Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் சில சமூகங்களில் பெண்களின் பாலியல் வேட்கை மிகுந்துள்ளது ?

Featured Replies

ஏன் சில சமூகங்களில் பெண்களின் பாலியல் வேட்கை மிகுந்துள்ளது ?

எழுதியது இக்பால் செல்வன் *** Thursday, January 17, 2013
midnightschildren_00.jpg

பொதுவாகவே வளர்ந்த நாடுகளில் இருப்போர் ஒழுக்கமற்றவர்கள் என்ற ஒரு தவறான கருத்து கீழை தேசத்தவர்கள் மத்தியில் உள்ளது. மேலைத் தேயத்தவர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் பொருளாதார முறைகளை அறியாதவர்களே அத்தகைய கூற்றை வெளிப்படுத்துகின்றார்கள். சில தலைமுறைகளுக்கு முன் இங்கும் பழமைவாத வாழ்க்கை முறைகளே இருந்து வந்தன. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பொருளாதார வளர்ச்சி, மனித குலத்தின் நாகரிக எழுச்சி போன்றவை அனைத்தையும் மாற்றிப் போட்டுவிட்டன. குறிப்பாக மேலை நாடுகளில் புலம்பெயரும் கீழைத்தேயத்தவர்கள் இந்த நாடுகளின் வாழ்க்கை முறைகளோடு அறிந்தோ, அறியாதோ ஒன்றிவிட்ட போதும், புறத்தில் போலிக் கவுரவங்கள், மத நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் போன்றவற்றை மிக அதிகமாகக் காட்டுகின்றனர். அது ஏனெனில் தமது சொந்த நாடுகளில் இருந்து வந்த தாம் இன்னம் மாறிவிடவில்லை என்பதைத் தமது வட்டாரத்தில் உள்ளவருக்கும், சொந்த நாடுகளில் உள்ளவருக்கும் காட்டிக் கொள்ளவே. அதிலும் மிக முக்கியமான விடயம் பெண்களின் பாலியல் விடயங்கள். மேற்கில் வாழும் ஆசிய சமூகத்தவர்களிடையே குறிப்பாக இஸ்லாமிய, சீக்கிய மற்றும் இந்துக்களிடையே கௌரவக் கொலைகள், குடும்பத்தில் இருந்து ஒதுக்கிவைத்தல், தீவிரவாதங்கள், உளவியல் சிக்கல்கள், புறக்கணிப்புக்கள் என்பவை மிகுந்து காணப்படுகின்றன. 

 
சில சமூகங்களில் பெண்ணியப் பாலியல் என்பதை உடல் மற்றும் முகத்தைப் போர்த்தியோ, அல்லது அவளது சுதந்திரமான இயக்கத்தைக் கட்டுபடுத்தியோ ஒடுக்கப்படுகின்றது. அத்தகைய கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகங்களில் பாலியல் நடத்தை என்பது திருமணத்துக்கு வெளியே கிடைப்பது சாத்தியமற்றதாக உள்ளது. இப்போது நமக்கு எழும் கேள்வி ஒடுக்கப்படும் சமூகங்களில் இருக்கும் பெண்களுக்கும் விடுதலையான சமூகங்களில் இருக்கும் பெண்களுக்கும் பாலியல் வேட்கை ஒரே மாதிரியாக இருக்குமா என்பதே. 
 
இயல்பான பாலியல் உறவுக்கு ஆர்வமுண்டா: 
 
இது போன்ற கேள்விகளுக்கு உறுதியான பதில் அளிப்பதில் சிக்கலே எழுகின்றது. ஏனெனில் கட்டுப்படுத்தப்பட்ட சமூகங்களில் நடத்தப்படும் ரகசிய கருத்துக் கணிப்புக்களில் பெண்கள் ( ஆண்களைப் போலவே ) வெளிப்படையாகக் கூறுவதில் தயக்கம் காட்டுகின்றனர். அவர்களின் பதிலை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமா? அல்லது அவர்கள் தங்கள் சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில்களைத் தான் கொடுக்கின்றார்களா ? 
 
இவ்வகையான சிக்கல்களுக்கு உறுதியான ஒரு பதிலைத் தேட வேண்டுமானால், பெண்களின் வாழ்க்கை, வாழ்விடங்கள், பாலியல் உளவியல் போன்றவற்றை ஒரு குறுகிய வட்டத்துக்கு அப்பால் நோக்குவதன் மூலமே பெற முடியும். நவீன சமூகத்தில் வாழும் பெண்கள் பல வழிகளில் ஆண்களைப் போலவே நடந்து கொண்டால் இயல்பான பாலியல் உறவுக்கான ஆர்வம் அவர்களிடம் மிகுந்துள்ளது எனக் கூற முடியும். 
 
