Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் சிங்களவர் பங்குபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடை பெறாது.

Featured Replies

சென்னையில் ஐ.பி.எல். போட்டி திட்ட மிட்டப்படி நடைபெறும். சென்னையில் நடைபெறும் போட்டியை மாற்றும் திட்டம் இல்லை-இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி.

 

(முகநூல்: loyolahungerstrike)
 

  • Replies 93
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்லூரி மாணவர்களின் எதிர்ப்பால் சென்னை ஐ.பி.எல். போட்டிக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தமிழகத்தில் நீடித்து வருகிறது. சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட விடமாட்டோம் என்று மாணவர் கூட்டமைப்பினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை தவிர மற்ற 8 அணிகளிலும் இலங்கை வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 

ஐ.பி.எல். போட்டிகள் மூலம் சென்னை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ள ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ்’’ அணியிலும் இலங்கை கிரிக்கெட் வீரர்களான குலசேகரா, அகிலா தனஞ் செயா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி நடக்கிறது. இதற்கு இப்போதே ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த ஆட்டம் மட்டுமின்றி மேலும் 9 போட்டிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்பினரின் எதிர்ப்பால் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் நடைபெறும் போட்டிகளில் சூப்பர் கிங்ஸ் அணியில் மட்டும் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பது ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் மற்ற ஐ.பி.எல். அணிகளில் இடம் பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களின் நிலை என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. 

எனவே சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மற்ற அணிகளில் இலங்கை வீரர்கள் நிச்சயம் இடம் பெறுவார்கள் என்றே தெரிகிறது. இதற்காக சென்னை வரும் இலங்கை வீரர்களுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது. 

போட்டி நடைபெறும் நாட்களில் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பு தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இலங்கை வீரர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல் மற்றும் அவர்கள் செல்லும் பாதைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

IPL official page இல் உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119875

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி துளசி அக்கா..இப்பவே அனுப்பிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
கேட்கிறேன் என கோவிக்க இந்தப் போராட்டம் மகிந்தாவுக்கும்,சிங்கள அர‌சிற்கு எதிராகவும் தானே தொட‌ங்கப்பட்டது எப்போதில் இருந்து ஜபிஎல் க்கு[iPL] எதிரான போராட்டமாக மாறியது?
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் என கோவிக்க இந்தப் போராட்டம் மகிந்தாவுக்கும்,சிங்கள அர‌சிற்கு எதிராகவும் தானே தொட‌ங்கப்பட்டது எப்போதில் இருந்து ஜபிஎல் க்கு[iPL] எதிரான போராட்டமாக மாறியது?

 

மாணவர் போராட்ட செய்திகள் படிப்பது இல்லையா....அதாவது 2008ட்டில் பாக்கிஸ்தான் தீவிர வாதியல் மும்பாய் தாக்குதலுக்கு பிறக்கு பாக்கிஸ்தான் நாட்டு வீரர்களுக்கு ஜபில்லில் விளையாட தடை..அதே போல் தான் மானவர்கள் கேக்கிறார்கள் ஒரு லச்சம் எங்கள் மக்களை கொன்ற சிங்களவன் இந்த நாடில் வந்து விளையாடலாமா என்று...மாணவர்கள் ஜபில் விளையாட்டுக்கு எதிரா ஆர்பாட்டம் செய்ய வில்லை..அந்த விளையாடில் சிங்கள வீரர சேர்க்க கூடாது என்று தான் சொல்லி இருக்கினம்...பிந்தி கிடைத்த தகவலின் படி சென்னை அணியில் ஒரு சிங்கள வீரரும் விளையாட மாட்டினமாம்..
 
இந்தியா என்றது ஒரு போலி நாடு என்று இப்ப தான் தமிழக தமிழர் தெரிந்து கொன்டு இருக்கிறார்கள்...போரவார இடம் எல்லாம் சொனியாட ஊத்தை சிங் மகிந்தாட உருவ‌ பொம்மை எரித்து மாணவர் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினம்.... :D
  • கருத்துக்கள உறவுகள்

பையா இப்படி சின்ன,சின்ன காரணங்களுக்காய் போராட வெளிக்கிட்டு உண்மையில் முதலில் என்ன நோக்கத்திற்காக போராட வெளிக்கிட்டார்களோ அந்த நோக்கத்தை மறக்காமல் இருந்தால் சரி :)

புறக்கணிப்பு என்பது பல இடங்களில் நடந்த ஒன்று. துடுப்பெடுத்தாட்டம் என்று பார்க்கையில் தென் ஆபிரிக்கா மற்றும் சிம்பாவே கூட புறக்கணிக்கப்பட்டன. மகிந்த கூட்டம் தமது தவறுகளை மறைக்க பாவிக்கும் அணுகுமுறைகளில் ஒன்று - விளையாட்டு.


