Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த - அலோக் ஜோசி சந்திப்பின் பின்னணியில் மீண்டும் 'றோ' பற்றிய சர்ச்சைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த - அலோக் ஜோசி சந்திப்பின் பின்னணியில் மீண்டும் 'றோ' பற்றிய சர்ச்சைகள்

 

யதீந்திரா
 

இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பின் (Research and Analysis Wing (RAW or R&AW)) இயக்குனர் அலோக் ஜோசி (Alok Joshi) சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்திருந்தார். இதனை இந்து பத்திரிகை உறுதிப்படுத்தியிருந்தது. மகிந்த ராஜபக்ச, ஆலய வழிப்பாட்டுக்காக இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு, இந்தியாவிற்கு சென்றிருந்த வேளையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கடந்த வருடமும் மகிந்த ராஜபக்ச இதுபோன்றதொரு ஆலயதரிசன விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உட்பட பலரையும் அவரால் சந்திக்க முடிந்திருந்தது. ஆனால் இம்முறை எவரையும் சந்திக்காத நிலையில், றோவின் தலைவர் ஜோசியை மட்டுமே சந்தித்துவிட்டு திரும்பியிருக்கின்றார். 30 நிமிடங்கள்வரை நீடித்த மேற்படி சந்திப்பு, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகிந்த ராஜபக்சவின் மீதான பொறுமையை இந்தியா இழந்து வருவதாக சில இந்திய அரசியல் அவதானிகள் குறிபிட்டுவருகின்ற சூழலிலேயே, இந்திய வெளியக உளவுத்துறையின் தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து மீண்டும் 'றோ' பற்றிய சர்ச்சைகள் எழுந்துள்ளன.

 

இவ்வாறு சர்ச்சைகள் எழுவதற்கு பின்னால் ஒரு தெளிவான காரணம் உண்டு. அதாவது, ஒரு நாட்டின் தலைவரை பிறிதொரு நாட்டின் உளவுத்துறையின் தலைவரொருவர் சந்திப்பதானது மிகவும் அரிதான ஒன்றாகும். மிகவும் இக்கட்டானதொரு சூழலில்தான் பலம்பொருந்திய நாடுகளின் உளவுத்துறை, நாட்டின் வெளிவிவகார விடயங்களில் நேரடியாக தலையீடு செய்யும். அவ்வாறானதொரு சூழல் முன்னரும் இலங்கை விடயத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இந்திய இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்றிருந்த பின்னணியில், 1988ஆம் ஆண்டு, அப்போது றோவின் தலைவராகவிருந்த, ஏ.வெர்மா (A. Verma) அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை சந்தித்திருந்தார். இலங்கை ஜனாதிபதி ஒருவரை றோவின் தலைவரொருவர் சந்தித்திருந்த முதல் சந்தர்ப்பம் அதுவாகும். அந்த வகையில், றோவின் தலைவரொருவர் சந்தித்திருக்கும் இரண்டாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆவார். இதுவே, மேற்படி விடயம் சர்ச்சைக்குரிய ஒன்றாக நோக்கப்படுவதற்கான பிரதான காரணமாகும்.

 

பொதுவாக உளவுத்துறை தொடர்பான விடயங்களை வெளியில் இருப்போர் ஊகிக்க முடியுமே தவிர, அது பற்றிய திடமான கருத்துக்களை பதிவு செய்ய முடியாது. இந்திய வெளியக உளவுத்துறையான 'றோ' பற்றிய விடயங்களும் அத்தகைய ஒன்றுதான். இலங்கை பிரச்சனையில், இந்தியத் தலையீடு என்பதில் இரகசியங்கள் எதுவுமில்லை. ஆனால், இலங்கை பிரச்சனையில் இந்திய உளவுத்துறையின் ஈடுபாடுகள் என்பவை மிகவும் இரகசியமானவை. வேண்டுமானால், அவை பற்றி நாம் ஊகங்களை வெளியிட முடியும். ஏனெனில், றோவின் செயற்பாடுகள் பற்றிய விடயங்கள் பெரும்பாலும் எந்தவொரு உத்தியோகபூர்வ ஆவணங்களிலும் இடம்பெறமாட்டாது. நேரடியாக தொடர்புபட்டவர்கள் தங்களின் அனுபவங்களை பதிவுசெய்தாலன்றி, உளவுத்துறைகளின் செயற்பாடுகள் என்பவை பெரும்பாலும் ஊகங்கள் மட்டுமே!

