Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திசைமாறுகிறதா இலங்கை அமைதி முயற்சிகள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, அயர்லாந்துப் பிரதிநிதிகள் வருகை: திசைமாறுகிறதா இலங்கை அமைதி முயற்சிகள்?

இலங்கை அமைதி முயற்சிகள் மற்றொரு திசையை நோக்கி நகருவதைப் போல் இந்தியா மற்றும் அயர்லாந்து தூதுவர்களின் வருகை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் திடீர் கரிசனை, அயர்லாந்தின் நுழைவு மற்றும் மகிந்தரின் நேரடிப் பேச்சுக்கான இரகசிய செயற்பாடு ஆகியவை அமைதி முயற்சிகளின் அடுத்த கட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த விடயங்களுக்குச் செல்லும் முன்பாக கடந்த 4 ஆண்டுகாலம் நடந்த "அமைதி" முயற்சிகள் தொடர்பாக ஒரு பார்வையை செலுத்துவோம்.

2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் ஆறு சுற்றுப் பேச்சுக்கள் ஒரே மூச்சாக ஓடி விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை என்கிற வரைவை முன்வைத்த நிலையில் முற்றுப்புள்ளி அடைந்தது. விடுதலைப் புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை நிராகரித்த சந்திரிகா, தென்னிலங்கை அரசியலை ஆட்டுவிக்க அமைதி முயற்சிகள் அம்போவாகிப் போனது.

ஆழிப்பேரலைச் சூறாவாளியில் தமிழர்கள் வேட்டையாடப்பட்ட போது ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு எனும் வடிவில் அமைதி முயற்சிகள் ஊடகங்களில் அடிபட்டன. ஆனாலும் அம்மை சந்திரிகாவோ செத்தவன் தமிழன்தானே- அவனுக்கு என்ன மனிதாபிமானம் என்கிற பேரினவாத சேட்டையில் ஆறு மாதம் கழித்து சர்வதேச அழுத்தங்களினால் அந்தக் கட்டமைப்பை ஒப்புக் கொண்டார். இப்போது சந்திரிகாவை ஜே.வி.பி. ஆட்டுவித்தது. முன்னைய இடைக்கால தன்னாட்சி அதிகார சபையைவிட ஒப்பிடுகையில் மிக சாதாரணமாக நெகிழ்வுத்தன்மையுள்ள ஒரு நிர்வாகக் கட்டமைப்பாகத்தான் ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பு இருந்தது. ஆனாலும் ஆழிப்பேரலையின் சோகத்தூடாக புதுப்பிக்கப்பட இருந்த அமைதி முயற்சிகள் அப்போதும் அம்போவானது.

போருமற்ற சூனிய நிலையில் துரோகக் குழுவை உருவாக்கி நிழல் போரை தொடக்கி வைத்தது சிங்களம். அமைதி முயற்சிகளில் இந்த நிழல் போர் ஒரு அங்கம் பிடித்துக் கொள்ளத் தொடங்கியது. அதன் பின்னர் சிறிலங்கா அரச தலைவர் தேர்தல்.

ஐக்கிய இலங்கைக் கோட்பாட்டுடன் ரணிலும் ஒற்றையாட்சிக் கோட்பாட்டுடன் மகிந்தவும் களத்தில் மோத மகிந்த வெற்றி பெற்றார்.

இலங்கைக் கள நிலைமைகள் கனக்க கொதித்துவிட்டது. நிழல் போர் உச்சத்தை அடைந்தது.

நோர்வே அனுசரணையாளர்கள் மீண்டும் ஓடி வந்து பேச்சுவார்த்தைக்காக பேசிப்பார்த்தார்கள். பேச்சுவார்த்தையை எங்கு நடத்த வேண்டும் என்பதற்கு ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஒருவழியாக ஜெனீவாவில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் என்ற கட்டத்தைத் தொட்டது. ஜெனீவா முதலாம் சுற்றுப் பேச்சு என்று அழைக்கப்பட்டு இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கான நாளும் குறிக்கப்பட்டாயிற்று. ஜெனீவா கூட்டறிக்கை வெளியிட்ட மை காயுமுன்னே சிங்களம் தன் பேரினவாத உறுமலை வெளியிட்டது. ஜெனீவாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதனையுமே ஏற்கவே இல்லை என்று சிங்கள மக்களை ஏமாற்றிப் பார்த்தது. இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கான முட்டுக் கட்டைகளை சிங்களம் போட்டது.

