Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் நீதித்துறை இழைத்த தவறே மகிந்தவை எல்லைகளற்ற அதிகார சக்தியாக மாற்றியது

Featured Replies

சிறிலங்காவின் நீதித்துறை இழைத்த தவறே மகிந்தவை எல்லைகளற்ற அதிகார சக்தியாக மாற்றியது [ ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2013, 10:20 GMT ] [ நித்தியபாரதி ]

MAHINDA_BROKEN.jpg1978ல் சிறிலங்கா குடியரசு யாப்பு உருவாக்கப்பட்ட வேளையில் சிறிலங்கா உயர் நீதிமன்ற நீதிபதிகளை சிறிலங்காவின் நிறைவேற்று அதிபர் நியமிப்பார் என்பது வரையறுக்கப்பட்ட போது, சிறிலங்காவின் சுயாதீன நீதித்துறை இதனை எதிர்க்கவில்லை. 

இவ்வாறு மலேசியாவை தளமாகக்கொண்ட The New Straits Times ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் Arjuna Ranawana எழுதியுள்ள பத்தியில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

தலைமை நீதியரசராகக் கடமையாற்றிய கலாநிதி சிராணி பண்டாரநாயக்க மீதான முரட்டுத்தனமாக, கொடூரமான முறையில் மிகக் குறுகிய காலத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மேற்கொள்ளப்பட்டு பதவியிலிருந்து விலக்கப்பட்டு இவருக்குப் பதிலாக சிறிலங்கா அதிபர் செயலக ஆலோசகராக பணிபுரிந்த மோகன் பீரிஸ் நியமிக்கப்பட்டமையானது ராஜபக்ச அரசாங்கத்தை பலவீனப்படுத்தியுள்ளது. 

சிராணி பண்டாரநாயக்க பதவியிலிருந்து நீக்கப்பட்டமையானது சுயாதீனா நீதித்துறை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என பெரும்பாலான சட்டவாளர்களும் நீதிபதிகளும் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் கூறுகின்றனர். 

சிறிலங்காவில் நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் பிரகாரம் இவ்வாறானதொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை மேற்கொள்ளப்பட முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நகர்வானது அனைத்துலக சமூகத்தின் கவனத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியிருந்தது. 

ராஜபக்சவை மேலும் நிறைவேற்று அதிகார சக்தியாக மாற்றுவதற்கு சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் உடந்தையாக இருந்ததாக சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். 

1978ல் சிறிலங்கா குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டபோது அதில் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் முறைமை கொண்டு வரப்பட்ட அதேவேளையில், சிறிலங்கா உயர் நீதிமன்ற நீதிபதிகளை சிறிலங்காவின் நிறைவேற்று அதிபர் நியமிப்பார் என்பது வரையறுக்கப்பட்ட போது, சிறிலங்காவின் சுயாதீன நீதித்துறை இதனை எதிர்க்கவில்லை. இது நீதித்துறை இழைத்த தவறாகக் காணப்படுகிறது. 

இந்த அடிப்படையில், நிறைவேற்று அதிபர் முறைமையை மேலும் பலப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் துணைபுரிந்திருந்தது. எடுத்துக்காட்டாக, தேர்தலில் போட்டியிடாது தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதற்கான தீர்வுக்கு உயர் நீதிமன்றம் எவ்வித எதிர்ப்பையும் காண்பிக்கவில்லை. இதனால் தற்போது ராஜபக்சவின் ஆளும் கூட்டணி நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடிவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

கடந்த இரு பத்தாண்டுகளாக சிறிலங்காவின் நிறைவேற்று அதிகார சக்திக்கும் நீதித்துறைக்கும் இடையில் எந்தவொரு முரண்பாடும் ஏற்படவில்லை. 

கடந்த சில மாதங்களின் முன்னர், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி துறையின் அதிகாரங்களை மத்திய மயப்படுத்தி சிறிலங்கா அதிபரின் சகோதரர்களில் ஒருவரும் அமைச்சருமான பசில் ராஜபக்சவின் அமைச்சின் கீழ் வழங்குவது தொடர்பில் வரையப்பட்ட நாடாளுமன்ற சட்ட மூலம் ஒன்றை உயர் நீதிமன்ற தலைமை நீதியரசராக இருந்த பண்டாரநாயக்கவின் தலைமையிலான நீதிச் சேவைகள் ஆணைக்குழு எதிர்த்திருந்தது. 