கடந்த சில தலைமுறைகளாகப் பாலின நடத்தை வேறுபாடுகள் பெருமளவு குறைந்து வந்துள்ளது. இன்றைய கால இளம் பெண்கள் தமது பாட்டிமாரை விட மிகவும் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றார்கள். அவர்கள் கல்லூரிகளுக்குச் செல்கின்றார்கள், வேலை வாய்ப்புகளில் போட்டியிடுகின்றார்கள் ( இருந்த போதும் ஆண்களே வேலை வாய்ப்புகளைப் பெருமளவு தக்கவைத்துக் கொண்டுள்ளார்கள் ). அவர்கள் பாலியல் ஆர்வம் மிக்கவர்களாகவும், சிலர் திருமணப் பந்தத்துக்கு முன்னரே பாலியல் உறவுகொள்வதாகவும் அறியமுடிகின்றது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றார்கள், பலர் தொழில் ரீதியாகவே விளையாட்டுகளில் பங்கேற்கவும் செய்கின்றார்கள். ஆண்களைப் போலவே தீவிரமாக வாகனங்கள் கூடச் செலுத்துக்கின்றார்கள். 
 
இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒரு பொதுவான கருத்தை வெளிப்படுத்துகின்றது. அதாவது அதிகரித்து வரும் பொருளாதார வாய்ப்பு மற்றும் சுதந்திரம் என்பவை ஆகும். இந்த வாய்ப்புகளால் எழும் போட்டிகளே சுரப்பிகளின் தாக்கத்தால் தனி மனிதர்களின் பாலியல் வேட்கையைத் தூண்டுகின்றன. 
 
சுரப்பிகள்: 
 
வேலை வாய்ப்புக்களின் பெண்களின் முன்னேற்றம் அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை சுட்டுவதாகக் கருதப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் தங்களது பாட்டிமார் காலத்தை விடவும் நவீன பெண்கள் பொருளாதார வளர்ச்சியில் கடுமையாக ஓட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். 
 
வரலாற்றுக் காலங்களில் திருமணச் சந்தையில் விலை போகாத ஏழைப் பெண்களே அதிகளவு சம்பளத்துக்காக உழைத்துள்ளார்கள். ஆனால் இன்றைய நவீன உலகில், அதிகம் திருமணமான பெண்களே சம்பளத்துக்காக உழைக்கின்றார்கள், ஏனெனில் ஒரு நகர்ப்புற சமூகத்தில் குழந்தைகளைச் சிறந்த முறையில் வளர்த்து எடுப்பது என்பது ( கணவன்மார்களின் ) ஒற்றைச் சம்பளத்தில் நிறைவேற்றக்கூடியதாக இல்லை என்பதே ஆகும். 
 
காரணங்கள் என்னவாக இருந்தாலும் வளர்ந்த நாடுகளில் ( வளரும் நாடுகளில் கூட ) பெண் தொழிலாளர்களின் பங்கு உயர்ந்துள்ளது. கடந்த தலைமுறைகளை விடவும் இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் மற்றப் பெண்களோடு போட்டிப் போட வேண்டியதாகவும் உள்ளது. இவ்வகையான போட்டிகளால் பெண்களில் TESTOSTERONE உட்படப் பல சுரப்பிகள் மிகுதியாக உற்பத்தியாகுகின்றது. இவ்வகையான உற்பத்திகளால் பெண்களின் பாலியல் வேட்கையும் மிகுந்துள்ளது என உதா பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் எலிசபெத் காஸ்டன் கூறுகின்றார். 
 
இவ்வாறான சுரப்பிகள் அதிகரிப்பதனால் போட்டி போடும் சமூகங்களில் உள்ள பெண்களுக்குச் சகிப்புத் தன்மையும், வலிமையும் அதிகரிக்கும் எனக் காஸ்டன் நம்புகின்றார். அதே சமயம் நிச்சயம் இது அவர்களின் பாலியல் வேட்கையையும், இன்ன பிற ஆபத்தான விடயங்களில் ( மதுப்பழக்கம், வாகனங்களை வேகமாகச் செலுத்துவது போன்றவற்றில்) ஈடுபடவும் வைக்கலாம். 
 
