Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைசி வரைவு: ஐ.நா மனித உரிமைகள் சபை பிரேரணை

Featured Replies

                                                                 வரைபுப் பிரேரணை HRC 22


                                இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்பு கூறலையும் முன்னேற்றுல்


மனித உரிமைகள் பேரவை

PP0 ஐ.நா பட்டயத்தில் இருக்கும் அதன் நோக்கத்தையும், கொள்கைகளையும் இங்கு திரும்பவும் வலியுறுத்தப் படுகிறது,


PP1 உலகளாவிய மனித உரிமை பிரகடனங்களினதும், சர்வதேச மனித உரிமைகள் உடன்பாடுகளினதும், தொடர்புடைய மற்றைய கருவிகளினதும் வழி காட்டலின் படி,


PP1 bis கருதப்படுவது 15 மார்ச் 2006 அன்றைய பொது கூட்ட பிரேரணை 60/251


PP1 ter மனித உரிமைகள் பேரவையை ஆக்கும் நிலையங்கள் பற்றிய 18 ஜூன் 2007 அன்றைய பேரவைப் பிரேரணை 5/1 ம் 5/2ம் நினைவூட்டப்படுகிறது


PP2 இலங்கையில் நல்லிணக்கத்துக்கும், பொறுப்பு கூறலுக்குமான மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 19/2 நினைவூட்டப்படுகிறது


PP3 எல்லா மனித உரிமைகளையும், அடிப்படை சுதந்திரங்களையும் சகல மக்களும் அனுபவிப்பது இலங்கை அரசின் பொறுப்பானது என்பது வலியுறுத்தப்படுகிறது.


PP4 நாடுகள் பயங்கரவாதத்திற்கெதிராக போராடும் போது பாவிக்கும் முயற்சிகள் அவர்களின் சர்வதேச சடங்களுக்கான கடமைகளுக்கு அமைவானதாகவும் பிரத்தியேகமாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம், சரவதேச மனிதாபிமான சட்டங்களுக்குள் அடங்கவேண்டும் என்பதும் வலியுறுத்தபடுகிறது.


PP4 bis இலங்கை அரசின் அடிபடை கட்டுமாணம், கண்ணிவெடியகற்றல்,இடம்பெயர்ந்தாரை மீளக்குடியமர்த்தல் போன்றவற்றில் காட்டபட்டிருக்கும் முன்னேற்றத்தை ஒதுக்கொண்டு வரவேற்கும் அதே வேளை இன்னும் நீதி, இணக்கப்பாடு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பல் போன்றவற்றில் கணிசமான அளவு கருமங்கள் நிறைவேற்றப்பட வேண்டியும் இருக்கிறது என்பதும் கவனிக்கப்படுகிறது.


PP5 இலங்கை அரசால், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறையாக்க, தயாரிக்கபட்ட தேசிய செயல்ப்பாட்டு திட்டத்தையும் அதன் மூலம் அது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அளிக்கும் கடப்பாடுகளும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.


PP6 தேசிய செயல்ப்பாட்டு திட்டம் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கமான பரிந்துரைகளின், கண்டுபிடிப்புக்களின் முழுப்பாகத்தையும் தொடவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.


PP7 நீதிக்கு புறம்பான கொலைகளும், கட்டாய ஆள்கடத்துதலும் பற்றிய பரந்த குற்றச்சாட்டுதல்களுக்கான நம்பத்தகுந்த விசாரணை, வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றல், காணி முறைப்படுகளின் பக்கம் சாரா தீர்வுப் பொறிமுறை, தடுப்புகாவல் கொள்கைகளை மீளாய்தல், முன்னரிருந்த சிவில் நிர்வாகத்தை பலப்படுத்தல், மாகணங்களுக்கான அதிகாரப்பகிர்வொன்றூக்கான அரசியல் தீர்வை அடைதல், சகலருக்குமான கருத்து சுதந்திரத்தை பாதுகாத்தலும் முன்னேற்றலும், சட்டப்படியான ஆட்சியை புதுப்பித்தல் உள்ளடங்களாக நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் நினைவூட்டப்படுகிறது. (PP5 19/2)


PP8 தேசிய செயல்பாட்டு திட்டமோ அல்லது நல்லிணக்க ஆணைக்குழுவோ மிகப்பரதூரமான குற்றச்சாட்டுக்களான சர்வதேச மனித உரிமை சட்டங்களையும், மனிதாபிமான சட்டங்களையும் மீறல்கள் பற்றி போதுமான அளவு வகைகூறவில்லை என்பது அக்கறையுடன் கவனத்தில் கொள்ளப்படுகிறது.


