிக்கு தேவையானது அறிவும், அனுபவமும் அல்ல. உயரத்தூக்கிப்பிடிக்க ஒரு அரசியல் பந்தமே. இதில் அவ தன்னை பெரிதாக காட்ட முயல்வது பேதமை. 1948க்கு பின்னர் அதை அலங்கரித்த வெள்ளையர், தமிழ்ர், பறங்கியர் வரைக்கும்தான் அதில் தரம் இருந்தது. அதன் பின்னர் உயர் நீதிமன்றக்கட்டிடம், பாராளுமன்ற மேளத்திற்கு காண்டியன் டாண்ஸ் நடக்கும் இன்னொரு தெருக்கூத்தாடிகளின் கொட்டகையாகிவிட்டது. நீதி அரசர் பதவியும் ceremonial post மட்டுமென்றாகிவிட்டது.

 

சிராணி வந்த அதே அரசியல் கதவைவே திறந்து அரசு, அவவை வெளியே போ என்று சொன்ன போது போய் இருந்தால், குடும்பம், சொத்து, கௌரவம் நிம்மதி  பலவற்றை சிராணி காப்பாற்றியிருக்கலாம். இனி அவற்றில் பல நடுத்தெருவில்தான். பிரதீப் காரியவாசத்தை காக்க சிராணி நீதிமன்றை பாவித்து திவி நெகும்ப சட்டமூடாக சவால் விடுத்தது தவறு. இதில் சிராணி தனக்கு பதவி போட்டுத்தந்தவர்களின் நலத்தை மறந்து, சுயநலம் காரணமாக, அவ ஆடியிருக்க வேண்டிய கண்டியன் டான்ஸை ஆடாமல், இடையில் வந்த மேற்கு நாடுகளின் தளத்திற்கு பலே டான்ஸ் ஆடியிருந்தா.  

 

இலங்கையில் சமாதனத்தை காப்பாற்ற தவறிய தலைமைகளான D.S.சேனநாயக்கா, S.W.R.D. பண்டாராநாயக்கா போன்றோர் இலங்கையின் சுதந்திரத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள். "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி".  அந்த வகையில் இலங்கையில் இந்தியா வந்திறங்கத்தக்கதாக, தலையால் அல்லாமல் வாயால் மட்டும், இலங்கை தலைவர்கள் தொடர்ந்து அரசியல் செய்தார்கள். அன்று அதை கண்டு பிடித்து அன்றே திருத்தாமல், சீனாவின் சீலைக்கு கீழ்ப் போய் ஒழிந்தர்கள். இதனால் இன்று சரவதேசமும் அரசியல் செய்யும் தனித்தீவாக இலங்கைத் தீவை மாற்றிவிட்டார்கள்.

 

மேற்கு நாடுகள் இலங்கை அரசியலில் புகுவதற்காக, சுதந்திரம் தேடிய புலிகளை தோற்கடித்தார்கள். அதில் பெரிய பலன் ஒன்றும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பொன்சேக்காவை தூண்டினார்கள். ஆனால் அந்த பந்தயத்தில் சறுக்கி விழுந்த பொன்சேக்காவை காப்பாற்ற அவர்களேதான் ஓடிவரவேண்டியிருந்தது.  இன்று சிராணியையும், உச்ச நீதிமன்றத்தையும் தூண்டிவிட்டிருக்கிறார்கள். பொன்சேக்கா மாதிரியே கண்ணை மூடிக்கொண்டு மேற்கு நாடுகளின் இசைக்கு ஆடிய நீதி மன்றம், தெரிவுக்குழு விவகாரத்தில் என்ன பிழையை கண்டது என்பது தெரியவில்லை. ஒரு நாட்டு நீதி மன்றும், பராளுமன்றமும் பலப்பரிசையில் போவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. அரசியல் அமைப்பு சட்டங்கள், அவை ஒன்றை ஒன்று, தேவையாயின்,  கண்டிக்கத்தக்க முறையில் தான் வழமையில் வரையப்படும். ஆனால் அதற்கென ஒரு விதி இல்லாமல், இலங்கை உச்சநீதிமன்றம், போட்டியில் இறங்கியதுதான் வீட்டுக்குலிருந்து பெட்டைநாய் குரைத்தது மாதிரி  இருந்தது. 

