Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Featured Replies

media1(8).jpg

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை கறுப்பு ஜனவரி ஆர்ப்பாட்ட பேரணியும் எதிர்ப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது.

 

 

லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று பிற்பகல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பெருந்திரளானோர் பேரணியாக பொதுநூலக கேட்போர் கூடத்திற்கு சென்று அங்கு எதிர்ப்புக் கூட்டத்தையும் நடத்தினர்.

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம் எனும் தொனிப்பொருளிலான இந்த ஆர்ப்பாட்ட பேரணியினை ஊடக அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு ஏற்பாடு செய்திருந்தது. கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களான, லசந்த விக்ரமதுங்க, சுகிர்தரன், சிவராம், நிமல்ராஜ், காணமல்போன பீரகீத் எக்னெலிகொட ஆகியோர் இதன்போது நினைவுகூறப்பட்டனர்.

 

'பீரகீத் எக்னெலியகொடவை கடத்தியவர் எங்கே?', 'போத்தல ஜயந்த, குகநாதன் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை?',  'லசந்த விக்ரமதுங்க, சுகிர்தரன், சிவராம் மற்றும் நிமல்ராஜ் ஆகியோரை கொலை செய்தவர்கள் எங்கே?' போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பி தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

அத்துடன் இன்னும் சிலர் கறுப்பு துணியினால் தங்களுடைய வாயை கட்டிக்கொண்டதுடன் இன்னும் சிலர் கறுப்பு துணியை தலையில் கட்டி தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

 

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, விஜித ஹேரத், திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டோரும் சட்டத்தரணிகள் மற்றும் தொழிற் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் ஒன்றியம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் தெற்காசிய ஊடக அமைப்பின் இலங்கை கிளை ஆகிய அழைப்புக்கள் இந்த ஊடக அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

media2(8).jpg

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57932-2013-01-29-10-34-41.html

  • தொடங்கியவர்

வவுனியாவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

 

வவுனியாவில் இன்று காலை மருக்காரம்பளையில் சடலமொன்று மீட்கப்பட்டதாக அறிந்து வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது பொலிஸார் அவர்களைச் செய்தி சேகரிக்க விடாது தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


வவுனியா மருக்காரம்பளையில் இன்று முற்சக்கரவண்டி சாரதியொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டதை அறிந்த ஊடகவியலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

எனினும் அங்கிருந்த பொலிஸார் புகைப்படம் எடுப்பபதை தவிர்க்குமாறு கூறப்பட்டதுடன், பொலிஸ் அதிகாரியொருவர், ஊடகவியலாளர்களைகட கடுமையாக எச்சரித்து விலகிச்செல்லுமாறு பணித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அறிந்து அங்கு வந்திருந்த வவுனியா மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த ஊடக அதிகாரி, பொலிஸாருடன் கலந்துரையாடி புகைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் செய்திகளை சேகரித்தனர்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=616371800829145338

  • தொடங்கியவர்

இவ்வளவும் நடக்கும்பொழுது டக்லஸ் உதயன் மீது வழக்கு தாக்கல் செய்து தான் ஒரு விசுவாசமான 'தலைவன்' என 'முதலாளிகளுக்கு' மீண்டும் கூறி உள்ளார்  :(

குத்தி அப்படி ஒன்றை செய்ய முன் வரத்தக்க மூளை உள்ள ஆள் அல்ல. முதுகிலை புண் உள்ள குத்தி தேவை இல்லாமல் சட்டத்திடம் போய் மாட்ட விரும்ப மாட்டான். உதயனை அடக்க துடிக்கும் சிங்கள முதலாளிகள் தாம் தொடுப்பதிலும் குத்தி ஒரு வழக்கு தாகல் செய்வதுதான் நல்லது என்றாக்கியிருப்பார்கள். அப்படி செய்யாவிட்டால் இந்த அடிமையை கோட்டுக்கு இழுப்பார்கள். புனர் வாழ்வுக்கு அனுப்பியிருப்பார்கள். கோட்டை அவர்கள் நிர்வகிக்கும்போது அங்கே உதயன் ஒன்று, குத்தி இன்னொன்றல்ல.  இருவருக்கும் கோத்தா சொல்வது சட்டம். கோத்தா வழங்குவது தீர்ப்பு. விதியாசம் வந்து குத்திக்கு பணம் பண்ணத்தெரியுது. உதயனுக்கு மான இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.