Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் லண்டனுக்கு திடீர் பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் லண்டனுக்கு திடீர் பயணம்
பிப் 8, 2013
    
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில், சிறீலங்கா விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்துப் பொதுநலவாய அமைப்பின் செயலர் கமலேஸ் சர்மாவிடம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடும் ஆட்சேபமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். 
 
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் சென்றுள்ளார். பொதுநலவாய தலைவர்களின் உச்சிமாநாட்டை சிறீலங்காவில் இருந்து இடம்மாற்றுவது தொடர்பான யோசனைகளை கனடா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பொதுநலவாய அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இது சிறீலங்கா அரசை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதையடுத்து சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் சென்றுள்ளார். அவர் பொதுநலவாயச் செயலர் கமலேஸ் சர்மாவைச் சந்தித்து, இது தொடர்பாகப் பேசியுள்ளார். 
 
அதன்போது, பொதுநலவாய் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில் சிறீலங்கா விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து சிறீலங்கா அரசின் சார்பில் பீரிஸ் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். 
 
இந்தச் சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், எதிர்வரும் நவம்பர் மாதம் சிறீலங்காவில் பொதுநலவாய் மாநாட்டை நடத்துவதற்குச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார். 
 
பொதுநலவாயத் தலைவர்களின் பிரதான மாநாடு கொழும்பிலும், பொதுநலவாய் வர்த்தக மன்றம், மக்கள் மன்றம், இளைஞர் மன்றம் ஆகியவற்றின் மாநாடுகளை அம்பாந்தோட்டையிலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 
சிறீலங்காவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய மாநாட்டை இடம்மாற்றுவது குறித்து, எதிர்வரும் எப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் ஆராய்வதென நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டுள்ளமை பேர்த்தில் 2011இல் நடைபெற்ற பொதுநலவாய் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிரானது என்றும் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு பயங்கரவாத நாட்டில், திட்டமிட்ட இன அழிப்பு நடந்துவரும் நாட்டில் பொதுநலவாய மகாநாட்டை நடத்துவதால் அதன் சிறப்பு இழக்கப்பட்டுவிடும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.