தமிழ் மக்களின் மீதான படுகொலையை நிறுத்துவதற்கு பதிலாக விமானத் தாக்குதலில் தொடங்கி முப்படைத் தாக்குதலையும் நடத்தி ய து. சமாதான காலத்தில் ஒரு நிழல் போர் தொடங்கி அடுத்து ஒரு படிநிலையாக "உக்கிரமற்ற தணிவான போரை" ஏவிவிட்டது சிங்களம். இந்த அமைதி காலத்தில்தான் தமிழரின் கடல் இறைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடைசியாக ஐரோப்பியத் தடையும் ஓஸ்லோ பேச்சுக்களுமான ஒரு சூழல். நோர்வேத் தரப்பினருடன் பேசச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளை "அமைதிக்கான நோபல்" கனவுகாரர்கள் சிங்களத்துடன் குறுக்குவழியாக பேச்சு நடத்த முயற்சித்துப் பார்த்தனர். உக்கிரமற்ற- மட்டுமடுத்தப்பட்ட ஒரு போரை நடத்துகிற சிங்களம் முதலில் அதை நிறுத்தட்டும். அதன் பின்னர் பேசுவோம் என்று விடுதலைப் புலிகள் கூற ஓஸ்லோவில் நோர்வேயுடன் கூட பேசாமல் சிங்களத்தின் பாலித கோகென்ன குழு உணர்ச்சிவயப்பட்டு சிறிலங்கா திரும்பியது. இப்போது விடுதலைப் புலிகளை நோர்வே விமர்சிக்க நிலைமை உக்கிரம்.

யங்கரவாதிகளாகச் சித்தரிக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் கண்காணிப்புக் குழுவில் இடம்பெறுவது எப்படி நடுநிலையானதாக இருக்க முடியும்? என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கேள்வி எழுப்ப "தடை" என்பதற்கே தத்துவ விளக்கம் கொடுத்தது ஐரோப்பிய ஒன்றியம்.

அமெரிக்காவின் தடைக்கும் ஐரோப்பாவின் தடைக்கும் வேறுபாடுகள் உண்டு. "இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தடை" என்கிற அளவில் பேசிப் பார்த்தது. ஐரோப்பிய ஒன்றியம் நிலைப்பாட்டை மாற்றினால் நாமும் மறுபரிசீலனை செய்கிறோம் என்று விடுதலைப் புலிகள் உறுதியான- இறுக்கமான நிலைப்பாட்டில் நிற்க, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இது தேவையா? எதையோ சாதிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு ஒட்டுமொத்தமாக அமைதி முயற்சிகளுக்கே ஆப்பு வைத்து விட்டு மீண்டும் ஓஸ்லோவில் கூடிப் பேசினார்கள். வேடிக்கையாக தமிழீழ விடுதலைப் புலிகளே! உங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுங்களேன்" என்று குரல் எழுப்பினார்கள். ஐரோப்பிய ஒன்றியம் இந்த நிலைமையை எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்கள்.

இப்படியான நிலையில் இப்போது வரும் 3 செய்திகள் ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் போல் தெரிகிறது.

அயர்லாந்து விடுதலை அமைப்பின் பிரதிநிதியின் இலங்கை வருகை-

இந்தியப் பிரதிநிதியின் சிறிலங்கா வருகை-

உதயன் ஆசிரியருடனான மகிந்தவின் நேரடிப் பேச்சு முயற்சி ஆகியவை இலங்கை அமைதி முயற்சிகள் திசைமாறுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகிந்த ராஜபக்சவின் தளபதிகளான அஜித் நிவார்ட் காப்ரல் மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன இருவரும் அயர்லாந்து சென்று வந்தனர். அமைதி முயற்சிகள் தொடர்பாக அங்கு ஆலோசனை நடத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மகிந்தவின் ஒவ்வொரு நகர்வுமே இதுவரை நோர்வேயை ஓரம்கட்டி வெளியேற்றுவதாகத்தான் இருக்கிறது. ஆகையால் அயர்லாந்தை தெரிவு செய்து அந்நாட்டுக்கு தனது தளபதிகளை அனுப்பினார்.

