Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தொன்மையான தமிழினத்துக்கு தனி நாடொன்றினை அமைப்பதே நாடு கடந்த தமிழீழ அரசின் குறிக்கோள்!" - தமிழ் மரபுத் தைத்திருவிழாவில் பிரதமர் உருத்திரகுமாரனின் உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
TGTE-120113-Canada-seithy-160113-150.jpg

"உலகிலுள்ள மொழிகளில் மிகத் தொன்மையானதும் இன்று வரை தொடர்ந்து நிலைத்து நிற்பதும் எமது தாய் மொழியான தமிழ் மொழியாகும். திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி தமிழ். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முதற் சங்கம் இடைச் சங்கம் கடைச் சங்கமென முச்சங்கங்கள் அமைக்கப்பட்டு பேணி வளர்க்கப்பட்டது தமிழ் மொழி. தமிழ் மறையெனப் போற்றப்படும் திருக்குறள் உலகப் பொது நூலாகக் கருதப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைக்குரிய தமிழ் மக்களுக்கு தனியான நாடு ஒன்று இல்லாதிருப்பது வேதனைக்குரிய தாகும்.

  

தமிழருக்கென தனி நாடொன்றினை அமைப்பதே நாடு கடந்த தமிழீழ அரசின் குறிக்கோளாகும். தாயகத்தில் எமது அடையாளங்களை அழித்து விட சிங்கள அரசு முயன்று வருகின்றது. இவ்வேளை யில் நாம் உறுதியுடன் செயலாற்ற வேண்டும். தை மாதம் ஒளிமயமான மாதம். தை மாதத்தினை தமிழினத்தின் பாராம்பரிய (மரபு) மாதமாக கனடாவிலுள்ள பல மாநகர சபைகள் அங்கீகரித்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். தை பிறந்தால் வழி பிறக்கும்".

 

நாடு கடந்த தழிழீழ அரசின் கலை கலாச்சார அமைச்சினால் கடந்த சனிக்கிழமை மாலை கனடா ஸ்ரீஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடாத்தப்பட்ட "தமிழ் மரபுத் தைத் திருவிழா� விற்கான உரையில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு. விஸ்வநாதன் உருத்திரகுhரன் இவ்வாறு கூறினார். பதிவு செய்யப்பட்ட அவரது உரை விழாவில் ஒலி பரப்புச் செய்யப்பட்டது. கலை கலாச்சார துணை அமைச்சர் திரு.வின் மகாலிங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவினை ஸ்ரீலங்காவின் முன்னாள் எம்.பி.யும் நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவை உறுப்பினருமான திரு.ஈழவேந்தன் கலாநிதி (பேராசிரியர்) பால சுந்தரம் என்.டி.பி. கட்சியின் ஒன்ராறியோ மாகாணத் தலைவர் திரு.நீதன் சாண் தமிழ் காங்கிரஸ் உபதலைவர் டாக்டர் சாந்தகுமார் கலாசூரி சிவநேசச் செல்வன் அறிவகத்தின் தலைவர் திரு.அருள் சுப்பிரமணியம் கதிர் ஒளி பத்திரிகை ஆசிரியர் திரு.போள் பாண்டியன் ஆகியோர் குத்து விளக் கேற்றி ஆரம்பித்து வைத்தனர். தவில் நாதஸ்வர இசையுடன் விழா ஆரம்பமாகியது.

 

அடுத்து செல்விகள் யாழினி சாளினி கதிர்காமநாதன் ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்தும் கனடிய தேசியக் கீதமும் பாடினார்கள். சதங்கை நர்த்தனாலாய அதிபர் திரு.வாசு சின்னராசாவின் மாணவிகள் மைதிலி மதுசா ஓவியா துசி லக்சியா மௌனிகா மயூரி கோபிசா ஆகியோர் புஷ்பாஞ்சலி நடனம் ஆடினார்கள். தொடர்ந்து நிரோ டான்ஸ் கிரியேசன் நிருத்திய கலாஞ்சலி ஆகியவற்றின் அதிபர் திருமதி நிரோதினி பரராசசிங்கத்தின் மாணவிகள் கலை மாமணி குமாரி நிவேதாவின் மாணவிகள் நடனம் ஆடினார்கள். திருமதி பூங்கொடி அருந்தவநாதன் விழா நிகழ்ச்சிகளை அழகுறத் தொகுத்து வழங்கினார்.

