Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனர்வாழ்வக்கு உட்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும்: - ஆயரிடம் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Mannar-Bishop150seithy.jpg

இராயப்பு ஜோசப் ஆண்டகையும், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவும் கொழும்பில் உள்ள புதிய மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றனர். கைதிகளின் நலன்கள், அவர்களின் வழக்கு விசாரணை நிலைமைகள் என்பன குறித்து இவர்கள் கேட்டறிந்துள்ளனர். அதேவேளை, புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தியாகராஜா பிரபாகரன் என்ற கைதியையும் அவர்கள் சந்தித்துள்ளனர்.

  

கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றி விளக்கமறியலில் நீண்டகாலமாக வைக்கப்பட்டிருப்பவர்கள், வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், நீண்டகாலமாக நீதிமன்ற விசாரணைகள் இழுத்தடிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், விசாரணைகளின் பின்னர் தண்டனை பெற்றுள்ளவர்கள், இராணுவத்திடம் சரணடைந்ததன் பின்னர் விசாரணைகளோ விடுதலையோ இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், புனர்வாழ்வுப் பயிற்சி வழங்கி, சமூகத்தில் இணைக்கப்பட்டதன் பின்னர் கைது செய்யப்படடுள்ளவர்கள் என ஐந்து பிரிவாக தாங்கள் இருப்பதாகவும், தங்களை புனர்வாழ்வக்கு உட்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்றும் இதற்கு ஆயரும், பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவும் நடவடிக்கை எடுத்து உதவி புரிய வேண்டும் எனவும் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அவர்களிடம் கோரியிருக்கின்றனர்.

 

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தங்களை விடுதலை செய்வதென்பது நடைபெறாத காரியம் என்பதுடன், அது நீண்டகாலம் எடுக்கும் என்பதால், பொது மன்னிப்பின் கீழ் உடனடியாக விடுதலை செய்யப்படுவதை அல்லது புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவதையே தாங்கள் விரும்புவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அராசங்கம் பல தடவைகளில் உறுதிமொழிகளை வழங்கியிருக்கின்ற போதிலும் இன்னும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

 

அதேபோன்று தாங்கள், தமது விடுதலையைக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை, அதனைக் கைவிடுமாறும் தமது விடுதலைக்கு தம்மால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்பதாகவும் மன்னார் ஆயரும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவும் உறுதியளித்திருந்த போதிலும் அதனால் பயன் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=77074&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.