Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
EU-seithy-150.jpg

இந்த மாத இறுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. வின் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய யூனியனின் இந்த முடிவை இராஜதந்திர வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன. ஐரோப்பிய யூனியனின் இந்த முடிவால் இலங்கை அரச தரப்பு மத்தியில் பெரும் அதிர்வலைகள் கிளம்பத் தொடங்கியுள்ளன. ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையின் 22 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகி 4 கட்டங்களாக மார்ச் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

  

இந்தக் கூட்டத் தொடரின் போது அமெரிக்காவினால், இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்கியிருந்தது. எனினும் அந்த சந்தர்ப்பத்தை இலங்கை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளது அமெரிக்கா. இந்தநிலையில் அமெரிக்கா தற்போது கொண்டுவரவுள்ள பிரேரணை இலங்கை மீது கடும் அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வகையில் அமையவுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பாக கடந்த 11 ஆம் திகதி ஐ.நா பொதுச்சபைக்கு அனுப்பிய விடயங்களை உள்ளடக்கியதாகவே புதிய பிரேரணை அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் பிரேரணைக்கான முழுமையான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கத் தீர்மானித்துள்ளது. கடந்தமுறை அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 9 மேலதிக வாக்குகளால் ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 27 நாடுகளில் 9 நாடுகள் இந்தமுறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் தகுதியைக் கொண்டுள்ளன. ஒஸ்திரியா, செக்குடியரசு, ஈஸ்ரோனியா, ஜேர்மனி, அயர்லாந்து, இத்தாலி, போலண்ட், ருமேனியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளே மனித உரிமைகள் சபையில் வாக்களிக்கும் தகுதியுடைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாகும்.

 

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பிய பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் பேர்ட், அமெரிக்காவின் புதிய பிரேரணையை பிரிட்டனும் ஆதரிக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஐ.நா மனித உரிமைகள் சபையில் பிரிட்டன் வாக்குரிமையை இழந்திருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் முடிவெடுக்கும் அதிகாரம்மிக்க நாடுகளில் ஒன்றாகவே அது காணப்படுகின்றது. இதனடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் 20இக்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டன என்று நம்பகரமாகத் தெரியவருகின்றது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு அமைய ஐ.நா மனித உரிமைகள் சபையில் வாக்களிக்கும் தகுதியுடைய 9 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க தீர்மானித்துள்ளன. எனினும் இந்தத் தீர்மானத்தைக் கடைசித் தருணம் வரை இரகசியமாக வைத்திருக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே, கடந்த ஆண்டு அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட பிரேரணையை எதிர்த்து வாக்களித்து இலங்கைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்த சீனா, ரஷ்யா, பங்களாதேஷ், கியூயா, ஜோர்தான், சவூதி அரேபியா போன்ற நாடுகள் இந்த முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளன. இதனால் அமெரிக்காவால் இந்த ஆண்டு கொண்டுவரப்படும் இலங்கைக்கு எதிரான காட்டமான பிரேரணை நிச்சயமாக நிறைவேறும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=76293&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றிற்கு பின்னால்  புலம் பெயர் அமைப்புக்களின் பெரும் சேவைகள் இருக்கின்றன. அவர்களது அலுவலகங்களுக்கு செல்வதனால் அவற்றை நேரடியாகக்காண்பவன் நான். அவை ஒருங்கிணைப்புக்குழுவாக இருக்கலாம் நாடு கடந்த அரசாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அவர்களது செயல்கள் தொடர்கின்றன. அவர்களது அலுவலகங்களில் கிடக்கும் பைல்களைப்பார்த்தாலே புரியும். தொடர்ந்து ஆணணி  உதவிகள்தான் தேவை. அவற்றை  நாம ஏதாவது ஒன்றை பொறுப்பெடுத்தால் மேலும் முன்னேறலாம்.

ஆனால் தமிழரின் விதி

செய்பவர்களையும் காலை இடறிவிடவே நாம் அதிக நேரத்தை  செலவளிக்கின்றோம்.. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

First draft of the US resolution: Promoting Reconciliation and Accountability in Sri Lanka

http://www.lankanewsweb.com/english/index.php?option=com_content&view=article&id=3456:first-draft-of-the-us-resolution-promoting-reconciliation-and-accountability-in-sri-lanka&catid=1:general&Itemid=29

Here is the first draft of the resolution to be submitted by the US to the Human rights Council and circulated by the UN Mission Geneva. ( Please note that this is a not a confirmed official US document yet )

The Human Rights Council,

Guided by the Charter of the United Nations, the Universal Declaration of Human Rights, the International Covenants on Human Rights and other relevant instruments,

Recalling Human Rights Council Resolution 19/2 on Promoting Reconciliation and Accountability in Sri Lanka,

Reaffirming that it is the responsibility of the Government of Sri Lanka to ensure the full enjoyment of all human rights and fundamental freedoms of its entire population,

Taking note of the Government of Sri Lanka’s National Action Plan and its commitments as set forth in response to the findings and recommendations of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) of Sri Lanka,

Noting with concern that the National Action Plan does not adequately address all of the findings and constructive recommendations of the LLRC,

Recalling the constructive recommendations contained in the LLRC’s report, including the need to credibly investigate widespread allegations of extra-judicial killings and enforced disappearances, demilitarize the north of Sri Lanka, implement impartial land dispute resolution mechanisms, re-evaluate detention policies, strengthen formerly independent civil institutions, reach a political settlement on the devolution of power to the provinces, promote and protect the right of freedom of expression for all and enact rule of law reforms,

Also noting with concern that the National Action Plan and the LLRC’s report do not adequately address serious allegations of violations of international law,

Expressing concern at the continuing reports of violations of human rights in Sri Lanka, threats to judicial independence and the rule of law, and failure by the Government of Sri Lanka to fulfill its public commitments, including on devolution of political authority to provinces as called for in Sri Lanka’s constitution,

1. Welcomes the report of the High Commissioner for Human Rights on the human rights situation in Sri Lanka;

2. Reiterates its call upon the Government of Sri Lanka to expeditiously implement the constructive recommendations made in the LLRC report and to take all necessary additional steps to fulfill its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability, and reconciliation for all Sri Lankans;

3. Urges the Government of Sri Lanka to formally respond to outstanding requests, including by providing unfettered access, by special procedures mandate holders, in particular the Special Rapporteurs on independence of judges and lawyers; torture; human rights defenders; freedom of expression; freedom of association and assembly; extrajudicial, summary or arbitrary executions; and the Working Group on enforced or involuntary disappearances;

4. Encourages the Office of the High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, in consultation with, and with the concurrence of, the Government of Sri Lanka, advice and technical assistance on implementing the above-mentioned steps;

5. Requests the Office of the High Commissioner for Human Rights, in consultation with relevant special procedures mandate holders, to present a report on the provision of such assistance and progress on reconciliation and accountability, including investigations of violations of international law, in Sri Lanka to the Human Rights Council at its twenty-fifth session.

4. Encourages the Office of the High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, in consultation with, and with the concurrence of, the Government of Sri Lanka, advice and technical assistance on implementing the above-mentioned steps;


5. Requests the Office of the High Commissioner for Human Rights, in consultation with relevant special procedures mandate holders, to present a report on the provision of such assistance and progress on reconciliation and accountability, including investigations of violations of international law, in Sri Lanka to the Human Rights Council at its twenty-fifth session.

 

இதுவும் சென்ற ஆண்டு நிறைவேற்றப்பட்டதும் ஒரேமாதிரித்தானே இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.