Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்
19 ஜனவரி 2013
 
அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் பணிப்புரையின் பேரில் மூவர் அடங்கிய விசேட பிரதிநிதிகள் குழுவினர் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
 
தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கின் கீழ் கடமையாற்றி வரும் மூன்று துணைச் செயலாளர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். மனித உரிமை, நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் ஆகிய விவகாரங்களுக்கு பொறுப்பான துணைச் செயலாளர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
 
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம், சட்டம் ஒழுங்கு, ஜனநாயக நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தக் குழுவினர் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து ஆராயப்பட உள்ளதாக இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
குறிப்பாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறித்தும் ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மூவர் அடங்கிய குழுவினரின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் எதிர்காலத்தில் இலங்கை விவகாரம் குறித்து எவ்வாறான நடவடிக்கை எடு;ப்பது என்பது குறித்து ஒபாமா நிர்வாகம் தீர்மானிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

barack-obama.jpg

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பணிப்பின் பேரில், மூன்று பேர் கொண்ட அமெரிக்காவின் உயர்மட்டக் குழு அடுத்தடுத்த வாரங்களில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. 

சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவியில் அடுத்து நீக்கப்பட்டதை அடுத்தே, சிறிலங்காவுக்கு உயர் மட்டக்குழுவை அனுப்பும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

சிறிலங்கா வரவுள்ள இந்த உயர்மட்டக் குழுவில், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச்செயலர் றொபேட் ஓ பிளேக்கின் கீழ் பணியாற்றும், பிரதி உதவிச்செயலர்கள் மூவர் இடம்பெறவுள்ளனர். 

நல்லாட்சி, ஜனநாயகம், மனிதஉரிமைகள் ஆகிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலர்களாக இவர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்தக் குழுவின் வருகையை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 

தலைமை நீதியரசர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான நகர்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த போது, கடந்த டிசெம்பர் மாத இறுதியில் இவர்களின் பயணம் குறித்து தமக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. 

“தலைமை நீதியரசர் பதவிநீக்கமே இவர்களின் பயணத்தின் பிரதான நோக்கம் என்று கூறமுடியாவிட்டாலும், அது அவர்களின் கவனத்துக்குரிய முக்கிய விவகாரமாக இருக்கும். 

அவர்கள், நல்லிணக்கம், மனிதஉரிமைகளின் முன்னேற்றம் குறித்த நிலை, ஜனநாயகம் என்பன குறித்து கவனம் செலுத்தவுள்ளனர். 

வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கான, பின்புல் நிலைமைகளை ஆய்வு செய்வதே இந்தக் குழுவின் பிரதான நோக்கம்” என்று அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. 

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், நாட்டின் தற்போதைய அரசியலமைப்பு மற்றும் மனிதஉரிமைகள் நிலை குறித்தும் இந்தக் குழு கடுமையாக கண்காணிக்கவுள்ளது. 

“இயல்பாகவே, .சிறிலங்காவில் நாளாந்தம் என்ன நடக்கிறது என்று அமெரிக்கா கவலைப்படுவதில்லை. 

அவர்கள், ஜனநாயகம், மனிதஉரிமைகள், நல்லாட்சி போன்றவற்றில் ஏற்பட்டுள்ள ‘விக்கல்கள்‘ குறித்தே அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.” என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்தக் குழு தமது பயணத்தை அடுத்து சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் அடிப்படையில் தான், எதிர்காலத்தில் சிறிலங்காவை எவ்வாறு அணுகுவது என்று முடிவு செய்யவும் ஒபாமா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

http://www.puthinappalakai.com/view.php?20130119107623

கடந்த பங்குனி (மார்ச்) மாத ஐ.நா. மனித உரிமை தொடரை விட அமேரிக்கா இந்த முறை கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால் மட்டுமே அடுத்த மனித உரிமை தொடருக்கு முன்னராக .....

தெற்காசிய பிரதி இராஜாங்க செயலாளர் : ஜேம்ஸ் மூர்

 

Deputy Assistant Secretary for South and Central Asian Affairs James R. Moore

 

DAS_James_Moore_WEB_150_1.JPG

 

http://www.state.gov/p/sca/rls/147040.htm



பிரதி உதவி செயலார், தெற்காசிய பாதுகாப்பு அமைச்சு - விக்ரம் சிங்

Vikram J Singh: Deputy Assistant Secretary of Defense for South and Southeast Asia

 

050812165115_Singh_Vikram%20(2).JPG

 

http://www.defense.gov/bios/biographydetail.aspx?biographyid=340



ஜேன் சிம்மர்மான் : பிரதி உதவி செயலாளர், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழில் சட்டங்கள்.

Jane B. Zimmerman: Deputy Assistant Secretary, BUREAU OF DEMOCRACY, HUMAN RIGHTS AND LABOR

 

Jane_B_Zimmerman_250_1.jpg

 

http://www.state.gov/j/drl/rls/bios/198397.htm

இன்னும் இன்னும் சிறிலங்கா அரசுடன் பேசலாம் என்று மேற்குலகம் நம்புவதும் சீனா மற்றும் ரஸ்யா உதவியுடன் சிறிலங்கா அரசு தட்டி கழிப்பதும் ஊக்கமளிப்பதாகவில்லை 

வரும் மூவரும் முறையே இராஜாங்கம், இராணுவம், மனித உரிமைகள் என மூன்று முக்கிய துறைகளை சார்ந்து வருகின்றனர்.

 

இதில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக ஐ.நா. மனித உரிமை நிகழ்வும் இல்லை சில உதவிகள் தடைப்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.