Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெறுப்புணர்வை ஏற்படுத்தவே ஹலால் பிரச்சினை உருவாக்கம்; அரசுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல என்கிறார் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்

Featured Replies

ஹலால் பிரச்சினை வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்டது. இவ்வாறான சூழலை வளர விடுவது அரசுக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஹலால் விவகாரம் தொடர்பில் அவர் பி.பி.சி. தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறினார். அந்தச் செவ்வியில் ஹக்கீம் தெரிவித்திருப்பதாவது:

ஹலால் விவகாரம் தொடர்பில் இன்னும் ஓரிரு அமர்வுகளில் எமது பரிந்துரை அரசுக்கு முன்வைக்கவுள்ளோம். ஹலால் பிரச்சினை தொடர்பில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். மாறாக அந்த விடயத்தில் அரசு தயக்கம் காட்டி வருகிறது.

ஹலால் பிரச்சினை தொடர்பில் அரசு உடனடியாகத் தலையிட்டு தீர்வொன்றை முன்வைக்க வேண்டும். இந்த விவகாரம் சிறுபான்மை இன மக்கள் மத்தியில் வித்தியாசமான மனநிலையை உருவாக்கி வருகிறது.

இந்த நிலையைப் புரிந்து கொண்டு உடனடியாக காத்திரமான தீர்வை எடுக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. அதை அடுத்து அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹலால் பிரச்சினையை வைத்து நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்படா வண்ணம் தடுப்பது அரசின் கடமையாகும். அரசிலுள்ள இனவாதக் கட்சிகள் கூட ஹலால் தொடர்பில் முஸ்லிம்களுக்கு சாதகமான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறுகின்ற நிலையில், இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவது அரசுக்கு நல்லதல்ல. எனவே இந்த விடயம்  அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்றார்.

 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=174441869402884012#sthash.YS967RzR.dpuf

 

  • தொடங்கியவர்

மாடு அறுக்க எதிர்ப்பு...

 

கொழும்பு, தெமட்டகொடையிலுள்ள மாடு அறுக்கும் தொழுவம், சட்டவிரோதமானது என்றும் அதனை உடனடியாக மூடுமாறும் பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றநிலை ஏற்பட்டதோடு பொலிஸாரும் அங்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். - 

 

B03(42).jpg

 

B02(98).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-11-11-34-08/59836-2013-03-01-13-12-31.html

Being a Cabinet Minister in the Government, he should be able to resolve this matter with the President and what is the point in giving interview to BBC. What is he trying to do ?. If he cannot resolve this matter within the Government, he should relinquish his portfolio and come clean to fight for the cause.

  • தொடங்கியவர்

ஹக்கீமுற்கும் தெரியும் இது கோத்தா அறிவுறுத்தலின் படி முன்னெடுக்கப்படும் அநீதி.

 

ஆனால் பதவி, பணம் என்பன ஹக்கீம் போன்றவர்களின் சமூகத்தை பலியாக்கி கொண்டிருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.