Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச இனப்படுகொலை நாள் (International Holocaust Day)

Featured Replies

 செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2013 15:43 | 
சர்வதேச இனப்படுகொலை நாள் (International Holocaust Day)
 
sarvatheesa%20thinam.jpgphoto.gifயூத இன மக்களின் இனப்படுகொலையை நினைவு கூறும் சர்வதேச இனப்படுகொலை நாள் இன்று பிரான்சில் Unesco வளாகத்தில் Unescoவின் எற்பாட்டில் அதன் தலைவர்

திருமதி Irina Bokova தலைமையில் நடைபெற்றது. ஹோலோகாஸ்ட் பற்றிய சரித்திர அறிவியலில் இருந்து இனக்கொலையை தடுப்பது எப்படி?, நாம் கடந்து வந்த பாதையில் இருந்து எதை கற்று கொண்டோம்? என்ற தலைப்பில் யூத மக்களின் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் வழி உறவுகள், கல்விமான்கள், யூத இனப்படுகொலை அமைப்புகள், ஐக்கியநாடுகள் சபையின் முக்கிய அதிகாரிகள் இந்த நினைவு நாளில் பங்கு கொண்டனர். 

Unesco%2012.JPG 

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் திரு Adama Dieng (Special Adviser for the Prevention of Genocide) , காணா காணா (Ghana ) நாட்டை சேர்ந்த தமிழீழ விடுதலை போராட்டத்தை நன்கு அறிந்த திரு Edward Kissi (Professor at the Department of Africana studies of the University of Florida) திரு Dan Michman (Historian, Head of the International Institute for Holocaust Reserch)Israel , திருமதி Karen Pollock (Executive Director of the Holocaust Educational Trust) ஆகியோர் உலக சரித்திரத்தில் நடைபெற்ற இனப்படுகொலை, அதில் யூத மக்களின் இனப்படுகொலையை சரித்திர முக்கியமானது, அதன் முன்பும் பின்பும் பல இனப்படுகொலைகள் நடைபெற்று இருக்கின்றது நடந்தும் கொண்டிருக்கிறது என்ற சரித்திர முக்கிய நிகழ்வுகளை நினைவு படுத்தி இந்த நிகழ்வுகள் சகல கல்வி திட்டங்களிலும் கொண்டுவரப்பட்டு அடுத்த சந்ததியினர்களுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று என்பதை வலியுறுத்திய தோடு, இனப்படுகொலைகள் நடைபெறாமல் தடுக்க புதிய வழிவகைகள், சர்வதேச சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

 

இந்த நினைவு நிகழ்வில் 65 வருடங்களாக இனப்படுகொலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் சார்பில், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். 

 

கேள்வி நேரத்தின் போது இது வரை காலமும் இனப்படுகொலை மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, அதை தடுப்பதற்க்கு சர்வதேசம் சரியான வழிமுறைகளை உருவாக்கமாய் போன்ற கேள்விகள் சபையினால் முன்வைக்கப்பட்டது. தமிழீழ மக்கள் சார்பில் பேசிய திரு திருச்சோதி , சிறி லங்காவில் 65 வருடங்களாக தமிழர்கள் ஒரு இனச்சுத்திகரிப்புக்குள் சிக்கி அழிந்து கொண்டிருக்கிறார்கள். யூத மக்களின் இனப்படுகொலை போல் தமிழ் இனத்தை சிறி லங்காவில் இருந்து முழுமையாக அழிக்கும் செயலில் சிறி லங்கா அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை விட்ட உள்ளக அறிக்கையில் சிறி லங்காவில் நடத்த போரில் 80,000 பெறப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒத்து கொண்டு தாம் தமிழர்களை பாதுகாக்க தவறி விட்டோம் என்று ஏற்றுகொண்டிருக்கின்றனர், அதை இனப்படுகொலை என்று வார்த்தையை பிரயோகிக்க சர்வதேசம் தயங்குகிறது. இன்று இனப்படுகொலையை தடுப்பது பற்றி கதைக்கும் இடத்தில் ஐக்கியநாடுகள் சபை தமிழர்களுக்கு என்ன பதிலை சொல்லப்போகிறது என்ற கேள்வியை கேட்டபோது ஐக்கியநாடுகள் சபையின் பிரதிநிதி சரியான பதிலை கூற முடியாமல் ஐக்கிய நாடுகள் சபையின் தவறை எற்று கொண்டு அந்த தவறை மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் செயல்பாடுகள் பற்றி சிந்தித்து கொண்டிருப்பதாக கூறினார்.

 

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கு பற்றிய யூத இனப்படுகொலையில் நேரடியாக பாதிக்கப்பட்டு Achuwitz campயில் இருந்து உயிர்தப்பிய இன்று எழுத்தாளராகவும், சட்டவல்லுனராகவும் இருக்கும் திரு Samuel Pisar (Holocaust Survivor, UNESCO Honorary Ambassador, Special Envoy for Holocaust Education ) பேசும் போது தானும் தனது மக்களும் கடந்து வந்த பாதையை விளக்கி பேசினார். இந்த நிலை வேற்று இன மக்களுக்கு நடக்க கூடாது என்றும், ஆனால் சர்வதேசம் கடத்த கால நிலையில் இருந்து மாற வில்லை,அரசுகள் இந்த வேதனையை புரிந்து கொண்டவர்களாக இல்லை என்பதை கூறி, இனப்படுகொலை தொடர்வதை பார்த்து பேசாமல் இருப்பது குற்றம் என்பதை கூறினார். 

 

முடிவில் நடந்த கலந்துரையாடலில் பலர் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளுடன் தமது கருத்துகளை பரிமாறி கொண்டு, தமது ஆதரவையும் தெரிவித்துக்கொண்டனர். 

Unesco%2010.JPGUnesco%206.JPGUnesco%201.JPGUnesco%207.JPGUnesco%202.JPGUnesco%203.JPGUnesco%205.JPGUnesco%208.JPGUnesco%209.JPGUnesco%2011.JPG 

ஊடகப்பிரிவு: தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=18658%3A---international-holocaust-day-&catid=1%3Aaktuelle-nachrichten&Itemid=50

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.