Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புளாட்டில் நான் ( சீலன்)

Featured Replies

 
தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொறியினர்
எமது விடுதலைப் போராட்டத்தில் அண்ணளவாக 34 இயக்கங்கள் இருந்தன. அவற்றில் கணிசமான போராளிகளும் இருந்தன. அவர்களில் பலருக்கு எமது போராட்டம் தொடர்பான கசப்பான அனுபவங்கள் இருந்தன. அவ்வமைப்புகள் மீதான விமர்சனங்களும் இருந்தவண்ணமே இருந்த போதும், இவர்களில் எத்தனைபேர் அதை ஆவணமாகவோ அல்லது விமர்சனமாகவோ பதிவு செய்துள்ளனர்.
 
இன்று இனியொருவில் ஐயர் எழுத ஆரம்பித்த பிறகு, பலருக்கு தமது நிலைபற்றிய விமர்சனத்தையும் அதிருப்தியையும் எழுதமுடியும் எனறு முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. அன்று இருந்த இயக்கங்களில் இருந்த பலர் தமது இயங்கங்களின் உள்முரண்பாடுகளின் காரணமாகவும், புலிகளின் சகோதரப் படுகொலைகள் காரணமாகவும் ஒதுங்கியவர்கள், இன்று தமக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றாற் போல மவுனித்தும் ஒதுங்கியும் வாழ்ந்து வருகின்றனர். இது ஒருபுருமிருக்க இன்னும் சிலர் 80 களின் பிற்பகுதியில் இருந்து சஞ்சிகைகளை வெளிக்கொண்டு வந்தனர். இதில் பல சஞ்சிகைகள் ஒரே பாணியில் இருந்தன. இவற்றை விட இலக்கியச் சந்திப்பு என்றும், மூன்றாவது பாதை என்றும், இன்னும் ஒரு படி முன்னேறி ஒரு கூட்டு வேலைமுறையை நோக்கி நகர முற்பட்டனர். ஆனால் அவைகள் அனைத்து சிதறி சின்னாபின்னமாக, ஐரோப்பாவில் இருந்து தமிழீழக் கட்சி என்றும், இந்தியாவில் இருந்து தேசபக்கத முன்னணியினர் கழகம் என்ற இரண்டுமே முன்பு சஞ்சிகைகளாக இருந்தவர்களில் கணிசமானோரை உள்வாங்கிக் கொண்டது. இவைகள் செயலற்றுப் போக (இது தொடர்பாக தனிமையில் ஆராயப்பட வேண்டியுள்ளது) இணையத்தளங்கள் உருவாகின. இவற்றின் வளர்ச்சியில் இன்று சிறு சிறுகுழுக்களாக பலர் ஒன்று திரண்டு வருகின்றனர். இருந்த போதும் இதில் பல குழுக்கள் முள்ளிவாய்காலுடன் முடிங்துபோன எமது போராட்டத்தை மீளாய்வுக்குட்படுத்தாது, எங்கு முடிந்ததே அக்கிருந்தே ஆரப்பிக்க முயற்சிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், மீண்டும் தமிழ் மக்கள் மீது தமது நலன் சார்ந்த பலரால் உருவாக்கப்படும் புதிய அமைப்புகளில் அடாவடித்தனமும், நேர்மையற்ற அரசியல் போக்கையும் கட்டவிழ்த்து விட வழிவகுக்கும். இதனடிப்படையிலேயே நான் எனக்கு நடந்த அனுபவத்தை, எழுத்துருவில் கொண்டுவர முயற்சிக்கின்றேன்.
இந்த வகையில் நான் அங்கத்துவம் வகித்த தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், மார்க்சியம் பேசிக்கொண்டு எவ்வாறு மக்கள் விரோதப் போக்கை கொண்டிருந்தது என்பதை உணர்த்த முனைகின்றேன். மக்கள் விடுதலையை விரும்பி பயிற்சிக்கு சென்றவர்களை, எவ்வாறு நடத்தியது என்பதை கவனத்தில் கொண்டு வரமுனைகின்றேன். அதேவேளையில் தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் நடந்த உட்படுகொலைகளுக்கும், ஒட்டு மொத்தத்தில் உமாமகேஸ்வரனை பழிமுடித்து விட்டு தாம் தப்பித்துக் கொள்ளும் பலரை, அவர்களின் இயக்க பெயர்களுடன் அம்பலப்படுத்தும் வகையில் இதை எழுத முற்படுகின்றேன். இங்கு கவனிக்க வேண்டியது நான் உமாமகேஸ்வரனை நல்லவன் என்றோ அல்லது அவர் கொலை செய்யவில்லை என்றோ இங்கு கூறவரவில்லை அத்தோடு நடந்த அத்தனை கொலைகளுக்கும் கழகத்தின் செயலதிபர் என்ற நிலையில் அவர்மீது குற்றம் சுமத்தினாலும், இதில் பல கொலைகள் அவருக்கு தெரியாமேலே நடந்தேறின என்பதை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதுமட்டுமல்லாது இன்று தம்மை புரட்சியாளர்களாகவும் முற்போக்குவாதிகளாகவும் காட்டிவரும் பலர், இச்சம்பவங்களுடன் மறைமுகமாக சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை வெளிக்கொணரும் முகமாக, எனக்கு தெரிந்தவற்றை எழுத முற்படுகின்றேன்.
இவர்கள் பலர் தம்மை பற்றிய எந்தவித சுயவிமர்சனங்களும் இன்றி, மக்களுக்கு மீண்டும் ஏதோ ஒருவகையில் தீங்கிழைக்க முற்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டும் எமது போராட்டமானது மக்கள் சார்பில் எவ்வாறு நிலைகொள்ள வேண்டும் என்பதையும், மக்கள் இவர்கள் மத்தியில் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தவே, எனக்கு நடந்த கசப்பான அனுபவத்தினுடாக மீளாய்வினை செய்ய முற்படுகின்றேன்.
அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உட்படுகொலைகள் பற்றியும் அதன் அராஜகப் போக்கு பற்றியும் தோழர் கேசவனால் எழுதப்பட்ட புதியதோர் உலகம் என்ற நூலில் அடங்காத பல விடையங்களை இங்கு ஆராய முற்படுகின்றேன். இதில் புதியதோர் உலகம் தீப்பொறி என்ற அமைப்பால் வெயியிடப்பட்டபோதும், அவ்வமைப்பையும் எனது பாதையில் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றேன். தீப்பொறி அமைப்பானது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்து இடைநடுவில் பிரிந்து சென்ற பலரை, உள்வாங்கிய ஒரு அமைப்பாக இருந்தது. இதில் பலர் நடந்த உட்படுகொலைக்கு பதில் கூறவேண்டியவர்களாக இருந்த போதும், புதியதோர் உலகம் என்ற நுலின் மூலம் தமக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என கட்டி தப்பித்தனர். எனவே அவ்நூலுக்கு அப்பால் நடந்தது என்ன என்பதையும், எவ்வாறு தீப்பொறியினர் மற்றைய போராளிகளை விட்டுவிட்டு, தமது உயிரை பாதுகாத்துக் கொண்டனர் என்பதையும் விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியுள்ளது. தீப்பொறியினர் பிரிந்து செல்வதற்கு முன்பே, இந்தியாவில் முகாம் ஒன்றில் நடந்த உட்கட்சிப்போராட்டம் தொடர்பாக அவர்கள் எதையும் கருத்தில் கொள்ளாது, தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த பலரையும் இங்கு பார்வைக்குட்படுத்துகின்றேன்.
 