 

இந்திய உளவுத்துறையின் தலைவர் வெர்மா, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை சந்தித்திருக்கிறார் என்னும் செய்தி சிலரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்திய தலையீடு தொடர்பான உத்தியோகபூர்வ பதிவுகளில் அது தவிர்க்கப்பட்டே இருக்கிறது. இலங்கையுடனான, இந்திய உறவுகள் குறித்த அனைத்து உத்தியோகபூர்வ ஆவணங்களும் தொகுப்பட்டிருக்கின்றன. இலங்கை - இந்திய உறவுகள் (1947- 2000) தொடர்பான ஆவணங்களின் தொகுப்பொன்றை, (India- Sri Lanka - Relations and Sri Lanka's Ethnic Conflict Documents) இந்திய தேசிய ஆய்வகம் வெளியிட்டிருக்கின்றது. இது ஐந்து பாகங்களாக வெளிவந்திருக்கின்றது. இதில் ஐந்தாவது பாகம் இந்திய - இலங்கை ஒப்பந்த காலத்தில் நடைபெற்ற விடயங்களை அடிப்படையாக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. மேற்படி தொகுப்பில், றோவின் தலைவர் வெர்மாவின் சந்திப்பு தொடர்பான எந்தவொரு பதிவுகளும் இல்லை.

 

1988ஆம் ஆண்டு, இந்திய வெளியக உளவுத்துறையின் தலைவர் ஏ.வெர்மா, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை சந்தித்ததை, ஒரு வரலாற்றுச் சந்திப்பென்று (28 April 1988 was historic day when the head of RAW met President Jayewardene), குறிப்பிட்டிருக்கின்றார் பேராசிரியர் றோகான் குணரட்ண. இலங்கையில் இந்திய தலையீடு (Indian intervention in Sri Lanka) என்னும் தனது நூலில், மேற்படி சந்திப்பு பற்றி சில தகவல்களை அவர் பதிவு செய்திருக்கின்றார். அதுவே தற்போது பலராலும் எடுத்தாளப்படுகின்றது. இது பற்றி, றொகான் பின்வருமாறு பதிவு செய்திருக்கின்றார்:

 

'வெர்மாவின் வருகை இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. கொழும்பிலோ ஜனாதிபதி ஜெயவர்த்தன தவிர்ந்த மூவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பணிப்பாளர் எம்.எம்.குணரட்ண, (M.M. Gunaratne, Director-General, Intelligence and Security) பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தேசிய புலனாய்வு பணிப்பாளர் ( Director National Intelligence Bureau) ஆகிய மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. மேற்படி விடயம் கூடுதல் முக்கியத்துவமுடைய இந்தியத் தூதுவரான டிக்சிட்டுக்குக்கூட தெரிந்திருக்கவில்லை. அத்துடன், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை வடிவமைத்தவர்களில் ஒருவரான காமினி திசநாயக்க கூட அறிந்திருக்கவில்லை. ஏனைய சிலர், இது ஒரு புலனாய்வு ஒத்துழைப்பிற்கான ஏற்பாடு எண்ணும் அளவிலேயே அறிந்திருந்தனர்.

 

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில், அதனை அமுல்படுத்துவதற்கான சில அழுத்தங்களை பிரயோகிக்கும் நோக்கிலேயே வெர்மா களத்தில் இறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இது மேற்படி நூலில் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது - வெர்மா மிகவும் இரகசியமான முறையில், 48 மணித்தியாலங்களை கொழும்பில் செலவழித்திருந்தார். இதன் போது அவர் ஜெயவர்த்தனாவை வழிக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு, பிரதான நீரோட்டத்தில் இணைந்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறது. இதில் நாம் (றோ) ஒரு இடையீட்டாளராக இருக்கிறோம். எனவே இதற்கு ஜெயவர்த்தன ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பின்னர் மறுநாள் காலை, அவர் எம்.எம்.குணரட்ணவை சந்தித்திருந்தார். வெர்மா முரண்பாடு தொடர்பில் போதுமான தவல்களை அறிந்திருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் விடுதலைப் புலிகள் உள்ளடங்கலாக அனைத்து ஆயுத தரப்பினருடனும் தனிப்பட்ட ரீதியில் அவர் கலந்துரையாடியிருந்தார். அரசியல் முன்னெடுப்புக்களில் பங்குகொள்வதற்கு தமிழ் ஆயுத தரப்பினர் இணங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய வெர்மா, ஆனால் அவர்கள் சில குறிப்பிட்ட நிபந்தனைகளைக் கொண்டிருந்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

