Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரம் பேசி காட்டி கொடுக்காமல் நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்: ம. தொ.கூ. வேண்டுகோள்

Featured Replies

மலையக தொழிற்சங்க கூட்டமைப்பின் அங்குரார்ப்பணத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி. திகாம்பரம், இடதுசாரி முன்னணி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் லோரன்ஸ், மாகாணசபை உறுப்பினர் அரவிந்தகுமார், அஷ்ரப் அசீஸ் ஆகியோர் உட்பட பல மலையக தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இங்கு கருத்து தெரிவித்த மலையக தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர்கள்,

 

D004011550100.jpg




பி. திகாம்பரம்


புதுப்பிக்க இருக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கூடதலான மாதச்சம்பளம் பெற்றுக்கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட தொழிசங்கங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனை விடுத்து ஒவ்வொரு தடவையும் போன்று பேரம் பேசி சம்பளத்தை குறைக்க வேண்டாம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி. திகாம்பரம் தெரிவித்தார்.


இரு வருடங்களுக்கு முன்னரே 500 ரூபா சம்பள அதிகரிப்பை நாம் கோரியிருந்தோம். ஒப்பந்தங்களில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் பேரம் பேசி ஒவ்வொரு தடவையும் காட்டி கொடுத்துள்ளன. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலாயுதம் ஆகியோர் இரட்டை வேடம் கொண்டவர்கள். கூட்டு ஒப்ந்தம் தொடர்பாக ஊடகங்களில் ஒரு கருத்தை தெரிவித்து விட்டு கூட்டு ஒப்பந்தம் செய்யும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேரம் பேசி தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை குறைத்து விடுகின்றனர்

 

இம்முறையும் காட்டி கொடுக்காமல் முறையான சம்பளத்தை பெற்றுகொடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களுடன் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.



வாசுதேவ நாணயக்கார

இந்த நாட்டிற்கு கூடுதலான வருமானத்தை பெற்றுத் தரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூடதலான மாதச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின உழைப்பின் மூலம் நாடு வரியாக அதிக வருமானத்தை பெறுகின்றது. ஆனால் அவர்களுக்கு வாழ்கை செலவுக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 

இறப்பர், தென்னை செய்கைகளில் ஈடுபடுவோருக்கு வருமானம் கூடுதலாக கிடைக்கின்றது. ஆனால் நாட்டிற்கு அதிக வருமானத்தை பெற்றுத் தரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமானது மிகவும் குறைவாகவே உள்ளது. இது உண்மையில் கவலைக்குரிய விடயம். அவ்வாறு சம்பளத்தை கூட்டுவேண்டு மென்றால் தொழிலாளர்களின் வேலை பளுவை கூட்டவேண்டும் என்கிறார்கள். இவ்வாறு இல்லாமல் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களை உயர்த்த நாம் ஒன்றாக செயற்பட வேண்டும் என்றார்.


லோரன்ஸ்

ஒவ்வொரு முறையும் மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தினால் தொழிலாளர்கள் ஏமாற்றத்தை மாத்திரமே கண்டுள்ளனர். எனவே இம்முறையாவது தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் லோரன்ஸ் தெரிவித்தார்.

 

 

இரு வருடத்துக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் இந்த கூட்டு ஒப்பந்தத்தை ஐந்து வருடங்களுக்கு நீடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்க விடயமாகும். இதற்கு மலையக தொழிற் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பாகவே செயற்படும். ஐந்து வருடமாக நீடிப்பதை விட ஒரு வருடமாக குறைப்பது வரவேற்கதக்கது.


இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகமாக உள்ளது. ஒரு மனிதனுக்கு செய்த வேலைக்காக ஊதியம் வழங்குவது நடைமுறை இல்லை. மாறாக அவனுடைய வாழ்க்கை செலவுக்கு ஏற்ற வகையிலேயே ஊதியம் வழங்குவதே நடைமுறை. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் மாத வருமானம் மிகவும் குறைவான ஒன்று.

 

இம்முறையாவது தோட்ட தொழிலாளர்களுக்கு ஓர் நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க வேண்டும். இல்லையெனில் எமது அமைப்பு வீதிக்கு போராட வேண்டி நிலை ஏற்படும்.


விக்கிரமபாகு கருணாரத்ன

தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் மாதாந்த்த ஊதியமானது அன்றாடம் கூலி செய்பவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை விடவும் குறைவானது. இது வருந்ததக்க விடயமாகும் என இடதுசாரி முன்னணி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.


கஸ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் கிடைப்பதில்லை. தோட்டத் தொழிலாளர்களின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வருமானம் அரசாங்கத்தில் உள்ள சிலருக்கே சென்றடைகின்றது. எனவே கஸ்டப்பட்டு உழைக்கு தொழிலாளர்களுக்கு தனது வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கான நியாயமான சம்பளத்தை வழங்க வேண்டும் என்றார்.