புளாட்டில் நான் பகுதி 2
1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும்
எனது பெயர் சீலன். நான் இன்று ஐரோப்பாவில், எனக்கான முகவரிகள் தொலைந்தவனாய் வாழ்ந்துவரும் ஒரு ஈழத்தமிழன். வடக்கே எனது பிறப்பிடமாகும். அந்தச் சிறிய வயதில் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. அதனால் அவற்றை ஒருபுறம் வைத்துவிடுவோம்;. இனி எனது போராளி வாழ்க்கையில், நான் நோயாளியாகிப் போராடித் தொலைத்த போராளியின் வாழ்க்கைக்குள் போவோம்.
 
ஏதோ ஏகாந்தமான, அதிமிதவாத அரசியலால் பொருமி வீங்கத் தொடங்கிய காலமான 1983இல், எனது இளமைக் காலம் இயக்க கீரோத்தனத்தை நாடியது. ஈழ மண்ணின் விடுதலைக்கான ஆயுதப் போராட்ட வடிவங்களுக்குள் நாம் கவரப்பட்டோம். சிறிய பாடசாலை முதல் பல்கலைக்கழக மாணவர் வரை வகைதொகையின்றி, இயக்கத்தில் இணைய ஆரம்பித்த காலம் அது. அக்காலத்திலேயே நான் “தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்’ என்ற அமைப்பில், என்னையும் இணைத்துக் கொண்டேன். உண்மையைச் சொல்லப்போனால், எனக்குள் விடுதலை உணர்வுகள் அன்று இருந்ததென்று சொல்லமாட்டேன். மாறாக எதோ போராடவேண்டும் என்ற உணர்ச்சி வேட்கையே என்னுள் இருந்தது. அதாவது சிங்களவர் என்றாலே அவர்கள் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சி என்னிடம் இருந்தது. அது என்னை என்னவோ செய்தது. அதற்கான காரணங்களும், எனது ஆழ்மனதில் பதிவாகிக் கிடந்தது.
 
அன்றைய காலத்தில் எனது தந்தை இலங்கைக் காவல்துறையில் கடமையாற்றினார். அவருக்கு தொலைதூர இடங்களுக்கான மாற்றங்கள் வரும்போது, அவரோடு வீட்டாரும் சேர்ந்து செல்லவேண்டிய நிலை. அப்படித்தான் ஒருமுறை அப்பாவிற்கு புதிய இடமாற்றம் வந்தது. அது 1977ஆம் ஆண்டு. திருகோணமலைக்கு இடம் மாறினோம். எனக்கு அப்போது 11வயது கொண்ட சிறுவன்.
 
அந்தக் காலத்தில் “தமிழர் விடுதலைக் கூட்டணி”யைச் சார்ந்தோர், திருகோணமலை முத்தவெளியில் பெரிய அளவிலான கூட்டத்தைக் கூட்டினர். அதற்காகப் பல கூட்டணிப் பிரமுகர்கள், பேச்சாளர்கள் வருகை தந்தனர். அவர்களை திருமலை இளைஞர்கள், மாலை சூட்டி வரவேற்றனர். அதன் முன்னணியில் நின்ற சிலர் ஏதோ முறுக்கெடுப்பவராகவும், உணர்ச்சி வசப்பட்டவர்களாகவும் எனக்குத் தெரிந்தது. நானும் வைத்த கண் வாங்காமல் அவர்களையே பார்த்தேன். சிறு கணப்பொழுதில் அவர்கள் தமது கைகளை தாமே சவரத் தகடுகளால் வெட்டிக் காயப்படுத்தினர். சிலரது கைகளில் மிக ஆழமாக வெட்டுப்பட்டதால் நரம்புகள் அறுபட்டு, அவர்களின் இரத்தம் அந்த மண்ணில் நீராய் ஓடியது. அந்தப் பிரமுகர்கள் ஒரு வகையான திகைப்புடன் கலந்த புன்சிரிப்புடன் ஏறிட்டு நின்றனர். இவர்களோ ஒருவகை ஆவேசத்துடன் அங்கே வருகை தந்த பிரமுகர்களின் நெற்றிகளில் அந்த இரத்தங்களைத் தொட்டுத் தொட்டு பொட்டுப் பொட்டாய் திலகமிட்டனர். ஏதே ஏதோ கோசங்கள் வேறு. இதுவோ என்மனதிலில் ஆழப் பதிந்துபோனது.
 
அன்று அவர்களின் மிடக்கும், அவர்களின் வசீகரமான வீரியப் பேச்சுகளும் இணைந்து, இது என்னைக் கவர்ந்தது. எங்கள் தமிழினத்தை தினமும் அழிக்கின்ற சிங்கள அரசை உடைக்கவேண்டும் அழிக்க வேண்டம் என்று அறைகூவினர். இது எதிரிச் சிங்களரை எதிர்த்துத் தாக்கவேண்டும், அழிக்கவேண்டும் என்ற உந்துதலை, என்னுள் ஏற்படுத்தி என்னை எரியவைத்தது.
 
