Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணர்ச்சி வசப்பட்டு இயங்குபவனும், அறிவு பூர்வமாகப் பேசுபவனும் ஒரே ஆளாக இருக்க வாய்ப்பில்லை

Featured Replies

அந்த ஒரு லட்சம் பேர் எங்கே? இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்

 

உணர்ச்சி வசப்பட்டு இயங்குபவனும், அறிவு பூர்வமாகப் பேசுபவனும் ஒரே ஆளாக இருக்க வாய்ப்பில்லை என்பது நீண்ட நெடுங்கால நம்பிக்கை. உணர்ச்சி வசப்படுபவன் அறிவு பூர்வமாகப் பேச முடியாது என்றோ அறிவு பூர்வமாகப் பேசுபவன் உணர்ச்சி வசப்பட மாட்டான் என்றோ இதற்குப் பொருள்.

 

ஒரே ஆள் இரண்டாகவும் இருக்க முடியும் என்பதை ஒரு நூறாண்டுகளுக்கு முன் நிரூபித்தவன், எட்டயபுரத்துக் கவிஞன் சுப்பிரமணிய பாரதி. நூறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதை நிரூபித்தவன், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்!


தன்னுடைய அபரிதமான கவிதைத் திறத்தாலும், கட்டுரை வன்மையாலும் ஒரு மகாகவியாக நிமிர்ந்து நின்றதோடு நின்றுவிடவில்லை பாரதி, “என்றெமது அன்னை கை விலங்குகள் போகும்? என்றெமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?” என்று உணர்ச்சிப்பெருக்கோடு உருக்கமாய் எழுதிவிட்டு, புணர்ச்சி இன்பம் தேடி அவன் போய்விடவில்லை.

 

எழுதிய எழுத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், பதுங்கி கிடந்த புதுச்சேரியில் பட்டினி கிடந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக “இந்தியா” எறிகணையை ஏவிக்கொன்டிருந்தான்.


1902-ல் காந்தியின் தோழர்கள் அந்நியத்துணிகளை தீக்கிரையாக்கினார்கள் என்றால், அதற்கு 13ஆண்டுகளுக்கு முன்பே, 1906-ல் சென்னை கடற்கரையில் அந்நியத் துணிகளை தீ வைத்து ஆங்கிலேய ஆட்சியாளர்களைத் திகைக்க வைத்தவன்.

 

உணர்ச்சி மிகுந்த பாரதி எழுதிய வரிகளில் காணப்பட்ட உலகளாவிய வரலாற்றுப் பார்வையும், திட்டவட்டமான தீர்க்கதரிசனமும் இன்றைக்கும் நம்மை வியக்க வைப்பவை. பாரதிக்கு நிகரான வரலாற்றுப் பார்வையும் தொலைநோக்குப் பார்வையும் தான், பாரதியோடு முத்துக்குமாரை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வருகின்றன.

பிரிட்டிஷ் உளவாளிகள் நிழலெனத் தொடர்ந்த நிலையிலும், வறுமைக்கோட்டில் கிடந்த நிலையிலும், அக்கினிக்குஞ்சுகளை அடைகாக்க முடிந்தது புதுச்சேரியில் கிடந்த அந்த புரட்சிக்கவிஞனால். ஏறக்குறைய அதே தளத்தில்தான் நின்றுகொன்டிருந்தான் முத்துக்குமார்.

 

வசதிகளற்ற வாழ்க்கை அவனை அசதியில் ஆழ்த்திவிடவில்லை. தேடித் தேடி படித்தான். படித்தவை அனைத்தையும் எளிய வார்த்தைகளில் எழுத்தில் வடித்தான். தீக்குளிப்பதற்கு சில நாட்களுக்கு முன், எப்படி அவனால் அப்படி ஒரு மரணசாசனத்தைத் தெளிவாகவும் விரிவாகவும் எழுத முடிந்தது என்கிற வியப்பிலிருந்து, அதைப் படித்தவர்களீல் பலர் இன்னும் கூட விடுபடவில்லை.


