Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மதத்திற்கும் உள்ள ஒற்றுமை அற்ற தன்மை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மதத்திற்கும் உள்ள ஒற்றுமை அற்ற தன்மை-பெரியார்
 

1+%2855%29.JPG

இஸ்லாம் மத ஒழுக்கம்

1. மதுபானம் கூடாது.

2. சூதாடுதல் கூடாது.

3. விபசாரம் கூடாது.

4. வட்டி வாங்குதல் கூடாது.

5. போர் செய்தல் கூடாது.

 
இந்து மத ஒழுக்கம்

1. கடவுள்களுக்கு மது படைக்கவேண்டும். (ராமாயணம்)

2. அரசர்க்கு சூது உரியது. (பாரதம்)

3. கடவுள்களே விபசாரம் செய்திருக்கின்றன. (கிருஷ்ணன், முருகன்) விபசாரிகளை அனுமதிக்கின்றன. (தேவதாசிகள் முறை)

4. வட்டி வாங்குவது வருணாச்சிரம முறை. (வைசிய தர்மம்)

5. கடவுள்கள் யுத்தம் செய்திருக்கின்றன. யுத்தம் அரச நீதி, அரச தர்மம். (கந்தப்புராணம், பாரதம், ராமாயணம்)

மதக்கொள்கைகள், திட்டங்கள் ஆகியவைகளில் இந்து மதம், இஸ்லாம் மதம், கிருஸ்தவ மதம் ஆகிய மதங்கள் எல்லாம் ஒன்றே.

கடவுள்

இந்து மதத்தில் பல கடவுள்கள் உண்டு.

இஸ்லாம், கிறிஸ்து மதங்களில் ஒவ்வொரு கடவுள் தான் உண்டு.

கடவுள் சாயல்

இந்துமதம் கடவுளை மனிதனாகவே மனித ரூபகமாகவே பாவிக்கிறது. இஸ்லாம்மதம் கடவுளை மனிதனாகக் கூறுகிறது. அதாவது கடவுளை ஆண்டவன் அவன் இவன் என்று சொல்லுகிறது.

உலக சிருஷ்டி

இந்து மதம் கடவுளால் உலகம் சிருஷ்டிக்கப்பட்டது என்று கூறுகிறது.

இஸ்லாம் மதமும் உலகம் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதென்றே கூறுகிறது.

பாவ புண்ணியக் கணக்கு

இந்து மதத்தில் மனிதனுடைய செய்கையை குறித்து வைத்து பாவ புண்ணியம் கணக்கு வைக்கப்படும். சித்திரபுத்திரன் எழுதி வைப்பார்.

இஸ்லாம் மதத்தில் மனிதனுடைய செய்கைகளைக் குறித்து பாவ புண்ணியம் கணக்கு வைக்கப்படும். இரண்டு தூதர்கள் எழுதி வைப்பார்கள்.

சொர்க்க நரகம்

இந்து மதத்தில் மனிதனுடைய பாவத்துக்கு நரகமும் புண்ணியத்துக்கு சொர்க்கமும் உண்டு.

இஸ்லாம் மதத்தில் மனிதனுடைய செய்கைக்கு பாவத்துக்கு நரகம், புண்ணியத்துக்கு சுவர்க்கமும் உண்டு.

ஏழு நரகம்

இந்துக்களுக்கு 7 நரகம் உண்டு.

இஸ்லாம்களுக்கு 7 நரகம் உண்டு.

தூதர் பிசாசு

இந்துக்களுக்கு தேவ தூதர்களும் பிசாசும் உண்டு.

இஸ்லாம் மதத்துக்கும் தேவ தூதர்களும் பிசாசுகளும் உண்டு.

நான்கு வேதம்

இந்துக்கள் வேதங்களுக்கு ரிக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு பெயர்கள்.

இஸ்லாம் வேதத்துக்கு தைரத்து, ஜபூரு, இஞ்சிலு, குர்ஆன் என நான்கு பெயர்கள்.

அவதார புருஷர்

இந்துக்களுக்கு அவதார புருஷர்கள் தெய்வாம்ச புருஷர்கள் ஆகிய லக்ஷக்கணக்கான ஆழ்வார்கள், நாயன்மார்கள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்துக்கும் லக்ஷக்கணக்கான தேவதூதர்கள், நபி மார்கள் ஆகியவர்கள் உண்டு.

புண்ணிய ஸ்தலங்கள்

இந்துக்கு புண்ணிய ஸ்தலங்கள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்துக்கும் புண்ணிய ஸ்தலமுண்டு.

பண்டிகை

இந்துக்களுக்கும் பண்டிகை விரதாதிகள் உண்டு.