1983 முற்பகுதியில் இயங்கங்களின் செயற்பாடுகள் ஒரளவு துரிதமடைந்த காலகட்டம். அக்காலத்தில் தான் பல இயக்கப் புத்தகங்கள், பத்திரிகைகள் எனது கையில் கிடைக்கப்பெற்றன. அவற்றை வாசிக்கும் போது உணர்சிகள் தானகவே வரும். அதுமட்டுமின்றி யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டமும், இதற்கு பாடசாலைகளிலும், ஊர் மக்கள் மத்தியிலிருந்தும் அதிக வரவேற்பு கிடைத்தது. இதை வழிபட்ட எமக்கு, போராட்டப் புத்தகங்களையோ அல்லது பத்திரிகைகளையே தருபவர்களை, ஏதோ ஒரு கிரோக்களாகவே பார்த்தோம். இப்படி எல்லோரும் பார்த்தனர். அப்படி பார்க்க வைத்தனர். அன்றைய காலகட்டத்தில், இயக்கத்தில் இருப்பதென்பது ஒருவகை கீரோத்தனமாகும். அது அன்றைய சூழலாகவும் இருந்தது. அவ்வாறுதான் அன்றைய இயக்கங்களில் இருந்தவர்களும், தம்மை தாம் காட்டிக் கொண்டனர். மக்களோடு மக்களாக நின்று மக்களை அணிதிரட்ட வேண்டியவர்கள், தம்மை ஒரு மேதாவிகள் போல் காட்டி நடந்தனர். மக்கள் மத்தியில் தாம் உயர் நிலையில் உள்ளவர்கள் போலவுமே, காட்டிக் கொண்டனர். இதன் விளைவலேயே, மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை விளக்கமறுத்தனர். பலர் இன்றும் இயக்கங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்தன என்று கூறவரலாம். அவர்களின் வேலை முறை, மக்களை போராட்டத்திற்கு ஏற்ப வளர்த்து எடுக்காது, மாறாக உணர்ச்சிகளின் அடிப்படையில் மக்களை திரட்ட முற்பட்டதையே இங்கு குறிப்பிடுகின்றேன்.
அக்காலகட்த்தில் தான் எனக்கு எனது உறவினரில் ஒருவரான சுகந்தன் என்பர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் வேலைசெய்தார். அவர் மூலம் என்னை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் பெயர்ப் பதிவற்ற அடிநிலை உறுப்பினராக இணைத்துக் கொண்டேன்.  ஒரு கொஞ்சக் காலம் எனது ஊரிலேயே துண்டுப் பிரசுரங்களை எடுத்துச் சென்று மக்களிடம் பரப்புகின்ற ஆரம்ப வேலைகளை செய்துவந்தேன். அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களை, மக்கள் மத்தியில் பரப்புவதுடன், அக்கூட்டங்களிலும் தவறாது கலந்து கொண்டேன். அத்துடன் ஆரம்பப் போராளிகளுக்காக நடைபெறும் பாசறைகளிலும், தவறாது கலந்துகொண்டேன்.
இங்கு முக்கியமாக பாசறை பற்றி எனது அனுபவத்தை கூறமுனைகின்றேன். பாசறை என்பது ஆரம்ப தோழர்களுக்கு நடத்தப்படும் அரசியல் வகுப்பாகவே இருந்தது இதில் ஆரம்பமட்ட உறுப்பினர்களை அணிதிரட்டி, அரசியல் முதிர்ச்சி பெற்ற ஓருவரால் அரசியல் வகுப்பு நடத்தப்படும். அங்கு மார்க்சியம், லெனினியம், கருத்துமுதல் வாதம், தேசிய இனப்பிரச்னை, மற்றைய இயக்கங்களை குறைகூறுவது என்ற பதங்களின் கீழ் தான் அதிகமாக அரசியல் வகுப்புகள் இடம்பெறும். இதில் தேசிய இனப்பிரச்சனை குறித்து இன்றைய எனது பார்வையின் அடிப்படையில், அன்று வகுப்பு நடத்தியவர்களுக்கு ஒரு சரியானதும் அத்துடன் இயங்கியலின் அடிப்படையிலான புரிந்துணர்வோ அல்லது விளக்கமோ இருக்கவில்லை. மாறாக சிங்கள அரசுக்கு எதிராக போராடவேண்டும் என்பதுடன் மற்றைய இயக்கங்களின் பார்வையில் இருந்து நாம் எவ்வாறு விலகிநிற்கின்றோம் என்பதே அவர்கள் மத்தியில் இருந்து நாம் கற்றுக்கொண்டது. தேசியவாதமானது ஒரு முதலாளித்துவத்தின் அடிப்படையிலேயே உள்ளது என்பதை மறுத்தே, அதை சோசலிச கொள்கைகளுடன் போட்டுக் குழப்பினார்கள். மார்க்சியம் என்றால் என்ன என்பதற்கு பதிலாக, தாம் தம் இயக்கத்துக்கு எற்ப எதை மார்க்சியமாக (சோவியத் நூல்களில்) கற்றனரோ, அதை அப்படியே அடிமட்டத் தோழர்களான எங்களுக்கு முன்வைத்தனர். எனக்கு இவர்களின் இச் சொற்பதங்கள் எதுவுமே விளங்கவில்லை. உதாரணத்திற்கு குட்டி பூர்சுவா, லும்பன், போன்ற பாதங்கள். இவற்றை என்னவென்று விளக்கம் கேட்க முடியாது. இப்பாசறை என்பது இரண்டு மூன்று நாட்கள் நடக்கும். சில ஒரு வாரத்திற்கு மேலாக நடக்கும். இந்த ஒரு வாரத்திலேயே பலர் தமக்கு அரசியல் அறிவு வந்து விட்டது என்று, அவர்களும் பிரச்சாரத்திற்கு புறப்பட்டுவிடுவார்கள். என்ன பிரச்சாரம் என்றால் தமது கொள்கைகளை விளக்குவதை விடவும், மற்றைய இயக்கங்களை குறைகூறுவதே பிரச்சாரமாக இருந்தது. பிற்காலத்தில் பாசறை என்ற பெயரால் பல தில்லுமுல்லுக்கள் நடத்ததாக, கொக்குவிலைச் சேர்ந்த ஐயுப் என்ற நண்பர் பின்தளத்திற்கு வந்த போது பலரிடம் குறிப்பிட்டார்.
இங்கு இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று அரசியல் முதிர்ச்சிபெற்றவர்கள் என்று கூறப்பட்டவர்கள், இன்று தாம் எதை அன்றிருந்த அடிமட்ட தோழர்களுக்கு கூறினார்களோ அதற்கு எதிரான ஆக்கங்களை எழுதுவதுடன் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். உண்மையில் இவர்களின் இந்த சமவுடமை தத்துவத்திற்கான அடிப்படை என்னவென்றால், ஒரு வித கீரோயிசமாகவே இருந்தது.
 
புளாட்டில் நான் பகுதி – 03,04
 
தண்டனை முகாமை எல்லோரும் “நாலாம் மாடி” என்பார்கள்

என்னைத் தெரிந்தவர்கள் எனதருகில் வந்தனர். தமது உறவினர் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். பலர் தமது தாய் தந்தை சகோதரர்களையே விசாரித்தனர். சிலர் தமது காதலியைப்பற்றியும்,…….. விசாரித்தனர்.

இதற்கு அடிப்படைக் காரணம் இவர்களில் பலர் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பால் உந்தப்பட்டோ, விடுதலை விரும்பியோ வரவில்லை மாறாக பலர் காதலில் தோல்வியுற்றவரும் பெற்றொருடன் கோவித்து கொண்டு இயக்கத்திற்கு வந்தவர்களும் அல்லது தன்னை தனது சமுதாயத்தில் அடையாளப்படுத்துவதற்காக வந்தவர்களுமே பலர். இவர்களிடம் குறித்த அரசியல் இல்லை. ஏன் மக்கள் பற்றிய பார்வை கூட சரியாக இருக்கவில்லை. மாறாக தாம் வந்த இடத்தில் தமது திறமைகளை காட்டவும், முகாம் பொறுப்பாளர்களுக்கு விசுவாசமாக இருக்கவுமே செய்தனர்.

