Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த மண்ணில் நாங்கள் இழிவுபடுத்தப்பட்டமோ, அதே மண்ணில் நிமிர்ந்து நிற்போம் - சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Sritharan.TNA_150.jpg

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தனக்கும் எதிரான விமர்சனங்களின் பின்னணியில் படைப்புலனாய்வாளர்களே இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், படைப்புலனாய்வாளர்களின் கருத்துக்களும், விமர்சனங்களும் மக்களுடையவை அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 12ம் திகதி (சனிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்டதுடன், கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிரான கடந்த 16ம் திகதி நகரில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

  

இதனையடுத்து நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிரான விமர்சனங்களடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விடயம் குறித்துக் கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

 

மேலும் அவர் இவ்விடயம் குறித்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசியத்திற்கும், தமிழ் மக்களுக்கும் நேர்மையாக இருந்ததை தவிர நானும், எனது சகாக்களும் வேறு தவறு எதனையும் செய்யவில்லை. ஆனால் நன்கு திட்டமிட்டு சகல விடயங்களையும் அரங்கேற்றிய அரசாங்கமும், படையினரும் தாம் வெற்றி பெற்றிருப்பதாக கூத்தாடுகின்றார்கள். ஆனால் மக்கள் தெளிவாகவும், நிதானமாகவும் இந்த விடயத்தை அவதானிக்கின்றார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம்.

 

கடந்தாண்டு டிசெம்பர் மாதம் 4ம் திகதி எந்தவிதமான முன்னறிவித்தலும் இன்றி எனது அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டபோதே எம்மீது சேறு பூசப்படப் போகின்றது என்பது எமக்கு நன்கு தெரியும், ஆனால் இவ்வளவு அநாகரீகமாக நடந்துகொள்வார்கள் என நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் இறந்தவர்களின் உடல்களுடனேயே கேவலமாக நடந்துகொள்பவர்களுக்கு இந்த விடயம் சாதாரணமானது என்பதை நாங்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கின்றோம்.

 

கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாதவர்கள், தங்களுடைய அழுக்குகளை அப்பட்டமாக மூடி மறைக்க நினைப்பவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றார்கள். அது எமக்கும், மக்களுக்கும் நன்றாகவே தெரியும். நாம் மக்களிடம் வாக்குகளை கேட்டுச் சென்றிருந்த போதே நாங்கள் போகப்போகும் பாதை எவ்வளவு கரடுமுரடானது என்பது, எமக்குத் தெரிந்திருந்தது. எனவே இவை எங்களுடைய பயணத்தில் எந்தவிதமான பின்னடைவுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை. இந்த இழிவுபடுத்தல்கள் எங்களை அழிக்கும் என யாரும் கனவு காணவேண்டாம். எந்த மண்ணில் நாங்கள் இழிவுபடுத்தப்பட்டதாக கூறப்படுகின்றதோ, அந்த மண்ணில் நிமிர்ந்து நிற்போம்.

 

எமக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பின்னால் முழுமையாக இராணுவமே இருக்கின்றது. இதற்கான முழு ஆதாரங்களும் எம்மிடமிருக்கின்றது. அது மக்களுக்கும் நன்றாகவே புரியும். மக்களை மீட்பதாய் கூறிக்கொண்டு லட்சக்கணக்கில் மக்களை கொன்று குவித்தவர்கள், இன்று அந்த மக்களுக்காக சொந்த பணத்தில் ஒருவேளை உணவு கொடுக்க வக்கில்லாதவர்கள், எங்களை விமர்சிக்கவும், வீழ்த்தவும் முடியாது. உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாங்கள், இந்த விமர்சனங்களால் மக்களை ஒருபோதும் வெல்ல முடியாது என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=74135&category=TamilNews&language=tamil

A former LTTE member, known as Premraj Vasanthan, allegedly recruited by the SL military intelligence for covert operations in the post-Mu’l’livaaykkal times, had visited the office of the Tamil National Alliance (TNA) MP Mr Sivagnanam Sritharan after a long time last Friday and was wandering around inside the office.

 

SL_psyops_notice_against_Sritharan_MP.jp



SL_psyops_notice_2_against_Sritharan_MP.



The pattern makes many a Tamils to suspect that every act of Colombo, particularly the acts of Gotabhaya Rajapaksa, are actually designed and consented by an articulating ‘group’ from the outside engaged in engineering a particular agenda, and that is why Colombo confidently carries out all its operations, the observers further said.

 

http://tamilnet.com/art.html?catid=13&artid=35958

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.