Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர் திரு ராஜேஷ் சுந்தரம் அவர்கள்.

Featured Replies


555433_10151269388982377_1552246682_n.jp
 
கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்டு , டெல்லியில் வளர்த்தவர் ஊடகவியலாளர் திரு ராஜேஷ் சுந்தரம் அவர்கள். ஜி டிவி, அல் ஜசீரா, ஹெட்லைன்ஸ் டுடே போன்ற பிரபல ஊடகங்களில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தவர். இலங்கையில் நடந்ததுபோர்க் குற்றம் என ஊடகங்கள் கூறி வந்த வேளையில், அங்கே நடப்பது ´இன அழிப்பு´ (genocide) என்கிற வார்த்தையை முதன்முதலாகப் பிரயோகப் படுத்திய நபர் இவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவரது தலைமையின் கீழ் தான் ப்ரியம்வதா என்கிற பெண்மணி இலங்கைக்குள் துணிகரமாகச் சென்று, ரகசியமாகப் படப்பிடிப்பு நடத்தி அங்கே நிலவிய மனிதஉரிமை மீறல்களை ஹெட் லைன்ஸ் டுடே யில் ஆவணப் படமாக வெளியிட்டார்.

ஈழத்தமிழர் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க லண்டன் வந்த திரு ராஜேஷ்
அவர்கள், இந்த வார இறுதியில் ஜெனிவாவில் நடக்க இருக்கும் பல்வேறு
நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்கிறார். செல்லும் வழியில் நேற்று நார்வே
வந்திருந்தார். புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தினருடன் உரையாட வேண்டும் என்கிற
அவரது விருப்பத்திற்கு இணங்க ஒஸ்லோ நகரில் ஒரு சந்திப்பிற்கு ஏற்ப்பாடு
செய்யப் பட்டிருந்தது. அதில் அவர் கூறிய சில விடையங்கள் என்னுள் பெரும்
தாக்கத்தை ஏற்ப்படுத்தின. இயன்றவரை அவற்றில் ஒருசிலவற்றை நினைவு கூர்ந்து
எழுதுகிறேன்.

அவர் ஊடகத் துறையில் பணியில் சேர்ந்து அவருக்கு
முதலில் வழங்கப் பட்ட சிறப்புப் பனி இலங்கை குறித்து. அவர் 1999 ஆம் ஆண்டு
முதன் முதலில் இலங்கைக்குச் சென்றுள்ளார். அரசாங்க தரப்பிலும் புலிகள்
தரப்பிலும் இருந்த பல்வேறு முக்கிய புள்ளிகளை நேர்காணல் கண்டதோடு
மட்டுமின்றி மக்கள் பலரை சந்தித்துள்ளார். பின்னாட்களில் பல்வேறு
சந்தர்ப்பங்களில் அவர் இலங்கை செல்ல நேரிட்டுள்ளது. ஒவ்வொரு முறை அவர்
செல்லும்பொழுதும் , அங்கே நடப்பவை அனைத்தையும் சமநிலையற்ற வகையிலேயேஅணைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருவதாக உணர்ந்துள்ளார். It is a disproportionate conflict where both sides are not equal. Medias never
took that into account when projecting it.

ஒருமுறை இலங்கையில்
அவர் வடக்கு நோக்கி செல்ல இயலாததால் கிழக்கு மாகணத்தில் கடற்க்கரை ஓரம்
இருந்த ஒரு விடுதியில் தங்கியுள்ளார். எறிகணைத் தாக்குதலால் சிதிலமடைந்துக்
கிடந்த ஒரு விடுதி அது.சில தினங்களுக்கு முன் கடல் புலிகளுக்கும் அரச
படைகளுக்கும் அங்கே தீவிர மோதல் ஏற்பட்டுள்ளது. புலிகளின் படைகள் சென்ற
பின்பு அங்கே ராணுவத்தினர் முழு படையணிகளுடன் வந்து அந்த கிராமத்தையே
துவம்சம் செய்துவிட்டனர். பாவம் ஏழை எளிய மக்கள், அவர்கள் வீட்டில் ஒரு
சிறு கரண்டி கூட விடாமல் அனைத்து பொருட்களும் தூக்கி வீசப்பட்டு இருந்தன.
அப்பாவி மக்கள் சொல்லானா கொடுமைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். நான் ஒரு
வீட்டிற்க்குள் சென்று பார்க்கிறேன். அங்கே குழந்தை குடிப்பதற்காக இருந்த
பால் புட்டி ஒன்று ராணுவ பூட்ஸ் காலால் நசுக்கப்பட்டுக் கிடந்ததைப்
பார்தேன். எத்தகைய கல்நெஞ்சக் காரனும் இத்தகைய செயலைச் செய்திருக்க
மாட்டன். நான் கண்ட அந்த ஒரு நிகழ்வுதான் என் வாழ்வில் ஒரு திருப்பு
முனையாக அமைந்தது. அதுவரை ஒரு சாதாரண ஊடகவியலாளராக செய்தி சேகரித்துக் கொண்டிருந்த எனக்கு தமிழர்களின் நியாயமான உணர்வுகளையும் , ஒரு செய்தியாளனாக எனக்கிருக்கும் தார்மீகக் கடமையினையும் உணர்த்தியது.