மகிந்தவின் பிரதிநிதிகள் அயர்லாந்து சென்றதன் தொடர்ச்சியாக அயர்லாந்து விடுதலை அமைப்பான ஐ.ஆர்.ஏ.யின் அரசியல் பிரிவு பொறுப்பாளரும் அயர்லாந்து அமைதி முயற்சிகளில் பங்கேற்றவருமான மார்ட்டின் மக்கின்ஸ் இலங்கை வந்தார். அயர்லாந்து பிரதிநிதியின் பயணத்துக்கான ஏற்பாடுகளை மகிந்தவின் ஆசிர்வாதாத்துடன் கொழும்பில் உள்ள அரசியல் மற்றும் இனப்பிரச்சனை தொடர்பிலான முன்முயற்சி என்ற அமைப்பின் டிராஸ் பெர்னாண்டோ செய்தியிருந்தார்.

அயர்லாந்து விடுதலைப் போராட்ட காலத்தில் இங்கிலாந்தின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இங்கிலாந்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தவர் மார்ட்டின் மக்கின்ஸ். அத்தகைய அனுபவம் பெற்றவரான மக்கின்ஸ் கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், ஐரோப்பிய ஒன்றியத் தடை பாரிய தவறு என்று சாட தென்னிலங்கைச் சிங்களம் ஆடிப்போனது. நாம் யாரையோ எதுக்கோ அழைக்க அது வேற திசைநோக்கி செல்கிறதே என்று புலம்பியிருக்கின்றனர்.

இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த திங்கட்கிழமை பதவி விலகிச் செல்லும் அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லூன்ஸ்டட் விருந்து நிகழ்வில் கலந்து கொண்டார். இதில் மகிந்தவின் சகோதரர் பாசில் ராஜபக்சவும் கலந்து கொண்டார்.

அயர்லாந்து பிரதிநிதியின் பயண ஏற்பாட்டை தனக்கு தெரியாமலே மகிந்தவே நேரடியாகச் செய்துவிட்டார் என்று மங்கள சமரவீர புலம்பியுள்ளார். மகிந்தவின் சகோதரரும் "ஓம். இது தொடர்பில் எனக்கு முறைப்பாடுகள் வந்துள்ளன. அதன் பின்னர் சஜின் வாஸ் குணவர்த்தனவை தொடர்பு இந்த பயணத்தை முழு அளவில் ஏற்பாடு செய்தது எப்படி என்று கேட்டேன் என்று பாசில் ராஜபக்ச கூறியுள்ளார். மேலும் ஐரோப்பியத் தடை குறித்த மார்ட்ட்டின் மக்கின்ஸ் கருத்து குறித்தும் இருவரும் கவலையை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்தியப் பிரதிநிதியின் திடீர் வருகை முக்கியத்துவமடைந்துள்ளது. அமைதி முயற்சிகள் தொடங்கி 4 ஆண்டுகாலம் அமைதி காத்து வந்த- இடைவெளியுடன் வேடிக்கை பார்த்த இந்தியா திருவாய் திறந்திருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவின் பிரதமர் ஒருவர் இலங்கை தொடர்பாக கருத்து தெரிவித்தார். பெங்களுரில் ஊடகவியலாளர்களிடம் பேசிய மன்மோகன்சிங் இலங்கைத் தமிழர்களின் நியாயப்பூர்வ உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவின் இந்த திருவாய் திறத்தலுக்கு தமிழ்நாட்டில் 1980களை நினைவுபடுத்துகிற பேரெழுச்சியான ஈழத் தமிழர் ஆதரவு காட்சிகள்தான். அகதிகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிய தொப்புள் கொடி சொந்தங்கள் தோள்தட்ட, ஈழத் தமிழர்களின் பரம வைரியாக 5 ஆண்டுகாலம் ஆட்சி செலுத்திய சந்திரிகாவின் ஆருயிர்த்தோழி அம்மை ஜெயலலிதாவும் ஈழத் தமிழர்களின் உரிமைக்கு முழக்கமிட்டார். ஆளும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிற கலைஞர் அவர்கள் இந்தியப் பிரதமருடன் பேச அவரும் தனது பிரதிநிதியை அனுப்புவதாகச் சொன்னார்.

