Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச மனித நேய சட்ட அடிப்படைகள், உள்நாட்டு போர் நடவடிக்கைகளுக்கு பொருத்தமற்றது

Featured Replies

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் பொதுமக்களின் இழப்பை தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று இராணுவ உள்ளக விசாரணை அறிக்கை ஒன்று பரிந்துரைத்துள்ளது.

 

இலங்கைப் போரின் இறுதிக்கட்டம் குறித்து ஆராய்ந்த நல்லிணக்க ஆணைக்குழு இந்த போர் நிகழ்வுகள் குறித்து இலங்கை இராணுவமும் ஒரு உள்ளக விசாரணையை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

 

அதற்கமைய இராணுவத்தினால் நடத்தப்பட்ட உள்ளக விசாரணை அறிக்கை ஒன்று இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்களால் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

 

 

அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

 

அத்துடன் எதிர்காலத்திலும் இப்படியான இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்கள் இழப்பை தவிர்க்கும் நோக்கில் புதிய யுக்திகள் கையாளப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

 

தற்போதுள்ள சர்வதேச மனித நேய சட்ட அடிப்படைகள், உள்நாட்டு போர் நடவடிக்கைகளுக்கு பொருத்தமற்றது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

 

இந்தச் சட்டங்கள் தேசிய அரசாங்கங்களை மாத்திரமே கட்டுப்படுத்தும் என்பதால், அவை மிகவும் சிக்கலான பல விடயங்களை கையாள பொருத்தமற்றவை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

 

அத்துடன் உள்நாட்டுப் போர்களின் போது சர்வதேச மனித நேய உதவி நிறுவனங்களுக்கென ஒரு குறிப்பிடத்தக்க விதிகள், நியமங்கள் ஆகியன எதுவும் கிடையாது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.

 

ஆகவே உள்நாட்டு போர் நிலைமைகளை கையாளும் வகையில் புதிய உள்ளூர் விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

 

கடந்த 30 வருட காலப் போரில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி புலைமையின்மை என்பது இராணுவத்தினருக்கு ஒரு பாதகமான அம்சமாக இருந்ததாகத் தெரிவித்துள்ள அந்த அறிக்கை அவர்களுக்கு மும்மொழி பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

 

போரில் உயிரிழந்த இராணுவ சிப்பாய்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த சிப்பாய்கள் ஆகியோரின் நலனைக் கவனிக்கவென இராணுவ தலைமையகத்தில் பிறிதான செயலகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

 

இலங்கை நிலைமைகளை கருத்தில் கொண்டு அங்குள்ள பொலிஸ் பிரிவு தொடர்ந்தும் பாதுகாப்பு அமைச்சின்

கீழ் இயங்கலாம் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

 

வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் குறித்து கருத்து கூறியுள்ள அந்த அறிக்கை, நாட்டின் எந்த பகுதியிலும் இராணுவத்தினரை வைத்திருக்கும் உரிமை அரசாங்கத்துக்கு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

அதேவேளை இந்த அறிக்கை பற்றி பல தரப்பினரிடம் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் வந்திருக்கின்றன.

 

 

எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஜெனிவா மாநாட்டை மனதில் வைத்து இந்த அறிக்கை வந்திருப்பதாகக் கூறியுள்ள இலங்கையின் மூத்த செய்தியாளரான அனந்த் பாலகிட்ணர், இந்த அறிக்கையை மாத்திரம் வைத்து போரின் ஏற்பட்ட முழுமையான அழிவுகள் குறித்த ஒரு முடிவுக்கு வரமுடியாது என்று கூறியுள்ளார்.

 

அதேவேளை படையினருக்கு மூன் மொழிகளையும் கற்பிப்பதற்கான பரிந்திரையை அவர் வரவேற்றுள்ளார்.

இது குறித்த அவரது முழுமையான செவ்வியை நேயர்க இங்கே கேட்கலாம்.

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/01/130124_anandhonarmyreport.shtml

  • தொடங்கியவர்

'தற்கொடைத்தாக்குதல்' பயங்கரவாதம் என எந்த சட்டத்தில் உள்ளது?

 

அது வலிமை குறைந்த ஒரு இன விடுதலை போராட்டத்தின் ஆயுதமாக பயன்படுத்துவது தவறு என எந்த சர்வதேச சட்டத்தில் உள்ளது?

கடந்த 30 வருட காலப் போரில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி புலைமையின்மை என்பது இராணுவத்தினருக்கு ஒரு பாதகமான அம்சமாக இருந்ததாகத் தெரிவித்துள்ள அந்த அறிக்கை அவர்களுக்கு மும்மொழி பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

 

போரில் உயிரிழந்த இராணுவ சிப்பாய்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த சிப்பாய்கள் ஆகியோரின் நலனைக் கவனிக்கவென இராணுவ தலைமையகத்தில் பிறிதான செயலகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

 

இலங்கை நிலைமைகளை கருத்தில் கொண்டு அங்குள்ள பொலிஸ் பிரிவு தொடர்ந்தும் பாதுகாப்பு அமைச்சின்

கீழ் இயங்கலாம் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

 

வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் குறித்து கருத்து கூறியுள்ள அந்த அறிக்கை, நாட்டின் எந்த பகுதியிலும் இராணுவத்தினரை வைத்திருக்கும் உரிமை அரசாங்கத்துக்கு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

LLRC அறிக்கையின் பரிந்துரையின்  பிரகாரம் நடத்தப்பட்ட இராணுவ விசாரணையில் சில நல்ல அம்சங்கள் கூறப்படுள்ளன. அதை இலங்கை நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபை இலங்கை அரசுக்கு தொழில் நுடப, ஆளுதவி, பொருளாதார உதவிகளை செய்ய வேண்டும் என்று பிரேரணை ஒன்றை நிறைவேற்றலாம்.

 

(ஆனால் இந்த விசாரணைக்கும், LLRC யின் பரிந்துரைக்கும், ஐ.நா வின் கடந்த மார்ச்சில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்பதை கூட்டமைப்பு, நாடுகடந்த அரசு, GTF போன்றோர் இரண்டொரு நாளுக்குள் நிலை நிறுத்தி அறிக்கைகள் வெளிவிடவேண்டும். இந்த விசாரணை இலங்கை அரசின் சுய முயற்சியே என்பதையும், ஐ.நா பிரேரணையோ அல்லது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாகவோ இலங்கை இதுவரையில் சிறு கல்லைத்தன்னும் தூக்கி போடவில்லை என்பதை அடுத்த பிரேரணையில் அங்கத்துவ நாடுகளை தெரிந்து கொள்ள வைக்கபடவேண்டியதை தமிழர் தரப்பு தங்கள் கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.