 

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ் மரபுத் தைத்திருநாள் ஒருங்கிணைப்பாளர் திரு.நீதன் சாண் உரையாற்றுகையில் "2009ம் ஆண்டு தமிழீழ அரசு அழிக்கப்பட்ட பின் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. அதன் விளைவாகவே நாடு கடந்த தமிழீழ அரசு உருவாகியது. எமது தமிழீழ தேசத்துக்கு நிரந்தர விடிவினை ஏற்படுத்த நாம் புலம் பெயர்ந்த நாடுகளில் பாடுபட வேண்டும். இங்கு கனடாவில் அறிவகம் மற்றும் பல அமைப்புக்களின் உதவியுடன் தை மாதத்தினை தமிழர்களின் தினமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். கனடா அரசும் அதனை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இம்முயற்சியில் நாற்பது தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயலாற்றி வருவது பாராட்டுக்குரியதாகும். இவர்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசும் அக்கறையுடன் போராடி வருகின்றது. எமது போராட்டம் சர்வதேச போராட்டமாக மலர வேண்டும்" எனக் கூறினார்.

 

திரு.ஈழவேந்தன் உரையாற்றிய போது "தைத்திருநாள் தமிழர் திருநாளாகும். ஆனால் இன்று தமிழர்களுக்கென நாடே இல்லை இந்நிலையில் பொங்கிப் படைப்பது எங்கே? நாம் விழுவது குறையல்ல விழுந்தும் எழுhதிருப்பதே குறை. ஏழாம் நூற்றாண்டில் சம்பந்தர் தமிழ் வழிபாட்டுக்கு வழி வகுத்தார். இன்று கனடாவில் அறுபதுக்கு மேற்பட்ட இந்துக் கோயில்கள் உள்ளன. அவற்றில் தமிழ் வளர்சிக்கும் இடமளிக்கப் பட வேண்டும். 2013ம் ஆண்டு ஈழத்துக்கு ஒரு திருப்பு முனையாக அமையட்டும்" என்றார்.

 

லிபரல் கட்சி எம்.பி.திரு.ஜிம் காரியியானிஸ் உரையாற்றிய போது�� இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இங்குள்ள இளந் தமிழர்கள் உங் களது நாட்டைப் பற்றியும் அங்கு தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்டு வரும் அடாவடித் தனங்களைப் பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கா அரசு சட்டத்தையே தவறாகப் பயன்படுத்தி வருகின்றது. பிரதம நீதி அரசரையும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. எனவே ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக நாடு கடந்த தமழீழ அரசாங்கம் போராடி வருவது பாராட்டுக் குரியதாகும்" என்றார்.

 

றூஜ் றிவர் தொகுதி மாநகர சபை உறுப்பினர் டாக்டர் றேமன் ஷா உரையாற்றிய போது "கொரியா நாட்டைச் சேர்ந்த நான் 1967ம் ஆண்டு கனடாவுக்கு வந்தேன். அதற்கு முன்னர் நான் வடகொரிய மக்களின் மனித உரிமைகளுக்காகப் போராடினேன். இன்று நான் இங்குள்ள தமிழ் மக்களுடன் நெருங் கிப் பழகி வருகின்றேன் அதனால் நீங்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் நன்கறிவேன். உங்கள் உறவினர்கள் பலர் ஸ்ரீலங்காவில் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சம உரிமையினைப் பெறும் உரிமை சகல மக்களுக்கும் இருக்க வேண்டும். இங்கு கனடாவில் பிரிட்டிஸ் கனேடியர்கள் பிரெஞ் கனேடியர்கள் என இரு பிரிவனர் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் மாத்திரமல்ல இங்கே குடியேறி வாழ்வோருக்கும் சமத்துவ உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்ரீலங்காவில் அப்படியல்ல. ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்க ஸ்ரீலங்கா அரசினை வலியுறுத்துமாறு நான் எனது நண்பரான ஐ.நா.செயலாளர் பான்கி மூனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். நான் ஒரு நாள் ஸ்ரீலங்காவுக்குச் சென்று இதனை வலியுறுத்துவேன். கனடா குடிவரவு அமைச்சர் திரு.ஜேசன் கெனியும் ஸ்ரீலங்கா அரசிடம் இதனை வலியுறுத்தி உள்ளார்" என்றார்.

