Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தேவையற்ற தீர்மானம்' - ஜெனிவாவில் இலங்கை அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

110912170521_mahinda_samarasinghe_304x17

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும் அது ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசசிங்க கூறியுள்ளார்.

 

 

புதன்கிழமை ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் தரப்புவாதங்களை முன்வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

மனித உரிமைகள் நிலமைகள் தொடர்பில் இலங்கை ஏற்கனவே உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்ட நிலையில் இந்தத் தீர்மானம் தமது அபிப்பிராயப்படி தேவையற்ற ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

 

இலங்கையில் போருக்கு பின்னர் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை மிகவும் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பின் எஞ்சியுள்ள தரப்பினர், சில மேற்கு நாடுகளில் இலங்கைக்கு எதிராக பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களது தவறான தகவல்களுக்கு சர்வதேச சமூகத்தில் சில பிரிவுகள் எடுபட்டுவிட்டதாகவும் கூறியுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள், அதனால், இலங்கை பக்கசார்பான, சமநிலையற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

 

நல்லிணக்க ஆணைக்குழு

இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுவது தவறு என்றும், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை இறுதிப் போர் நிகழ்வுகள் குறித்தும், சானல்4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தின் உண்மைத்தன்மை பற்றியும், ஏனைய பல விடயங்கள் குறித்தும் இலங்கை இராணுவ தளபதியால் நியமிக்கப்பட்ட ஒரு விசாரணை மன்றம் ஆராய்ந்து தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறது என்றும் அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

 

அந்த விசாரணை மன்றம் தற்போது தனது இரண்டாவது கட்ட நடவடிக்கையாக, சானல் 4 ஆவணப்படம் குறித்த புலனாய்வுகளை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

திருகோணமலை மாணவர்கள் படுகொலை மற்றும் ஏசிஎஃப் கொலைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும், அதற்கு சிரேஷ்ட அரச சடத்தரணிகளின் குழு ஒன்று உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால சிபாரிசுகள் குறித்த விடயத்தில், அவற்றில் சில ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

காணிகள் குறித்த பிரச்சினைகளின் தீர்வுக்காக காணி ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் குறைக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் நடமாட்டத் தடை எதுவும் கிடையாது என்றும், வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு, வழமை நிலைமைக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், 75 வீதமான கண்ணிவெடிகளை இலங்கை இராணுவம் அகற்றிவிடதாகவும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் விடுதலைப்புலிகளை இலக்கு வைப்பதற்கான ஒரு ஏற்பாடு அல்ல என்றும் அது முன்னாள் போராளிகளுக்கான நல ஏற்பாடு என்றும் அவர் அங்கு தனது நீண்ட உரையில் கூறியுள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/02/130227_mahindaingeneva.shtml

மொத்தமும் வெளியே வந்தால் இலங்கை தாங்காது

 

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் சேனல் 4 வெளியிட்டது வெறு உதாரணம் தான். மொத்தமும் வெளிவந்தால் இலங்கை தாங்காது என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்த கண்ணன் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சேனல் 4 நோ ஃபயர் ஜோன் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு வீடியோக்கள் கொடுத்து உதவியவர் இலங்கையைச் சேர்ந்த கண்ணன்.
இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தவர்களில் கண்ணனும் ஒருவர்.

 

இது குறித்து அவர் கூறுகையில்,
குறைந்த பரப்பளவு கொண்ட முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டிருந்தனர்.
ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் உணவு, பாதி பேர் அந்த ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் கடல் நீரைக் குடித்து குடித்தே இறந்தார்கள்.

 

தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்திடம் சரணடைய வந்தனர். அப்போது ராணுவத்தினர், நாங்கள் உங்களை சுட மாட்டோம். ஆனால் நீங்கள் அனைவரும் நிர்வாணமாக வந்து சரணடைய வேண்டும் என்றனர்.

 

வேறு வழி இன்றி தந்தை முன்பு மகளும், மகனின் முன்பு தாயும், அண்ணன் முன்பு தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர்.

 

வவுனியாவில் உள்ள மெனிக் பார்ம் முகாம் மற்றும் வெலிகந்தையில் உள்ள மறைமுக முகாம் ஆகியவற்றில் தினமும் இரவு நேரத்தில் பெண்கள் கதறும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.

 

இலங்கையில் இதுவரை 1.47 லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பார்கள்.

 

போர் நேரத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இலங்கை ராணுவம் பயன்படுத்தியது. கொத்தணி குண்டு 500 சிறிய குண்டுகளாகப் பிரிந்து பாய்ந்து தாக்கும் ஒயிட் பாஸ்பரஸ் கொத்தணி குண்டுகளை விட கொடூரம் ஆனது. ஒரே ஷாட்டில் 100க்கும் மேற்பட்ட குண்டுகளை உமிழும். அந்த குண்டுகள் ஆக்சிஜனை உறிஞ்சிய பிறகு தான் வெடிக்கும்.
அதனால் அந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டபோது குண்டு பாதிப்பு போக பலர் மூச்சு திணறி இறந்தனர். சேனல் 4 வெளியிட்டுள்ள ஆதாரங்கள் அனைத்தும் வெறும் உதாரணங்கள் தான்.


மொத்தமும் வெளியே வந்தால் இலங்கை தாங்காது என்றார்.

 

http://www.alaikal.com/news/?p=123363

தேசிய பிரச்சினையை சர்வதேசமயமாக்க வேண்டாம்: ஜெனீவாவில் மஹிந்த சமரசிங்க

 

இலங்கையின் தேசிய பிரச்சினைகளை சர்வதேசமயமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் எதிராக உள்ளது என மனித உரிமைகள் பேரவைக்கு, ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரும் இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.



ஜெனீவாவில் ஆரம்பமாகியிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது பொது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து, இன்று மாலை உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தனது உரையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

 

இலங்கையின் உள்ளநாட்டு பிரச்சினைகளை சர்தேசமயப்படுத்துவதனால் நாட்டின் ஐக்கிய நிலை பாதிப்படையும். இதேவேளை ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்கள் தேவையற்ற ஒன்றாகும். மேலும் இவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது.

 

போருக்கு பின்னர் இலங்கையில் சிறப்பான முறையில் மனித உரிமை தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளில் எஞ்சியிருக்கும் பயங்கரவாத சக்திகள் இலங்கையின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் பிரசாரங்களையும் தந்திரோபாயங்களையும் மேற்கொண்டு வருகின்றன. இதனால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது வருந்ததக்க விடயமாகும். இதனால் இலங்கை பக்கசார்பான, சமநிலையற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

 

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை என கூறுவது தவறான விடயமாகும். மேலும் செனல் 4 ஆவணப்படம் குறித்து புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்ற. 75 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. அதாவது 99 சதவீதமான நிலப்பகுதிகளில் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 98 சதுர கிலோ மீட்டர் பகுதியே இன்னமும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இந் நிலப்பரப்பும் மிகவிரைவில் சுத்தம் செய்யப்படும்.


இதேவேளை காணிகள் குறித்த பிரச்சினைகளின் தீர்வுக்காக காணி ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் குறைக்கப்பட்டு வருவதோடு இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு வருகின்றது.
மக்கள் சுதந்திரமாக நடமாட கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3233

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.