Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளாந்த தமிழீழ விளையாட்டு செய்திகள்

Featured Replies

கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி வெற்றி
 
இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்டப் போட்டி ஒன்றில் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி வெற்றிபெற்றுள்ளது.
 
கடந்த திங்கட்கிழமை மானிப்பாய் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மானிப்பாய் இந்து கல்லூரி அணியினை எதிர்த்து கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி மோதியது.
 
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்து கல்லூரி அணி முதல் இனிங்ஸில் சகல இலக்குகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி 173 ஓட்டங்களைப் பெற்று சகல இலக்குகளையும் இழந்தது.
 
1 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸினை துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மானிப்பாய் இந்து கல்லூரி அணி 87 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.
 
87 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்குத் தமது இரண்டாவது இனிங்ஸனைத் துடுப்பெடுத்தாடிய கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி 3 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58463-2013-02-07-12-01-58.html

Edited by akootha

  • தொடங்கியவர்

யாழில் துடுப்பாட்ட வலைப்பயிற்சி திடல் அமைக்க நடவடிக்கை

 

13(287).jpg



யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வல்வெட்டித்துறை கழுகுகள், ஸ்கந்தா ஸ்டார்ஸ் ஆகியவற்றின் மைதானங்களில் துடுப்பாட்ட வலைப் பயிற்சிதிடல் அமைப்பது என யாழ்ப்பாண துடுப்பாட்டச் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது.

 

இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் உபதலைவரும், வடக்கு, கிழக்கு மாகாண துடுப்பாட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் ஈஸ்ட் வெஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமாகிய மதிவாணனால் ரூபா 5 இலட்சம் நிதி யாழ்ப்பாணத் துடுப்பாட்டச் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.


இந்நிதியின் மூலம் துடுப்பாட்ட வலைப்பயிற்சி திடல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வல்வெட்டித்துறை கழுகுகள் மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் துடுப்பாட்ட வலைப்பயிற்சி திடல் அமைக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

யாழ்ப்பாணத் துடுப்பாட்டச் சங்கச் செயலாளர் எஸ்.விமலதாஸன் தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58461-2013-02-07-11-51-11.html

  • தொடங்கியவர்

யாழ்- அம்பாறை அணிகளுக்கு இடையில் போட்டி
 
இலங்கை கால்பந்தாட்ட லீக் தனது 44 அங்கத்துவக் கழகங்களுக்கிடையில் விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்றை தற்போது நடத்தி வருகின்றது.


பருத்தித்துறை, கிளிநொச்சி கால்ப்பந்தாட்ட லீக் அணிகளினை வெற்றிகொண்ட யாழ்ப்பாண கால்பந்தாட்ட லீக் அணி, அடுத்த போட்டியில் அம்பாறை கால்;பந்தாட்ட லீக்குடன் எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மருதமுனை விளையாட்டு மைதானத்தில் மோதவுள்ளது.
 

இதற்கான அணி எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை புறப்படவுள்ளதாக யாழ்ப்பாண கால்பந்தாட்ட லீக் தலைவர் எஸ்.அன்ரனிப்பிள்ளை தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58452-2013-02-07-09-51-19.html

  • தொடங்கியவர்

விக்னேஸ்வரா, றோயல் அணிகள் வெற்றி
 

யாழ்.கால்பந்தாட்ட லீக், அங்கத்துவக் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற அணிக்கு 7 பேர் கொண்ட விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்றில் விக்னேஸ்வரா, றோயல் அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

 

 

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை இப்போட்டி இரண்டு ஆட்டங்களாக நடைபெற்றன.

முதலில் நடைபெற்ற போட்டியில் விக்னேஸ்வரா அணியினை எதிர்த்து பாரதி அணி மோதியது. இப்போட்டியில் விக்னேஸ்வரா அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

 

இரண்டாவது போட்டியில் அரியாலை ஜக்கிய நீல அணியினை எதிர்த்து ஊரெழு றோயல் அணி மோதியது. இப்போட்டியில் ஊரெழு றோயல் அணி 7:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58399--7-.html

  • தொடங்கியவர்

கராட்டிப் போட்டியில் அக்கரைப்பற்று ஜே.கே.எம்.ஒ.சங்க வீரர்கள் 17 பேருக்கு பதக்கங்கள்