இந்தியக் கள நிலைமை இப்படியாக இருக்கும் நிலையில் மங்கள சமரவீர புதுடில்லிக்கு காவடி எடுத்துக்கொண்டு சென்றார். 4 ஆண்டுகால தவம் கலைத்த இந்தியாவிடமிருந்து இந்த பக்தனுக்கு கிடைத்த அருள் எதிர்பாராமல்தான் இருந்திருக்கும். சர்வதேச தடைகளை விதிப்பதற்கு நீங்கள் முயற்சித்துக் கொண்டிருப்பதை இனப்பிரச்சனைக்கு இறுதித் தீர்வு காண வழியைப் பாருங்கள் என்று வாய்திறக்க அதிர்ந்துதான் போய்விட்டார் மங்கள சமரவீர. அத்தோடு இந்தியா நிற்கவிலை. தனது வெளிவிவகார அமைச்சின் செயலாளரையும் கொழும்புவுக்கு அனுப்பியது. வழக்கம்போல் உச்சரிக்கும் "வேத மந்திரமாக" இலங்கையின் பிரதேச ஒற்றுமை- இறையாண்மையை பாதுகாக்க இந்தியாவும் உதவும் என்பதற்கு அப்பால் இந்தியக் கூட்டாட்சி முறை- சிறுபான்மைத் தமிழர்களின் நியாயப்பூர்வமான உரிமை பாதுகாப்பு என்றெல்லாம் புதிய வசனங்களை பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மேலும் இந்தியக் கூட்டரசாங்கம் தொடர்பிலான அனுபவத்தை பகிர்ந்து கொள்ளப் போவதாகவும் இந்தியா தெரிவித்துவிட்டுப் போயிருக்கிறது.

இந்தியாவின் கூட்டரசாங்கம் முன்னுதாரணமிக்கதாக இருந்திருந்தால் காஷ்மீர், அசாம், நாகாலாந்து, மணிப்பூர், கம்தாபூர், குடகு, தமிழ்நாடு ஆகியவை இந்திய அமைப்பிலிருந்து பிரிந்து போவதற்காக ஆயுத இயக்கங்களை பெற்றிருக்காது.

இந்தியாவின் கூட்டரசாங்கம் முன்னுதாரணமிக்கதாக இருந்திருந்தால் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம், கர்நாடகம் என்று மாவோயிசத் தீ பற்றி எரிந்திருக்காது என்ற உண்மை அரசியலைப் புரிந்தவர்களுக்கு தெரியும்.

"மத்தியிலே கூட்டாட்சி- மாநிலத்திலே சுயாட்சி" என்பதற்காக 35 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தற்போதும் தமிழ்நாட்டின் ஆளும் பொறுப்பில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் போராடி வருகிறது. "கட்டுண்டு வாழோம்- பிரிவினையை நாடோம்" என்பதுதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முழக்கம். மாநில சுயாட்சி மாநாடு நடத்தியவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர். இந்த அனுபவங்களைத்தான் சிறிலங்காவில் இந்தியா திணித்து ஐக்கிய இலங்கை என்ற அமைப்பை உருவாக்கி- அரசியல் சாசனத்தை திருத்தி- இலங்கையின் பிரதேச ஒற்றுமை- இறையாண்மையை காப்பாற்றப் போகிறார்களா என்பது காலத்துக்கே வெளிச்சம்!

யாருமே வேண்டாமே.. நானும் பிரபாகரனும் இலங்கைக்காரர்கள்.. நாங்களே பேசித் தீர்க்கிறோம் என்று உதயன் ஆசிரியரூடாக இன்னொரு அதிரடியையும் மகிந்தர் இகசியமாக செய்துள்ளார். எதைச் செய்தாலும் பகிரங்கமாக அறிவித்துவிட்டு நேர்மையான பேச்சுக்களுக்கு வருமாறு விடுதலைப் புலிகள் பதிலளித்துள்ளனர்.

நேரடிப் பேச்சுக்கள் தொடர்பாக அத்துடன் மகிந்தர் நிற்காமல் இந்தியாவின் தொலைக்காட்சிப் பேட்டியிலும் இதையே வலியுறுத்த இந்தியாவின் மறைமுக அனுசரணையுடன் மற்றொரு அமைதி முயற்சியோ? நோர்வேயை தள்ளிவிட்டு அயர்லாந்தை வைத்து ஒரு அமைதி முயற்சியோ? என்கிற யூகங்களுக்கு நிகழ்வுகள் வித்திட்டு வருகின்றன. மீண்டும் நோர்வே வரலாம்- இந்திய அண்ணனின் அரவணைப்புடன் என்பதையும் நிராகரிப்பதற்கில்லை என்கிறார் தென்னிலங்கை ஊடகவியலாளர்.