PP9, கட்டாய ஆட்கடத்தல், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை, கருத்துச்சுதந்திர, அமைதியான ஒன்றுகூடல் உரிமை மீறல், மனித உரிமை பாதுகாவலர்களுக்கும், சமுகஆர்வலருக்கும், ஊடகவியாலருக்கும் மீதான பயமுத்தலும் பழிவாங்களும், நீதிதுறையின் தன்னியகத்திற்கும், சட்டமுறையான ஆட்சிக்கும் எதிரான அச்சுறுத்தல்களும், சமயம் அல்லது நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்ட இனப்பாகுபாடும் உள்ளடங்கலாக இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள்பற்றி தொடர்ந்து வெளிவரும் அறிக்கைகள் மீது அக்கறை தெரிவிக்கபடுகிறது


PP10 நல்லிணகத்திற்கு வழிகோலுவதும் அதன் எல்லா குடிமக்களும் மனித உரிமைகளை முழுமையாக்க அனுபவித்தலுக்கும் பிரதான பங்கான அரசியல் அதிகார பரவாக்கல் உள்ளடங்கலாக இலங்கை அரசு தனது பொதுமக்களுக்கான கடமைகளை நிறைவேற்ற ஊக்கப்படுத்தப்படுகிறது.


PP11 ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் தொழில் நுட்பக்குழு இலங்கை செல்ல வசதிகள் செய்ய காட்டப்பட்ட இலங்கை அரசின் முயற்சிகள் நல்லதனமாக விளங்கிக்கொள்ளப்படுவதுடன் உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் கருத்து பரிமாறல்கலையும், இணப்பாடுகளை காணவும் ஊக்கப்படுத்த படுகிறது.


1. இலங்கையில் அரசின் நல்லிணகத்தையும் பொறுப்பு கூறலையும் முன்னேற்ற கொடுக்கப்ட்ட அறிவுரைகளும் தொழில் நுட்ப உதவிகளும் மேலும் அதில் உள்ளடக்கபட்ட பரிந்துரைகளும், முடிவுரையும், பிரத்தியேகமாக முற்று முழுதானதாகவும், சகலதையும் உள்ளடக்குவதுமான நீதி மாற்றத்திற்கான உண்மையையை கண்டறியும் பொறிமுறை நிறுவப்படுதலுக்குமாக தயாரிக்கபட்ட மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கை வரவேற்க்கப்படுகிறது; அத்தோடு உயர் ஆணையாளரின், சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறல்களையும், மனிதாபிமான சட்டங்கள் மீறலையும் விசாரிப்பதற்கான சுதந்திரமான நம்பத்தகுந்த சரவதேச விசாரணை ஒன்றுக்கான, அழைப்பும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

2. இலங்கை அரசாங்கத்தை மனித உரிமைகளுக்கான உயராணையாளரின் அலுவலகத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு ஊக்கப்படுத்துகிறது.


3. நல்லிணக்க ஆணைகுழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முறையாக நிறைவேற்றவும் மனித உரிமை சட்டங்களையும் மனிதபிமான சட்டங்களையும் மீறியுள்ளத்தாக சாட்டப்பட்ட குற்றங்களை விசாரிப்பதும் எல்லா இலங்கையருடன் இணக்கம் ஏற்படுத்துவது உள்ளடங்களாக சுதந்திரமான நீதி, சமத்துவம், பொறுப்புகூறல் என்பவற்றை நிலை நிறுத்துவதற்கு தேவையான நமிபிக்கையான சுதந்திரமான அலுவல்களை தொடங்கவும், சட்டக்கடமைகளை நிறவேற்ற தேவையான மேலதிக நடவடிக்களை எடுக்கும் படியானதுமான இலங்கை அரசுக்கான அழைப்பை மீளவும் வலியுறுத்துகிறது (திருத்தபட்ட OP1 19/2).


4. ஐ.நாவின் பிரத்தியேக செயல்ப்பாட்டு ஆணைபெற்ற அதிகாரிகளுடன் சேர்ந்தியங்கவும் அதேவளை; நீதிபதிகளினதும் வழக்கறிஞர்களினதும் சுதந்திரம்; மனித உரிமைபாதுகாவலர்கள்; கருத்து சுதந்திரம்; ஒன்றுகூடல் சுதந்திரம்; சட்டத்துக்கு புறம்பான, விசாரணை அற்ற, எழுந்தமான கொலைத்தண்டணை; சிறுப்னமையினரின் விவகாரங்கள்; வலுக்கட்டாய, விருப்பத்துக்குமாறாக ஆட்கடத்தும் குழுக்கள்; பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் அறிக்கை தாயாரிக்கும் அதிகாரிகளுக்கு தடை இல்லாத அணுகுமுறைக்கு அனுமதி அளித்தல் உளாடங்களாக நிலுவையிலிருக்கும் கோரிக்கைகளுக்களான அதிகாரபூர்வ பதிலை தரவும் இலங்கை அரசாங்கத்தை ஊக்கப்படுத்துகிறது.