சுதந்தரம் கிடைப்பதற்கு பல ஆண்டுகள் முன்பு “ஆனந்த சுதந்தரம் அடைவோம் என்று பாடாமல் அடைந்து விட்டோம் என்று பாடியதற்காகப் பாராட்டப்பட்டவன் பாரதி. முத்துக்குமார் அதனினும் ஒருபடி மேலே போகிறான். “அமைக்கப்படப் போகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுமே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமைய வேண்டும் என்பதைத் தமிழீழ மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்கிற முத்துக்குமாரின் வார்த்தைகள், செத்துக்கிச் செதுக்கி கோர்க்கப்பட்டிருக்கின்றன.

 

ஒரே பாடலுக்குள் எத்தனைப்பாடல் என்பதைப்போல, இந்த ஒரே வாக்கியத்தில் எண்ணற்ற பிரகடனங்கள். தமிழீழம் அமைந்தே தீரும் என்கிற உறுதி… அதை அங்கீகரிப்பதைத் தவிர சர்வதேசத்துக்கு வேறு வழி இருக்காது என்கிற தெளிவு…. தமிழீழத்தின் தலைமையை எங்கேயிருந்தோ யாரோ திணிக்க முடியாது என்கிற எச்சரிக்கை…. இவ்வளவு அர்த்தம் இருக்கிறது அந்த ஒற்றை வாக்கியத்தில்!. இதுதான் முத்துக்குமார்!!


இன்னும் ஒருபடி மேலே போய், “ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு (பான் கீ மூனுக்கு) வழங்கப்படக்கூடாது” என்கிறான். தெள்ளத்தெளிவாக மூன் ஒருபக்க சார்பாக செயல்பட்டு வருகிறார் என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறான்…நடந்த இனப்படுகொலையில் பான் கீ மூனுக்கு நிச்சயமாக தொடர்பிருக்கிறது என்பது அம்பலமாகிவரும் இன்றைய சூழலில். 2009-லேயே முத்துக்குமார் அதை அழுத்தந்திருத்தமாக தெரிவித்திருப்பதை குறிப்பிட்டு சொல்லவேண்டியிருக்கிறது. அவனது அரசியல் கூர்மைக்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.

 

முத்துக்குமார் என்ற அந்த இளம் அரசியல் அறிஞன் தன் மூச்சுக்காற்றை நிறுத்தி 4 ஆண்டு முடிவடைகிறது. அந்தக் கறுப்பு நெருப்பு நமக்குள் ஏற்படுத்திய வெப்பத்தை மேலும் மேலும் விரிவுபடுத்த வேண்டியது அவசியம்.

அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப்பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப்பாருங்கள் உங்களூக்கு அந்த வயதில் ஒரு அக்காவோ தங்கையோ இல்லயா?” என்று முத்துக்குமார் கேட்டதை நாம் ஒவ்வொருவரும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டும். மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதற்குமுன் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேன்டிய கேள்விகள் இவை.

 

நாற்பதாயிரம் பேர்தான் செத்தார்க்ள் என பொய்க்கணக்கு காட்டியவர்களை நாலு சாத்து சாத்து சாத்துவதற்கு கூட வக்கற்ற சமூகமாக நாம் வலுவற்று கிடக்கிறோம். யானையின் பலம் யானைக்கு தெரியாத நிலைதான் இது. ஜோசப் ராயப்பு என்கிற துணிவான ஆயரின் அறிவு பூர்வமான கணக்கெடுப்புக்குப் பிறகுதான் கொல்லப்பட்டவர்கள் ஒன்றரை லட்சத்துக்கு மேல் இருப்பர் என்பது தெரிகிறது.


நமக்கு தெரிந்த பிறகும் நாமொன்றும் கொதித்து எழுந்துவிடவில்லை. “ச்ச்சின் டெண்டுல்கர் இல்லாட்டா ஊத்திக்கும்பா” என்கிற கவலையில் கிடக்கிறோம்.