பின்
பலவேறு கால கட்டங்களில் பல்வேறு ஊர்களுக்குச் சென்றேன், பலதரப் பட்ட
மக்களுடன் உரையாடி இருக்கிறேன். ஒரு முறை ஒரு ஊரில் இந்திய அமைதிப் படை
செய்த அட்டூழியங்களை பாதிக்கப் பட்ட மக்கள் வாயிலாகவே அறிந்துகொண்டேன்.
இந்தியன் என பீடும் பெருமையும் கொண்ட நான் அவமானத்தால் தலைகுனிந்த நாள்
அன்றுதான். நான் இந்தியன் என்கிற காரணத்தினால் அம்மக்கள் என்னை வெறுக்கக்
கூட இல்லை, மாறாக அன்பாகத் தான் நடந்துகொண்டனர்.

புலிகள் நிர்வாகம் நடந்த பகுதிகளில் அவர்களது நிர்வாகத் திறனைக் கண்டு
வியந்துள்ளேன். உதாரனத்திற்க்கு , காக்கி சட்டை என்பது காலம் காலமாக
அடக்குமுறையின் அடையாளமாக மக்கள் கருதக் கூடும் என்பதால் தமிழீழ
காவல்துறைக்கு வேறு நிறத்தில் சீருடை வழங்கப் பட்டிருந்தது. இவ்வாறன பல்வேறு உணர்வுப் பூர்வமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பின் கேள்வி நேரத்தின் பொழுது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது இலகையில் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் (diplomats) பெரும் தவறு
இழைத்து விட்டனர். இந்தியா, ஒன்று தார்மீக உயர்நிலைக் கொள்கையில் (moral
high ground) செயல்பட்டிருக்க வேண்டும் அல்லது பொருதார வர்த்த பாதுகாப்பு
கோணத்தில் (strategic, economic,security interest) இந்த பிரச்சனையை அணுகி
இருக்க வேண்டும். இரண்டு இல்லாமல் சொதப்பி கடைசியில் தமக்குப் பாதுகாப்பு
அரணாக இருந்த தமிழர் பகுதிகள் வேறு நாட்டினருக்குப் போகும் நிலை
வந்துவிட்டது என்றார்.

அவரிடம் நான் கேட்ட கேள்வி, ´´ கொள்கை வகுப்பாளர்கள் பெரும் பிழை விட்டு விட்டார்கள் என்கிறீர்கள். எந்த ஆட்சி வந்தாலும் இதே கொள்கை வகுப்பாளர்கள் தான் கொள்கைகள் வகுக்கப் போகிறார்கள். இந்தப் போரில் இந்தியாவும் ஒரு கூட்டாளி. அப்படி இருக்க தமிழர்கள் பக்கம் உள்ள நியாயத்தை , இனப்படுகொலை குற்றத்தை சர்வதேச வெளியில் , இந்தியா பகிரங்கமாக எவ்வாறு பறைசாற்றப் போகிறது? மேலும் காஸ்மீரத்தில் இராணுவத்தைக் குவித்து துப்பாக்கி முனையில் ஆட்சி நடத்தும் ஒரு அரசு எந்த அடிப்படையில் இத்தகைய ஆதரவு நிலையை எடுக்கும் என எதிர்பார்க்க முடியும்? என்றேன்.

