Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா: இந்தியாவின் கன்னத்திலிருந்து வழிகின்ற கண்ணீர்த் துளி - அமெரிக்க ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

bala-executed.jpg

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் எடுக்கப்பட்ட அந்த ஒளிப்படங்களில் முதலாவது ஒளிப்படத்தில் காற்சட்டை மட்டும் அணிந்திருக்கும் அந்தச் சிறுவன் வாங்கொன்றில் அமர்ந்திருப்பதைக் காணலாம். அடுத்த ஒளிப்படத்தில் அந்தச் சிறுவன் நொறுக்குத் தீனி சாப்பிடுகிறான். மூன்றாவது ஒளிப்படத்தில், நெஞ்சில் சூட்டுக் காயங்களுடன் அந்தச் சிறுவனின் உயிரற்ற உடலம் கீழே விழுந்துகிடப்பதைப் பார்க்கலாம். 

கடந்த வாரம் பிரித்தானிய தொலைக்காட்சி சேவையான சனல் 04 ஆல் வெளியிடப்பட்ட இந்த ஒளிப்படங்களில் காணப்படும் சிறுவன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான 12 வயதேயான பாலச்சந்திரன் பிரபாகரன் ஆவார். 

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பாக சனல் 04 தொலைக்காட்சியால் தற்போது வெளியிடப்படவுள்ள 'போர் தவிர்ப்பு வலயம்' என்கின்ற புதிய காணொலியில் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புதிய காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. 

பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட தமிழ் மக்களுக்கும் பெரும்பான்மை பௌத்தர்களைக் கொண்ட சிங்களவர்களுக்கும் இடையில் 26 ஆண்டுகாலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது 2009ல் சிறிலங்கா அரசால் வெற்றிகொள்ளப்பட்டது. 

இதன் இறுதிக் கட்ட யுத்தத்தில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தவர்கள் உள்ளடங்கலாக பல நூற்றுக்கணக்கான தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், அவர்களது குடும்பங்கள் மரணிக்கவில்லை, மாறாக இவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். 

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40,000 வரையான தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டமை தொடர்பில் ராஜபக்ச அரசாங்கத்தை சிங்கள மக்கள் பாராட்டுகின்றனர். ஆனால், சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான இராணுவத்தினர் திட்டமிட்ட ரீதியில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை ஒன்றைச் செய்ததாக இந்த உலகம் சிறிலங்கா அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியுள்ளது. 

போரின் இறுதிக்கட்டத்தில் தப்பிப் பிழைத்த சில தமிழ் மக்களாலும், அங்கு கடமையில் ஈடுபட்ட சிங்கள இராணுவ வீரர்கள் சிலரும் தமது கைத்தொலைபேசிகளில் எடுத்த ஒளிப்படங்களும் காட்சிகளும் 'போர் தவிர்ப்பு வலயம்' என்கின்ற புதிய காணொலியில் பதிவாக்கப்பட்டுள்ளன. இக்காணொலி, தற்போது ஜெனீவாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22வது அமர்வின் போது திரையிடப்படவுள்ளதாக இத்திரைப்படத்தின் இயக்குனர் கலும் மக்றே தெரிவித்துள்ளார்.

இந்த அமர்வின் போது சிறிலங்காவில் அதன் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைக் கோரும் விதமாக அமெரிக்கா தலைமையில் தீர்மானம் ஒன்று முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

சிறிலங்காவின் தற்போதைய அதிபரான மகிந்த ராஜபக்ச தனது நாட்டில் போரை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்கின்ற பெருமையைக் கொண்டுள்ள அதிகாரம் மிக்க ஒருவராக இருப்பதால் இவரது அரசாங்கத்திற்கு எதிராக பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானமானது எவ்வளவு தூரம் வெற்றியைத் தரும் என்பது தொடர்பில் தெளிவற்ற நிலைப்பாடு காணப்படுகிறது. அத்துடன் சிறிலங்கா இராணுவமானது ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. 

இத்தீர்மானம் எந்தளவு தூரம் வலும்மிக்கதாக இருந்தாலும், அல்லது இல்லாவிட்டாலும் கூட இந்தியாவானது கடந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு எதிராக பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக செயற்பட்டதை விட இந்தத் தடவை மிகவும் ஆர்வத்துடன் ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறிலங்கா என்கின்ற தீவானது இந்தியா என்கின்ற தீபகற்பத்தின் கன்னத்திலிருந்து வழிகின்ற கண்ணீர்த் துளி என சிறிலங்காவின் அமைவிடம் தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக, சில இந்திய கேலிச்சித்திர வடிவமைப்பாளர்கள் சித்தரித்துள்ளனர். 

இந்தச் சித்தரிப்பானது உண்மையில் சிறிலங்கா பெற்றுள்ள வடுவைக் குறிக்கின்றது எனக் கூறுவது நியாயமற்றது. ஏனெனில் ஒரு கண்ணீர்த்துளி என்பது கவலையைக் குறிப்பதல்ல. ஒரு கண்ணீர்த்துளி என்பது ஒருவர் அனுபவிக்கின்ற துன்பத்தின் தொடர்ச்சியைக் குறிக்கின்றது. இந்தியா அழுவதால் சிறிலங்கா தொடர்ச்சியாக கண்ணீர்த் துளியை விடுவதாக 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும் சில கேலிச்சித்திரங்களில் சித்தரிக்கப்பட்டன. இந்தச் சித்தரிப்பில் நியாயம் உள்ளது. சிறிலங்காவுடனான இந்தியாவின் நட்பானது சதி நடவடிக்கையால் நாசமாக்கப்பட்டது என்பது உண்மையானதாகும். 

இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த காலப்பகுதியில், அரசியல் என்ற வார்த்தைக்கு முன்னால் 'பூகோள' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டு சிறிலங்காவுடன் பூகோள அரசியல் என்கின்ற ஒருவகையான இராஜதந்திர உறவு பேணப்பட்டதுடன், தமிழ்ப் புலிகளுக்கு நிதி உதவியையும் வழங்கினார். 

1984ல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டு இவரது மகனான ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்ற போது சிறிலங்கா முழுமூச்சாக உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் சிறிலங்காவில் அமைதிநிலையை ஏற்படுத்தி இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் பெரும் செல்வாக்குப் படைத்த நாடாக தான் விளங்க வேண்டும் என இந்தியா விரும்பியது. 

இதன்பின்னர், 1987ல், சிறிலங்காவுக்கு இந்திய அமைதி காக்கும் படை அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இது மிகப் பெரும் அழிவைச் சந்தித்த நகர்வாக அமைந்தது. அதாவது சிறிலங்காவில் கடமையில் ஈடுபட்ட 1200 வரையான இந்திய இராணுவ வீரர்களும் ஆயிரக்கணக்கான தமிழ்ப் புலிகளும் போரில் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பிரபாகரன் தனது மிகப் பெரிய மூலோபய நகர்வாக இந்தியா மீது பழிக்குப் பழி தீர்ப்பதற்காக ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்வதற்கான கட்டளையை வழங்கினார். 

மே 22,1991 அன்று அதிகாலை சென்னை முழுவதும் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி தொலைபேசி மூலமும் வானொலி மூலமும் பரவியது. ராஜீவ் காந்தியை தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் படுகொலை செய்துவிட்டார் என்ற நம்பமுடியாத அந்தச் செய்தியுடன் சென்னை நகரம் அன்று விழித்துக் கொண்டது. 

அதுநாள் வரை புலிகளின் அரணாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை விளங்கியது. தமிழ்நாடு முழுவதும் அதுநாள் வரை சிறிலங்காத் தமிழர்களின் போராட்டத்திற்கு தமது இதயபூர்வமான ஆதரவை வழங்கியிருந்தனர். ஆனால் ராஜீவ் காந்தியின் படுகொலையானது இந்தியாவுக்கு எதிரான யுத்தம் என தமிழ்நாட்டு மக்கள் கருதினர். 

புலிகளின் நண்பன் என அந்தவேளையில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி, ராஜீவ் காந்திக்கு தனது வருத்தத்தை தெரிவிப்பதற்காக சென்னை நகரை திறந்த வான் ஒன்றில் நின்றவாறு பிரயாணித்தார். கருணாநிதியின் இந்தச் செயல் மட்டும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களை வெல்லப் போதியதாக இருக்கவில்லை. ராஜீவ் கொலையின் பின்னர் 1991ல் தமிழ்நாட்டில் நடாத்தப்பட்ட சட்டசபைத் தேர்தலில் கருணாநிதியின் கட்சி இரண்டு ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. 

ஆனால் தற்போது, தமிழ்நாட்டில் சிறிலங்கா வாழ் தமிழ் மக்கள் தொடர்பான அனுதாப அலைகள் எழுந்து இவை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றன. கருணாநிதியின் கட்சியானது இந்திய மத்திய அரசாங்கத்தை அமைத்துள்ள கூட்டணியில் அங்கம் வகிக்கின்றது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட விடயத்தில் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களை மன்னித்து, ராஜபக்சவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்களை கண்டித்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை கருணாநிதி கோரி வருகிறார். 

கடந்த ஆண்டு அமெரிக்காவானது சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை அறிமுகப்படுத்திய போது அதற்கு ஆதரவளிப்பதற்கு இந்தியா தயக்கம் காண்பித்தது. சிறிலங்கா மீதான தனது வர்த்தக சார் நலன்கள், சிறிலங்காவில் சீனா அதிக ஆதிக்கம் காண்பிக்கின்றமை போன்ற மூலோபாய காரணங்களைக் கருத்திற்கொண்டே இந்தியா இந்த விடயத்தில் தயக்கம் காண்பித்தது. ஆனால் இறுதியில், திரு.கருணாநிதியின் அழுத்தம் மற்றும் தமிழ் நாட்டில் ஏற்பட்ட உணர்வலைகள் போன்றவற்றால் இந்திய மத்திய அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. 

சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தீர்மானம் ஒன்றை இன்னும் சில நாட்களில் முன்வைக்கவுள்ள நிலையில், தன்னை விதவையாக்கிய புலிகள் அமைப்பை சிறிலங்கா உண்மையில் எவ்வாறு அழித்தது என்பதை தட்டிக் கேட்கும் ஏனைய நாடுகளுடன் சோனியா காந்தியால் தலைமை தாங்கப்படும் இந்திய காங்கிரஸ் கட்சியால் ஆளப்படும் இந்திய மத்திய அரசாங்கமும் இணைந்து கொள்ளும் என்பதை அரசியலின் முரட்டுத் தனமான அதிகார சக்தியும் நடைமுறை உண்மையும் உறுதிப்படுத்துகின்றன. 

கட்டுரையின் வழிமூலம் : The New York Times By MANU JOSEPH 
தமிழாக்கம் : நித்தியபாரதி

 

http://www.puthinappalakai.com/view.php?20130301107880

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.