இதுவே மறைமுகமாக சிராணி பண்டாரநாயக்கவை பதவியிலிருந்து நீக்க காரணமாக அமைந்ததாக இவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 

தற்போது சிறிலங்கா அதிபர் மட்டுப்படுத்தப்படாத ஆட்சிக்காலத்தைக் கொண்டுள்ளார். இவரது சகோதரர்களும் நாட்டின் முக்கிய உயர் பதவிகளில் உள்ளனர். அத்துடன் சிறிலங்காவின் பாதுகாப்பு படைகள் ராஜபக்சவின் இளைய சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவின் கட்டுப்பாட்டின் கீழுள்ளது. அரசியல் யாப்பின் பிரகாரம் சிறிலங்கா அதிபருக்கு அடுத்த நிலையில் நாடாளுமன்ற சபாநாயகர் காணப்படுகிறார். தற்போதைய சபாநாயகர் சிறிலங்கா அதிபரின் மூத்த சகோதரரான சமல் ஆவார். இதேபோன்று அதிபரின் பிறிதொரு சகோதரரான பசில் ராஜபக்ச பொருளாதாரத் துறையைக் கட்டுப்படுத்துகின்றார். 

தற்போது சிறிலங்காவில் ஆட்சிப் போராட்டம் ஒருபுறமும் அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் மறுபுறமும் ஏற்பட்டுள்ளன. போர் முடிவுற்றதன் பின்னர் சிறிலங்கா மீதான வெளிநாட்டு முதலீடுகள் குறைவாகக் காணப்படுகின்றன. 2011ல் சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 8.3 சதவீதமாகக் காணப்பட்டது. கடந்த ஆண்டில் இந்த வீதம் 6.5 ஆகக் குறைவடைந்திருந்தது. நடப்பாண்டிலும் இதே வளர்ச்சியே காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

இது ஒருபுறமிருக்க, மறுபுறத்தே சிறிலங்காவின் வாழ்க்கைச் செலவீனம் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக நடவடிக்கையில் ஏற்பட்ட முரண்பாட்டால் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. சிறிலங்காவின் ஏற்றுமதியானது பகுதியளவில் கைத்தொழில் வளங்கள் மற்றும் விவசாய உற்பத்திகளில் தங்கியுள்ளதானது நல்லதொரு சமிக்கையாகக் காணப்படவில்லை. 

இதேபோன்று சிறிலங்காவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நாட்டில் மேற்கொள்ளப்படும் மீளிணக்கப்பாட்டு முயற்சி முன்னேற்றத்தை எட்டாது தடைப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், அமைதி முறையில் மாவீரர் நாளைக் கொண்டாட முற்பட்ட போதும் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

சிறிலங்கா அரசாங்கம் மீது ஏற்கனவே யுத்தகால மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

முன்னாள் தலைமை நீதியரசர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பொதுநலவாய அமைப்பு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கு பெறும் உச்சிமாநாடானது இவ்வாண்டின் இறுதியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்படவுள்ளது. 

சிறிலங்கா அரசாங்கம் மற்றும் சிறிலங்கா அதிபரின் தன்னிச்சையான செயற்பாடுகளையும் போர்க் கால மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பளிக்காமை போன்றவற்றை சுட்டிக்காட்டியுள்ள பொதுநலவாய அமைப்பின் முக்கிய இரு நாடுகளான கனடா மற்றும் பிரித்தானியா ஆகியன சிறிலங்காவில் இந்த நிலை தொடர்ந்தால் தாம் அங்கு இடம்பெறும் உச்சிமாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர். 

சிறிலங்கா அதிபர் ராஜபக்ச பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் ராஜபக்ச தனக்கு விசுவாசமான மோகன் பீரிசை புதிய தலைமை நீதியரசராக நியமித்துள்ளார். 

சிறிலங்காவில் காணமாற் போனதாக குற்றம் சாட்டப்பட்ட ஊடகவியலாளர் ஒருவர் தற்போது பிறிதொரு நாட்டில் உயிருடன் வாழ்வதாக ஐ.நா விடம் மோகன் பீரிஸ் முன்னர் தெரிவித்திருந்தார். 

அதாவது சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையால் குற்றம் சாட்டப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டை நிராகரித்து விவாதிக்கும் போதே மோகன் பீரிஸ் இவ்வாறானதொரு முரண்பாடன, சர்ச்சைக்குரிய தகவலை முன்வைத்திருந்தார். 

ஆனால் இந்தத் தகவல் உறுதிப்படாத ஒன்று என கண்டறியப்பட்டது. இவ்வாறானதொரு பிழையான, பொய்யான தகவலை வழங்கியிருந்த மோகன் பீரிசை சிறிலங்கா அதிபர் தலைமை நீதியரசராக நியமித்துள்ளமையானது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இது நாட்டில் சுயாதீன நீதித்துறை ஒன்று இயங்குவதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

பெரும்பாலான சிறிலங்கர்கள் தாம் இருண்ட பாதாள உலகின் விளிம்பில் நிற்பதை உணர்கிறார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமற்ற ஒன்றாகும்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130120107632

editorial(75).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.