 

நீதிமன்றம் இலங்கை பாராளுமன்றத்தின் கீழ் இருக்க வேண்டும் என்றுதான் கோடிஸ்வரன் வழக்கின் பின்னர் இலங்கை குடியரசாக்கப்பட்டு அரசியல் அமைப்பு மாற்றி எழுதப்பட்டது. இன்று வரை அது இரண்டு அமைப்புக்களாலும் ஒற்றுமையாகவே பின் பற்றப்பட்டும் வந்தது. இதில் தனி ஒரு நீதி அரசர் தனது கணவருடன் அரசு முரணுகின்றது எனபதற்காக தான் நீதித்தீர்பை அரசுக்கு எதிராக வழங்கிவிடமுடியும் என்று நப்பாசை வைத்தது தவறு. சிராணி கொடுத்த திவி நிவிகும்ப சட்டத்திற்கெதிரான தீர்ப்புக்கு சிங்கள மக்களிடமிருந்து ஆதரவு வரப்போவதில்லை. இதை மீறி பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட தெரிவு குழுவை நீதிமன்றம் கட்டுப்படுத்த முயன்ற போது தனது கட்சி மீதான ஆணையை மதித்து எதிர் கட்சி தலைவரே நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க மறுத்துவிட்டார். மேற்கு நாடுகளின் தூண்டுதலால் ஆடும் நீதிமன்றம் பாரளுமன்றத்தை கட்டுப்படுத்த முயல்வதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.  

 

எந்த ஜனநாயக நாட்டிலிலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கு மேல் வந்தால் சட்டத்தை மாற்ற முடியும். இது இலங்கையில் ஒவ்வொரு அடுத்த தேர்தலிலும் சிங்கள கட்சிகளுக்கு கிடைக்கிறது. பதவியை பிடிக்க வேண்டுமாயின் தமிழரை எதிர்த்து ஒரு மேடையில் பேச வேண்டியது மட்டும்தான் என்ற நிலை இலங்கையில் இருக்கிறது. இந்த யதார்த்தை மறந்த சிராணி  தனது கணவரை காப்பாற்ற நீதிமன்ற பதவியை பாவித்து தமிழருக்கு ஆதரவான 13ம் திருத்தை எதிர்த்த திவி நிகும்ப சட்டத்தை கையில் எடுத்தார். அதில் ஆரம்பித்த நாடகம் மேற்கு நாடுகளின் தலையீட்டால் இன்றுஅவரையே காப்பாற வேண்டிய நிலைக்கு இட்டு சென்றுவிட்டது.  

 

இது நாடகத்தின் முடிவு மாதிரி தெரியவில்லை. ஏன் எனில் மேற்குநாடு தமக்கு இலங்கையில் கிடைக்க வேண்டிய பங்குக்கு ராஜபக்சா கதவை திறப்பார் என்றுதான் அவர்கள் அவருக்காக புலிகளை தோற்கடித்தார்கள். ஆனால் அவர் உடனே கதை மூடிவிட்டதுமல்ல, இருக்கத்தக்க பின்கதவுகளான பொன்சேக்கா, சிராணி போன்றவற்றையும் தாள்ப்பாள் போட்டு மூடிவிடுகிறார். எக்கொனொமிஸ்ட் எழுதிருந்த கட்டுரையை படித்தால் வேறு எதாவது யன்னல்களாவது திறந்திருக்கா என்றுதான் மேற்கு நாடுகள் தேடுவது போல இருக்கு. இது மேற்குநாடுகளும் ராஜபக்சாவும் இடையிலான கள்ளன் பொலிஸ் விளையாட்டின் ஆரம்பம் போலத்தான் படுகிறது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

பிளவு இல்லை

 

குற்றவியல் பிரேரணை தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் இந்த வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தனர்.


அமைச்சர் டியு.குணசேகர, திஸ்ஸ விதாரன, மற்றும் சந்திரசிறி கஜதீர போன்றோர் இந்த வாக்களிப்பில் கலந்துக் கொண்டிருக்கவில்லை.

 

எனினும், இடதுசாரிகள் கட்சியின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
இந்த நிலையில் இது இடதுசாரிகள் கட்சிகளுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்பட்டது.

 

எனினும் அதனை நிராகரித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களாலேயே வாக்களிப்பில் கலந்துக் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

 

http://www.hirunews.lk/tamil/51323

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.