10.30 மணியளவில் விசில் சத்தம் கேட்டது. எல்லோரும் மைதானத்தில் அணிதிரண்டோம். அங்கே ஒருவர் சத்தம் போட்டவாறு அணிவகுப்பிற்கான ஒழுங்குகளைச் செய்தார். அத்துடன் (இந்தியர்) தோழர் லெனின் அணிவகுத்து நின்றோருக்கு பயிற்சிகளை ஆரம்பித்தார். நாம் அதைப் பார்த்தபடி இருக்கும்போது, என்னுடன் வந்தவர்களில் சிலர் மனம் நொந்தவர்களாக முகத்தை முகம் பார்த்தனர். அப்படியே பலதும் பத்துமாக மெதுவாகக் கதைக்க ஆரம்பித்தோம். நீங்கள் இப்பிடிக் கதைக்க வேண்டாமென, எங்களுக்கு உதவிகள் செய்யவதற்காக அங்கே நின்ற தோழர் சொன்னார். ஏதாவது தவறாகவோ அல்லது நக்கலாகவோ கதைத்தால் தண்டனை கிடைக்கும் என்றார். எனக்கு இந்த தண்டனை என்றால் என்னவென்று விளங்கவேயில்லை. சற்று தூரத்தில் ஒரு தோழர் மைதானத்தைச் சுற்றி குத்துக்கரணம் அடித்துக் கொண்டிருந்தார். அவரைக் காட்டி, இதுதான் தண்டனை (பணிஸ்மன்ற்) என்றதும் எனக்கு பயம் பிடித்தது.

பின்னர் மதியம் உணவிற்கு விசில் அடிக்க எல்லோரும் வரிசையாக நின்றனர். உணவு பரிமாறப்பட்டது. சிலர் மிக விரைவாக உண்டனர். ஏனென்று அன்று எனக்குப் புரியவில்லை. அதற்கு காரணம் உணவு உண்டு கொண்டிருக்கும் வேளையில் தீடிர் என அபாய ஒலி எழுப்புவார்கள். உடனேயே உணவை வைத்துவிட்டு, தமக்கு என கொடுக்கப்பட்ட இடங்களில் போய் பதுங்கி இருத்தல் வேண்டும். அபாய ஒலி எழுப்பிய பின்னர் யாராவது தொடர்ந்து உணவு உண்டாலோ அல்லது ஓடும் போது உணவு தட்டுகளை கவணித்து விலத்தி ஒடினாலே அவர்களுக்கும் தண்டனை தான். இது பயிற்சியின் ஒரு பகுதியாக இருந்தது. எனவே தான் எல்லோரும் உணவை விரைவில் உட்கொண்டனர்.
உண்டவர்கள் தமது முகாமிற்குள் (கொட்டிலிற்குள்) சென்று உறங்க முற்பட்டனர்.

அவ்வேளை முன்பு வந்தவர்கள் சில புத்தகங்களை எடுத்து வாசித்தனர். இங்கு இருந்த புத்தகங்களைப் பற்றி குறிப்பிட வேண்டும் அதாவது மொஸ்கோ பதிப்பக புத்தகங்கள் தான் அதிகமாக காணப்பட்டது. அதைவிட உள்நாட்டு பத்திரிகைகளும், வேறு சில புத்தகங்களும் இருந்தன. இதில் எடுத்து படிப்பவர்கள், மொஸ்கோ பதிப்பக புத்தகங்களை எடுத்து படிப்பது கிடையாது. மாறாக உள்நாட்டு செய்தித் தாள்களையும், கதைப் புத்தகங்களையுமே வாசித்தனர். இதற்கு அடிப்படைக் காரணம், அங்கு பயிற்சியில் ஈட்டவர்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கப்படாமையே. அரசியல் அற்ற சுத்த இந்திய இராணுவ முறையிலான பயிற்சியாகவே இருந்தது. இதற்கு அடிப்படைக் காரணம் இங்கு அரசியல் வகுப்பு எடுப்பதற்கு என ஒரு நபர் கூட இல்லாமையாகும்;. இங்கு பயிற்சி கொடுத்த மதன், பாண்டி என இருவரும் இந்திய இராணுவத்தினரால் உத்தரப்பிரதேசத்தில் வைத்து பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள் என்பதுடன், அன்றைய அனைத்து முகாம்களின் பொறுப்பாளராக இருந்தவர் பரந்தன் ராஜன்.

இவர்களுக்கோ அல்லது அன்று மத்திய குழுவில் இருந்தவர்களுக்கோ, அரசியல் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. (தேனீ, புதுக்கோட்டை முகாம்களில் அரசியல் கற்பிக்கப்பட்டதாக அறிந்தேன் எந்தளவு உண்மை என்பது எனக்குத் தெரியாது) நான் இங்கு குறிப்பிட்ட முகாம், பீ காம். இது 400க்கு மேற்பட்ட தோழர்களை கொண்டிருந்தது. இதில் எமக்கு ஐந்து மாதங்களுக்கு முன்வந்தவர்கள் உட்பட, ஒவ்வொரு நாளும் வரும் புதியவர்களும் இணைக்கப்பட்டனர். தளத்தில் இருந்து வந்தவர்களுக்கு அரசியல் வகுப்புக்கள் எடுத்து, அதன் பின்னர் ஆயுதப் பயிற்சியை கொடுத்திருந்தால் அரசியல் அறிவு கலந்த ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கி இருக்க முடியும். மாறாக தளத்தில் முதல் நாள் அடிமட்ட உறுப்பினராக சேர்ந்தவரைக்கூட, இங்கு அனுப்பி வைத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் யார் எந்த இயக்கத்துக்கு போவது என்பதைக் காட்டிலும், எந்த இயக்கத்திலாவது போய் பயிற்றி எடுத்து வரவேண்டும் என்ற ஆர்வம்தான் பலரிடம் காணப்பட்டது. இன்று ஒரு இயக்கம் அவரை ஏற்ற மறுத்தால், மறுநாள் மற்ற இயக்கம் அவரை பயிற்சிக்கு இந்தியாவிற்கு அனுப்பிவிடும். எனவே தளத்தில் விடுதலை இயக்கத்திற்கு ஆட்சேகரிப்பு என்பதிலும் பார்க்க, சும்மா போனவன் வந்தவனை எல்லாம் அனுப்பினர். எந்த அமைப்பில், அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் இருக்கின்றனர் என்று காட்ட முயன்றார்கள். இதன் விளைவே பிற்காலத்தில் எமது போராட்டம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

அரசியல் அறிவற்ற தோழர்களுக்கு அரசியல் படிப்பிக்க வேண்டும் என்றோ அல்லது ஆயுதப்போராட்டத்தின் உன்னத மகிமையை விளங்கப்படுத்தவோ, எவரும் தயாராக இருக்கவில்லை.

மதியத்துக்கு பின்பாக எல்லோரையும் குளிக்க அனுமதித்தனர். எல்லோரும் சென்று குளித்தனர். மாலை 6 மணிக்கு ஒரு விசில். எல்லோரும் மீண்டும் மைதானத்தில் சாரத்துடன் அணி திரண்டனர். அங்கு ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்தவற்றை செய்து காட்டினர். அதன்பின்பு இரவு உணவு. அணைவரும் நித்திரைக்கு சென்றனர். அப்போது என்னுடன் ஒன்றாகப் படித்த நண்பர்கள் சிலர் என்னைச் சந்தித்து, தங்கள் மனந்திறந்து மெதுவாகக் கதைத்தனர். அவர்கள் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல, எனது மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது. அவர்கள் என்னைப் பார்த்து, நீ எதற்கும் வாயைத் திறக்காதே என்றனர். ஏனென்று பின்பு ஆறுதலாகக் கதைக்கலாம் எனச் சொல்லி, நித்திரைக்குச் சென்றனர். அன்று நான் தூங்கவில்லை. காரணம் பயம். அடுத்தது தற்போதுதான் முதற் தடவையாக வீட்டாரைப் பிரிந்துவந்த கவலை, என்னைப் பெரிதும் வாட்ட ஆரம்பித்தது.

