Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருகின்றது
18 பெப்ரவரி 2013
 
பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆண்டில் சுமார் இரண்டு மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானியா, இலங்கைக்கு விற்பனை செய்துள்ளது.பிரித்தானிய அரசாங்கத்தின் புள்ளி விபரத் தரவுத் தளத்திலிருந்து இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
 
துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன.மனித உரிமை நிலைமைகள் குறித்து குற்றம் சுமத்தப்பட்டு வரும் இலங்கைக்கு பாரியளவில் ஆயுதங்களை பிரித்தானியா விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
 
தனிப்பட்ட ரீதியில் அனுமதிப்பத்திர உரிமையாளர்களின் ஆயுத விற்பனை தொடர்பில் கருத்து வெளியிட முடியாது என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும், ஆயுத விற்பனையின் போது மனித உரிமை நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கவனத்திற் கொண்டே பிரித்தானிய அரசாங்கம் ஆயுதங்களை விற்பனை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
யார் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தப் போகின்றார்கள் என்பதன் அடிப்படையிலேயே ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்றது பிரித்தானியா – ‘இன்டிபென்டென்ட்‘ நாளேடு தகவல்
 
சிறிலங்காவில் மோசமான மனிதஉரிமைமீறல்கள் இடம்பெற்றததையும் பொருட்படுத்தாது மில்லியன் கணக்கான பவுண்ட்ஸ் பெறுமதியான சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பிரித்தானியா கடந்த ஆண்டு விற்பனை செய்துள்ளதாக, பிரித்தானியாவின் ‘இன்டிபென்டென்ட்‘ நாளேடு குற்றம்சாட்டியுள்ளது. 
இன்று வெளியாகியுள்ள ‘இன்டிபென்டென்ட்‘ நாளேட்டின் தலைப்புச் செய்தியிலேயே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 
 
அரசாங்கப் புள்ளிவிபரங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, குறைந்தது 3 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்கள் கொழும்புக்கு விற்கப்பட்டுள்ளது. 
 
இதில் கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள், குண்டுதுளைக்காத உடற்கவசங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளடங்குகின்றன.
 
மனிதஉரிமை மீறல்கள் காரணமாக, கவலைக்குரிய நாடாக சிறிலங்காவை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு பட்டியலிட்டுள்ள போதிலும் இந்த ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளன என்றும்,
 
பிரித்தானியாவின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட, கடந்த ஜுலை தொடக்கம் செப்ரெம்பர் வரையிலான காலாண்டுத் தரவுகளில் இருந்தே சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் விற்கப்பட்ட விபரம் தெரியவந்துள்ளது என்றும் அற்த நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது. 
 
இதன்படி சிறிலங்காவுக்கு 3.741 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஏற்றுமதிக்கு பிரித்தானியா அனுமதி அளித்துள்ளது. 
 
இதில் 3 மில்லியின் பவுண்ட்ஸ் இராணுவ தளபாடங்களாகும். 
 
2 மில்லியன் பெறுமதியான விற்பனை, “எம்.எல் 1” என்ற அடையாளத்தின் கீழ், சிறிய ஆயுதங்கள், என்ற வகைக்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டு ஜுலையில் ஒரு தடவையும், ஓகஸ்ட் மாதம் மூன்று தடவைகளும் என நான்கு சந்தர்ப்பங்களில் இந்த ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
மொத்தமாக, 600 தாக்குதல் துப்பாக்கிகள், 650 துப்பாக்கிகள், 100 கைத்துப்பாக்கிகள், 50 தாக்குதல் சொட் கண்கள், என்பனவற்றை விற்க பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
 
அத்துடன் சிறிலங்காவுக்கு 330,000 பவுண்ட்ஸ் பெறுமதியான வெடிபொருட்களையும், 665,000 பவுண்ட்ஸ் பெறுமதியான குண்டு துளைக்காத உடற்கவசங்களையும் விற்கவும்,அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
 
2008 தொடக்கம் 2012 ஜுன் வரையில், சிறிலங்காவுக்கு 12 மில்லியன் பவுண்டஸ் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
18 பெப்ரவரி 2013, திங்கள் 11:10 மு.ப
  • கருத்துக்கள உறவுகள்

651133254UK2.jpg

பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை!