அதற்க்கு அவர் , கொள்கை வகுப்பாளர்கள் அனைவரும் அரசியலுக்கு
அப்பாற்பட்டவர்கள் என எண்ணிவிட இயலாது. இந்த நிலை சோனியா காந்தி என்கிற ஒரு தனிப்பட்ட பெண்ணின் பலிவாங்கு நடவடிக்கை என நாம் எண்ணாத போதும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த வுடன் அக்கட்சிக்கு சற்று விசுவாசமான நபர்கள், அதாவது
சிவசங்கர் மேனன், நிருபமா ராவ் போன்றோர் கொள்கை வகுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். அம்மாதிரியான சிலர் ´´ அரசனைக் காட்டிலும் அதிக நாட்டுப்
பற்று கொண்டவர்களாக தம்மைக் காட்டிக் கொள்வர் (Being more loyal than a
king). இதனால் இந்தத் தலைவர் திருப்திப் படக் கூடும் என்கிற நோக்கில்
அவர்களது சில நடவடிக்கைகள் அமையப் பெறும். அதுதான் இங்கேயும் 2009 கால
கட்டத்தில் நடந்துள்ளது.

காஸ்மீரத்திலும் வடகிழக்குப் பிராந்தியத்திலும் இந்தியாவின் நடவடிக்களை நானும் கண்டிக்கிறேன். சர்வதேச அரங்கில் அதை மறைக்க அவர்கள் முற்ப்பட வேண்டி இருக்கும். அதையும் தாண்டி இனி இனப்படுகொலைக்கு எதிராகவோ இலங்கைக்கு எதிராகவோ இந்தியா திடமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமெனில் அது தமிழக அரசியல்வாதிகள் கையில் தான் உள்ளது. அவர்களைத் தேர்ந்தெடுக்கும் தமிழக மக்கள் கையில்தான் உள்ளது என்றார்.

அடுத்த கேள்வி, ´´ அய்யா , சரியாகத் தான்
சொல்கிறீர்கள். எனது கருத்து என்னவெனில், தேசிய எல்லைகள் கடந்து ஒரு
இனத்திற்கு ஏற்படக் கூடிய உச்சக் கட்ட கொடுமை இன அழிப்பாகத் தான் இருக்க
முடியும். தமிழகத்தின் கூப்பிடு தொலைவில் அத்தகைய அக்கிரமங்கள்
நிகழ்துள்ளது. இன்றைக்கு படித்த இளைன்கர்கள் , இணையத்தைப் பயன்படுத்தும்
இளைன்கர்கள் ஓரளவு இந்தக் கொடுமைகளை அறிந்துள்ளனர். ஆனால் அவர்கள்
பெரும்பான்மை வாக்காளர்கள் அல்ல. பெரும்பான்மை பாமர வாக்காளர்கள், தனியார் தொலைகாட்சி ஊடகக் களிப்பில் இருப்பவர்கள். அவர்களுக்கு இலங்கை பற்றியோ, இன அழிப்பின் கொடுமை குறித்தோ விழிப்புணர்வு இல்லை. மேலும் ஊழல் பணத்தைக் கொண்டு அதே வாக்காளர்கள் விலைக்கு வாங்கப் படுகிற கொடுமையும் நடக்கிறது. இந்த நிலையில் , அந்த தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று வருகிற கட்சிகள் எப்படி ஒருமித்த குரலில் இந்திய அரசை நிர்பந்திக்கும்? போர் உச்சத்தில் இருந்த போதே அதைச் செய்யாத அரசியல்வாதிகள் இப்போது எப்படி செய்வார்கள்? இதெல்லாம் நடக்கவேண்டுமெனில் இன்னும் பல ஆண்டுகள் ஆகும் எனத் தோன்றவில்லையா? என்றேன்.

அவ்வாறு எண்ண வேண்டியதில்லை. இதுவரை எந்தவித படத்தையோ
ஆதாரத்தையோ பார்க்காமல் இருந்த மக்கள் எங்களது தொலைக்கட்சியில், சானல் 4
தொலைக்கட்சியில் வந்த ஆவணங்களை பார்த்துத் தற்போது பொதுமக்கள் பலர் இந்த விடையத்தில் தெளிவைப் பெற்று வருகின்றனர். அதன் தாக்கம்தான், தற்போது மற்ற செய்தி ஊடங்களும், ஏன் ஹிந்து பத்திரிக்கை முதற்கொண்டு தமிழர் பக்கம்
திரும்பும் சமிக்கைகள் காணப் படுகின்றது.

