Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ஒரு பள்ளிவாசல் மீது தாக்குதல்

Featured Replies

கம்பஹா மஹர பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

 

 

இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசலை சுற்றி பாதுகாப்பு

பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை நேற்றைய தினம் பலாங்கொட, ஓப்பநாயக்க பள்ளிவாசல்மீதும் இனம்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அண்மைக்காலமாக நாட்டின் பலப்பகுதிகளிலும் பள்ளிவாசல்கள் மீதான இனந்தெரியாத நபர்களின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3307

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. இஸ்லாமியர்கள் சிங்களத்திடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்குது.

 

வடக்கில் தமிழர்களின் நிலத்தை பறித்துக் கொடுத்து இன ஐக்கியம் காக்கிற பஷில் ராஜபக்ச தான் இவற்றின் பின்னால் இருக்க முடியும்..!

 

மேலும் அவருக்கு வால்பிடிக்கும் ரவூவ் ஹக்கீமும் இவற்றிற்கு ஒரு காரணம் என்றால் மிகையில்லை..!

 

தமிழனும் ஒரு எல்லைக்குத் தான் பொறுத்துக்குவான் என்பதை முஸ்லீம்களும் சிங்களவர்களும் புரிந்து கொள்ள வேண்டியது இச்சந்தர்ப்பத்தில் மிக அவசியம்..! :icon_idea:

அவர்களுக்கு தெரிகிறது தனி நாடு பிரிவதை இனி தடுக்க முடியாது என்று. அதனால் கக்கீம் மாதிரி எமாற்றுக்களை தங்கள் நாட்டில் வைத்திருக்காமல் அடித்து துரத்திவிட முயல்கிறார்கள்.

தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது: ஜனாதிபதி மஹிந்த அறிக்கை
                   

[Monday, 2013-03-04 18:35:58]

                         mahinda-seithy-2-150.jpg
                                 


தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால்
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தத்
தேசத்தின் சகல மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது
அரசாங்கத்தின் கடமையாகும். சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய
சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கடந்த
வெள்ளிக்கிழமை சிரேஸ்ட அமைச்சர் பௌசீ உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்த போது இந்தக் கருத்துக்களை
வெளியிட்டுள்ளார். இந்தத் தேசத்திற்காக கடமையாற்ற விரும்புவதாக முஸ்லிம்
பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி சகல இன
மக்களுக்கும் சம உரிமைகளை வழங்குவார் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=77322&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

பௌத்த பிக்கு மீது இனந்தெரியாதோர் தாக்குதல்


By Hafeez
2013-03-04 18:31:15

 

இனந்தெரியாத சிலரால் பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்ட சம்பம் களுத்துறை, மொரகஹகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

மொரகஹகந்த விகாரையில் இருந்த பிக்கு ஒருவரை, இன்று அதிகாலை 3.30 மணியளவில் வந்த இனந்தெரியாத சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3319

பிக்கா? என்ன கொக்கா? :D

 

இருட்டடி நடக்க போகுது போலை.

  • தொடங்கியவர்

பௌத்த சாசனத்தை பாதுகாக்க தனியான பொலிஸ் பிரிவு வேண்டும்

 

Pothupalasena1.jpg

 

இலங்கையின் பௌத்த சாசனத்தில் இருந்து கொண்டு சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பிக்குமார்களை இனங்காண்பதற்கும் நாட்டில் காவியுடையணிந்து வேஷமிட்டுத் திரியும் பிக்குமார்களைக் கைது செய்யவும் 2300 வருடம் பழைமை வாய்ந்த இலங்கையின் பௌத்த சாசனத்தை பாதுகாப்பதற்கும் தனிப்பட்ட பொலிஸ் படைப்பிரிவொன்று உருவாக்கப்பட வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலபொட ஹத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.

 

 

கொழும்பு 5 இல் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜெயந்தி  மாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;


இலங்கையின் 2300 வருடம் பழைமை வாய்ந்த பௌத்த சாசனத்தின் கௌரவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சில தனிப்பட்ட தனிநபர்களும் அமைப்புகளும் ஈடுபட்டுவருகின்றனர். நாட்டின் மரபாகத் திகழும் பௌத்த சாசனத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தடுப்பதற்கும் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்பவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் பொதுபலசேனா அமைப்பு சீருடையில்லாத பொலிஸாக செயற்படும்.

 

மாளிகாவத்தை தொடர் மாடி குடியிருப்பில் தங்கியிருந்து கடந்த ஐந்து வருடங்களாக குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த போலி பிக்கு ஒருவர் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் தொடர்பில் பொதுபலசேனா அமைப்பிற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. குறித்த நபர் தான் நாட்டின் முன்னணி பௌத்த அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகிப்பதாகக் கூறி அப்பகுதி மக்களை ஏமாற்றி வந்துள்ளார். அது மட்டுமல்லாது அந்நபர் பிக்கு வேடமிட்டுக் கொண்டு சில சட்டவிரோதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுபலசேனா அமைப்பினர் பொலிஸாருடன் இந்த நபரின் வீட்டினை முற்றுகையிட்ட போது போலியான இறப்பர் முத்திரைகள் போலி  டிக்கட்டுகள் மற்றும் துறவறம் பூண்டமைக்கான போலி ஆவணங்கள் என பல சட்டவிரோதமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நபரைப் போன்று இலங்கையில் சிலர் காவி வேடமிட்டுக்கொண்டு பௌத்த மக்களை ஏமாற்றிவருவதோடு மட்டுமல்லாமல் பௌத்த சாசனத்தினை நிர்மூலமாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

பிக்குவேடம் பூண்டு நாட்டு மக்களை ஏமாற்றும் நபர்களினதும் பிக்கு அந்தஸ்தினைப் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபடும் பிக்குகளினதும் காவியுடை துகில் உரியப்பட்டு சட்டத்தின் மூலமாக தண்டனை பெற்றுத்தர பொதுபலசேனா செயற்படும் பிக்கு வேடமிட்டு பௌத்த சாசனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நபர்களை இனங்கண்டு பௌத்த சாசனத்தினைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எமது அமைப்பின் பிரதான கொள்கையின் அடிப்படையில் பொதுபலசேனா அமைப்பினர் எதிர்காலத்தில் சீருடையணியாத பொலிஸாக இந்நாட்டில் செயற்படுவர்.


அத்துடன் ஜனாதிபதியிடம் ஒரு வேண்டுகோளை நாம் முன்வைக்கவுள்ளோம். புத்த பிக்குகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் குற்றவியல் சம்பவங்களை விசாரிப்பதற்கு  தனிப்பட்ட பொலிஸ் பிரிவொன்று அமைக்கப்பட வேண்டும். பௌத்த கொள்கைகளை நன்றாக கற்றுத்தேர்ந்த பௌத்தர்கள் அப்பொலிஸ் பிரிவில் இடம்பெற வேண்டும். இந்தப் பொலிஸ் பிரிவினூடாக நாட்டின் பௌத்த சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும்.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3227:2013-03-04-18-22-56&catid=54:local&Itemid=458

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.