மறுநாள் காலை 4.30 மணிக்கு விசில் சத்தம் கேட்டது. என்னையும் எழுப்பினர். நானும் மற்றவர்களைப் பார்த்து, அவர்கள் என்ன செய்கின்றனரோ அதையே செய்தேன். காலைக்கடன் முடித்து தேனீர் அருந்தியதும் மைதானத்தில் அணிவகுக்கும்படி கூறினார்கள். நாமும் நின்றோம். இன்று உங்களுக்கு பயிற்சி ஆரம்பமாகிறது எனக்கூறி எம்மை மற்றவர்களின் பின்னால் வரும்படி கூறனர். நாமும் அவர்களைப் பின் தொடர்ந்தோம். சற்றுத் தூரம் சவுக்குமரக் காட்டிற்குள்ளால் சென்ற பின்னர், ஒரு திறந்தவெளி மைதானத்தை அடைந்தோம். அங்கே பயிற்றுனர் காத்திருந்தார். அவர் அந்த மைதானத்தைச் சுற்றி ஓடும்படி உத்தரவிட்டார். ஒரு சுற்று ஓடியதும் என்னால் முடியவில்லை. ஒருவாறு இரண்டாம் சுற்றும் ஓடினேன். அதன்பின்பு நான் களைத்து நிற்க, இன்று சரி நாளை ஓடவேண்டும் என பயிற்றுனர் கூறினார். அவரது தமிழ் எனக்கு சரியாக விளங்கவில்லை.

நான் பயிற்சி இடைவேளையின் போது எனது நண்பனைக் கேட்டேன். யார் இவர் எனக்கு இவரது கதை விளங்கவில்லையே என்றேன். இவர் தமிழ் நாட்டுக்காரர். இந்திய இராணுவத்தில் முன்பு பணிபுரிந்தவர். இவரது புனைபெயர் லெனின் என்றான். இதனை அடுத்து நாம் பயிற்சியை ஆரம்பித்தோம். இவ்வாறு ஒருசில நாட்கள் கடந்தன. அப்போது ஒரு தோழர் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் முகாமைச் சுற்றி குத்துக்கரணம் அடித்தபடி இருந்தார். ஏனென்று எனக்கு தெரியவில்லை. உனக்குத் தெரியுமா என, ஒரு நண்பனை விசாரித்தேன். அவன் பயிற்சிக்கு வந்து முகாமை விட்டுத் தப்பிச் சென்றவன். அவனை எமது கழகத்தினர் பிடித்துவந்துள்னர். இப்படிப்பட்டவர்களுக்கு  தண்டனை இது என்றும் கூறினான். (இயக்கப் பயிற்சிக்கு என்று வந்து மனம் சலித்து, பல காரணங்களால் தப்பிச் சென்றாவர்களுக்கு இதுதான் தண்டனை. இதுவே பிற் காலத்தில் மரணதண்டனையாக மாற்ப்பட்டது) அவரின் தண்டனை முடியமுன்னரே அவர் களைத்து விழுந்துவிட்டார். சரி இவ்வாறு தண்டனை கொடுப்பவர் யாரென்றால் இயக்கத்தின் தண்டனை முகாமிற்கு பொறுப்பான மூர்த்தி (மொட்டை மூர்த்தி).

அப்போது இயக்கத்திற்கு மூன்றே மூன்று முகாம்கள் மட்டுமே இருந்தது. அதாவது தேனீகாம், புதுக்கோட்டைகாம், பீகாம். நான் இருந்தது பீகாம்பில். இங்குதான் தண்டனைக் கைதிகளும்; இருந்தனர், அது அங்கு வேறு ஒரு பகுதியில் இருந்ததால், நீண்ட நாட்களின் பின்புதான் எனக்கு அது பற்றித் தெரியவந்தது. அப்போது பீகாம்பில் பயிற்சி தருபவர்கள் மதன், பாண்டி (ஊத்தைப்பாண்டி), சங்கர், சாணாக்கியன், இன்னும் ஒருவர் பெயர் ஞாபகத்தில் இல்லை. மற்றது இந்தியப் பயிற்சி தருபவரான லெனின். இவர்களுடன் தண்டனை முகாமிற்கு பொறுப்பாக இருந்தவர் மெட்டை மூர்த்தி. இவருக்கு உதவியாளராக கண்ணாடிச் சீலன் (இவர் பிற்காலத்தில் அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார்) அத்துடன் சித்திரவதை செய்வதற்கு என்று இடியமீன், சவுதி,…. என்ற தோழர்களும் இருந்தனர்.

தண்டனை முகாமை எல்லோரும் ~நாலாம் மாடி| என்பார்கள். இதைப்பற்றி சற்று கவனிக்க வேண்டும். காரணம் இங்குதான் பல கொலைகள் நடந்தேறின. இயக்கத்திற்கு பயிற்சிக்காக வரும் தோழர்கள் பலர் கொன்று குவிக்கப்பட்ட இடம் இதுதான். கழகத்தின் தலைமை உறுப்பினர்களில் சொந்த விருப்பு வெறுப்பிற்கு ஏற்றாற்போல கொலைகள் நடந்தேறின. இதை நடத்தியவர்களில் முன்னணி வகித்தவர் வாமதேவனே. இவரை பொறுத்தவரையில், ஒரு போராளி என்ற சொல்லுக்கே அறுகதையற்றவர். ஏன் சாதாரண மனிதப்பண்புகளே இல்லாத ஒருவர். இங்குதான் சித்திரவதைகள் நடத்தப்படும். சித்திரவதை என்பது பலரும் சிறிலங்கா இராணுவத்தின் சித்திரவதையை நினைப்பீர்கள். ஆனால் அதைவிட பலமடங்கு வக்கிரமானது. அவற்றின் விபரம்

1. தாம் களைக்கும்வரை அடிப்பது குறிப்பாக குதிக்கால் முதுகொலும்பு
2. கண்ணுக்குள் மிளகாய் தூள் போடுவது
3. பச்சை முளகாய் ஒரு கோப்பை சாப்பிடச் செல்லது இல்லையேன்றால் மயங்கும் வரை அடி பின்னரும் சாப்பிடவே வேண்டும்.
4. நிர்வாணமாக்கி தலைகீழாக தொங்கவிட்டு தலையில் தமது காலால் உதைவது
5. கைகள் கால்கள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் உளண்றியில் (கப்பியில்) தொங்கவிடுவது
6. விரல் நிகங்களைப் பிடுங்குவது
7. கையிலோ தொடையிலோ பிளேட்டால் வெட்டி, அந்தக் காயத்தின் உள் மிளகாய் துள் போடுவது.
8. அதே காயத்தில் பின்னர் வெடிமருந்து அடைந்து, அதைக் கொழுத்தி விடுவது