 

26 மைலில் என்ன நடக்கிறது என்பதை நாமே தெரிந்து கொண்டிருக்க முடியாதா? நம்முடைய மாணவக் கண்மணிகள் அதை உலகறியத் தெரிவித்திருக்க முடியாதா?. நித்தியானந்தா டேப் மாத்திரம் நெருப்புப்பொறி மாதிரி ஒரே நொடியில் பரவி விடுகிறதே. எங்கள் சொந்தங்கள் விரட்டி விரட்டி கொல்லப்பட்ட வீடியோ காட்சிகள் அந்த வேகத்தில் பரவ முடியாததற்கு நீங்களும் நானும் இல்லாமல் வேறு யார் காரணம்?


ராஜபக்ச கொலைகாரன் என்று குற்றம் சாட்டிவிட்டோம்.

 

கொலைக்கு துணை போனவர் மன்மோஹன்சிங் என்று வெளிப்படையாக்க் கூறிவிட்டோம்.


நடந்த இனப்படுகொலையை பார்த்தும் பார்க்காத மாதிரி மஞ்சள் துண்டால் கருணாநிதி கண்ணை பொத்திக்கொண்டார் என்கிற உண்மையை ஊரறியத் தெரிவித்துவிட்டோம்.

 

மேலதிகமாக, நடந்த இனப்படுகொலையில் பான் கீ மூனுக்கு கண்டிப்பாக பங்கு இருக்கிறது. அந்த மனிதரையும் கூண்டில் ஏற்ற வேன்டும் என்று உரக்க குரல் கொடுக்கிறோம்..


இதையெல்லாம் நாம் பேசியே ஆகவேண்டும்தான் நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இவ்வளவும் பேசிவிட்டு, நடந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த தவறிய நம்முடைய கோழைத்தனத்தை மூடி மறைக்கப் பார்ப்பது என்ன நியாயம்?. சுய விமர்சனம் செய்து கொள்ளாமல், நெட்டை மரங்களைபோல் நின்று புலம்புவது அயோக்கியத்தனம் இல்லையா?

 

 

ராஜபக்ச சகோதரர்களின் அரக்கத்தனத்தைவிட, இந்தியாவும் 20 நாடுகளூம் கொடுத்த ஆயுதங்களைவிட ஆபத்தானது 7 கோடி தமிழர்களின் மௌனம்தான் என்பதை இப்போது கூட உணராவிட்டால்…. நாம் எப்போதுதான் உணரப்போகிறோம்?.


என் எதிரிகளின் கையில் இருக்கும் ஆயுதங்களைவிட ஆபத்தானது என் நண்பர்களின் மௌனம்” என்கிற மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என தெரிந்துகொள்ள இனிமேலாவது நாம் முன்வர வேண்டாமா?

 

அங்கே நடந்த்து போர் அல்ல திட்டமிட்ட இனப்படுகொலை. விரட்டி விரட்டி கொல்லப்பட்ட நம் சொந்தங்கள், அமெரிக்கா உதவ வரும் என்று காத்திருந்த்தாக் கதை சொன்னவர்கள், முதலில் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம்மைத் தவிர வேறு எவரையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

பல்வேறு உலகத்தொடர்புகள் மூலம் உலகே சுருங்கிவிட்ட நிலையில் என்ன நடக்கிறது என்று அறிந்து நாம் பொங்கி எழுவோம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள் அவர்கள். மலைப்பாம்பு மாதிரி சுருண்டுகிடந்த நாம் கடைசிவரையில் அசைந்து கொடுக்கவில்லை.

 

ஒரு நொடிக்குள் ஒன்று சேர்ந்துவிடும் வாய்ப்புள்ளவர்கள் நம் மாணவர்கள்தான்!. ஒட்டுமொத்த தமிழகத்தை விடுங்கள். சென்னையிலும் சென்னையை சுற்றியுள்ள 120கல்லூரியின் மாணவர்கள் 2 நாள் நடுத்தெருவில் வந்து நின்றிருந்தால், அடுத்த கணமே போரை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கும்!


முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்துக்குப் பிறகும் கூட அப்படியொரு முயற்சியை எங்கள் மாணவச் செல்வங்கள் எடுக்கவில்லயே ஏன்? எங்கோ ஒரு கல்லூரி… ஏதோவொரு நாள்…வகுப்புகளை புறக்கணிப்பதன் மூலம் என்ன சாதித்திருக்க முடியும்?