 

b1(1250).jpg



கொழும்பு, சுகததாஸ உள்ளகரங்கில் இடம்பெற்ற 6ஆவது தேசிய சோட்டாக்கான் கராட்டிச் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று ஜே.கே.எம்.ஒ.சங்க வீரர்கள் 17 பதக்கங்களையும் ஒரு சம்பியன் கிண்ணத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளதாக சங்கத் தலைவரும் கிழக்கு மாகாண கராட்டி சம்மேளத்தின் தலைவருமான சென்சி.க.ஹேந்திரமூர்த்தி தெரிவித்தார்

 

 

இச்சுற்றுப் போட்டி கடந்த 2ஆம் திகதி சுகததாஸ உள்ளகரங்கில் சோட்டாக்கான கராட்டி சம்மேளனத்தின்  தலைவர் சிகான்.க.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நாடளாவிய ரீதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் கராட்டி வீரர்கள் இப்போட்டியில் பங்குபற்றியதாகவும் அவர் கூறினார்.


இதில் அக்கரைப்பற்று ஜே.கே.எம்.ஒ.சங்கத்தின் சார்பில் பங்குபற்றிய 10 - 11 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான (9, 8, 7,) பிரிவில் காட்டாவில் வெள்ளிப் பதக்கமும் குமிற்றியில் வெள்ளிப் பதக்கமும் 12- 13 வயதிற்குட்பட்ட  பெண்களுக்கான 1.2.3 கறுப்புப்பட்டி பிரிவில் கே.அட்சயா காட்டாவில் வெள்ளிப் பதக்கமும்  குமிற்றியில் தங்கமும் பெற்றுக்கொண்டனர்.

 

ஆண்களுக்கான 12 - 13 வயதிற்குட்பட்ட 9,8,7, பிரிவில் பி.சறோன் சச்சின் காட்டாவில் வெள்ளியும் குமிற்றியில் வெள்ளியும் 14 - 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 9,8,7. பிரிவில் ஏ.கரிஸ்மன் காட்டாவில் தங்கமும்  அதே ஆண்களுக்கான 1,2,3, பிரிவில் எஸ்.சராஜ் மொகமட் காட்டாவில் தங்கமும் குமிற்றியில்  வெள்ளியும் பெற்றுக்கொண்டனர்


இதனைத் தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட 9,8,7, பிரிவில் வி.பவநீதன் குமிற்றியில் வெண்கலமும் அதே வயதில் 6,7,4, பிரிவில் ரி.சின்னத்தம்பி காட்டாவில் வெண்கலமும் 9,8,7, பிரிவில்  எம்.வி.எம்.கஸ்லி காட்டாவில் வெண்கலமும் பெற்றுக்கொண்டனர்.  18 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட ஆண்களுக்கான 75 கிலோ  எடை கொண்ட வீரர்களுக்கான போட்டியில் கே.சாரங்கன் காட்டாவில் தங்கமும் குமிற்றியில் வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார்

 

இதேவேளை, 18 வயதுடைய வீரர்களுக்கான 60 கிலோ எடைகொண்ட சிரேஷ்ட கறுப்புப்பட்டி போட்டியில் ஆர்.அனுஷன் குமிற்றியில் வெண்கலமும் காட்டாவில் வெண்கலப் பதக்கங்களுமாக 17 பதக்கங்களை பெற்றதுடன் கே.சாரங்கன் சம்பியன் கிண்ணத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்களெனவும் அவர் கூறினார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58511------17---.html

  • தொடங்கியவர்

றோயல் 40இற்கு மேற்பட்டோர் அணி வெற்றி

 

15(131).jpg



யாழ்ப்பாண கால்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் அங்கத்துவக் கழகங்களிலுள்ள 40 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் றோயல் 40இற்கு மேற்பட்டோர் அணி வெற்றி  பெற்றுள்ளது.

 

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நேற்;று வியாழக்கிழமை முதல் இப்போட்டி நடைபெற்று வருகின்றது.


முதல் போட்டியில் ஊரேழு றோயல் அணியினை எதிர்த்து பொற்பதி அணி மோதியது. ஊரெழு றோயல் 40 வயதுக்கு மேற்பட் அணி அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.



16(90).jpg



18(39).jpg

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58516--40---.html

  • தொடங்கியவர்

அரியாலை ஜக்கிய பச்சை அணி வெற்றி
 
18(40).jpg
 
யாழ்ப்பாண கால்ப்பந்தாட்ட லீக் அங்கத்துவக் கழகங்களுக்கிடையில் அணிக்கு 7 பேர் கொண்ட விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் அரியாலை ஜக்கிய பச்சை அணி வெற்றிபெற்றுள்ளது.


யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் ஆனைக்கோட்டை யூனியன் அணியினை எதிர்த்து அரியாலை ஜக்கிய பச்சை அணி மோதியது.
 

ஆனைக்கோட்டை அணிக்கு சவால்விடும் வகையில் விளையாடிய அரியாலை ஜக்கிய பச்சை அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

 

16(91).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58518-2013-02-08-08-19-34.html

  • தொடங்கியவர்

யாழ். புனித பரியோவான் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

 

534930_10151234119117056_2096142634_n.jp

 

http://www.yarlmann.lk/viewsingle2013.php?id=1528

  • தொடங்கியவர்

சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இனிங்ஸால் வெற்றி

 

19(41).jpg

 

இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட இரண்டு நாட்களைக் கொண்ட துடுப்பாட்டப் போட்டி ஒன்றில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இனிங்ஸால் வெற்றிபெற்றுள்ளது.

 

 

மேற்படி போட்டி சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. இப்போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியினை எதிர்த்து சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி மோதியது.


நாணயச் சுழற்சியில் வென்ற சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கி முதல் இனிங்ஸில் 93 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

 

துடுப்பாட்டத்தில் லிவிங்டன் 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.


பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக காணாமிர்தன் 3 இலக்குகளை வீழ்த்தினார்.

 

பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 184 ஓட்டங்களைப் பெற்றுச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பிருந்தாபன் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும், துவாரகசீலன் 42, அமடஜன் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.


பந்துவீச்சில் சென்.பற்றிக்ஸ் அணி சார்பாக தனுஜன் 5, ஜக்ஸன் 4 இலக்குகளை வீழ்த்தினார்.

 

91 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி, சென்ஜோன்ஸ் பந்துவீச்சினை எதிர்கொள்ள முடியாமல் 52 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.


பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி லோகேஸ்ரன் 7 இலக்குகளைக் கைப்பற்றி தமது அணியின் இனிங்ஸ் வெற்றிக்கு வழிசமைத்தார்.



16(96).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58643-2013-02-10-11-51-12.html

  • தொடங்கியவர்

புங்குடுதீவு சன்ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது.

 

11(648).jpg

 

வேலணைப் பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான கபடி விளையாட்டுப்போட்டியில்  புங்குடுதீவு சன்ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியுள்ளது.

 

 

புங்குடுதீவு  அம்பாள் விளையாட்டுக்கழத்தில் நடைபெற்ற இறுதி கபடிப் போட்டியில்  செட்டிப்புலம் ஜயனார் விளையாட்டுக்கழகத்தினை 38:29 என்ற புள்ளிகள் வீழ்த்தி புங்குடுதீவு சன்ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழக அணி சம்பியனாகியது.



10(1225).jpg

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58630-2013-02-10-09-03-41.html

  • தொடங்கியவர்

கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சென். மைக்கல் அணி வெற்றி

 

b1(1252).jpg

 

யாழ். கால்பந்தாட்ட லீக் மகிந்தன் வெற்றிக்கிண்ணத்திற்காக அங்கத்துவக்கழகங்களுக்கிடையில் அணிக்கு 7 பேர் கொண்ட விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சென். மைக்கல் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றுள்ளது.

 

 

இதற்கான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் சென். மைக்கல் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து பொற்பதி விளையாட்டுக்கழக அணி மோதியது.


இதன்போது சென். மைக்கல் விளையாட்டுக்கழக அணி 7 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

 

b2(972).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58622-2013-02-10-07-31-13.html

 

 

  • தொடங்கியவர்

மாவட்ட மட்ட மரதன் ஓட்டப்போட்டி

 

யாழ்.மாவட்ட மெய்வன்மைச்சங்கத்தினால் நடத்தப்படும் மாவட்ட மட்டத்தில் மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 

19 வயதுக்கு உட்டபட்டவர்கள், 19 வயதுக்கு மேற்பட்டவாகள் என இரண்டு பிரிவாக இந்தப் போட்டி இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட மெய்வனமைச் சங்கத்தின் தலைவர் ஆர்.ரமணன் அறிவித்துள்ளார்.