இவை எனது ஞாபகத்தில் உள்ளவை. இன்னும் பல. இவ்வாறு நடப்பதற்குள் பலர் இறந்து விடுவார்கள்.
போலியாக மாக்சியத்தையும் பாட்டாளி வர்க்க நலனையும் பற்றி மக்கள் மத்தியில் கதைத்தபடி உலாவிய இவர்களின் முகம் இதுதான். தளத்தில் இருந்து எதையுமே சிந்திக்காது, பலிக்கடாக்களாக இளைஞர்களை சேர்த்து அனுப்பும் ஒருகூட்டம் இயங்கியது. இவர்களுக்கு தாம் யாரையாவது பிடித்து அனுப்பிவிட்டால் போதும் என்ற எண்ணத்தில் அனுப்பியது. ஆனால் அவர்களுக்கு நடங்கும் கதி இதுவாகத்தான் இருந்தது. பல நூற்றுக்கணக்கானோரை அனுப்பிளோம். எல்லோருக்குமா இப்படி நடந்தது என்று கோட்கலாம். எறத்தாள அனேகமானோருக்கு எதொரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்களே. எனது தொடரில் தொடர்ந்து ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

தொடரும்…

 
 
 
 

 

Edited by nunavilan

என் புனிதமான  மக்கள் விடுதலைக்கழகத்தைப்பற்றி அவதூறாக எழுதுவதை வன்மையாய் கண்டிக்கிறேன்    :icon_mrgreen:  :rolleyes: 

:lol:  :lol:  :lol: பார்த்து எழுதுங்கப்பா அர்யுன் அண்ணா கோபிக்கப் போறார். யாழில் ரமணனை தடை வித்திக்க சொல்லி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தாலும் ஆச்சரியப் படத்தேவை இல்லை  :rolleyes:  :rolleyes:  :rolleyes:

 புலிகளால் தூரோகி என்று கூறி அழிக்கப்பட்டவர்கள் அழிந்த பின்னும்  சில உண்மைகளையாவது எழுதுகிறார்கள் அவர்களை துரோகி என்று  சொல்ல  அவர்கள் அமைப்பிலும் ஆக்கள் இல்லை சுட்வதுக்கும்  தமிழ்த்தேசிய காவலர்களான புலிகளும் இல்லை.ஆணால் உண்மையான போராட்ட குழுவின்  உண்மைகளை யாழும் எழுதவ்தும் இல்லை  எழுதியவனையும் துரோகி ஆக்கி கொண்டு இருக்கிறார்கள் இந்த இலச்சனத்தில   எழுதுபவனையும் நக்கல் நயாண்டி.

 

 

 சில  கருத்தாளர்களின்  கருத்துகளுக்கு கேள்வியாக சிலவற்றை கேட்டால் அந்த கருத்தை நீக்கிவிட்டு புது விளக்கம் வேற(  எல்லா ஊடகங்களை போல் யாழுக்கும் ஒரு  இலக்கு இருக்காம் அது தவறை தவறை என்று கூற அனுமதிக்காத  இலக்கு) :lol::D

 
 
புளாட்டில் நான் பகுதி 2
 
1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும்

 

 

83 இன் கால கட்டங்களில்  இயக்கத்தில் இணைந்தவர்களைக் கேவலப்படுத்தும் வசனம்.

 

அதிகமான போராளிகள் உணர்வு பூர்வமாகவே போராடப்  போனார்கள். தலைமைகளை நம்பிப் போராடப் போகவில்லை.  இயக்கங்கள் என்பது  வெறும் குழுநிலைவாதிகள்  என்பது,  இனத்திற்காகப் போராட வேண்டும் என நினைத்தவர்களுக்குத் தெரிந்திரிக்கவில்லை. சிலர் 'ஹீரோத்தனம்' காட்டுவதற்காகப் போயிருக்கலாம்.

 

அந்த நேரத்தில் புலிகளில் இணைவது மிகவும் கடினமான விடயம். 85 இற்குப் பின் நிலைமை மாறிவிட்டது.

 

.'ஹீரோத்தனம்' காட்டியவர்கள்  மாவட்டத்திற்கு  ஒரு AK யும், தெருவுக்கு ஒரு   மோட்டார் சைய்க்கிளில் ஷோ காட்டித் திரிந்த புளட் , ஈபி தோழர்களே.  

 

PLO  பயிற்சி பெற்ற போராளிகளும் வேருமினையே வந்து கிடந்தார்கள்.  இவர்களை விட உள்நாட்டிற்குள் சில காலம் பயிற்சி பெற்ற போராளிகளே ஆயுதப் படையின் மீது தாக்குதல் நடாத்தினார்கள்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

 சில  கருத்தாளர்களின்  கருத்துகளுக்கு கேள்வியாக சிலவற்றை கேட்டால் அந்த கருத்தை நீக்கிவிட்டு புது விளக்கம் வேற(  எல்லா ஊடகங்களை போல் யாழுக்கும் ஒரு  இலக்கு இருக்காம் அது தவறை தவறை என்று கூற அனுமதிக்காத  இலக்கு) :lol::D

 

உங்களுக்கு பதில் எழுதினால்

பிரதேசவாதம் என்று எங்களுக்கு வெட்டு விழும்போது நீங்கள் இதைப்பேசியிருக்கணும் :(

  • தொடங்கியவர்
புளாட்டில் நான் பகுதி – 05
 

எமது பயிற்சியின் ஆரம்பத்ததில் இருந்து பல புதியவிடயங்களைக் கற்றோம். அதேவேளை எனது வீட்டார் தொடர்பான கவலையும் அதிகரித்தது. இப்படி கிட்டத்தட்ட ஒரு 15 நாள் போயிருக்கும், திடீரென ஒரு நாள் முகாமில் பரபரப்பு. பல முக்கிய உறுப்பினர்கள் வழமைக்கு மாறாகவே, முகாமிற்கு வந்து போக ஆரம்பித்தனர் பலர் மத்தியில் ஏன் என்று தெரியாத போதும், அதை அறிந்து கொள்ள எல்லோருமே விரும்பினர்.

அப்போது தான் உமாமகேஸ்வரனுடன் வெளிநாட்டுப் பயிற்சிக்கு சென்ற (பி.எல்.ஓ) விச்சு என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் புளாட்டின் தண்டனை முகாமில் உள்ளார் என்றும் கூறினார்கள். அவரைப் பார்க்க பலரும் விரும்பினர். அதனால் தண்டனை முகாமிற்கு அருகாமையில் காவலுக்குப் போவதற்கு பலர் விருப்பப்பட்டனர். இது எனக்கு மட்டும் என்ன, விதிவிலக்கா?

நான் தண்டனை முகாமிற்கு அருகாமையில் காவல் புரியப் பணிக்கப்பட்டேன். அந்த முகாமிலிருந்து ஐயோ… அம்மா… என்ற அலறல்கள் கேட்கும். எனது தோழர்களிடம் என்ன இது?, யாரென்று கேட்டேன். அது சிறிலங்கா அரசின் உளவாளி என்றும், அவர் பெயர் மாணிக்கம் என்றும் கூறினர். இவருக்கு இரவு வேளைகளில் சித்திரவதை நடப்பது வழக்கம் என்றனர். உண்மையில் அதில் வேறு பலரும் இருந்திருக்கக் கூடும். ஆனால் எமக்கு கூறியது ஒருசிலரையே. இவருக்கு நடந்த சித்திரவதைகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாவிட்டாலும், எனக்கு தெரிந்தவற்றை கூற முயற்சிக்கின்றேன்.

