Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் மறுவாழ்வு முகாமை பார்வையிட செஞ்சிலுவை சங்கத்துக்கு அனுமதி

Featured Replies

விடுதலைப்புலிகள் தங்க வைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு முகாம்களைப் பார்வையிட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

 

 

இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரின்போது சரணடைந்த 11 ஆயிரம் விடுதலைப்புலிகளுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அந்நாட்டு அரசு கூறிவந்தது. அவர்களில் வெகு சிலர் மட்டுமே இப்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முகாம்களைப் பார்வையிட சர்வதேச அமைப்பு எதுவும் அனுமதிக்கப்படவில்லை.


இந்நிலையில், இலங்கை அரசு சமீபத்தில் அளித்த அனுமதியைத் தொடர்ந்து, மறந்தமடு பகுதியில் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகளுக்கான மறுவாழ்வு முகாமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் கடந்த 22ஆம் தேதி பார்வையிட்டனர். இத்தகவலை அந்நாட்டின் மறுவாழ்வு ஆணையர் பிரிகேடியர் தர்சனா ஹெட்டியராச்சி தெரிவித்தார். செஞ்சிலுவைச் சங்கத்தினர் அந்த முகாமில் மூன்று மணிநேரம் தங்கியிருந்து அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை மீதான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வர உள்ள நிலையில், அந்நாடு செஞ்சிலுவைச் சங்கத்தை அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இலங்கை அரசு இணையதளத்தில் போர்க்குற்ற விடியோ: இலங்கை அரசின்

இணையதளத்தில் ஊடுருவிய விஷமிகள், அதில் போர்க்குற்றம் தொடர்பான விடியோவைப் பதிவேற்றம் செய்தனர். இதனால் ராணுவ அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 

இலங்கை அரசின் ஊடக அமைச்சகத்தின் இணையதளத்தில் திங்கள்கிழமை சில விஷமிகள் ஊடுருவினர். அதில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசிக் கட்டங்களில் நடைபெற்ற கொடுமைகள் தொடர்பாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் வெளியிட்ட விடியோவை அவர்கள் பதிவேற்றம் செய்தனர். "அப்பாவித் தமிழர்களைக் கொல்வதை நிறுத்துங்கள்! அல்லது எங்களிடம் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!' என்ற வாசகம் அடங்கிய தகவலையும் பதிவு செய்தனர். இதைக்கண்டு இலங்கை அரசின் அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.


÷இதையடுத்து, ஊடக மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நிபுணர்கள் உடனடியாக களமிறங்கி, சம்பந்தப்பட்ட விடியோ மற்றும் தகவலை நீக்கினர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இணையதளத்தில் இருந்த குறைபாட்டைப் பயன்படுத்தி, விஷமிகள் ஊடுருவினர். எனினும், அதைச் சரிசெய்து விட்டோம்'' என்றார்.

 

http://dinamani.com/world/article1479388.ece

  • தொடங்கியவர்

அங்கவீனமான முன்னாள் போராளிகளுக்கு வீட்டுக் கடனுதவி
 
முன்னாள் போராளிகளில் அங்கவீனர்களுக்கு வீட்டு கடனுதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக புனர்வாழ்வு வேலைத்திட்ட யாழ். மாவட்ட காரியாலய அதிகாரி ஜகத் குமார இன்று தெரிவித்தார்.
  
2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் சரணடைந்த முன்னாள் போராளிகளில் சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களில் அங்கவினர்களுக்கு வீட்டுக்கடனுதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக புனர்வாழ்வு அமைச்சின் ஆணையாளர் நாயகம் மற்றும் புனர்வாழ்வ மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அவர் கூறினார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு வேலைத்திட்ட அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்க முடியுமென்றும், அவ்விண்ணப்ப படிவத்தினை சமூக சேவைகள் அமைச்சின் மூலம் பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தலில் விண்ணப்பங்கள் நிரப்பபட்டு புனர்வாழ்வு அமைச்சிற்கு அனுப்பும் பட்சத்தில் இரண்டரை இலட்சம் ரூபா, வீடு நிர்மாணிப்பதற்கும், வீட்டு திருத்த பணிகளுக்கான 1 1/2 லட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/59568-2013-02-25-16-04-02.html

  • தொடங்கியவர்

மறுவாழ்வு முகாம்களை பார்வையிட செஞ்சிலுவை சங்கத்துக்கு இலங்கை அரசு அனுமதி

 

Tamil_News_large_655493.jpg

 

http://tamil.yahoo.com/photos/%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-photo-190500072.html

 அசோக்காந்தா இனமத வேறுபாடுஇன்றி இந்திய வீடுகளை இலவசமாக சிங்களவருக்கு  கொடுக்கிறார். எல்லாவற்றையும் இழந்த புனர்வாழ்வு அந்தவர்களுக்கு கடன் மட்டும் கொடுக்கிறார்கள் வீடுகள் கட்டிமுடிய வங்கிகள் அவற்றையும் பறித்து சிங்களவருக்கு கொடுக்கும்.

  • தொடங்கியவர்

ஐ.நா. மனித உரிமை அமர்விலும் சர்வதேச நாடுகளை வழமை போல ஏமாற்றும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. இந்த செயல்பாடுகளில் உண்மையான நேர்மையான எண்ணம் இல்லை.

 

அத்துடன், இலங்கை ஊடகங்களில் வருவதற்கு முன்னதாகவே திட்டமிட்டு தமிழக / இந்திய ஊடகங்களுக்கு இந்த செய்தி குறித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகின்றது. அங்கே உள்ள மக்கள் ஆத்திரத்தை கட்டுப்படுத்தும் செயலாக இது இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.