Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் பேராயர் தற்கொலை குண்டுதாரிகளை சந்தித்துள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மன்னார் பேராயர் தற்கொலை குண்டுதாரிகளை சந்தித்துள்ளார்
04 மார்ச் 2013
 
மன்னார் பேராயர் அதி வணக்கத்திற்குரிய அருட் திரு ஜோசப் சௌந்தரநாயகம் ஆண்டகை, தமிழீழ விடுதலைப் புலி தற்கொலைக் குண்டுதாரிகளை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் பேராயருடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தனவும் கலந்து கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை சந்தித்துள்ளனர். 
 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடாத்திய பெண்ணை கொழும்பிற்கு அழைத்து வந்தவர், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்வதற்காக தற்கொலைக் குண்டுதாரியை அழைத்து வந்த நபர், களுத்துறை சிறையில் அமைச்சர் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தியவர் உள்ளிட்ட பல முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்களை மன்னார் ஆயரும், ஜயலத் ஜயவர்தனவும் சந்தித்துள்ளனர்.
 
சிறைச்சாலை ஆணையாளரின் அனுமதியுடன் குறித்த புலி உறுப்பினர்களை சந்தித்ததாக ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.வழக்கு விசாரணைகள் உரிய முறையில் நடாத்தப்படாமை, வழக்குகள் தொடரப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கைதிகள் தங்களது குறைகளை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்குகளை துரித கதியில் விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாவே நம்ம ஊடகங்களில் ஜனநாயகம் துள்ளி விளையாடுறார்.

கரும்புலிகள் போய் தற்கொலை குண்டுதாரியாச்சுது. அதுவும் தற்கொலை குண்டுதாரியை கூட்டிக் கொண்டு வந்ததா குற்றம் சுமந்தப்பட்டு சிறைகளில் உள்ள அப்பாவிகளுக்கு அப்படி ஒரு பட்டம்..??!

விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டமைப்பு விதிமுறைகள் அறியாத கோமாளிகள்.. வீணே மற்றவர்களை சிக்கலில் மாட்டிவிட்டு சிறைகளில் வாழும் அப்பாவிகளின் வாழ்க்கையை இன்னும் இன்னும் கேள்விக்குறியாக்கும் செயல்களையே இவற்றின் மூலம் செய்கின்றனர். இப்படியான சகட்டுமேனிச் செய்திகளும்.. உரிமைகோரல்களும்..  பாரதூரமான விடயங்கள் என்பதை இவர்கள் உணர்வதாகவும் இல்லை.

சிந்திக்கக் கடவ..! ஊடக தர்மம் என்பது எம்மவர் இணைய ஊடகங்களில் பாடையில போய் கன நாளாச்சு. இருந்தும்.. ஒரு சின்ன எதிர்பார்ப்பு மறுபிறவி எடுக்க..!!

பச்சைப்புள்ளி தீர்ந்து போச்சு நெடுக்கு.

ஊடகங்கள் இப்போ வியாபாரம் தானே. ஒவ்வொரு இளைஞனும் தனது வாழ்வை தற்கொடையாகத் தந்து இன்று சிறைகளில் வாடுகிறார்கள். அவர்களை அந்தக்கொலையாளி இந்தக் கொலையாளியென்று அடையாளம் சொல்லி இனிமேல் வெளியில் வருவதற்கான இல்லாது செய்கிற சாத்தியங்களை இத்தகைய ஊடகவாதிகளும் இணையங்களும் செய்கிறதை யாரால் நிறுத்த முடியும் ?

இங்கு குறிப்பிட்டுள்ள போராளிகளின் குடும்பங்கள் பிள்ளைகள் படுகிற துயரத்தை இந்த ஊடகச்செம்மல்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள்.

இதற்கு ஒரே வழி.. இந்த ஊடகங்கள் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தான். இருந்தாலும் அதை செய்ய அந்த மக்களால் முடிவதில்லை. அதனால் தான் இவர்கள்.. இந்த ஆட்டம் ஆடுகிறார்கள்..!

தனது புகழுக்கு (உண்மையில் அவருக்கு அப்படின்னு ஒன்றே இல்லை..) அபகீர்த்தின்னு.. கோத்தா சட்ட நடவடிக்கை எடுத்து கோடி கோடியா சம்பாதிக்கிறார்.. உதயன் மீது ஒட்டுக்குழு தலைவர் வழக்குப் போட்டுள்ளார்.. யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் தளபதியும் உதயன் மீது வழக்குப் போட்டுள்ளார்.

அவர்கள் அதிகார மையத்தின் செல்லப்பிள்ளைகள் என்பதால் எல்லாம் ஆகிறது. ஆனால் இந்த அப்பாவி மக்கள் மீது இந்த ஊடகங்கள் செய்யும் அப்பட்டமான உரிமை மீறல்கள் சுமத்தும் போலியான பொய்யான குற்றச்சாட்டுக்கள்.. அபகீர்த்திகள்.. குறித்து எவர் வழக்குப் போடுவது..??! இதனால் அவர்களின் வழக்கு விசாரணைகள் திசைமாறி அவர்களின் சிறை வாழ்வு அவல வாழ்வு நீண்டு போவது குறித்து எவர் அக்கறைப் படுகிறார்கள்...???! ஒரு சிலர். அவர்களாலும் செய்ய இயன்றதை தான் செய்ய முடியும். அதற்கும் ஆப்படிக்க இருக்கின்றன காளாண்களாக முளைவிட்டுள்ள தமிழ் இணைய ஊடகங்கள்..!

இவற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு பொறிமுறை தமிழர்களுக்கு இப்போ அவசியமாகத் தேவைப்படுகிறது. இது குறித்தும் தாயக.. புலம்பெயர் தமிழ் அரசியல் கட்சிகள்.. அமைப்புக்கள்.. மற்றும் இளையோர் அமைப்புக்கள் சிந்திக்க வேண்டும்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.