கடந்த ஆட்சியில் , தமது ஆதரவு இல்லை என்கிற நிலை ஏற்ப்பட்டால் மதிய அரசு கவிழும் என்கிற பட்சத்தில் தமிழக அரசியல் வாதிகள் அந்தக் கடமையைச் செயாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. பணமா இனமா என்கிற கேள்வி வரும்பொழுது இனத்தைக் காட்டிலும் பணம் முக்கியம் என்கிற நிலைப்பாட்டை கருணாநிதி எடுத்துவிட்டார். தற்போதைய ஆட்சியிலும் அவருக்கு இருக்கிற ஒரே கவசம் அவரது எம்பி க்களும் மந்திரிகளும்தான். ஆகவே அதை இழந்து எதுவும் அவர் செய்ய வாய்ப்பில்லை.


அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் நிலை மாறும். இனி வருகிற தேர்தலில்
தமிழக எம் பி களின், குறிப்பாக திமுக அல்லாத கட்சிகளின் பங்கு மத்திய
அரசில் கணிசமாக அமையும். அந்தச் சூழலில் தமிழர் விரோத போக்கை மத்திய அரசு கடைபிடித்தால் ஆட்சி கவிழும் என்கிற நிலை வரும். அப்போது சாதகமான பல
அரசியல் நகர்வுகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. தமிழர் பிரச்சனை முடிந்து
விட்டதாக எவரும் எண்ண வேண்டாம். ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை
அது முடிந்துவிட்டதாகக் கொள்ள இயலாது. அரசியல் தீர்வு ஏற்ப்படவேண்டுமெனில்
தமிழக அரசியல் மூலமாகவும் புலம் பெயர் தமிழர்கள் மூலமாகவும் தான் ஏற்ப்பட
வேண்டும். புலம் பெயர் தமிழர்களாகிய நீங்கள் அசுர பலம் பொருந்திய இலங்கை
அரசை எதிர்த்து உங்கள் உரிமைக்காகப் போராடும் பொழுது உங்கள் குரல் ஒரு
திசையில் சிந்தாமல் சிதறாமல் ஓங்கி ஒலிக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது
உங்கள் கடமை என்றார்.

இன்னும் நிறைய கேள்வி பதில்கள் இடம்பெற்றன.
ஒரு சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். ஆக மொத்தம் ஒரு சிறப்பான
சந்திப்பாக அமைந்தது. மேலும் இத்தகைய கல்வியாளர்கள், தகுதி மிக்க
ஊடகவியலாளர்கள் நமது நியக் குரலுக்கு வலுச் சேர்ப்பது மிகுந்த ஆறுதலையும்
நம்பிக்கையும் அளிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!!
 
- நன்றி முகநூல் -
 
 

 

 கடந்த ஆட்சியில் , தமது ஆதரவு இல்லை என்கிற நிலை ஏற்ப்பட்டால் மதிய அரசு கவிழும் என்கிற பட்சத்தில் தமிழக அரசியல் வாதிகள் அந்தக் கடமையைச் செயாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. பணமா இனமா என்கிற கேள்வி வரும்பொழுது இனத்தைக் காட்டிலும் பணம் முக்கியம் என்கிற நிலைப்பாட்டை கருணாநிதி எடுத்துவிட்டார்.  

 

 

உண்மையான வரிகள்  :( 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கண்களைத் திறந்த ஒரு ஆய்வு! நன்றிகள், தமிழீழன்!

 

இதே போன்றே திருமுருகன் காந்தியினது கருத்துக்களும் அமைகின்றன!

 

நாங்கள் இவற்றை மேலும் உள்வாங்குவதன் மூலமே உண்மையான தெளிவைப் பெற முடியும் என எண்ணுகின்றேன்!

12180_303428173119472_580565855_n.jpg

https://www.facebook.com/rajesh.sundaram.773

 

As the UNHRC debates the US sponsored resolution against Sri Lanka,this young man will fast for the next 10 days outside the UN office in Geneva. He will live on the road in the frigid weather, surrounded by photographs of the victims of the various anti-Tamil pogroms through the years and the genocide.

 

555237_10151560109083939_873873854_n.jpg



525219_10151560109158939_289635694_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.