Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய மாநாடு கொழும்பில் நடைபெறாது போனால் நாமும் சில முடிவுகளை எடுப்போம்! - பசில் ராஜபக்ச எச்சரிக்கை!!

Featured Replies

பொதுநலவாய மாநாடு கொழும்பில் நடைபெறாது போனால் நாமும் சில முடிவுகளை எடுப்போம்! - பசில் ராஜபக்ச எச்சரிக்கை!!

 

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு, திட்டமிட்டபடி இலங்கையில் நடைபெறாவிட்டால் தமது அரசு 'சில முடிவுகளை' எடுக்கும் என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து, பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகிக்கொள்ளும் முடிவை சிறிலங்கா எடுக்கவுள்ளதையே அமைச்சரின் கருத்து வெளிப்படுத்துவதாக கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் இதர சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இம்முறை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டைத் திட்டமிட்டபடி கொழும்பில் நடத்தாமல் வேறு நாடொன்றுக்குக் கொண்டுசெல்வது குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலகம் ஆலோசனைகளை உள்ளூர நடத்திவரும் நிலையில் இலங்கை அரசு மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

'இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தைத் தடுப்பதானது மேற்குலக நாடுகளின் சதித்திட்டமாகும். அவை கூறுமளவுக்கு நாடு மோசமான நிலைமையில் இல்லை.

இலங்கையின் நிலைமைகள் குறித்து மேற்குலக நாடுகளுக்கு நாங்கள் அறிவித்து வருகிறோம். இருந்தும் அவை தான்தோன்றித்தனமான தீர்மானங்களையே எடுக்கின்றன. எனவே, நாங்களும் சில முடிவுகளை எடுத்து எமது ஆட்சேபனையை வெளிப்படுத்துவோம்' என்று அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் இராஜதந்திர மட்டத்தில் தொடர்பு கொண்டுள்ள இலங்கை அரசு, மேற்படி மாநாட்டைத் திட்டமிட்டபடி இலங்கையில் நடத்துவதற்கான பேச்சுகளை ஆரம்பித்திருப்பதாக அறியமுடிகின்றது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதுவர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

1/23/2013 5:23:28 PM

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=e7a2aaf4-8509-4a29-b537-35bdbd9ede5e

 பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகிக்கொள்ளும் முடிவை சிறிலங்கா எடுக்கவுள்ளதையே அமைச்சரின் கருத்து வெளிப்படுத்துவதாக கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 

 

அவர்களாக விலத்தமுதல் நீங்களாக விலகுவது மகிந்த சிந்தனைக்கு அமைவானதாக இருக்கும்  :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.