அவரின் கையை பிளேட்டால் வெட்டி அவ்வெட்டுக் காயத்திற்குள் வெடிமருந்தை நிரப்பி அதைக் கொழுத்தி விட்டுருந்தனர். அவரின் சிறுநீரையே குடிக்கக் கொடுத்திருந்தனர். உளன்றியில் தலைகீழாக தொங்க விட்டு (இது அதிகம் எல்லோருக்கும் நடக்கும்) அடிப்பார்கள். இதை விட பல வகை. தற்போது இதை நினைவுக்கு கொண்டு வரவே பயமாக இருக்கின்றது. சிறிலாங்கா இராணுவத்திணர் எமது தோழர்களையும், தமிழ் மக்களையும் கைது செய்து சித்திரவதை செய்கின்றார்கள் என்று, நாட்டில் பக்கம் பக்கமாக எழுதியும், சுவரொட்டிகளில் ஒட்டியும் இருந்தவர்கள், இங்கு அதையே ஈவிரக்கமின்றி செய்தார்கள். மாணிக்கம் என்பவர் மட்டுமல்ல, அங்கு பலர் இருந்தனர். எனக்கு மற்றவர்களின் பெயர்கள் மறந்துவிட்டது. இதில் ஒரு சிலர் சித்திரவதையால் இறந்திருக்கக் கூடும். (சென்ற பாகத்திலும் சித்திரவதைகள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்)

ஆனால் விச்சுவிற்கு சித்திரவதை நடந்ததாக நான் அறியவில்லை. அவரின் கூடாரத்திற்கு அருகில் காவல் காக்கச் செல்பவர்கள், விச்சுவுடன் கதைக்க கூடாது என்று கட்டளையிட்டனர். கதைப்பவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அனேகமானோர் இவருடன் கதைப்பது இல்லை. மாறாக முகாம் பொறுப்பாளர்களே கதைத்தனர். அதிலும் குறிப்பாக மதன் என்பவரே அவருடன் கதைத்தார்.

திடீரென ஒருநாள் நல்லிரவு முகாமின் பாதுகாவலர்களால், பாதுகாப்பு மணி ஒலிக்கப்பட்டது. எல்லோரும் எழுந்து முகாமின் பாதுகாப்பு வலையத்திற்குச் சென்று, முகாமுக்கான பாதுகாப்பில் ஈடுபட்டோம். வழமையாக இது ஒரு பயிற்சியாக நடத்தப்படுவது வழக்கம், அவ்வாறாயின் சற்று நேரத்தில் எம்மை மைதானத்திற்கு அழைத்து பின்னர் முகாமிற்கு அனுப்புவார்கள். அன்று வழமைக்கு மாறாக, நீண்ட நேரமாகியும், எம்மை எழுந்து செல்ல அனுமதிக்கவில்லை. எல்லாத் தோழர் மத்தியிலும் கோள்வி எழ ஆரம்பித்தது. எல்லோருமே மெதுமெதுவாக கதைக்க ஆரம்பித்தனர். அவ்வேளை காவற் கடமையில் நின்ற தோழர்களை சிலர் அழைத்து காரணம் கேட்டனர். அதற்கு புலிகள் எங்கள் முகாமைத் தாக்க முற்பட்டனர் என்றும், அதனாலேயே இது நடக்கிறது என்றும் கூறப்பட்டது. ஆனால் இது கட்டுக்கதை என்பது பின்னர் அறிந்து கொண்டோம்.

இவ்வாறு தான் மாற்று இயக்கங்கள் மீது, வெறுப்பையும் விரோதத்தையும் வளர்க்க ஆரம்பித்தனர். புலிகள் மட்டுமல்ல மற்றைய இயக்கங்களுடனும், இவர்கள் பகை உணர்வையே கொண்டிருந்தனர். இதையே பயிற்சி முகாமில் உள்ளவர்களுக்கு செல்லியும் கொடுத்தனர். இதனால் பலர் மற்றைய இயக்கங்களை விரோதிகளாகவும் பார்க்கலானார்கள். இதன் விளைவு தான் பிற்காலத்தில் சங்கிலியுடன் இனைந்து செயற்பட்ட, இடியமீன் போன்றவர்களை உருவாக்கியது.

அதிகாலையாகி வெளிச்சம் வர ஆரம்பித்தது. எம்மை மைதானத்திற்கு அழைத்தனர். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, விரைவாக வருமாறு கட்டளை பிறப்பித்தனர். எல்லோரும் கலைந்து சென்றவாறே, மெதுவாகக் கதைக்க ஆரம்பித்தோம். காரணம் எம்மை கண்காணிப்பதற்கும், மாட்டிவிடுவதற்கும் எமக்குள்ளேயே ஒற்றர்கள் இருக்கின்றனர் என்ற சந்தேகமே ஆகும். சில விபரங்களை அறிந்தவர் என்ற வகையில் எமக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரிடம், என்ன நடந்தது எனக் கேட்டேன். விச்சு என்பவரை மதன் என்பவர் காப்பாற்றி, அவருடன் தப்பிச் சென்று விட்டாரம் என்று கூறினார். எனக்கு பயம் தொட்டது. காரணம் முகாம் பொறுப்பாளரே இப்படி என்றால், என்ற பயம் தான் அது. எத்தனை நாட்கள் கடந்து போயின என்பது எனக்குத் தெரியாது.

முகாம்களின் அன்றைய பொறுப்பாளர் பரந்தன் ராஜன் திடீரென ஒருநாள் முகாமின் ஆரம்ப தோழர்கள் ஒருசிலரையும், மொட்டை மூர்த்தியின் சகாக்கள் என பலரையும் அழைத்து, ஜீப் வண்டியில் அவர்களை ஏற்றிச் சென்றார். அவர்களை எதற்காக, எங்கே கொண்டு சென்றார்கள் என்ற விபரம் ஏதும் தெரியவில்லை. மறுநாள் காலை நாம் பயிற்சி முடிந்து மைதானத்தில் கூடி நிற்கும் போது, திடீரென மூர்த்தியுடன் வேறு சிலருமாக மதனின் கைகளைப் பிணைத்து விலங்கிட்டு கொட்டனால் அடித்தபடியே இழுத்து வந்தனர். இவன் ஒரு துரோகி..! இவனுக்கு அடியுங்கள். எல்லோரையும் பார்த்துக் கைநீட்டிச் சொன்னார். அதை சிலர் ஏற்கவில்லை. வேறு சிலரோ, கைகள் விலங்கிடப்பட்ட மதனை பாய்ந்து பாய்ந்து அடித்தனர்.

ஐயோ அம்மா என்ற கதறலோடு, இரத்தம் உடலால் சீறிப்பாய்ந்தது. ஒரு மனிதனை ஈவிரக்கமின்றி, அடிமேல் அடித்த அந்தச் சம்பவம் என் மனதை பெரிதாகவே பாதித்துவிட்டது. அதனால் எனக்குள் ஒருவித பயமும் ஏற்பட ஆரம்பித்தது. இதில் முக்கியமான விடையம் ஒன்றை குறிப்பிட விரும்புகின்றேன்.

