Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றப்பிரேரணை விவகாரம்: கமலேஷ் சர்மா கரிசனை

Featured Replies

இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்டமை கவலையளிப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் அமைப்பு கரிசனை காட்டியுள்ளதாகவும் அதன் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

 

 

இலங்கை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலான நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு  இலங்கை அரசாங்கத்தை பொதுநலவாய அமைப்பு வலியுறுத்தி வந்தது. அதுமட்டுமன்றி குற்றப்பிரேரணை விவகாரம் அரசியலமைப்பையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.


பிரதம நீதியரசருக்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முன்னர் நீதித்துறை மற்றும் சட்டவாக்கம் ஆகியவற்றுக்கு இடையிலான பிரதிபலிப்புக்களை  பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

இலங்கை அரசாங்கத்திற்கு பொதுநலவாய அமைப்புடன் மிகவும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. ஆகையினால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு வழியை கண்டுப்பிடிப்பதற்கு பொதுநலவாய அமைப்பினால் உதவமுடியும் என்றார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56771-2013-01-12-07-23-41.html

  • தொடங்கியவர்

கமலேஸ் சர்மாவை தமது கைக்குள் வைத்திருந்து வருகின்றது சிங்களம்.

 

ஆனால் பிரதம நீதியரசரை நீக்கினால் சர்மாவாலும் காப்பாற்ற முடியாமல் போய்விடலாம்.

தனது பதவியை தக்க வைக்க கமலேஷ் கமலஹாசனை மிஞ்சிவிடுகிறார். 

பொதுநலவாய நாடுகள் அமைப்பும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு!

— 

16/01/2013 at 9:33 am

 | 1 comment

 

93211f85-e2d9-43a9-9920-2a0ed37d7c641-15இலங்கையின் பிரதம நீதியரசரை அரசாங்கம் குற்றப்பிரேரணையினை முன்வைத்து பதவி விலக்கியமையானது பொதுநலவாய நாடுகளின் அரசியல் அமைப்பையும், அதன் கொள்கைளையும் மீறும் செயலாகும்  என பொதுநலவாய நாடுகள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. குறித்த விடயத்தினையடுத்து இலங்கை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவை என்பது குறித்து பொதுநலவாய நாடுகள் ஆராயவுள்ளதாக அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரதம நீதியரசருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றவியல் பிரேரணை நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து கமலேஸ் சர்மா தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

எனினும் இலங்கை அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது பிரதமநீதியரசரை பதவி நீக்கம் செய்துள்ளது.

எனவே இந்த செயல் இலங்கையின் நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் குழப்பங்களை அதிகப்படுத்தியுள்ளதுடன், பொதுநலவாய நாடுகளின் நன் மதிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கமலேஸ் சர்மா எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கான விஜயம் ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
  • தொடங்கியவர்

அடுத்தமாதம் வரும் சர்மா, கார்த்திகை மாதத்தில் இலங்கையில் நடக்கவுள்ள மாநாடு சம்பந்தமாக சில செய்திகளை / கோரிக்கைகளை முன்வைப்பார் என நம்பலாம்.

 

அதற்கு சிங்களம் இணங்காவிட்டால் இவர்களிடம் அதற்கு வேறு மாற்று திட்டம் இல்லை என்பது சிங்களம் அறிந்த உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.