குறிப்பிட்ட போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான விண்ணப்பபப் படிவங்களை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள றிக்கோ விடுதியில பெற்றுக்கொள்;ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பெண்கள் ஆண்கள் என இருபாலாருக்குமான போட்டியாக இப்போட்டி நடைபெறவுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58669-2013-02-11-05-02-43.html

  • தொடங்கியவர்

புத்தளத்தில் உள்ளக கிரிக்கெட் சுற்றுப் போட்டி

 

cric2.jpg

புத்தளம் படிஸ் அமைப்பினால் உள்ளக கிரிக்கட் சுற்றுப் போட்டியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.  புத்தளம் மர்ஹும் பிஸ்ருல் ஹாபி ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 26 அணிகள் பங்குபற்றின.

 

 

இந்த  கிரிக்கட் சுற்றுப் போட்டியில் ஜுவனைல் கிரிக்கட் அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் மெனி ஒக்ஸி பீ அணி ரன்னர் அப் அணியாகவும் தெரிவாகியது.

 

cric3.jpg

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58675-2013-02-11-06-17-13.html

  • தொடங்கியவர்

துடுப்பாட்டப் போட்டியில் கே.சி.சி.சி அணி வெற்றி

 

11(657).jpg

 

30 பந்துபரிமாற்றங்கள் கொண்ட விலகல் முறையிலான துடுப்பாட்டப் போட்டிகளில் கே.சி.சி.சி அணி வெற்றிபெற்றுள்ளது.

கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழகம், துடுப்பாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் யாழ்.மாவட்ட
விளையாட்டுக்கழகங்களுக்கு இடையில் 30 பந்துபரிமாற்றங்கள் கொண்ட விலகல் முறையிலான துடுப்பாட்டப் போட்டிகளினை கடந்த ஒரு மாதகாலமாக நடத்தி வந்தது.

 

இப்போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணிக்கும் ஜொலிஸ்டார்ஸ் விளையாட்டுக்கழக அணிக்கும் இடையிலான போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 

இறுதிப்போட்டி 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது.


நாணயச் சுழற்சியில் வென்ற கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

 

ஆரம்ப வீரர்களாகக் களமிறங்கிய சத்தியன் - பங்குஜன் இணைப்பாட்டம் 120 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பங்குஜன் 41 ஓட்டங்களையும், சத்தியன் 88 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து வந்த வீரர்கள் அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் குவிக்க 40 பந்துபரிமாற்றங்களில் 6 இலக்குகளையும் இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. உமாநாத் 56, இராகுலன் 35, வல்லவக்குமரன் 35 ஓட்டங்களைப் பெற்றுகொடுத்தனர்.

 

304 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஜொலிஸ்ரார்ஸ் அணி  38.4 பந்துபரிமாற்றங்களில் 222 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது.


இவ் அணியில் மதுசன் 71, தீபன் 36, ராஜேந்தின் 27, பிரியதர்சன் 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

 

பந்துவீச்சில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி சார்பாக இராகுலன் 5 இலக்குகளையும் பங்குஜன் 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.


இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன், சிறந்த பந்துவீச்சாளராக கொக்குவில் மத்திய சனசமூ நிலைய அணியின் இராகுலனும் சிறந்த துடுப்பாட்ட வீரராக அதே அணியினைச் சேர்ந்த சத்தியனும் சிறந்த களத்தடுப்பாளராக ஜொலிஸ்ரார்ஸ் அணியினைச் சேர்ந்த உமாதரனும் தெரிவு செய்யப்பட்டனர்.

 

14(227).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58684-2013-02-11-07-34-42.html

  • தொடங்கியவர்

அம்பாறை கால்ப்பந்தாட்ட லீக் அணி வெற்றி

 

அம்பாறை கால்ப்பந்தாட்ட லீக் அணியினை எதிர்த்து யாழ்ப்பாண கால்ப்பந்தாட்ட லீக் அணி மோதிய போட்டியில் அம்பாறை கால்ப்பந்தாட்ட லீக் வெற்றி பெற்றுள்ளது.

 

இலங்கை கால்ப்பந்தாட்ட லீக் தனது 44 அங்கத்துவ கழகங்களுக்கிடையில் விலகல் முறையலான கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியினை தற்போது நடத்தி வருகின்றது.


இதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறையில் நடைபெற்ற போட்டியில் அம்பாறை கால்ப்பந்தாட்ட லீக் அணியினை எதிர்த்து யாழ்ப்பாண கால்ப்பந்தாட்ட லீக் அணி மோதியது.