பத்து சிங்களவர்கள் ஐ.பி.எல். விளையாடுவது - சின்ன அலுவலாக இருக்கலாம். ஆனால் சிங்கள நாட்டை பொறுத்தவரையில் துடுப்ப்டுத்தாட்டம் ஒரு முக்கிய பொழுது போக்கு. ஊடகங்களில் முக்கிய செய்தி பெறும் விடயம். சிங்கள வீரர்கள் புறக்கணிக்கப்படும் பொழுது அது செய்தியாகும். சிங்கள மக்கள் கூட தமது அரசு செய்த இனவழிப்புக்களை உணர ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

579891_433742246712362_1354993371_n.jpg

 

(முகநூல்)

பிந்தி கிடைத்த தகவலின் படி சென்னை அணியில் ஒரு சிங்கள வீரரும் விளையாட மாட்டினமாம்..

 

இது இன்னும் உறுதியாக தெரியாது.

"இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்களை நீக்க அணியின் உரிமையாளர் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது." என்று தான் கூறப்பட்டுள்ளது.

நீக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறப்படவில்லை.

 

எனவே இவ்வாறு கூறினால் மாணவர்கள் போராட்டத்தை கைவிடுவார்கள். தடையில்லாமல் போட்டியை நடத்தலாம் என்று நினைத்து கூறியிருப்பார்கள்.

 

Edited by துளசி

நான் Srilanka's killing fields வீடியோவை கொண்டுபோய் IPL page இல் போட்டிட்டு வந்திட்டன். :D

 

பையன் அண்ணா நீங்களும் இடைக்கிட போடுங்கள். தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலையை பல மக்கள் பார்ப்பதற்கு தன்னும் உதவும். :rolleyes:

1,972,595 பேர் அந்த page ஐ like பண்ணி வைத்திருக்கிறார்கள். :D அவர்களில் கொஞ்ச பேராவது பார்க்க சந்தர்ப்பம் உருவாக்கலாம். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

jajalalitha.jpg
 
அண்மைச்செய்தி:

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது: 

இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்:::

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்துமாறு பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்....

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களை அனுமதிக்கக் கூடாது: சென்னை போலீசாரிடம் மாணவர்கள் மனு

தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இலங்கை அணியை எப்போதும் சேர்க்கக் கூடாது. இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இருக்கும் இலங்கை வீரர்களை நீக்க வேண்டும். மும்பையில் குண்டு வெடிப்புக்கு பிறகு பாகிஸ்தான் அணியை எப்படி ஐபிஎல் அணியில் இருந்து நீக்கினார்களோ, அதுபோல் இலங்கையையும் ஐபிஎல் அணியில் இருந்து நீக்க வேண்டும். இதுசம்மந்தமாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம். அவரும் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இலங்கை அணியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றனர்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95288

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Indian province asks for ban on SL players in Chennai

 

The government of the Indian state of Tamil Nadu has written to the prime minister asking for Sri Lankan players and officials to be excluded from IPL matches in Chennai. The demand follows rising political tensions in the state over the treatment of Tamils in Sri Lanka.

"In such a hostile and tense environment, we apprehend that the participation of Sri Lankan players in the IPL tournament, with many games to be played in Chennai, will aggravate an already surcharged atmosphere and further offend the sentiments of the people," said the letter, written by chief minister J Jayalalitha.

Earlier this month the DMK, the main opposition party in Tamil Nadu and a key ally of the federal government, pulled out of the ruling coalition at the centre asking for sterner measures to redress alleged atrocities towards Tamils in Sri Lanka.

Reacting to news of the letter, Rajiv Shukla, the IPL chairman, insisted that all matches scheduled to be held in Chennai would be staged as planned. He said there would be an emergency meeting of the IPL's governing council and the issue was being discussed with the BCCI president but no decision had been taken. The federal information minister said the prime minister was out of the country and would take a decision on his return.

Sri Lanka Cricket (SLC) has said that it is monitoring the developments in India closely and was waiting for a travel advisory from the Sri Lankan government. "If there is a secondary threat to a player in a particular area then we will wait for the government's advice," Nishantha Ranatunga, the SLC secretary, told ESPNcricinfo. "We have written to Ministry of Foreign Affairs through our Minister of Sport to get feedback on our players' safety."

Ranatunga also said the BCCI had kept the SLC posted and assured it of player safety. "Even the BCCI has told us if the situation is going to be bad they will take a call on this. But we have not worked or spoken in detail so far."

The "ban", if implemented, will affect Chennai Super Kings, who play all their eight home matches in Chennai; however, their Sri Lankan contingent consists of only two fringe players, Nuwan Kulasekara and Akila Dananjaya. Franchises that will be significantly hit, at least for the lone game they play in Chennai in the league phase, include Mumbai Indians (Lasith Malinga), Delhi Daredevils (Mahela Jayawardene), Sunrisers Hyderabad (Kumar Sangakkara) and Pune Warriors (Angelo Mathews). Chennai also hosts some of the knockout matches, where these players would be crucial if their teams make the cut.

If Super Kings decide to withdraw their Sri Lankan players, both the players will be compensated with their contract fees for the entire season.

