Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் அழுங்குப் பிடிக்குள் இஸ்ரேல் விரைவில் சிறீலங்கா..

Featured Replies

சர்வதேசத்தின் அழுங்குப் பிடிக்குள் இஸ்ரேல் விரைவில் சிறீலங்கா..

 

isr6.jpg

 

சிறீலங்கா 1948 ற்கு பின் நடாத்திய அத்தனை ஆக்கிரமிப்பில் இருந்தும் வெளியேற வேண்டிய நிலை..
இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கைத் தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தூரத்து விளக்கு போல வெளிச்சம் காட்டியுள்ளது.


நேற்று முன்தினம் ஐ.நா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை பாலஸ்தீன பகுதியில் நடாத்தியுள்ள அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் கைவிடும் முடிவுக்கு, இஸ்ரேல் உடனடியாக வந்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பாலஸ்தீன வட்டகையில் இஸ்ரேல் புரியும் நில ஆக்கிரமிப்பு சர்வதேசத்தின் கடும் கோபத்திற்குள்ளாகியிருப்பது

சாதாரண விடயமல்ல, சிறீலங்காவிற்கும் பலத்த எச்சரிக்கையாக இறங்கியுள்ளது.

 

மேற்குக் கரைப்பகுதியிலும், கிழக்கு எருசெலேம் பகுதியிலும் இஸ்ரேல் அமைத்துள்ள சட்டத்திற்கு முரணான வீடுகளையும், குடியிருப்புக்களையும் உடனடியாக அகற்றிக் கொண்டு அங்கிருந்து வெளியேற வேண்டும்.
இஸ்ரேலின் செயற்பாடுகள் பாலஸ்தீனம் தொடர்பான சர்வதேச சமுதாயத்தின் அனைத்து தீர்வுகளுக்கும் பேரிடைஞ்சலாக அமையும் என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

சர்வதேச கிரிமினல் விசாரணை நீதிமன்றை சந்திக்க முன் இஸ்ரேல் அனைத்து இடங்களில் இருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை இலங்கையில் துன்பப்படும் தமிழ் மக்களிடையே புரிய வைக்கப்பட வேண்டிய செய்தியாகும்.

 

இஸ்ரேலின் அத்து மீறிய குடியிருப்புக்கள் சர்வதேச சட்டத்திற்கு முற்றிலும் முரணானவை, 1949 ம் ஆண்டு ஜெனீவா கொன்வன்சன் சட்ட மூலத்தின் அடிப்படையில் இஸ்ரேல் செய்யும் அனைத்து அடாவடித்தனங்களும் போர்க்குற்றமாகக் கருதப்பட்டு சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் விசாரிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.

 

பிரான்சிய நீதிபதி கிறிஸ்டீனா சனட், பாகிஸ்தான் அஸ்மா யெகங்கியர் கொண்ட குழுவினர் இஸ்ரேலுக்கு எதிரான இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள், சமீபத்தில் பாலஸ்தீனம் ஐ.நாவில் பெற்றுள்ள வெற்றியானது, ஐ.நாவிற்காக காத்திராது பாலஸ்தீனமே சர்வதேச போர்க்குற்ற நீதிமன்று செல்வதற்குரிய வலுக்களை வழங்கியுள்ளதால் இஸ்ரேல் வீழ்ச்சியின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

இஸ்ரேலிய பாராளுமன்ற தேர்தலில் கடும்போக்கு நெட்டன்யாகு ஆட்சியமைப்பது இன்னமும் இழுபறியாக இருக்கிறது, இதற்கிடையில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை இஸ்ரேலை அத்திவாரத்தோடு ஆட்டம் காண வைத்துள்ளதாக மேலைத்தேய நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.


1967 ம் ஆண்டில் இருந்து இஸ்ரேலினால் நடாத்தப்பெற்ற நில ஆக்கிரமிப்பில் இதுவரை 250.000 குடியிருப்புக்கள் பாலஸ்தீன வட்டகைக்குள் அமைக்கப்பட்டுள்ளன, மேற்குக் கரையில் சமீபத்தில் 250 குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அனைத்தும் சர்வதேச சட்டத்திற்கு முரணானவையே.

 

isr8.jpg

இஸ்ரேலைப்போல 2009 போருக்குப் பின்னர் சிங்கள அரசு அமைத்த அத்தனை ஆக்கிரமிப்பு பணிகளும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற அறிக்கை வெளிவரும் என்ற நம்பிக்கைக்கு இந்த அறிக்கை ஓர் முன்னோடி அறிக்கையாக இருக்கிறது..

 

மேலும் இந்த குடியிருப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் நடாத்தும் தாக்குதல்களில் பலர் கொல்லப்படுவதும், காயமடைவதும் சர்வ சாதாரணமாக நிடைபெறுகிறது, அந்த வகையில் நில ஆக்கிரமிப்பும் போர்க்குற்றமே என்ற ஐ.நாவின் நிலைப்பாடு இஸ்ரேலுக்கு மட்டுமல்ல சிறீலங்காவிற்கும் பேரிடியாக இறங்கப் போகிறது.

 

படுகொலை, ஆட்கடத்தல், காணாமல் போதல் போன்றன நன்கு திட்டமிட்ட முறையில் தொடர்வதாக சிறீலங்கா சென்ற அமெரிக்க பிரதிநிதிகள் சென்ற வாரம் சுட்டிக்காட்டியது மார்ச் மாதம் ஜெனீவாவில் பிரதிபலிக்கப்போவது தெரிகிறது.

 

காரணம் இதே போர்க்குற்ற வேலையைத்தான் சிறீலங்காவும் செய்கிறது, அங்கு நடைபெறும் குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்பு, இராணுவ பிரசன்னம் ஆகியவை சர்வதேச அடிப்படையில் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியவையாகும்.

 

ஐ.நாவின் இந்த உறுதியான அறிக்கை போல இன்னொரு அறிக்கை சிறீலங்காவிற்கு விரைவில் பதிலடி கொடுக்கப்போவதையும் உணர முடிகிறது.

 

http://www.alaikal.com/news/?p=121601

இஸ்ரேலை வைச்சு காமெடி கீமெடி பண்ணெலயே

  • தொடங்கியவர்

UN report is a ‘weapon’ against Israel because Palestinians could take grievances to criminal court, panel says



israel-palestinians.jpg?w=620



The head of a UN panel behind a report assailed by critics as “one-sided” and aimed at “attacking” Israel, has said the document could be used as “a kind of weapon for the Palestinians.”

 

At a news conference, French judge Christine Chanet said Palestinians could use the UN Human Rights Council (HRC) report if they wanted to take their grievances before The Hague-based International Criminal Court.


The Palestine Liberation Organization appeared to suggest it might seek such action and said the report, which describes Israel’s settlements as “creeping annexation,” was “proof of Israel’s policy of ethnic cleansing” and its desire to undermine the possibility of a Palestinian state.

 

Israeli officials accused the report of being biased and UN Watch, a watchdog group based in Geneva, also denounced it saying, “The council report is categorically one-sided, casting Palestinians as the sole victims of the Arab-Israeli conflict, while denying the slightest consideration to any basic human rights for Israelis.”

 

http://news.nationalpost.com/2013/01/31/un-report-is-a-weapon-against-israel-because-palestinians-could-take-grievances-to-criminal-court-panel-says/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாரி சார்.

Edited by தீபா

  • தொடங்கியவர்

இஸ்ரேலை வைச்சு காமெடி கீமெடி பண்ணெலயே

 

 ஒபாமா மீண்டும் அதிபராக வந்தமை இஸ்ரேல் எண்ணிய பல விடயங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.