 

போட்டி நேரம் முடிவடையும் வரையும் இரு அணிகளும் கோல் எதனையும் போடவில்லை. போட்டியின் முடிவினைக் காண்பதற்காக சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. இதில் அம்பாறை கால்ப்பந்தாட்ட லீக் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58700-2013-02-11-11-01-49.html

  • தொடங்கியவர்

வலைப்பந்தாட்ட போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வெற்றி

 

19 வயதுப் பிரிவு பெண்கள் வலைப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

 

 

மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரி அணியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவு பெண்கள் வலைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நடத்தப்படுகின்றது.


இந்நிலையில், இராமநாதன் கல்லூரி வலைப்பந்தாட்டத் திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியும் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணியும் மோதியது.  இதன்போது தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி சம்பியானகியது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58705-2013-02-11-11-49-07.html

  • தொடங்கியவர்

கே.எப்.ஓ விளையாட்டுக் கழகம் சம்பியன் .

 

திருக்கோவில் உதய சூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வருடாந்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் கே.எப்.ஓ விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

 

24 விளையாட்டுக் கழகங்கள் பங்குகொண்டது இதன் இறுதிப் போட்டி அண்மையில் திருக்கோவில் உதய சூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டிக்கு தம்பிலுவில் விளையாட்டுக் கழகம் மற்றும் அக்கரைப்பற்று கே.எப்.ஓ விளையாட்டுக் கழகம் ஆகியன பங்குகொண்டன. இதன் வெற்றிக் கிண்ணத்தை கே.எப்.ஓ விளையாட்டுக் கழகம் சுவிகரித்துக் கொண்டது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரத்தினம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58777-2013-02-12-12-01-50.html

  • தொடங்கியவர்

போட்டி சமநிலையில் முடிந்தது

 

வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை கால்ப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் யாழ்.மாவட்ட கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்திய அணிக்கு 7 பேர் கொண்ட கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி சமநிலையில் முடிந்தது.

 

வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக்கழகம் தமது விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய இப்போட்டியில் ஹென்றியரசர் அணியினை எதிர்த்து பாடும்மீன் அணி மோதியது.

 

இப்போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டதினால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58861-2013-02-13-12-36-58.html

  • தொடங்கியவர்

மானிப்பாய் இந்து – யாழ்ப்பாணம் மத்தி போட்டி சம நிலையில் முடிவு .

 

இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயது பிரிவு பாடசாலை அணிகளுக்கிடையில் மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட இரண்டு நாட்கள் கொண்ட துடுப்பாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

 

மானிப்பாய் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினை எதிர்த்து மானிப்பாய் இந்து கல்லூரி அணி மோதியது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பினை தீர்மானித்தது.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்து அணி 34.4 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் பிரதீபன் 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் யாழ். மத்தி சார்பாக அலன்ராஜ், ஹரிகரன் தலா 3 இலக்குகளைக் கைப்பற்றினர்.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்தி அணி அலன்டிலான் - டர்வினின் இணைப்பாட்டம் சிறப்பாக அமைய 101.5 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 272 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் டர்வின் 80, அலன்டிலான் 63, நிரோஜ் 24, நிரூபன் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் மானிப்பாய் இந்து கல்லூரி பிரதீபன் 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.

 

131 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மானிப்பாய் இந்து கல்லூரி அணி 49.1 பந்து பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.இரண்டாம் நாள் ஆட்டமும் முடிவுக்கு வந்ததுடன், போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

 

துடுப்பாட்டத்தில் குக பிரசாத் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் சேந்தன் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் மானிப்பாய் இந்து அணி சார்பாக ஹரிகரன் 3 இலக்குகளையும் கைப்பற்றினார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/58867-2013-02-13-13-33-52.html

  • தொடங்கியவர்

பாடும்மீன் அணி வெற்றி

 

8(1787).jpg

 

யாழ்.கால்ப்பந்தாட்ட லீக் அங்கத்துவக் கழகங்களுக்கிடையில் அணிக்கு 7 பேர் கொண்ட விலகல் முறையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில்  பாடும்மீன் அணி வெற்றிபெற்றுள்ளது.

 

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் பாடும்மீன் அணியும், சென்.அன்ரனீஸ் அணியும் மோதின.


முதல் பாதி ஆட்டத்தில் பாடும்மீன் அணி ஒரு கோலினை பெற்றது.

