Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானிய சரக்குக்கப்பல் தப்பிச்சென்றுவிட்டது.

Featured Replies

ஈரானிய சரக்குக்கப்பல் தப்பிச்சென்றுவிட்டது
வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 22:26 
MV-Amina-60-60.jpgஉயர்நீதிமன்றத்தின் உத்தரவின பிரகாரம்  கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய சரக்குக்கப்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளது. என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 கடல் மைலுக்கு அப்பால் தப்பிச் சென்று விட்ட ஈரானியக் கப்பலை ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்களின் பிரகாரம்  தம்மால் ஒன்றும் செய்ய முடியாது போய் விட்டதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

கப்பலுடன்  தொடர்பு கொண்டு நிறுத்துவதற்கு முயற்சித்த போதிலும், எந்தப் பதிலும் அளிக்கவில்லை. 

எம்வி அமினா என்ற அந்தக் கப்பல், ஜேர்மனியின் டிவிபி வங்கி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட உத்தரவுக்கு அமைய, 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கப்பலில் இருந்த 24 மாலுமிகளில் 8 இந்தியர்கள் நாடுக்கு திரும்பி விட்ட நிலையில் ஈரானிய மாலுமிகளுடன் மட்டும் அது தப்பிச் சென்றுவிட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Edited by BLUE BIRD

மேற்குலகமா இல்லை ஈரானா என்பதில் சிங்களம் ஈரான் தான் என நிலை எடுத்து கப்பலை தப்ப விட்டுள்ளது.

அப்ப இதிலையும் சிராணி மீதி ஒரு கறள் இருந்ததோ?

 

அமெரிக்கா என்றல் ஒரு கொஞ்ச நேரம் யோசித்திருந்திருப்பினம். யேர்மனிதானே. ஓடித்தப்பப்பா என்று விட்டாச்சு.

Edited by மல்லையூரான்

உல்லாச துறையில்  மேற்குலகமும் ஜெர்மனியும் முக்கிய பங்காளிகள். அதைவிட வேறு உதவிகளையும் செய்தாலும், சீனா - பாகிஸ்தான் - ஈரான் கூட்டத்தையே மகிந்த கூட்டம் விரும்புகின்றது.

தடுத்து வைக்கப்பட்ட ஈரானிய சரக்கு கப்பல்; மஹிந்த தலையீட்டால் விடுதலை
 
Srilanka%20police.jpg
சிறிலங்கா கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்று மஹிந்த குடும்பத்தின் தலையீட்டால் தப்பிச் செல்ல விடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் “எம்வி அமினா“ என்ற இந்தக் கப்பல் சிறிலங்காவின் கடல் எல்லைக்கு அப்பால் தப்பிச் சென்றுள்ளமை காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் கடல் பிரமாணங்கள் சட்டத்தின்படி  தங்களால் அதனைத் துரத்திச் சென்று பிடிக்க முடியாது போய்விட்டதாகக் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
.
ஜெர்மனிய வங்கி ஒன்றில் கடன் பெற்றுக் கொள்வனவு செய்யப்பட்டிருந்த இந்தக் கப்பலுக்கான கொடுப்பனவை கப்பல் நிறுவனம் வழங்கவில்லை என்று ஜெர்மனிய வங்கி ஒன்று தெரிவித்ததுடன் அதனைக் கைப்பற்றுவதற்கான உத்தரவையும் நீதிமன்றத்தில் பெற்றிருந்தது. இந்த நிலையில் குறித்த கப்பல் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இலங்கை கடல் எல்லைக்குள் வைத்துக் கைப்பற்றப்பட்டிருந்தது.

இலங்கையிடமிருந்து ஈரானிய கப்பல் விடுவிப்பு

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய கப்பல் நீண்ட நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. 

ஜேர்மன் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கிணங்க இந்த கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது. 

ஜெர்மன் வங்கியிடமிருந்து 250 மில்லியன் யூரோவை கடனாக ஈரான் கப்பல் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஆனால் கடனை வாங்கிய பிறகு பணத்தைக் கட்டாத ஈரான் நிறுவனம், கப்பலின் பெயரையும் மாற்றியிருக்கிறது. 

இந்நிலையில் இந்த கப்பல் இலங்கை கடல் வழியாக பயணம் செய்யும் போது தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

சீனாவிலிருந்து நவம்பர் 18ஆம் திகதி புறப்பட்ட எம்.வி. அமினா என்ற கப்பலே தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.