Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை மிரட்டுகிறார் இலங்கை ஜனாதிபதி பணிந்து போய் பரிசு கொடுக்கிறது மத்திய அரசு

Featured Replies

இந்தியாவை மிரட்டுகிறார் இலங்கை ஜனாதிபதி பணிந்து போய் பரிசு கொடுக்கிறது மத்திய அரசு

 

 

சென்னை : விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை படுகொலை செய்யவில்லை என்று பச்சை பொய்யைப்  பேசியிருக்கிறார் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பில்  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துயரத்திலும் கொந்தளிப்பிலும் இருக்க பாலச்சந்திரனை நாங்கள் படுகொலை செய்யவே இல்லை என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் இலங்கை  ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ .

அதுமட்டுமன்றி இந்தியாவின் காஷ்மீரிலும் மிகப் பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டியது தனது கடமை என்பதை இந்தியா அறியும் என்றும் ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

அதாவது ஐ.நா. மனித உ ரிமை ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தால் காஷ்மீர் மனித உரிமை மீறல் குறித்து நாங்கள் பிரச்சினை எழுப்ப வேண்டியிருக்கும் என ராஜபக்ஷ மறைமுகமாக மிரட்டியிருக்கிறார். ராஜபக்ஷவின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது. இதற்கு பிறகாவது ராஜபக்ஷவின்  உண்மை முகத்தைப் புரிந்து கொண்டு இலங்கைப்  பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். ஆனால் சீனா பக்கம் சாய்ந்து விடக் கூடாது என்ற சொத்தைக் காரணத்தைக் கூறி இலங்கைக்கு சாதகமாகவே மத்திய அரசு நடந்து கொள்கிறது.

ஈழத்தில் உள்ள தமிழர்களின் உடைமைகளை பறித்துக் கொண்டு அவர்களை விரட்டியடிக்கும் வேலையில்  இலங்கை அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், அதற்கு 500 கோடி ரூபாவை நிதியுதவியாக அளித்திருக்கிறது இந்திய அரசு. ஈழத் தமிழர்களின் மறு வாழ்வுக்காக இந்தியா வழங்கும் நிதி முழுவதையும் சிங்களவர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதற்காகவும் படையினருக்கு சிறப்பு வசதிகளை செய்து தருவதற்காகவும்  இலங்கை அரசு செலவழித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு இந்தியா மேலும் மேலும் நிதி உதவி அளிப்பது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை சிங்களமயமாக்கத் தான் பயன்படுமே தவிர,  தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

அதேபோல், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் தீர்மானம் கொண்டு வரும் விடயத்திலும் இலங்கைக்கு  சாதகமாகவே இந்திய அரசு நடந்து கொள்கிறது. இந்த விடயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்த மத்திய அரசு, மனித உரிமை ஆணையகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் இருக்கவும் கருத்தொற்றுமை என்ற பெயரில் உப்புச் சப்பில்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றவும் ஆதரவு திரட்டி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவை மிரட்டும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டுமே  தவிர, அவருக்கு பணிந்து  500 கோடி ரூபா பரிசு வழங்கக் கூடாது. எனவே இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி உதவியை இரத்துச் செய்வதுடன், இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் கொண்டு வந்து நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3163:2013-03-02-17-44-22&catid=56:india&Itemid=460

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.