Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடந்தவை மோசமான வன்முறைகள்; ஜெனிவா மாநாட்டின் ஆரம்பத்தில் நவிப்பிள்ளை காட்டம்

Featured Replies

இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றவை மிக மோசமான வன்முறைகள். அவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு அந்த நாட்டு அரசுக்கு இருக்கிறது. இதனை இலங்கை அரசு சரியாகச் செய்ய வேண்டியதுடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை களையும் செயற்படுத்த வேண்டும்.

நேற்று ஜெனிவாவில் ஆரம்ப மான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் ஆரம்ப உரை நிகழ்த்திய மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற போரில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து அவர் தனது உரையில் காட்டமாகச் சுட்டிக்காட்டினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் ருவண்டா, பொஸ்னியா, ஹேர்ஜிகோவினா ஆகிய நாடுகளில் இனப்படுகொலைகளில் மடிந்துள்ளனர்.

பலஸ்தீன எல்லைகள் இன்னும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஈராக்கிலும், இலங்கையிலும் பாரிய அளவில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.

அவர் தமதுரையில் மேலும் குறிப்பிட்டவை வருமாறு:

சர்வதேச, தேசிய மட்டங்களில் நீதிக்குப் புறம்பான தண்டனைகளுக்கு எதிராக நாம் போராடி வருகிறோம். பொறுப்புக்கூறலுக்கான கடப்பாடுகளை உத்தரவாதப்படுத்தி வருகிறோம். நீதி நடைமுறைகளை முன்னெடுப்பதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முயல்கிறோம்.

எனினும், கட்டளையிடும் அதிகாரத்தில் உள்ள அநேகர் பாரதூரமான குற்றச்செயல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்குத் தண்டனை பெறாமல், நீதியின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர். உள்ளகச் சண்டைகளின்போது தொடர்ந்து போர்க்குற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆப்கானிஸ்தான், கொங்கோ ஜனநாயகக் குடியரசு, மாலி, சூடான், சிரியா ஆகிய நாடுகளில் போர்க்குற்றங்கள் நீடிக்கின்றன. இத்தகைய குற்றங்களையும், அத்துமீறல்களையும், இவற்றைக் கட்டவிழ்ப்பவர்களையும் கையாளுவதற்கான முறைமையை நாம் தொடர்ந்தும் வலுப்படுத்த வேண்டும்.

சர்வதேச சமூகத்திலுள்ள நாம் இத்தகைய சூழ்நிலை உருவாகுவதையோ, மோசமடைவதையோ தடுக்க முனைப்பாகச் செயற்படவேண்டும். தேசிய, பிராந்திய உலக மட்டங்களில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதில் சுயாதீனமான அதிகாரபூர்வ கேந்திர நிறுவனமாக இது திகழ்கிறது.

ஆரம்பத்தில் 1990களில் பத்துக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டிருந்த இந்நிறுவனம் தற்போது சர்வதேச ரீதியாக 101 கிளைகளை நிறுவியுள்ளது. இவற்றில் 71 கிளைகள் "ஏ' தரத்தில் உள்ளன.

வியன்னா மாநாட்டில் நான் மகளிர் உரிமைகளுக்கான சிவில் சமூக அமைப்பொன்றின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டேன். இது எனக்கு பெருமிதமளிக்கக்கூடியதாக இருந்தது.

எனினும், உலக மாநாட்டில் ஓர் அரசசார்பற்ற நிறுவனம் இந்த பங்களிப்பைச் செய்துள்ளது. இதுவே ஈடிணையில்லாத ஆணையின் மூலம் உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிறுவப்படக் காரணமாக அமைந்தது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=403121860926775706

  • தொடங்கியவர்

அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளை விசேட உரை

 

ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில், இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளை விசேட உரை நிகழ்த்த உள்ளார்.

 

 

இன்று அதிகாலை ஜெனீவா சென்றடைந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையின் மனித உரிமைகள் நிலைபாடு குறித்து உரை நிகழ்த்த உள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3209

  • கருத்துக்கள உறவுகள்

Dear Friends and colleagues எண்டு ஆரம்பிச்சு அலட்டப்போகுது சமரசிங்கம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.