பின்னர், இந்தியா வடக்கு மற்றும் கிழக்கிற்கான அரசியல் திட்ட ஒழுங்கொன்றை பிரேரித்தது. இது டிக்சிட்டின் ஆலோசனையுடன் றோவினால் தயாரிக்கப்பட்டது. யூன் 12ஆம் திகதி, வடக்கு- கிழக்கு இணைப்பு அறிவிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் அரசியல் முன்னெடுப்புக்களில் பங்குகொள்ளும் வகையில், மேற்படி ஒப்பந்தத்தை ஏற்பதற்கும், ஆயுத ஒப்படைப்புக்கும், தயாராக இருப்பதாக அறிவித்தனர்... விடுதலைப்புலிகளின் சார்பில் கிட்டு, சென்னையிலிருந்து விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். தற்போது, விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் தொடர்ந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், எங்களுடைய மக்களின் துன்பங்களை போக்குவதற்கும், ஒரு இடைநிலை ஏற்பாடு அவசியம்... அந்த வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் நோக்கில், நாம் முன்னர் வழங்கிய உறுமொழியை தொடருவோம். நாங்கள் பயன்படுத்தக்கூடிய 700 ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு விரும்புகிறோம்.

 

இதன் முதல் பகுதியாக, 300 ஆயுதங்களை பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில், குறித்த திகதியில் ஒப்படைப்போம்... நாங்கள், மாகாணசபை தேர்தலில் பங்குகொள்வது தொடர்பான ஆலோசனையை, எங்களது தலைவர் பிரபாகரனுக்கு அனுப்பியிருக்கின்றோம். அவரது பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கின்றோம்... நாங்கள், இன முரண்பாட்டுடன் தொடர்புடைய அனைத்து இன குழுக்களும், தோதலில் பங்குகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம். அத்துடன், தமிழ் மக்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை பெற வேண்டுமென்றும் விரும்புகின்றோம்...

 

யூன் 19ஆம் திகதி, வெர்மா மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தார். இதன்போது, மேற்படி கிட்டுவின் உறுதிமொழி அடங்கிய அறிக்கையை ஒப்படைத்தார்...'

 

றோவின் ஈடுபாடுகள் பற்றி, அப்போது இலங்கைக்கான தூதுவராக இருந்த ஜே.என்.டிக்சிட் பிறிதொரு இடத்தில் இவ்வாறு பதிவு செய்திருக்கின்றார். 1980 களிலிருந்து, றோ ஒரு புலனாய்வு அமைப்பு என்னும் வகையில், இலங்கை தொடர்பான கொள்கை நிலைப்பாடுகளில் செல்வாக்கு செலுத்தி வருகின்றது. றோ - அது உருவாக்கப்பட்ட காலத்தையொட்டிய தசாப்தங்களில், தேசிய நலன்களை உறுதிப்படுத்துவதற்கான ராஜதந்திர உலகை கையாளும் பிரதான ஆற்றுனர் (performer) என்னும் இடத்தை எடுத்துக் கொண்டது. அதேவேளை, றோவின் தலைவர் வெர்மா இலங்கையின் ஜனாதிபதி ஜெயவர்த்தனவை சந்தித்ததை டிக்சிட் விமர்சித்துமிருக்கிறார்.