 

தொடர்ந்து ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கும் வாய்ப்புக்களை தவறவிட பாடும்மீன் அணி முதல் பெற்ற கோலுடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.


இறுதியில் பாடும்மீன் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59011-2013-02-16-04-49-38.html

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் இந்து, சென்.பற்றிக்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவு

 

கொக்குவில் இந்து கல்லூரியின் விளையாட்டுப் பிரிவு டெங்கு காய்ச்சலினால் உயிர் இழந்த கூடைப்பந்தாட்ட வீரன் கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை கொக்குவில் இந்து கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் நடத்தி வருகின்றது.

 

சுற்றுப்போட்டியின் ஆண்களுக்கான அரையிறுதி ஆட்;டங்கள் நேற்று நடைபெற்றன.


யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியினை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதிய முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் அபார திறமையினை வெளிப்படுத்திய யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி 76:52 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

 

சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியும் கொக்குவில் இந்து கல்லூரி அணியும் மோதிய இரண்டாவது அரையிறுதி போட்டியில், சென்.பற்றிக்ஸ் கல்லூரி 64:45 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.


சென்.பற்றிக்ஸ் அணியும், யாழ்ப்பாணம் இந்து அணியும் மோதும் இறுதிப் போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59027-2013-02-16-08-25-20.html

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இந்து அணிக்கு எனது வாழ்த்துக்கள்!

Edited by காவாலி

  • தொடங்கியவர்

யாழ்.இந்து மகளிர், இராமநாதன் அணிகள் வெற்றி

 

10(1257).jpg

 

 



கொக்குவில் இந்து கல்லூரி விளையாட்டுப்பிரிவினால் டெங்கினால் உயிரிழந்த கூடைபந்தாட்ட வீரன் கீர்த்திகம் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்காக யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை கொக்குவில் இந்து கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் நடத்திவருகின்றது.

 

சுற்றுப்போட்டியின் பெண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றது.

 

யாழ்.திருக்குடும்பக் கன்னியர்மட அணியினை எதிர்த்து யாழ்.இந்து மகளிர் கல்லூரி அணி மோதிய முதலாவது அரையிறுதிப் போட்டியில், யாழ்.இந்து மகளிர் கல்லூரி அணி 28:17 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

 

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கொக்குவில் இந்து கல்லூரி அணியினை எதிர்த்து மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரி அணி மோதியது. இப்போட்டியில் இராமநாதன் மகளிர் கல்லூரி அணி வெற்றிபெற்றது.


யாழ்.இந்து மகளிர் மற்றும் மருதனார்மடம் இராமநாதன் மோதும் இறுதிப்போட்டி நாளை திங்கட்கிழமை கொக்குவில் இந்து கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் நடைபெறவுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59066--19-.html

 

13(315).jpg

Edited by akootha

  • தொடங்கியவர்

பொற்பதி அணி அதிரடி வெற்றி

 

S01(106).jpg

 

யாழ்.கால்ப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட கால்ப்பந்தாட்ட அணிகளின் 40 வயதுக்கு மேற்பட்ட அணிகளுக்கிடையில் கால்பந்தாட்;ட சுற்றுப்போட்டியொன்று யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

 

 

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் பொற்பதி அணியினை எதிர்த்து பாடும்மீன் அணி மோதியது. இலகுவாகக் கிடைத்த சந்தர்ப்பங்களை கோலாக்கி முதல் பாதி ஆட்டத்தில் 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது பொற்பதி அணி.


இருந்தும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஆக்கிரோசமாகயாடிய பாடும்மீன் அணி ஒரு கோல் பெற்றது. ஆட்டத்தில் சூடுபிடித்த நேரத்தில், பதில் போல் ஒன்றை உடனேயே போட்டு பொற்பதி அணி தமது வெற்றியினை உறுதி செய்தது. இறுதியில் 3:1 என்ற கோல் கணக்கில் பொற்பதி அணி வெற்றிபெற்றது.

 

S02(87).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59095-2013-02-17-15-45-24.html

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து மகளீர் அணிக்கு வாழ்த்துகள்! :)

 

ஹோலி பமிலி கொன்வன்ட் (சிவப்பு) தோற்றது கவலையாக் கிடக்கு. :(

 

நம்மட சுண்டிக்குளி மகளீர் அணிக்கு என்ன நடந்தது? :unsure: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.