 

யாழ் பல்கலை கழக முன்னாள் தமிழ்த்துறை விரிவுரையாளர் பொன் அருந்தவநாதன் தமிழ் மரபுக் கலை பற்றி சிறப்புரையாற்றிய போது "தமிழ் மண்ணை மீட்கப் போராடியோர் மாத்திரமல்ல தமிழ் மரபுக் கலைகளை மீட்கப் போராடும் கலைஞர்களும் போராளிகள் தான். நாட்டுக் கூத்து வில்லுப் பாட்டு நாடகம் ஆகியன இன்று புலம் பெயர் நாடுகளிலும் பேணி வளர்க்கப்பட்டு வருகின்றன. எனவே புலம் பெயர் நாடுகளில் தமிழர்கள் வாழும் வரை எமது மரபுக் கலைகளும் நிலைத்து நிற்கும். இங்குள்ள ரிவிஐ தொலைக் காட்சி நிறுவனம் "காத்தவராயன்" கூத்தினை உலகம் பூராக ஒளி பரப்பி வருகி ன்றது. பாடல்களோடு இணைந்தது எமது பண்பாடு. பாடல்கள் மூலம் எமது விழுமியங்கள் வெளிக் கொணரப்பட வேண்டும். இவ்வுலகம் நிலையானதல்ல ஆனால் மக்களின் விழுமியங்கள் நிலையானவை என புறநானூறு கூறுகின்றது. தமிழ் மக்கள் 86,87ம் ஆண்டுகளில் குண்டு மழைக்கு மத்தியிலும் எமது தமிழ் பாரம்பரிய கலைகளை பேணி வளர்த்தார்கள். ஆலயங்களில் வடமோடி தென்மோடி கூத்துக்களை நடாத்தி வந்தார்கள். கண்டிய நடனத்துக்கு வழிவகுத்தது எமது வடமோடி தென்மோடி கூத்துக்களே என சிங்களவரான திரு.சரச்சந்திராவே கூறியுள்ளார்" என்றார்.

 

திருமதி பூங்கோதை பன்னீர்ச்செல்வத்தின் மானவியான செல்வி லக்சுமி சிவநேசலிங்கம் "அமுதே தமிழே அழகிய மொழியே.." "பூமியின் அழகே பரிதியின் சுடரே பொறுமையின் வடிவே தமிழே.." போன்ற பல தமிழைப் பற்றிய பாடல்களை மிக அருமையாகப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார்.துணை அமைச்சர் வின் மகாலிங்கம் நன்றிஉரை வழங்கினார்.

 

பிரபல வீடு விற்பனை முகவரும் நாடு கடந்த தமிழீழ அரசின் ஆதரவாளருமான திரு. பஞ் சொக்கலிங்கம் பரத நாட்டியம் ஆடிய சிறுமிகளுக்கு பாராட்டுப் பத்திரங்களை வழங்கினார். இறுதியாக திரு. கணபதி ரவீந்திரன் குழுவினரின் நகைச் சுவை நாடகம் இடம்பெற்றது.

 

TGTE-120113-Canada-seithy-160113-007.jpg

 

 

TGTE-120113-Canada-seithy-160113-008.jpg

 

 

TGTE-120113-Canada-seithy-160113-001.jpg

 

 

TGTE-120113-Canada-seithy-160113-005.jpg

 

 

TGTE-120113-Canada-seithy-160113-002.jpg
TGTE-120113-Canada-seithy-160113-003.jpg

 

 

TGTE-120113-Canada-seithy-160113-004.jpg

 

நிகழ்வின் முழுமையான படத்தொகுப்பினைக்கான இங்கே சொடுக்கவும்..

 

http://www.seithy.com/breifNews.php?newsID=73997&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.