 

சுமார் 15 வருடங்களுக்கு பின்னர், இந்திய வெளியக உளவுத்துறையின் தலைவரொருவர் மீண்டும் இலங்கையின் ஜனாதிபதி ஒருவரை சந்தித்திருக்கின்றார். இலங்கை சர்வதேச ரீதியாக அதிக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்ற சூழலிலும், இலங்கையின் இனமுரண்பாட்டுக்கு ஒரு இணக்கப்பாடான தீர்வைக் காண்பதில் அரசாங்கம் போதிய கரிசனையை காண்பிக்காத நிலையிலுமே, றோவின் தலைவர் அலோக் ஜோசி, இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்திருக்கின்றார். சமீபத்தில் திருகோணமலையில் இடம்பெற்ற இலங்கையின் 65வது சுதந்திரதின வைபவத்தின் போது, ஜனாதிபதி ஆற்றிய உரையில், இலங்கையில் அதிகாரப்பகிர்வு என்னும் விடயத்திற்கு இடமில்லை என்றவாறான ஒரு குரல் வெளித்தெரிந்ததாக ராஜதந்திர சமூகம் கருதுகின்ற ஒரு சூழலிலும்தான் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் இனமுரண்பாட்டுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் சில அழுத்தங்களை இருதரப்பினருக்கும் வழங்கும் வகையிலேயே, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி றோவின் தலைவர் வெர்மாவை நேரடியாக களத்தில் இறக்கினார். இப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எதற்காக அலோக் ஜோசியை களத்தில் இறக்கினார்? இனி ஊகங்கள் உலவும்.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=8&contentid=a078d55e-6fa9-442c-a93a-c956826beb3c

 

 இவ்வாறு சர்ச்சைகள் எழுவதற்கு பின்னால் ஒரு தெளிவான காரணம் உண்டு. அதாவது, ஒரு நாட்டின் தலைவரை பிறிதொரு நாட்டின் உளவுத்துறையின் தலைவரொருவர் சந்திப்பதானது மிகவும் அரிதான ஒன்றாகும். மிகவும் இக்கட்டானதொரு சூழலில்தான் பலம்பொருந்திய நாடுகளின் உளவுத்துறை, நாட்டின் வெளிவிவகார விடயங்களில் நேரடியாக தலையீடு செய்யும். அவ்வாறானதொரு சூழல் முன்னரும் இலங்கை விடயத்தில் இடம்பெற்றிருக்கின்றது.

 

இந்திய இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்றிருந்த பின்னணியில், 1988ஆம் ஆண்டு, அப்போது றோவின் தலைவராகவிருந்த, ஏ.வெர்மா (A. Verma) அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை சந்தித்திருந்தார். இலங்கை ஜனாதிபதி ஒருவரை றோவின் தலைவரொருவர் சந்தித்திருந்த முதல் சந்தர்ப்பம் அதுவாகும். அந்த வகையில், றோவின் தலைவரொருவர் சந்தித்திருக்கும் இரண்டாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆவார். இதுவே, மேற்படி விடயம் சர்ச்சைக்குரிய ஒன்றாக நோக்கப்படுவதற்கான பிரதான காரணமாகும்.

 

 

1. ஜெயவர்த்தானவை சந்தித்து அவரது நாட்டில். மகிந்தாவை சந்தித்தது இந்தியாவில், அவர் விருந்தாளியாக வந்த பொழுது. இது ஒரு அவமானகரமான செயலே.

 

2. ஜெயவர்த்தனாவை சந்தித்தமை ஒரு குறிப்பிட்ட காலம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மகிந்த சந்திப்பு அவ்வாறு  இல்லை. அது ஏன் என்ற கேள்வியும் எழுகின்றது.

 

3. இந்திய - இலங்கை உறவை தாண்டி சீன, பாகிஸ்தான் தலையீடுகள் காரணமாகவும் இந்த சந்திப்பு அமைந்திருக்கலாம்.

 

மகிந்த - அலோக் ஜோசி சந்திப்பின் பின்னணியில் மீண்டும் 'றோ' பற்றிய சர்ச்சைகள்

 

யதீந்திரா

 

Why did chief of 'RAW' meet MR?

http://www.ceylontoday.lk/42-24390-news-detail-why-did-chief-of-raw-meet-mr.html

http://www.ceylontoday.lk/42-24322-news-detail-why-did-the-chief-of-raw-meet-mr.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.