 

ஒன்றுபட்டு திரண்டு போராட, அரசியல் கட்சிகளுக்கு ஆயிரம் பிரச்சினை இருக்கலாம்…மாணவர்கள் அப்படித்திரள தடையாயிருந்தது, அவர்களது பொறுப்பின்மையைத் தவிர வேறு ஏது?


சகலத்தையயும் இழந்து சாவின் விளிம்பில் நின்றிருந்தபோதும், கடலுக்கு அந்தப்பக்கம் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் எங்களுக்காக பேசுவார்கள்… நாங்கள் காப்பாற்றப்படுவோம்..என்ற நம்பிக்கையை மட்டும் இறுதிவரை இழக்காமல் இருந்தார்களே நமது சொந்தங்கள்…..நமது உறவுகள்…அவர்கள் இறுதி மூச்சு விட்ட போது குறைந்தபட்சம் நம்மை மனித இனம் என்றாவது மதித்திருப்பார்களா?

 

நிர்பயா என்று பெயரிடப்பட்டுள்ள துணிவு படைத்த அந்த டெல்லிச் சகோதரிக்கு நியாயம் கேட்க குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி ஆவேசத்துடன் முன்னேறிய டெல்லி மாணவர்களின் கோபாவேசத்தை சென்னை மாணவர்களிடம் 2009-ல் காணவே முடியவில்லையே….ஏன்?


அன்றாடம் எங்கள் சகோதரிகள் சிங்கள சிப்பாய்களின் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாவது தெரிந்தும், கற்பழித்துக் கொல்வதை மற்றவர்களை அச்சுறுத்தும் ஒரு ஆயுதமாக ராஜபக்சவின் இராணுவம் பயன்படுத்துவது தெரிந்தும், தெருவுக்கு வராமல் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன்(?)” வகுப்பறையில் அவர்களை உட்காரவைத்தது எது?

 

இன்றும் என்னை நானே கேட்டுக்கொள்கிற கேள்வி இது!


நடந்த தவறுகளூக்கு பரிகாரமாக நாம் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது. எவ்வளவோ கடமைகள் காத்திருக்கின்றன. நடந்த இனப்படுகொலைக்கு ராஜபக்சவில் தொடங்கி பான் கீ மூன் வரை ஒருவர் விடாமல் கூண்டில் ஏற்றவேண்டியிருக்கிறது. இனவெறி இலங்கையில் இரண்டு இனங்கள் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்பதை சர்வதேசத்துக்கு எடுத்து சொல்ல வேண்டியிருக்கிறது.

 

மனித உரிமைகளை மீறிய இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி கொடுக்க முடியாது என்று மறுக்கிறது அமெரிக்கா. இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி கொடுத்தே தீருவோம் என்று ராகுல் தலையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக அழிச்சாட்டியம் செய்கிறார் அந்தோனி.


இப்படிப்பட்ட ஈவு இரக்கமில்லாத ஒரு மனிதரை, அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தமிழ் நாட்டுக்குள் வரவிடலாமா நாம்? ஜன்நாயக முறையில் எதிர்ப்பை தெரிவிக்க கூட முன்வரமாட்டோம் என்றால், நாம் யார்?

பாரதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் 14 பேர்தான் என்கிற அவல வரலாற்றுடன் ஒப்பிடுகையில், முத்துக்குமாரின் உடலைத் தொடர்ந்து வந்த அந்த ஒரு லட்சம் பேர் அதற்குப் பிறகு எங்கே போனார்கள் என்று தேடிப்பார்க்க வேன்டியிருப்பதுதான் கொடுமை!


குறிப்பு: வீரத்த்தமிழ் மகன் முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 29-01-213-அன்று அவர் வாழ்ந்த சென்னை கொளத்தூரில் அவரின் புகழ்த்திருமேனி வீற்றீருந்த 60 அடி சாலையில் வீரியத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறது. நிகழ்வில் கலந்து கொண்டு இனக் கடன் ஆற்றும்படி வேண்டுகிறோம்

 

-நினைவேந்தல் குழு சார்பாக

 

 

http://www.eelamview.com/2013/01/27/missing-people/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.