அரவிந்தகுமார்

மலையகத் தொழிலாளர்களில் 90 வீதமானவர்கள் சரியான தேநீர் சுவை அறியாவதர்கள். காரணம் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைப்பது தேயிலை தூள் என கூறப்படும் தூசி. எனவே உண்மையான உயர் இரக தேயிலையின் ருசி 90 வீதமானவர்களுக்கு தெரியாது. இது உண்மையில் கவலைக்குரிய விடயமாகும் என மாகாணசபை உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

 

ஒன்று, இரண்டு, மூன்று என பல இரகங்கள் தேயிலையில் உள்ளது. ஆனால் வியர்வை சிந்தி உழைக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைப்பது தூசி. உலகத்தில் எங்கேயும் இதுபோன்ற அநியாயம் நடக்காது. ஆனால் எமது நாட்டில் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளைப் போன்று நடத்தப்படுகின்றனர் என்றார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3094

 

  • தொடங்கியவர்

கூட்டொப்பந்தத்தை 5 வருடங்களுக்கு நீடிக்க இரகசிய திட்டம்: மனோ

 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இரண்டு வருடங்களுக்கு ஒருத்தடவை செய்துக்கொள்கின்ற கூட்டொப்பந்தத்தை 5 வருடங்களுக்கு நீடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மலையக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரும், ஜ.ம.மு-ஜ.தொ.கா ஆகிய அமைப்புகளின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

 

 

'மலையக தொழிற்சங்க கூட்டமைப்பின்' அங்குரார்ப்பணத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வெள்ளவத்தையிலுள்ள குளோபல் டவர் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. அங்கு கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

 

இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு, மலையக தொழிலாளர்களின் பிரச்சினைகளை தேசிய அரங்குக்கு கொண்டு வரும்.


தோட்ட நிறுவனங்கள், தொழில் அமைச்சு மற்றும் கூட்டொப்பந்தத்தில்  கையெழுத்திடும் சங்கங்கள் என பல்வேறு தரப்பினருடனும்  நாம் பேச்சுவார்த்தைகள் நடத்தியே நாம் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நினைக்கிறோம்.

 

இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உடன்படாவிட்டால், நேரடி தொழிற்சங்க போராட்டங்களுக்கு நாம் செல்வோம். இதில் இரண்டு நிலைப்பாடுகள் இல்லை.


இந்த நாட்டுக்கு அதிகூடிய தேசிய வருமானத்தை கொண்டு வருவது மலையக பெருந்தோட்ட துறையேயாகும். ஆடை ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதி அதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய போகிறது.

 

மத்திய கிழக்குக்கு பெண்களை பணிக்கு அனுப்பி சம்பாதிக்கும் துறைக்கும் இன்று பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

 

எனவே இன்று முழுக்க, முழுக்க தேசிய வருமானம் என்று சொன்னால் அது பெருந்தோட்ட வருமானம்தான். இதுதான் நீண்டகால உண்மையாகும்.

 

வரவு-செலவு திட்டத்தில்  ஏனைய துறை தொழிலாளருக்கு வருடந்தோறும் சம்பள உயர்வு கிடைக்கும். அந்த சம்பள உயர்வு மலையக தொழிலாளர்களுக்கு கிடைப்பது இல்லை. தோட்ட நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் பேசி முடிவு எடுக்குமாறு அரசாங்கம் கையை கழுவி கொள்கிறது. இந்நிலை மாற வேண்டும்.


அதேபோல் நஷ்டத்தை காட்டி கையை கையை விரிக்கும் கொள்கையை தோட்ட நிறுவனங்கள் கைவிட வேண்டும். இன்று இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கையெழுத்திடும் கூட்டு ஒப்பந்தத்தை, ஐந்து வருடத்திற்கு ஒருமுறை கையெழுத்திடும் ஒப்பந்தமாக மாற்ற இரகசிய திட்டம் இடப்பட்டுள்ளது.இதை நாம் அனுமதிக்க போவதில்லை.

 

கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் தொழிற்சங்கங்களுடன் நாம் முரண்படவில்லை. அரசுடன் எடுத்த எடுப்பில் மோதவில்லை. மலையகத்தில் மிக அதிகமான தொழிலாளர்களை நமது கூட்டமைப்பு பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக முதவாளிமார் சம்மேளனமும்

புரிந்துக்கொள்ளவேண்டும்.


மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகும். இ.தொ.கா.வும், ஐ.தே.க.வும் கையெழுத்து போட இணையும்போது நாம் இணைவதில் தவறு இல்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் நாம் பேச நினைக்கிறோம். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியின் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்துடனும் நாம் பேச நினைக்கிறோம்.

 

இதுபற்றி ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நான் கூறியுள்ளேன். அவரும் அதற்கு உடன்பட்டுள்ளார் என்றார்.


மலையக தொழிற்சங்க கூட்டமைப்பின் அங்குரார்ப்பணத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் எம்.பியுமான பி. திகாம்பரம், இடதுசாரி முன்னணி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் லோரன்ஸ், ஊhவா மாகாணசபை உறுப்பினர் அரவிந்தகுமார், அஷ்ரப் அசீஸ் ஆகியோர் உட்பட மலையக தொழிற்சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/59156--5-.html

  • கருத்துக்கள உறவுகள்

2011 ல் இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் சுமார் மூன்று லட்சம் ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டத்துறையில் வேலை செய்யும் ஒருவர் நாளொன்றுக்கு அடிப்படை ஊதியமாக 380 ரூபாய்களும், இதரபடிகள் மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை உட்பட நாளொன்றுக்கு 515 ரூபாய்கள் கிடைக்கும் என இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது போதாது எனவும் 600 ரூபா தொடக்கம் 700 வரை அதிகரிக்கப்பட்டாலே வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியும் என தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.