Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புதிய காணொளி குறித்து இராணுவம் அளித்துள்ள விளக்கம்

Featured Replies

படையினர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புதிய காணொளி குறித்து இராணுவம் அளித்துள்ள விளக்கம்

     

 By            Nirshan Ramanujam

2013-02-27 15:03:56

 உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையானது ஊகத்தின்

பேரில் ஆக்கத்திறன் மூலம் வெளியிடப்பட்டதொன்று மட்டுமன்றி உண்மைகளுக்கு
அப்பாற்பட்டதொன்றென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கைப்
படையினர் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு மனித
உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள காணொளி தொடர்பில் அவர்
வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

மனித உரிமைகள் கண்காணிப்பகம் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் கூடிய படைப்பு வரும் வரை எவ்வித முறைப்பாடுகளும் இருக்கவில்லை.


அரசாங்கமானது விடுதலைப்புலிகளின் கைதிகளாக இருந்த சுமார் 300,000 பேரை
மீட்டு அவர்களை மீள்குடியமர்த்தி முடித்ததுடன், 11,800 வரையான முன்னாள்
புலிகளுக்கு புனர்வாழ்வளித்ததை மனித உரிமைகள் கண்காணிப்பகமானது காணத்
தவறிவிட்டது. அவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில்
விசாரணை நடத்தி அதற்குரியவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர பொலிஸாரிடம்
நன்கு ஸ்தாபிக்கப்பட்ட செயல்முறைகள் உள்ளன.


இராணுவ வீரர்கள் மீது மனித உரிமை மீறல்கள், பாலியல் வல்லுறவுகள்
தொடர்பில் கடந்த காலங்களிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன்
அதனுடன் தொடர்புடைய ஒவ்வொருவர் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
குற்றவாளிகளாக இணங்காணப்பட்டவர்கள் சட்டத்தில் செயன்முறையின் ஊடாக
தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

முரண்பாடு இடம்பெற்றுக்கொண்டிருந்த
காலப்குதியில் (ஜனவரி 2007- மே 2009), வடக்கில், 7 பாதுகாப்புப்
படைவீரர்கள் 5 பாலியல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தாக
குற்றஞ்சாட்டப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ஐவரில் 4 பேர் சிங்களவர்
என்பதுடன் ஒருவர் தமிழராவார்.

இவ் எண்ணிக்கை வட மாகாணத்தில்
மொத்தமாக பதிவாகிய 119 சம்பவங்கள் தொடர்பில் (சிவிலியன்களுக்கு எதிரான
முறைப்பாடுகள் அடங்கலாக) குற்றஞ்சாட்டப்பட்ட 125 பேரில் அடங்குகின்றது.

வடக்கில்
முரண்பாட்டுக்கு பின்னரான காலப்பகுதியில் 10 பாதுகாப்புப் படையினர் மீது 6
பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டதுடன் இவ்
எண்ணிக்கை வட மாகாணத்தில் மொத்தமாக பதிவாகிய 307 சம்பவங்கள் தொடர்பில்
குற்றஞ்சாட்டப்பட்ட 256 பேரில் அடங்குகின்றது.

இதில் பாதிக்கப்பட்ட 2
பேர் தமிழர் என்பதுடன் மற்றையவர்கள் 1 முஸ்லிம் மற்றும் 3 சிங்களவர் ஆவர்.
மொத்தமாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் பாதுகாப்படையினரை ஒப்பிடும் போது
அவர்களின் விகிதாசாரம் முரண்பாடு இடம்பெற்ற காலப்பகுதியில் 5.6 %
வீதமாகவும் அதன் பின்னரான காலப்பகுதியில் 3.3% உள்ளது.

இக்குறைவானது
வடக்கில் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம் பெண்களின் பாதுகாப்பின்மைக்கு
பங்களிப்பதாக தெரிவிக்கப்படுவது வெறும் கட்டுக்கதை என்பதை
எடுத்துக்காட்டுகின்றது.

பாதுகாப்புப்படையினர் சம்பந்தப்பட்ட
மேற்குறிப்பிட்ட அனைத்து வழக்கு தொடர்பிலும் அரசாங்கத்தினால் சட்ட
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமைகள்
கண்காணிப்பகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும்
அறிக்கைகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு பெறும் இலக்குடனேயே
முன்வைக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் ஆதரவு குழுக்களின்
பிரசாரங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஆதிக்கம் செலுத்தும்
செல்வாக்குக் கொண்டவை. இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முடிவடைந்ததன்
பின்னர் இந்நிலைதான் உள்ளது.


சர்வதேச சமூகமானது இக்குழுக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் தந்திரோபாரய
நடவடிக்கைகளை கருத்தில் கொள்வதுடன் அதிகமான சர்வதேச அமைப்புகள் தாம்
ஏமாற்றப்படுவதை உணரவில்லை.

செனல் 4 வின் தற்போதைய காணொளி மற்றும்
படங்களின் காட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். பிராபகரனின் மகனின் படமானது பல
காலங்களுக்கு முன்னர் திறந்த தளத்தில் வெளியாகியதுடன் ஆர்வமுள்ள எத்
தரப்பினருக்கும் கிடைக்ககூடியதாக இருந்தது.

யாருக்கேனும்
தேவையிருந்தால் அவற்றை ஒரே நேரத்தில் வெளியிட்டிருக்கலாம். அது தொடர்பில்
பொருத்தமான தகவல்களை வைத்திருந்த அதிகாரிகளுக்கு விசாரணையின் பொருட்டு
வழங்கியிருக்கலாம்.

ஒவ்வொரு மனித உரிமைகள் கூட்டத்தொடர் வரை இவ்விவகாரம் வேகத்துடன் செல்வதை உறுதிசெய்வதே இதன் நோக்கமென்பதை இது சுட்டிக்காட்டுகின்றது.

நிச்சயமாக
இது சில குழுக்களால் இலங்கையை நோக்கி முன்னெடுக்கப்படும் பிரசாரத்தின்
அங்கமாகும். இது இலங்கைக்கு எதிராக திட்டமிட்டு முன்னெடுக்கப்படும்
நடவடிக்கையாகத் தெரிகின்றது.

மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு
முன்னதாக நடைபெறும் நிகழ்வுகள் இது சம்பந்தமான புத்தக வெளியீடுகள்,
மாநாடுகள், ஊடக பிரசாரங்கள், சமூக ஊடகம் மூலமான பிரசாரங்கள், பெருந்தொகையான
மின்னஞ்சல்கள், அறிக்கைகள் வெளியிடுதல், கடைசி நேரத்தில் அனுதாப அலைகளை
ஏற்படுத்தும் வீடியோக்கள், படங்கள் வெளியிடுதல் போன்றவற்றை
மையப்படுத்தியுள்ளன.

இது தொடர்பில் கடந்த காலத்திலும் பல உதாரணங்கள் உள்ளன.

இதேபோன்ற விடயங்களை 2014 ஆம் ஆண்டிலும் காணப்பட்டால் ஆச்சரியப்படாதீர்கள் - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3228

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.