மதனும் விச்சுவும் பட்டுக்கோட்டையில் உள்ள பண்ணையார் வீட்டில் மறைந்திருந்தனர். அவர்களை கைது செய்ய முற்பட்டபோது பண்ணையாரும், அவரின் ஆட்களும் தடுக்க முற்பட்டபோது, பண்ணையாரை பரந்தன் ராஜன் சுட்டுக் கொன்றான். இதை அன்றைய தமிழ் நாட்டு வானோலியில் செய்தியிலும் கூறப்பட்டது. நாம் பயிற்சி பெற்று வந்த இத்தளத்திலும், எமக்கு அடைக்கலம் தந்த மக்கள் மீதும், தமது அராஜகத்தையும் தமது பிற்போக்குத் தனத்தையும் எவினார். தங்கள் கொலைகார வக்கிரத்தை காட்டும் முகமாகவே, துப்பாக்கி பிரயோகம் நடத்தினர். இவ்வாறான ஒரு இயக்கமா இது, என்ற கோள்வி பலர் மத்தியில் எழுந்தது. தமக்கும் இதே நிலமை ஏற்படலாம் என்று பயத்தால், அங்கிருந்தவர்கள் மௌனமாக இருந்தார்கள். இக்காலத்தில் தான், பலர் பயிற்சி முகாமைவிட்டு தப்பிச்செல்ல முயற்சித்தனர். தமது தாயகத்தை மீட்க, தம்மால் அதிகூடிய கொடையாக தங்கள் உயிரையே  கொடுக்க கூடிய தோழர்களின் மனதில், வெறுப்பும் பயமுமே எஞ்சியிருந்தது.

அந்தமுகாமில் தங்கிப் பயிற்சி எடுப்பதற்கு எனக்கு கொஞ்சங்கூட விருப்பம் இல்லாமல் போனது. ஒருவாறு நான் எனக்கு சுகயீனம் என்று கூறி, என்னை வைத்தியத்திற்காக ஓரத்தநாட்டிற்கு (நான் முதற் தடவையாக பயிற்றி முகாமுக்கு வருமுன் சந்தித்த அலுவலகம்) அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மறுநாள் காலை தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கே என்னைப் பரிசோதித்த வைத்தியர், மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் எனக் கூறினார். அதனால் நான் அங்கிருக்கும் முகாமில் சில நாட்கள் தங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது நாம் உறங்குவது மொட்டைமாடியில் தான்.

அங்கு ஒருவர் மிகவும் நகைச்சுவையாக கதைத்தார் அவர் பெயர் நாகேஸ். யாழ்பாணத்தைச் சேர்ந்தவர். இவர் வட இந்தியாவில் இருந்து வந்திருந்தார். தான் அமைப்பின் வெளி உளவுப் பிரிவில் வேலை செய்வதாக முதலில் கூறினார். பின்னர் ஒரு இரவு படுக்கும் போது நகைச்சுவையாக தனது மலவாயில் பெரியையாவிற்காக பெருத்துவிட்டது (எனது குண்டி ஓட்டை பெரிசாகிவிட்டது, பெசிசுக்காக) எனக் கூறினார். முதலில் எனக்கு இது விளங்கவில்லை. எனது அருகாமையில் இருந்த தோழரிடம் கோட்டேன் அவரும் தனக்கு புரிவில்லை என்றார். எனக்கோ இது என்ன என்ற அறிய ஆவலாக இருந்தது. அங்கு நீண்ட நாட்களாக வேலை செய்த எனது நண்பரிடம் கேட்டேன். அவர் ஒருசில அமைப்பின் விடங்களை அறிந்தவர் என்பதால், மிகவும் இரகசியமாக இவர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபடுபவர் என்று கூறினார். இதை மற்றவர்கள் அறிந்தால், உனக்கும் எனக்கும் மரணதண்டனை தான் என்றும் கூறினார். இதை கேட்டதும் எனக்கு பயம் பிடிக்க ஆரம்பித்தது.

தேச விடுதலை என்றும், மார்க்சியம் என்றும், பாட்டாளி வர்க்க புரட்சி என்றும், பேசிய இவர்களிடம் இருந்த நடைமுறை என்பது, ஒரு மாபியா இயக்க நடைமுறையே. தளத்திலோ தமது வயிற்றுப் பசிக்காக தம்மால் எதை செய்ய முடியுமோ அதைச் செய்ய புறப்பட்ட பாமர மக்களில் ஒரு சிலர் கள்ளச்சாரயம் (கசிப்பு) விற்றனர். அங்கு இவர்களை தேடி திரிந்து முதலில் எச்சரித்த கழகத்தினர். அதன் பின்னரும் தமக்கு பிளைப்பில்லாததால், மீண்டும் கசிப்பு விற்கத் தொடங்கவே அவர்களுக்கு மரணதண்டனை வழங்கினர். ஆனால் இவர்களோ பெரியளவில், சர்வதேச கிரிமினலாக மாறி போதைவஸ்து கடத்துகின்றார்கள். எந்தளவுக்கு இவர்களின் அரசியல் அன்று இருந்தது, என்பதை இது வெளிப்படுத்துகின்றது. ஊருக்கு உபதோசம், உனக்கும் எனக்கும் இல்லை என்பதைப் போலவே, இவர்களின் நடவடிக்கைகள் அமைந்தது.

நான் ஓரத்தநாட்டில் தங்கியிருக்கும் போது தான் தளத்தில் இருந்து மீரான் மாஸ்ரரும் அங்கு வந்திருந்தார் அவருடன் தள விரங்களை அறியக்கூடியதாக இருந்தது அக்காலத்தில் தான் முதல் முறையாக தோழர் தங்கரசாவை சந்தித்தேன்;. அவர் தான் அனைத்து முகாங்களுக்கும் சென்று அரசியல் வகுப்பு எடுக்க விருப்பதாகக் கூறினார். அவருடன் ஏற்பட்ட உரையாடலே, எனக்கு அரசியல் மீது அதிக ஆர்வம் எற்படக் காரணமாகியது. மேலும் அவர் பல புத்தகங்களைச் சொல்லி அவற்றை முக்கியமாக வாசிக்கும்படி எமக்குக் கூறினார். ஒருசில நாட்கள் கழிய, நான் மீண்டும் பழைய முகாமிற்கு திரும்பினேன். அங்கு சென்றதும் மீண்டும் பயம், பதட்டமென எற்பட்ட போதும் ஒருவாறு பயிற்சியை தொடர்ந்தேன்.

ஒரு நாள் மதன் கொல்லப்பட்டார் என அறிந்ததோம். இவரைக் கொலை செய்வதற்கான உத்தரவை, அமைப்பின் மத்திய குழுவே வழங்கியதென, பின்நாளில் அதன் முக்கியஸ்த்தர்களில் ஒருவரானமீரான் மாஸ்டர் கூறினார். தீடிரென என்னசெய்வது என்று தெரியாது திகைத்து நின்றேன். இதுதான் முதல் உட்படுகொலை என நான் நினைக்கிறேன்.

 

www.maruaaivu.com

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.