ஆகவே இயல்பான பாலியல் உறவுகளில் ஈடுபடவும், பிற பெண்களோடு போட்டிப் போடவும் பெண்கள் முற்படுகின்றனர். ஆகவே கட்டுப்படுத்தப்பட்ட சமூகங்களை விடவும் சுதந்திரமான சமூகங்களில் பாலியல் விடயங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள். இயல்பான பாலியல் உறவுகள் சமூகத்தில் ( இருபாலினத்தவருக்கும் ) பேராபத்துக்களை விளைவிக்கக் கூடியதாக இருக்கும். 
 
இயல்பான பாலியல் உறவுகளிள் மற்றும் ஆபத்துக்கள்: 
 
போலி நாணம் பேசும் சமூகங்களில் ஒரே ஒரு பாலியல் உறவுக் கூடு பெண்ணின் திருமண வாய்ப்புக்களை அழித்துவிடக் கூடியதாக இருக்கும். பல சமயங்களில் கௌரவம் பறிபோனதாகக் கருதி பெண்கள் படுகொலை செய்யப்படுவதும் உண்டு. அவை ஆண்களுக்குப் பேராபத்தைத் தரக்கூடியதே. பெண்களின் தொகை குறைந்துள்ள நாடுகளில் இயல்பான பாலியல் உறவுகளைச் சமூகம் ஏற்பதில்லை. அவ்வகையான சமூகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதை விடவும், திருமணம் செய்து வைக்கப்படுவதையே விரும்புகின்றார்கள். பெண்கள் தமது பாலியல் வேட்கைகளைத் திருமணமாகும் வரை கட்டுப்படுத்தி வைக்க எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். 
 
ஆகவே வளர்ந்த நாடுகளில் வேலை வாய்ப்பு, வாழ்க்கைத் துணைவர் போன்றவற்றைப் பெற வேண்டிய அதிகளவு போட்டியுள்ளதால் அங்குள்ள பெண்களிடம் அதிகளவு பாலியல் வேட்கை காணப்படுகின்றது. ஆகவே திருமணம் செய்து கொள்ளத் தீவிரமாக ஆண்கள் இருக்கும் நாடுகளில் பழைய சமூக வாழ்வியலை தக்க வைத்திருக்கும் பெண்களைப் பெற்றுக் கொள்வது உறைநிலையிலேயே இருக்கின்றது. 
 
ஆகவே வளர்ந்த நாடுகளில் வாழ்வோர், குடியேறுவோர் அவர்கள் தத்தமது நாடுகளில் இருந்து எத்தகைய வாழ்க்கை முறை, மத நம்பிக்கைகள், கலாச்சாரப் பழக்க வழக்கங்களைக் கொண்டு வந்தாலும் கூட வளர்ந்த நாடுகளின் போட்டித் தன்மைகள், பொருளாதார வளர்ச்சி, சுதந்திரம் உட்படப் பல்வேறு காரணிகள் பெண்களின் பாலியல் ( ஆண்களைப் போலவே ) வேட்கையை உந்தவே செய்கின்றது. ஒருவேளை போலி நாணமுடைய சமூக வழக்கங்களை வளர்ந்த நாடுகளில் பின்பற்ற விழைந்தால் அவர்களின் இனப் பெருக்கமும், தலைமுறைகளும் முடங்கும் அபாயமே இருக்கும். 
 
இந்தப் பதிவு பிரபல வலைப்பதிவரும், உளவியல் முனைவருமான நிஜல் பார்பர், Ph.D என்பவரின் பதிவை மொழிப் பெயர்த்தும், தழுவியும் எழுதப்பட்டுள்ளது.

Nigel Barber, 
Ph.D
 : பிர்மிங்கம்-தெற்கு கல்லூரியின் உளவியல் துறையின் முன்னாள் இணைப் பேராசியர், தற்சமயம் ஆய்வாளராகவும், வலைப்பதிவராகவும் இருக்கின்றார். '' Why Parents Matter: Parental Investment and Child Outcomes. '',  '' The Science of Romance: Secrets of the Sexual Brain '', ''The Myth of Culture: Why We Need a Genuine Natural Science of Societies. ''ஆகிய புத்தகங்களின் ஆசிரியரும் ஆவார். 

- இக்பால் செல்வன் 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

TESTOSTERONE அதிகமாகச் சுரந்தால் மீசைதானே முளைக்கும்? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.