4 ஆண்டுகாலத்தில்

ஆயிரக்கணக்கில் தமிழர்கள் அகதிகளாக அனுப்பிவைக்கப்பட்டு விட்டனர்-

ஆயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர்-

தாக்குதலில் தொடங்கி- நிழல் போரில் நுழைந்து- மட்டுப்படுத்த இராணுவ நடவடிக்கையாக விரிந்து இப்போது உக்கிரமற்ற தணிவான போர் நடைபெறுகிறது.

ஆறு சுற்றுப் பேச்சும் கட்டமைப்புகளுமாக கடந்து போய்விட்டன.

இப்போதும் புதிய அனுசரணையாளர்கள் வருவார்கள் அல்லது வரமாட்டார்கள். அமைதி முயற்சிகள் திசைமாறும் மாறாது என்று கேள்விகள் யூகங்கள்.

ஆனால் அமைதி மட்டுமே இல்லை.

இதுவரை இருந்த நோர்வேயாகட்டும்- இனி வரப்போகிற அனுசரணையாளராகட்டும்

அல்லது

நேரடியாக உட்காரப் போகிற மகிந்தராகட்டும்

ஒருமுறை

ஒரே முறை

ஒரே ஒரு விடயத்தை யோசிக்கட்டும்

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கிற எதனையாவது ஒன்றையாவது 4 ஆண்டுகாலத்தில் சிங்களத்தார் செய்துள்ளார்களா? பாதிக்கப்பட்ட தமிழர்கள் எதனையாவது பெற்றிருக்கிறார்களா? என்ற கேள்விக்கான விடையோ வருக பழைய- புதிய அனுசரணையாளர்களே.

http://www.eelampage.com/?cn=27338

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அயர்லாந்து குடியரசுப்படை (Irish Republican Army) யின் அரசியல் கட்சி Sinn Fein ன் அங்கத்தவர்தான் "மக் கினஸ்". இவர் தற்போது ஆங்கில அரசாட்சியில் உட்பட்டிருக்கும் வட அயர்லாந்தின் அரசாங்கப் பிரதிநிதி. இதனால், பிரித்தானியாவின் தலையீடாக இருக்குமோ! அமரிக்காவும் பிரித்தானியாவும் நேரடியாகத் தலையிடாமல் சுற்றி வளைக்கிறார்களோ! :?:

உப்பிடியான சந்தேகங்களெல்லாம் உங்களுக்கு வரலாமோ.. அவங்கெல்லாம் வன்முறையளை விட்டிட்டு ஜனநாயகப்பாதைக்கு திரும்பீட்டாங்களல்லோ.. அமெரிகாவிட்டை வாங்கின ஆயதாங்கள்.. செக்கோஸ்லவாக்கியாட்டை வாங்கின வெடிமருந்துகளை அறாவிலைக்கு அங்கை போனநேரம் வாங்கினதல்லோ.. இவ்வளவு காலமும் சும்மாகிடந்ததை..இப்பத்தானே பாவிக்கத்தொடங்கியிருக்கு.. அதாலை..அந்தக் காசு சம்பந்தமா கிடந்த சில்லறையள்..புடுங்குப்பாடுகள

அடடா என்ன ஒரு லாஜிக்கு.... :P புல்லரிக்குது... :lol:

உப்பிடியான சந்தேகங்களெல்லாம் உங்களுக்கு வரலாமோ.. அவங்கெல்லாம் வன்முறையளை விட்டிட்டு ஜனநாயகப்பாதைக்கு திரும்பீட்டாங்களல்லோ.. அமெரிகாவிட்டை வாங்கின ஆயதாங்கள்.. செக்கோஸ்லவாக்கியாட்டை வாங்கின வெடிமருந்துகளை அறாவிலைக்கு அங்கை போனநேரம் வாங்கினதல்லோ.. இவ்வளவு காலமும் சும்மாகிடந்ததை..இப்பத்தானே பாவிக்கத்தொடங்கியிருக்கு.. அதாலை..அந்தக் காசு சம்பந்தமா கிடந்த சில்லறையள்..புடுங்குப்பாடுகள

[குறுக்காலைபோற அல்லிகாவுக்கும் என்னுடைய லொஜிக் விளங்கியிருக்கு.. என்னுடைய லொஜிக்கிக்கு மவுசு கூடுது.. எலிலை சொன்னனப்பா.. :P :P

அப்ப அறசியல் களந்துறையாடல் ஒண்டை வாணொளி ஓண்டல் தொடங்க வேண்டியதுதானே....! :idea: :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.