Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேஸ்புக்கில் போலிகளிடம் இருந்து தப்பிக்க சில வழிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக்கில் போலிகளிடம் இருந்து தப்பிக்க சில வழிகள்

எழுதியது இக்பால் செல்வன்
 



 

 

சமூக வலைதளங்களில் இன்று முன்னணியில் இருப்பது பேஸ்புக் ஆகும். ஏறக்குறைய ஒரு கோடி பேர் வரை பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. உலகெங்கும் வாழும் உறவினர்கள், நண்பர்கள், அறிமுகமானவர்களோடு தொடர்பில் இருக்கவும், விடயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் பேஸ்புக் மிகவும் உதவியாக உள்ளது. இணைய வளர்ச்சிக்கு முந்தைய காலக் கட்டத்தில் ஒருவரோடு ஒருவர் தொடர்பு பேணுவது இயலாத காரியங்களாக இருந்தன. குறிப்பாகப் பள்ளித் தோழர்கள், கல்லூரி நண்பர்கள் பலரும் தொடர்பில் இல்லாமல் பிரிந்துவிட்ட கதைகளை நமது பெற்றோர்கள் பல முறைக் கூறக் கேட்டதுண்டு. ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் அவ்வாறான துன்பியல் நிலை இல்லை. அந்தக் குறைகளைப் பேஸ்புக் நீக்கியுள்ளது. 

 

ஆனால் அதே சமயம் பேஸ்புக் தனக்கே உரிய சில பல ஆபத்துக்களையும் கொண்டுள்ளது, மிக முக்கியமாக நமது தனிப்பட்ட விவரங்களைத் திருடுவது, நமது அக விடயங்களைப் பாதுக்காக்காமல் விடும் போது அவை உலகம் எங்கும் பரவி விடுவதும் உண்டு. புகைப்படங்கள், முகவரிகள், தொலைப்பேசி எண்கள் எனப் பல்வேறு விவரங்கள் அறியாத நபர்கள் களவாடும் நிலையும் உள்ளது. 
 
நம்மையும் நமது குடும்பத்தாரையும் பாதுக்காத்துக் கொள்ளப் பேஸ்புக் சில பாதுக்காப்புக் கவசங்களைக் கொடுத்துள்ளது. இருந்த போதும் அவற்றையும் தாண்டி சிலவற்றை நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அவற்றில் மிக முக்கியமான ஒன்று அறியாத நபர்களை நண்பர்களாக்கி கொள்வதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாகப் பிள்ளைகளுக்கும் இவை குறித்து அறிவுரைத்தல் வேண்டும். 
 
பேஸ்புக்கில் பல நபர்கள் போலிக் கணக்குக்களை உருவாக்கிக் கொண்டு நம்மோடு நட்பு பூண்டு பல கூடாத காரியங்களையும், ஆபத்துக்களையும் விளைவிக்கக் கூடும். ஆகவே போலிக் கணக்குக்களை எவ்வாறு எளிதாகக் கண்டறிவது என்பதை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். 
 
பேஸ்புக்கில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களை இணைப்பதில் மிகவும் அவதானமாக இருக்கவும். முன் பின் அறியாத ஒருவர் உங்களோடு நண்பராக விருப்பம் கூறினால், அவரிடம் சில பல கேள்விகளை முன் வைக்கலாம். என்னைக் கேட்டால் அறியாத நபரை முற்றாகத் தவிர்ப்பதே நலமாகும். ஒரு வேளை அவர் வியாபாரம் சார்ந்த ஒரு முக்கிய நபராக இருக்குமேயானால் அவரிடம் அவர் குறித்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வது உதவியாக இருக்கும். 

பேஸ்புக்கில் நண்பர் விருப்பம் கோருவோர் ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்தவருக்கு அறிமுகமானவரா என்பதை அறிந்துக்கொள்ள முடியும். அவரது கணக்கில் ''Mutual Friends'' என்பதைக் காட்டும். சில சமயம் உங்கள் நண்பர் கூட அந்த நபரை முறையாக அறிந்து கொள்ளாமல் இணைத்திருக்கலாம் என்பதால் இதில் கூடக் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். 

உங்களோடு இணைந்து கொள்ள விருப்பம் கோரும் நபரை இணைக்கும் முன் அவரது முகவத்தை ( Profile ) வாசிப்பது மிகவும் நல்லது. பல போலிக் கணக்காளர்கள் தம்மைப் பெருமையாகக் காட்டிக் கொள்வார்கள். குறிப்பாகப் பெரும் நிறுவனத்தின் முக்கியப் பணியில் இருப்பதாகவும், பிரபல தொழிற்துறைகளில் பங்காற்றுவதாகவும் கூறுவார்கள். ஆனால் அவர்களை நீங்கள் கேள்விப் பட்டே இருக்க மாட்டீர்கள். ஆகவே உள்ளுணர்வு கூறுவதைச் சற்றே கவனத்தின் எடுப்பது நல்லது. 