முஸ்லீம் மார்க்கத்துக்கும் பண்டிகை விரதங்கள் உண்டு.

தொழுகை

இந்துக்களுக்கும் தொழுகை, பிரார்த்தனை இவற்றிற்கு முறைகள், கணக்குகள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்துக்கும் தொழுகை பிரார்த்தனை கணக்குகள் முறைகள் உண்டு.

தான தர்மம்

இந்துக்களுக்கும் தான தர்மங்கள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்திலும் தான தர்மங்கள் உண்டு.

விசேஷ நாள்

இந்துக்களுக்கு விசேஷ நாள், ஓய்வு நாள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்திலும் விசேஷ நாள் ஓய்வு நாள் உண்டு.

மற்றவர்கள் மட்டமானவர்கள்

இந்துக்கள், இந்து அல்லாதவர்களை மிலேச்சர்கள் என்கிறார்கள்.

இஸ்லாம் மதத்தில் இஸ்லாம் அல்லாதவர்களை காபர்கள் என்கிறார்கள்.

உள் பிரிவு

இந்து மதத்திலும் உள் பிரிவுகள் உண்டு.

இஸ்லாம் மதத்தில் உள் பிரிவினர்கள் உண்டு.

யுத்தம்

இந்து மதத்தில் மத யுத்தம் நடந்திருக்கிறது.

இஸ்லாம் மதத்திலும் மத யுத்தம் நடந்திருக்கிறது.

சடங்கு

இந்து மதத்திலும் சடங்குகளும் மந்திரங்களும் உண்டு.

இஸ்லாம் மதத்திலும் சடங்குகள் மந்திரங்கள் உண்டு.

செத்தவர் சரீரம்

இந்து மதத்திலும் செத்தவர்களுக்கு சரீரம் கொடுக்கப்பட்டு விசாரணை நடக்கும்.

இஸ்லாம் மதத்திலும் செத்தவர்கள் எழுப்பப்பட்டு விசாரணை நடக்கும்.

சமாதுக்கு கிரிகை

இந்து மதத்திலும் இறந்து போன பிணத்துக்கு கிரிகைகள், மந்திரங்கள், மரியாதைகள் உண்டு.

இஸ்லாம் மதத்துக்கும் இறந்து போன பிணத்துக்கு கிரிகைகள், மந்திரங்கள், மரியாதைகள் உண்டு.

சமாது வணக்கம்

இந்துக்களுக்கும் சமாது வணக்கம் உண்டு.

இஸ்லாம்களுக்கும் சமாது வணக்கம் உண்டு.

புனித ஸ்தலங்கள்

இந்துக்களுக்கும் சிலர் புதைக்கப்பட்டதற்கு (அடக்கமானதற்கு) ஆக விசேஷ ஸ்தலங்கள் உண்டு.

இஸ்லாம்களுக்கும் சிலர் புதைக்கப்பட்டதற்காக விசேஷ ஸ்தலங்கள் உண்டு.

மேல்கண்ட அனேக விஷயங்களில் கிறிஸ்தவ மதமும் இதை அனுசரித்தேதான் இருக்கின்றது.

ஆகவே பொதுவாக மதம் என்றால் கடவுள், நல்வினை, தீவினை, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் இறந்த பிறகு இவைகளை அனுபவித்தல் சடங்கு மந்திரங்கள் என்பவை இல்லாமல் எந்த மதமும் இருக்க முடிவதில்லை.

ஒருமனிதன் கடவுள் என்பதை ஒப்புக்கொண்டு சொர்க்க நரகம், நல்வினை, தீவினை, பாவம் புண்ணியம் ஆகியவைகளை ஒப்புக்கொள்ளா விட்டால் நாஸ்திகனாய் விடுகிறான்.

நல்வினை தீவினை என்பவைகளோ மதத்துக்கு ஒரு விதமாய் இருக்கிறது. இந்துவுக்கு கள் குடிப்பது பாவமல்ல. முஸ்லீம்களுக்கு கள் குடிப்பது பாவம். முஸ்லீமுக்கு மாட்டைக் கொல்வது தின்பது பாவமல்ல. இந்துவுக்கு மாட்டைக் கொல்வது தின்பது பாவமாகும்.

இதுபோல் இன்னும் அனேக விஷயம் உண்டு. ஆதலால் மதம் என்பது எல்லோருக்கும் ஒன்று போலவே இருந்தாலும் மத சம்பிரதாயம் வேறு வேறாய் இருந்து வருகிறது.