5. மேற்காட்டபட்ட படிமுறைகளை செயல்படுத்த, இலங்கை அரசின் இணக்கத்துடனும், அரசுடன் ஒருங்கிணைந்தும் தேவையான அறிவுரைகள், தொழில்நுட்ட உதவிகளை வழங்கும்படி மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தையும், ஐ.நா. பிரத்தியேகச் செயல்ப்பாட்டு ஆணைபெற்ற அதிகாரிகளையும் ஊக்குவிக்கிறது.


6. இந்த பிரேரணையின் நிறைவேற்றம் சம்பந்தமாக 24ம் அமர்வுகளில் பிரத்தியேக செய்ல்ப்பாட்டு ஆணைபெற்ற அதிகாரிகளின் தரவுகள் உள்ளடக்கப்ட்ட ஒரு வாய்வழி அறிக்கையும், 25ம் அமர்வுகளில் விசாலமான பரந்த அறிக்கையும் அதை தொடந்து நோக்கம்சாரப்பட்ட பொது விவதமும் இடம்பெறவேண்டும் என்று மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தை கோருகிறது.




 

Edited by மல்லையூரான்

நாம் எதிர்பார்க்கும் பலமும் நிறையும் வேகமும் இல்லாவிட்டாலும் சிங்களம் தொடர் அழுத்தத்திற்கு உள்ளாகி வருவது நம்பிக்கை தருவதாய் உள்ளது.

 

 

அத்துடன் கடந்த நான்கு வருடங்களில் சிங்கள ஆதரவு கணிசமாக குறைந்து வருடவதுடன் அதன் 'பொய்' சொல்லும் 

 

திறனும் குறைந்து தானாகவே ஒதுங்கி வருகின்றது.

அதேவேளை இந்தியாவின் மாற்றம் தமிழருக்கு சார்பாக மாறும் சாத்தியங்கள் கூடியவண்ணம் மாறி வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா ,

 

உங்களின் சளைக்காத மனவுறுதிக்கும் அயராத முயற்சிக்கும் தலை வணங்குகிறேன். பல இடங்களில் உங்களின் செயற்திறனைக் கண்டு வியந்திருக்கிறேன்.  ஆங்கிலத்தில் ஒப்டிமிஸ்டிக் என்று ஒரு வார்த்தை இருக்கிறது. எது நடந்தாலும் நண்மைக்கே என்று அதை தமிழில் கூறுவார்கள் என்று நினைக்கிறேன். உங்களின் கருத்துக்களை படிக்கும்போது அடிக்கடி இந்த வார்த்தை மனதில் வந்துபோகும்.

 

ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், இன்றைய அமெரிக்க வரைவு குறித்து உங்களின் எதிர்பார்ப்பும் அப்படியே எனக்குத் தோன்றுகிறது. அமெரிக்க வரைவே சிங்களம் உலகை ஏமாற்ற நிறுவிய உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே வரையப்பட்டிருக்கிறது. தருஸ்மான் அறிக்கைய அது கணக்கில் கூட எடுக்கவில்லை. ஆகவே, சிங்களம் தானே நிறுவி இன்று ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு ஆணைக்குழு அறிக்கைய அடிப்படையாகக் கொண்டு, "தயவுசெய்து அதை நடைமுறைப் படுத்துங்கள்" என்று கெஞ்சும் தீர்மானம்தான் இன்று கொண்டுவரப்படவிருக்கிறது. அதாவது, தமிழரின் இனக்கொலையை நியாயப்படுத்தி, சரி போனால் போகிறது, ஓரிரு கொலைகள் நடந்திருக்கலாம் என்று சிங்களம் தானே கூறிக்கொள்ளும் அறிக்கைய நடைமுறைப்படுத்துவதற்காதான் இந்தக் கெஞ்சல் எல்லாமே. 

 

ஆகவே, இந்தத் தீர்மானம் நடைமுறையில் தமிழருக்கு எந்தத் தீர்வையோ அல்லது நீதியயோ தந்துவிடப்போவதில்லை. ஆகவே தீர்மானத்தினால் வந்த நேரடிப் பலன்கள் என்று பார்த்தால் பூச்சியமே.

 

ஆனால், எந்த உப்புச் சப்புமற்ற இந்தத் தீர்மானத்தைக்கூட சிங்களம் நிறைவேற்ற மறுக்கிறதே என்கிற ஆத்திரம்தான்  எமக்குக் கிடைக்கும் நண்மை என்று நான் நினைக்கிறேன். இந்த எண்ணமே லட்சோப லட்சம் தமிழகத் தமிழர்களையும், பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழரையும் உணர்வேற்றி விட்டிருக்கிறது. இந்த உத்வேகமே இத்தீர்மானத்தைத் தாண்டியும் எமது போராட்டம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

 

தமிழகத்தில் ஏற்படும் மாற்றம் நிச்சயம் எமக்கு உந்துசக்தியாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை.

Manamundanal idamundu. Thodaranthu poraduwam.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.