பிரித்தானியா கடந்த ஆண்டில் மட்டும் சுமார் இரண்டு மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை இலங்கைக்கு விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

பிரித்தானிய அரசாங்கத்தின் புள்ளி விபரத் தரவுத் தளத்திலிருந்து இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

மனித உரிமை நிலைமைகள் குறித்து குற்றம் சுமத்தப்பட்டு வரும் இலங்கைக்கு பாரியளவில் ஆயுதங்களை பிரித்தானியா விற்பனை செய்துள்ளதாக காட்டியன் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

தனிப்பட்ட ரீதியில் அனுமதிப்பத்திர உரிமையாளர்களின் ஆயுத விற்பனை தொடர்பில் கருத்து வெளியிட முடியாது என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

எனினும், ஆயுத விற்பனையின் போது மனித உரிமை நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கவனத்திற் கொண்டே பிரித்தானிய அரசாங்கம் ஆயுதங்களை விற்பனை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யார் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தப் போகின்றார்கள் என்பதன் அடிப்படையிலேயே ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு ஆயுதங்களை விற்றது பிரித்தானியா: விபரங்களுடன் அம்பலம்

மோசமான மனித உரிமைமீறல்கள் இடம்பெற்ற போதிலும், இலங்கைக்கு மில்லியன் கணக்கான பவுண்ட்ஸ் பெறுமதியான சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பிரித்தானியா கடந்த ஆண்டு விற்பனை செய்துள்ளதாக, பிரித்தானியாவின் ‘இன்டிபென்டென்ட்‘ நாளேடு குற்றம்சாட்டியுள்ளது. 

இன்று வெளியாகியுள்ள ‘இன்டிபென்டென்ட்‘ நாளேட்டின் தலைப்புச் செய்தியிலேயே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

அரசாங்கப் புள்ளிவிபரங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, குறைந்தது, 3 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்கள் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளன. 

கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள், குண்டுதுளைக்காத உடற்கவசங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளன. 

மனிதஉரிமை மீறல்கள் காரணமாக, கவலைக்குரிய நாடாக இலங்கையை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு பட்டியலிட்டுள்ள போதிலும் இந்த ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளன. 

பிரித்தானியாவின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட, கடந்த ஜுலை தொடக்கம் செப்ரெம்பர் வரையிலான காலாண்டுத் தரவுகளில் இருந்தே இலங்கைக்கு ஆயுதங்கள் விற்கப்பட்ட விபரம் தெரியவந்துள்ளது. 

இதன்படி இலங்கைக்கு 3.741 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஏற்றுமதிக்கு பிரித்தானியா அனுமதி அளித்துள்ளது. இதில் 3 மில்லியின் பவுண்ட்ஸ் இராணுவ தளபாடங்களாகும். 

2 மில்லியன் பெறுமதியான விற்பனை, “ஆடு1” என்ற அடையாளத்தின் கீழ், சிறிய ஆயுதங்கள், என்ற வகைக்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஜுலையில் ஒரு தடவையும், ஓகஸ்ட் மாதம் மூன்று தடவைகளும் என நான்கு சந்தர்ப்பங்களில் இந்த ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மொத்தமாக, 600 தாக்குதல் துப்பாக்கிகள், 650 துப்பாக்கிகள், 100 கைத்துப்பாக்கிகள், 50 தாக்குதல் சொட் கண்கள், என்பனவற்றை விற்க பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

அத்துடன் இலங்கைக்கு 330,000 பவுண்ட்ஸ் பெறுமதியான வெடிபொருட்களையும், 665,000 பவுண்ட்ஸ் பெறுமதியான குண்டு துளைக்காத உடற்கவசங்களையும் விற்கவும்,அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

2008 தொடக்கம் 2012 ஜுன் வரையில், இலங்கைக்கு 12 மில்லியன் பவுண்டஸ் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மோசமான மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதை கண்டிக்கும் வகையிலும், சிறிலங்காவின் மோசமான மீறல்களை விபரித்தும் ‘இன்டிபென்டென்ட்‘ நாளேடு தனது இன்றைய விரிவான தலைப்புச்செய்தியை வெளியிட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3086

இனப் படுகொலை செய்யும் சிங்களப் பயங்கரவாத அரசுக்கு ஆயுதங்கள் கொடுக்கும் பிரித்தானியாவின் இந்த மனிதாபிமானமற்ற மோசடிச் செயல் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

Boycott UK,

 

தமிழர்கள் எல்லோரும் UK ஐ புறக்கணிக்கவேண்டும்.... :)

  • கருத்துக்கள உறவுகள்

விற்றது பிரித்தானியாவா அல்லது அங்கே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றா? தனியார் நிறுவனங்கள் என்றே நினைக்கிறேன். ஐநா தடை வரும்வரையில் இவர்கள் வியாபாரத்தைக் கைவிடமாட்டார்கள். பிரித்தானியாவால் அவற்றைத் தடுக்கவும் முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.