Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் நிலைவரம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள 38 பக்க அறிக்கை! (காணொளி)

Featured Replies

இலங்கையின் நிலைவரம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள 38 பக்க அறிக்கை! (காணொளி)

 
 

navaneethampillai.pngகடந்த பெப்ரவரி மாதம் 11ம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கடுமையான விமர்சனங்களுடன் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

38 பக்கங்களையுடைய இவ்வறிக்கையில்  இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல்கள், பேச்சு சுதந்திரம் பறிப்பு, தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் இராணுவம் இந்த இலங்கையில் நிலவும் சூழ்நிலைகளை கண்டித்திருக்கிறது ஐநா மனித உரிமைகள் ஆணையம்.

 

 

http://nerudal.com/nerudal.55758.html

 

 

அறிக்கையின் எழுத்து கிடைத்தால் தயவு செய்து இணைத்துவிடவும்

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தில் திருத்தம்- ரஷ்யா சீனா கியூபா பாகிஸ்தான் நாடுகள் தலையிட்டன?
15 மார்ச் 2013
lg-share-en.gif
 

 

Question_CI.jpg

 

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில், ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலையிட்டு சில திருத்தங்களை செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை தொடர்பான விசேட விவாதம் மனித உரிமை பேரவையின் அடுத்த கூட்டத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையை நீக்க வேண்டும் என இந்த நாடுகள் கோரியுள்ளதுடன்,  நல்லிணக்க செயற்பாடுகளை எடுக்க இலங்கை தவறியுள்ளது என்ற வார்த்தையும், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றோம் என்ற வார்த்தையும் திருத்தப்பட்டுள்ளன. 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89669/language/ta-IN/article.aspx

நலிவடைந்த பிரேரணையை அமெரிக்கா இன்று ஐ.நா.வில் சமர்ப்பித்தது



http://www.thinakkathir.com/?p=48822



(By R.Thurairatnam in Geneva) இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்பு கூறலையும் ஊக்குவிக்கும் கோரிக்கைகள் அடங்கிய பிரேரணையை அமெரிக்கா இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்துள்ளது.

 

ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை பேரவைக்கான அமெரிக்க தூதுவர்  Eileen Chamberlaine Donoe  மனித உரிமை பேரவை அலுவலத்தில் இன்று பிற்பகல் மூன்று பக்கங்கள் அடங்கிய பிரேரணையை சமர்ப்பித்தார்.
 

ஏற்கனவே அமெரிக்கா வெளியிட்ட நகலில் குறிப்பிட்ட விடயங்களில் மாற்றம் செய்யப்பட்டு மென்மை போக்கு கொண்டதாகவே இன்று சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அமைந்துள்ளது.


முன்னர் உறுநப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்ட நகலில் வலியுத்துவது அல்லது எச்சரிக்கிறது என்ற சொற்பதங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஊக்குவிக்கிறது என்ற சொற்பிரயோகம் சேர்க்கப்பட்டுள்ளது.

 

தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பிரேரணையில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வரவேற்பதாகவும், அந்த அறிக்கையை சிறிலங்கா நடைமுறைப்படுத்த ஊக்குவிப்பது என்றும், சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்காவை ஊக்குவிப்பதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நல்லிணக்கம் பொறுப்புக் கூறலையும் சுதந்திர செயற்பாடுகளையும் ஊக்குவிப்பதென்றும் அப்பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் மனித உரிமைகளை பேணுவதற்கு ஐ.நா.மனித உரிமை பேரவையின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள சிறிலங்காவை ஊக்குவிப்பதென்றும், இதன் முன்னேற்றம் தொடர்பான வாய்மொழி அறிக்கை ஒன்றை மனித உரிமை பேரவை ஆணையாளர் அடுத்த 24ஆவது கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் 25ஆவது கூட்டத்தொடரில் இது தொடர்பாக பொது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் இப்பிரேரணையின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மனித உரிமைகளை உறுதிப்படுத்த 2017ம் ஆண்டுவரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும் என்கிறார் சமரசிங்க
 
எதிர்வரும் 2017ம் ஆண்டளவில் இலங்கை மக்களின் மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றிய இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.


மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பில் முன்னேற்றத்தை பதிவு செய்ய முடியுமென அவர் உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான அகில கால மீளாய்வு அமர்வுகளில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 

மனித உரிமை மேம்பாடு தொடர்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் தேசிய பொறிமுறைமையொன்று உருவாக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

அடுத்த அகில கால மீளாய்வு அமர்வுகளில் பாரியளவில் முன்னேற்றத்தை பதிவு செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இதேவேளை, இலங்கையின் அகில கால மீளாய்வு அறிக்கைக்கு அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன், சில நாடுகள் வரவேற்பை வெளியிட்டுள்ளன.
 

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89670/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.