Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலை மாணவர்கள் புலம்பெயர் புலிகளுடன் தொடர்பு இல்லையென நிருபணமானால் மட்டுமே விடுதலை - எஸ்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் பல்கலை மாணவர்கள் புலம்பெயர் புலிகளுடன் தொடர்பு இல்லையென நிருபணமானால் மட்டுமே விடுதலை - எஸ்.பி
19 ஜனவரி 2013
 
கைதுசெய்யப்பட்ட யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது விசாரணைகளின்போது நிருபிக்கப்பட்டால்இ அவர்களுக்கான புனர்வாழ்வு தொடரும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அவ்வாறு தொடர்புகள் இல்லையென நிருபணமானால் அவர்கள் விடுதலைசெய்யப்படுவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
மொரட்டுவப் பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதலைத் திட்டமிட்டு முன்னிலை சோசசலிச கட்சியிரேன நடத்தினர் என்றும் அமைச்சர் குற்றஞ்சுமத்தியுள்ளார். இந்நாட்டு மக்களைக் கொன்று குவித்து சொத்துக்களை அழித்த பயங்கரவாதி வேலுப்பிள்ளைப் பிரபாகரன் எனவும்இ அவ்வாறான பிரபாகரனுக்கு தீபமேற்றி நினைவஞ்சலி செலுத்த பல்கலைக்ழககத்தில் இடமளிக்க முடியாது எனவும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
எனவேதான் யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.கைதுசெய்யப்பட்ட மாணவர்கள்இ புலம்பெயர் விடுதலைப் பலிகள் ஆதரவாளர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள்  என விசாரணைகளின்போது தெரியவந்தால் அம்மாணவர்களுக்கு தொடர்ந்து புனர்வாழ்வு வழங்கப்படும் எனக் கூறினார். இல்லையெனில் விடுதலை செய்யப்படுவர் எனக் குறிப்பிட்டார்.
 
அத்துடன், யாழ்ப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும்இ அங்கு எவ்விதமான பிரச்சினையும் கிடையாது எனவும் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.
 

மாணவர்களை குற்றவாளிகள் என சிங்களம் கூறி...

 

 

முடிந்தால் குற்றமற்றவர்கள் என நிரூபியுங்கள் என பயங்கரவாத தடை சட்டத்தின் கீழே வைத்துள்ளது  :( 


 

 

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு நியாயமான நீதியும் சட்டமும் மறுக்கப்பட்டுள்ளன.

முடிந்தால் குற்றமற்றவர்கள் என நிரூபியுங்கள் என பயங்கரவாத தடை சட்டத்தின் கீழே வைத்துள்ளது 

குற்றத்தை சாட்டினால் ஒருவேளை அது பிழை என்று நிருபிக்க முடியும். அவர் தானே சொல்கிறார் அப்படி குற்றத்தை இந்த மாணவர்கள் செய்தார்களா என்று தாங்கள்  இன்னமும் கண்டுபிடிக்க இல்லை என்று. அவர்களுக்கு தெரியாது இந்த மாணவர்கள் புலம் பெயர் அமைபுக்களுடன் தொடர்பு வைத்திருந்தார்களா என்று. அதை அவர்கள் விசாரித்து உண்மையை கண்டு பிடிப்பார்கள்.

 

ஆனால் மாணவர்கள் பக்கம் இலகுவாக இருக்க வேண்டுமென்றால் அரசுடன் சில பேரங்களுக்கு இறங்கலாம். இதைதான் உண்மையில் சவுதி அரசு, இலங்கை அரசு,  இந்திய அரசு செய்கின்றன. அதாவது, உண்மை எதுவாக இருந்தாலும்,  மாணவர்கள் தங்களை தாங்கள் குற்றவாளி என்று ஒத்துக்கொண்டால் அரசுக்கு மேலதிக விசாராணை செய்ய வேண்டிய உபத்திரபம் இருக்கது. அதாவது மாணவர்கள் இரவு பகல் அடி வேண்டவோ நெருப்பால் சூடு வேண்டவோ தேவை இல்ல என்கிறார் இந்த அடிவருடி S.B.திசாநாயக்கா. இவர் வசந்தி அரசரத்தினத்தை போய் மிரட்டிய பின்னர், பொங்களுக்கு மாணவர்களை விடுவிக்கலாம் என்றவர்.

 

 இப்போ புலம்பெயர் நாடுகளில் யாழ்ப்பாணத்து மாணவர்களை உசுப்பேதும் கதைகளை எழுத்தும் கதாசிரியர்களுக்கு அரசு தொடர்ந்து பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. குற்றத்திற்கு மணவர்கள் தண்டனையை இலகுவாக முன் வந்து வாங்கினால் அரசுக்கு  புலிகள் யாழ்ப்பாணத்தில் இருப்பதை நிரூபிப்பது இலகு. பணவிரயம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.