அத்தகைய நபர்களின் புகைப்படங்களைக் காண்பது மிகவும் நல்லது. பெரும்பாலான போலிக் கணக்காளர்கள் போலி புகைப்படங்களையே வைத்திருப்பார்கள். சிலர் உங்களுக்குத் தெரிந்த சினிமா நட்சத்திரங்கள் போன்றோரின் புகைப்படங்களை வைத்திருப்பார்கள். சிலரோ நம்மைக் கவரக் கூடிய வகையில் சில புகைப்படங்களாய் பதிவேற்றி இருப்பார்கள். குறிப்பாகப் பல ஆண்கள் அழகான பெண் புகைப்படங்கள் உடைய போலிக் கணக்குக்களை முன் பின் சிந்திக்காமல் இணைத்துக் கொள்வார்கள். சில பெண்கள் கூட இவ்வாறு கவரக் கூடிய ஆண் புகைப்படங்கள் உடைய போலிக் கணக்குக்களை இணைத்துக் கொள்வார்கள். 

ஆகவே அவர்களைச் சேர்க்கும் முன், அவர்களது புகைப்படங்களைக் கூகிள் புகைப்படத் தேடல்களில் ஒரு முறைத் தேடிப் பார்த்து விடுங்கள். அவரது புகைப்படம் போலியா இல்லையா என்பதைக் கூகிளாண்டவர் காட்டிக் கொடுத்துவிடுவார். 

போலிக் கணக்கு எனச் சந்தேகிக்கும் நபரின் பெயரை கூகிள் தேடற்பொறியில் தேடுவதும் சில சமயங்களில் உதவக் கூடும். உண்மையான நபராக இருந்தால் ஒரு சில மேலதிக தகவல்களைக் கூகிள் தேடற்பொறி அறிவித்துவிடும். 
 
அத்தோடு அவர்களுடைய நண்பர்கள் பட்டியலை ஒருமுறை கவனிப்பதும் நல்லது. பல போலிக் கணக்காளர்களுக்கு ஆயிரக் கணக்காண நண்பர்கள் இருப்பார்கள். அல்லது மிகவும் குறைவான நண்பர்கள் இருப்பார்கள். உண்மையான கணக்காளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த நண்பர்களே மிகுதியாக இருப்பார்கள். போலிக் கணக்காளர்களுக்குச் சம்பந்தமே இல்லாமல் உலகம் முழுவதும் பல நண்பர்கள் இருக்கக் கூடும். 

சிலரோ உங்களின் புகைப்படங்கள், பகிர்வுகள் முதலானவற்றைத் தொடர்ந்து விருப்பம் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். அவ்வாறனவர்களின் உள்நோக்கம் உங்கள் மனதைக் கவர்ந்து உங்களோடு இணைந்துக் கொள்வதாகவே இருக்கும். ஏனெனில் எந்தவொரு நபருக்கும் மற்றொரு நபர் பகிரும் அனைத்து விடயங்களும் விருப்பமானதாக இருக்காது. ஆகவே அதில் கூடச் சற்றுக் கவனமாக இருக்கவும். 

சிலரோ மேற்கண்ட அனைத்தையும் வெற்றிகரமாக மறைத்து உங்களோடு நண்பர்களாகி விடக் கூடும், அத்தகையவர்களை ஒரு எல்லையோடு வைத்துக் கொள்ளுங்கள். அவரை முன் பின் அறியாமல் இருந்தாலோ, சந்திக்காமல் இருந்தாலோ, அவரது கூற்றுக்களை முற்றாக நம்பிவிட வேண்டாம். குறிப்பாக இளம் ஆண்கள், பெண்கள் இவ்வாறானவர்கள் தமது காதல் வலையில் சிக்க வைக்கக் கூடும். ஆகவே ஒரு நபர் குறித்து முழுமையாக அறியாமல் உங்களது விவரங்களைப் பகிர வேண்டாம், தன்னிச்சையாகப் போய்ச் சந்திக்க வேண்டாம். 

குறிப்பாக மிகவும் நல்லவர்கள் போலப் பேசி நட்பு பூண்ட பின் சில காலம் கழித்து உங்களிடம் இருந்து பணமோ, பிற உதவிகளையோ கோருவார்கள். சில சமயங்களின் உங்களின் அந்தரங்க புகைப்படங்களைக் கூடக் கேட்பார்கள், அவ்வாறான நிலையில் விழிப்பாக இருக்கவும். அறியாத நபர்களுக்கு இவற்றைக் குறித்து எதனையும் தர வேண்டாம். ஒரு முறை உங்களின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி விட்டால், அவற்றை முற்றாக நீக்குவது இயலாத காரியம் என்பதையும் நினைவில் கொள்க. 
 
பேஸ்புக் உட்படச் சமூகத் தளங்களில் எவர் மீதாவது ஐயம் எழுந்துவிட்டால், உடனடியாக அவர்களை நீக்கிவிடுங்கள். ஏனெனில் அவர்களால் உங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், எதிர்க்காலத்துக்கும் பங்கம் ஏற்படலாம். 

ஒருவேளை ஏற்கனவே இவ்வாறான போலிகளிடம் நீங்கள் சிக்கிக் கொண்டிருந்தால் உடனடியாக உங்கள் அருகில் இருக்கும் காவல் துறையிடம் புகார் அளிப்பது மிகவும் நல்லது என்பேன். சமூகத் தளங்கள் மனித சமூகம் பெற்ற அற்புத சாதனம், ஆனால் அதே சமயம் மனிதர்களின் குரூர உலகில் அவற்றை முறையாகப் பயன்படுத்தினால் மட்டுமே ஆபத்துக்களில் இருந்து தப்ப முடியும்.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.