மத சம்பிரதாயங்களைப் பார்க்கும் போது சொர்க்க நரக விஷயத்தில் எல்லா மதங்களும் ஒன்றுபோல்தான் என்றும், நல்வினை தீவினை என்பதும், பாவ புண்ணியம் என்பதும் எல்லா மதத்திலும் கட்டுப்பாடுகள் என்றும், ஆனால் அந்த அந்த மதக்காரர்களின் காலதேசத்துக்கு தக்கபடி சௌகரியத்துக்கு தக்கபடி ஏற்பாடு செய்து கொள்ளப்பட்டவைகள் என்றும் விளங்கும்.

------------------------தந்தைபெரியார் - “குடி அரசு” கட்டுரை 03.05.1936

மனைவிமார்:

 

முஸ்லீம்கள் சட்டப்படி 4 மனைவிகளை வைத்துக்கொள்ள முடியும்.

சட்டப்பிரச்சனையே இல்லாமல் இருந்த இந்துக்களை கெடுத்தது வெள்ளைக்காரர்.

 

சீதனம்:

 

முஸ்லீம்கள் ஆண்களிடம் உருவி விருவார்கள். சவுதிக்கு வேலைக்கு போகும் போது பெண்பக்கம் விவாகரத்தாக திருமணத்தை அழித்துவிடுவார்கள். ஒவ்வொரு தடவையும் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது திரும்ப திருமணம் என்று மஹிர் புடுங்கிவிடுவார்கள்.

இந்துக்களுக்கு பெண்பக்கம் சீதனம்+ இனாம்+ பெரிய மச்சனுக்கு பிசினெஸ் முதல்+ சின்ன மச்சானுக்கு பைசிக்கிள் ஒரு தவை மட்டும் கொடுத்தால் போதும். 

 

மொழி:

இந்துக்கள் மொழிப்பற்று இல்லாத காரணத்தால் எதோ அல்லல் பட்டு அல்லல் பட்டு சமஸ்கிரத்தை தமிழுக்குள் சேர்த்திருப்பத்தல் ஐயர் சொல்வது சாடை மாடையாய் விளங்கும். இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை. வடமொழியில் இருந்து தமிழுக்கு மாற்றினால் தெய்வ நிந்தனை. ஆகவே அவர்கள் இலகுவான வழியாக ஆங்கிலத்தில் மாற்றப்பட்டிருக்கும் சுலோகங்களை பாடுவார்கள்.

முஸ்லீம்கள், விட்டுவிட்டு வியாபரத்துக்கு போட்டு வெள்ளிக்கிழமை திரும்பி வந்து ஆரை, ஏன் அராபிக்கில் திட்டுகிறார்கள் என்பது தெரியாமல் விழிப்பார்கள்.

 

சினிமா, நடனம், சங்கீதம்(கலைகள்):

 

வயித்துக்கு இல்லாவிட்டாலும் சினிமா பார்க்க வேண்டும் இந்துக்களுக்கு இருக்கும் சட்ட திட்டம். இந்துக்கள் தெரிந்து வைத்திருந்த சங்கீதம் நடனம் போன்ற நல்ல கலைகளை எல்லாம் காலிவூட் கெடுத்துப் போட்டு.  இனி மேல் சினிமா, சின்னத்திரை போதும் இந்துக்களுக்கு.

 

முஸ்லிம்கள் இதை நன்றாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இளவரசர்கள் மாதிரி சொத்துவைத்திருப்பவர்கள் முன்னால் கிளப்பாட்டுக்கள் பாடலாம், பெலி டான்ஸ் ஆடலாம். ஏழைகளை மூவி டிக்கெட்டில் வறுத்தெடுப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

 

நாஸ்திக அங்கீகாரம்:

 

பெரியார் மாதிரி பெரியவர்களை இந்துக்கள் சுதந்திரமாக கருத்தெழுத விடாமல் சீண்டுவதுண்டு.

 

ஆனால் முஸ்லீம்கள் பெரியார் மாதிரி உண்மை விளம்பிகளுக்கு உலக வாழ்கையிலிருந்தே விடுதலை கொடுத்துவிடுவார்கள். 

 

சமய அறிவு:

 

கீரிமலை கடல் கரையில் கடலை வித்த ஆச்சி வரைக்கும் ஆறுமுகநாவலரின்  சைவ வினாவிடை ஒரு கொப்பி வைத்திருந்து கண்டிருக்கிறேன். 

இஸ்லாமில் குர்ரானை பிரிப்பது குற்றம் என்பதால் உலாமாகள் வரை அதை ஒரு தடவை தன்னும் பிரித்துப் படித்தது கிடையாது.

 

............

.................

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் விழித்துக்கொள்ளும்போது, மதம் தேவையில்லாமல் போய் விடும்!

 

ஒப்பீடுகளுக்கும் அவசியமில்லாமல் போய் விடும்!

 

555823_603564086335727_1305572184_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.