Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இனப்படுகொலை! பன்னாட்டு விசாரணை! இந்திய அரசு முன்மொழிய வேண்டும்!- நா‌ம் த‌மிழ‌ர் கட்சி ‌தீ‌ர்மான‌ம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

seemaan0012.jpg

நாம் தமிழர் கட்சியின் இரண்டாவது பொதுக் குழுக் கூட்டம், சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை நடந்தது. அ‌க்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இப்பொதுக் குழுக் கூட்டத்தில் ப‌ல்வேறு ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற்றப்பட்டன.

 

அத‌ன் ‌விபர‌ம் வருமாறு:

தீர்மானம் 1 :      பன்னாட்டு விசாரணைத் தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிய வேண்டும்.

ஜெனீவாவில் இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 22வது கூட்டத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள இனவெறி அரசு நடத்திய படுகொலைகள் பற்றிய உண்மைகளை முழுமையாக விசாரித்து, அக்குற்றங்களுக்கு சூத்ரதாரியாக இருந்து செயல்பட்டவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வழிகோலும் தீர்மானத்தை இந்திய அரசின் பிரதிநிதி முன்மொழிய வேண்டும்.

 

இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்வில் முழுமையாக அக்கறை கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறிவரும் மத்திய காங்கிரஸ் அரசு, இலங்கையில் நடந்த போரில் நடந்த இனப் படுகொலை உள்ளிட்ட போர் குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அத்தீர்மானத்தை முன்மொழிந்திட வேண்டும்.

 

அப்படிச் செய்யாமல், கடந்த ஆண்டு நடந்துகொண்டதுபோல், இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு வாக்களிப்பதுபோல், தீர்மானத்தின் தன்மையையே நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது.

 

தீர்மானம் 2 :     தமிழினப் படுகொலை செய்த இலங்கைக்கு தமிழ்நாட்டில் தூதரகம் எதற்கு?

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலச்சந்திரனை ஈவிரக்கமின்றி, மிருகத்தனமாக சுட்டுக்கொன்ற சிங்கள இனவெறி இராணுவம் மனிதாபிமானமற்ற ஒரு நாட்டின் வெறி்த்தனமான வெளிப்பாடாகும்.

 

பாலச்சந்திரனின் படுகொலை சிங்கள பெளத்த இனவாத வெறித்தனத்தின் அப்பட்டமான அத்தாட்சியாகும்.

இப்படி சிறுவன், சிறுமியர் என்றோ, வயதான பெரியவர்கள் என்றோ பாகுபாடுபாறாமல் தமிழர் அனைவரையும் படுகொலை செய்த சிங்கள பெளத்த இனவாத அரசிற்கு தாய் தமிழ் மண்ணான தமிழ்நாட்டில் தூதரகம் எதற்கு?

 

சிங்கள விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக ஆசிய தடகளப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மறுத்த தமிழக முதல்வர் அவர்கள், தமிழ்நாட்டில் இலங்கை அரசின் தூதரகத்தை தமிழர்கள் இதற்கு மேலும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்து, அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை வேவு பார்ப்பதைத் தவிர, வேறு எந்த வேலையும் அற்ற சிங்கள அரசுக்கு தமிழ்நாட்டில் துணைத் தூதரகம் செயல்படுவது தமிழினத்திற்கு அவமானமாகும்.

சென்னையிலிருந்து இலங்கை அரசின் துணைத் தூதரகத்தை அகற்றும் அமைதி வழி தொடர் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஈடுபடும்.

 

http://tamil24news.com/news/?p=47068

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.