Sri Lankan players in IPL:

Nuwan Kulasekara and Akila Dananjaya (Chennai Super Kings) 

Mahela Jayawardene and Jeevan Mendis (Delhi Daredevils) 

Sachithra Senanayake (Kolkata Knight Riders) 

Lasith Malinga (Mumbai Indians) 

Ajantha Mendis and Angelo Mathews (Pune Warriors) 

Kushal Janith Perera (Rajasthan Royals) 

Muttiah Muralitharan and Tillakaratne Dilshan (Royal Challengers Bangalore) 

Kumar Sangakkara and Thisara Perera (Sunrisers Hyderabad)

 

http://www.espncricinfo.com/indian-premier-league-2013/content/story/626858.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை வீரர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்!- தமிழகம் எங்கும் துண்டுப்பிரசுரம்
அடுத்த வாரம் ஆரம்பிக்க இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதித்தால் விரட்டியடிப்போம்  என்றும், ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை ஏன் அனுமதிக்க கூடாது என்ற விளக்கம் அடங்கிய துண்டு பிரசுரம் ஒன்று தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து வருகிறது.

காலவரையற்ற உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்கள் ஒரு புறம் நடக்க, புத்த பிக்குகள் மீது தாக்குதல், இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதல் என தங்கள் கோபத்தை வெளிக்காட்டி வருகிறார்கள் தமிழர்கள்.

இந்த சூழலில் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையும் வலுபெற்று வருகிறது.

அடுத்த வாரம் தொடங்க இருக்கும் ஐ.பி.எல்.லில் தமிழக அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர்கள் யுவன் குலசேகரா, அகிலா தனஞ்ஜெயா ஆகியோரும், தமிழகத்தைச் சேர்ந்த சன் குழும‌ நிறுவனத்தின் அணியான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் குமார சங்ககாரா, திசாரா பெரேரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் மகிளா ஜெயவர்த்தனா, ஜீவன் மெண்டிஸ் ஆகியோரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சசிந்திரா சேனநாயகா, மும்பை இந்தியன்ஸ் லசிந்தா மலிங்கா, புனே வாரியர்ஸ் இந்தியா அணியில் ஏஞ்சலா மேத்தியூஸ், அஜந்தா மெண்டிஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் முத்தையா, தில்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் குசால் பெரைரா ஆகியோர் விளையாடுகின்றனர்.

இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் இரா.கலையரசு, ‘இலங்கை கிரிக்கெட்டும், இனவெறி அரசியலும்’ என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை எழுதி அதை தமிழகம் முழுவதும் பிரசுரித்து வருகிறார்.

அந்த கடிதத்தில், “இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் சீசனில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர்கள் யுவன் குலசேகரா ரூ.50 லட்சத்துக்கும் அகிலா தனஞ்ஜெயா ரூ.10 லட்சத்துக்கும், சன் முழும நிறுவனத்தின் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக குமாரா சங்ககாரா, திசாரா பெரைரா ஆகியோருக்கு தலா ரூ.3.5 கோடிக்கு சம்பளமும் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

தமிழர்களைக் கொள்ளையடித்து தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து கடைசியில் தமிழினத்தையே அழிக்கத் துடிக்கும் சிங்கள வெறியர்களின் கிரிக்கெட் விளையாட்டை நாம் எப்படி விசிலடித்து்க் கொண்டாடப் போகிறோமா?.

நம் ஈழத்தங்கைகளை தாய்மார்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து மார்பகங்களை அறுத்தவர்களுடன் கிரிக்கெட் விளையாட போகின்றோமா?

நம் இளைஞர்களை அம்மணமாக்கிக் கொன்று இனத்தை அழிப்பவர்களுடன் கோகோ கோலாவும் பெப்சியும் குடிக்க போகின்றோமா?

நாளை நம் ஈழ சகோதரிகளை ஐ.பி.எல்.இல் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆட ராஜபக்ச அனுப்பி வைக்கும்போது அதையும் நாம் சோனியா, ராகுல் காந்தியுடன் உட்கார்ந்து ரசிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்துபோகப் போகிறோமா?

அல்லது விளையாட்டு என்று சொல்லி சிங்களவனை வைத்து பணம் ஈட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நம்மை ஏமாற்றுபவர்களை இனியும் அனுமதிக்க போகிறோமா?

விளையாட்டு என்று சொல்லி ந‌ம்மை ஏமாற்றும் எவனையும் இனி தாய்த் தமிழ்நாட்டில் அனுமதியோம். சிங்களவனை வைத்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு இடம் இது இல்லை. இனியும் அவர்களை வைத்து விளையாடினால் தமிழ்நாட்டை விட்டே அவர்களை விரட்டுவோம்.

800 மீனவர்களை கொன்ற இலங்கையுடனான அனைத்து விளையாட்டு தொடர்புகளையும் இந்தியா உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

காமன்வெல்த் நாடுகள் இனவெறி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 1977 ல் செய்துகொண்ட கிலெனீகல் ஒப்பந்தத்தை போல், ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தி காமன்வெல்த்தில் உள்ள இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 54 நாடுகளுடனான விளையாட்டுப் போட்டிகளில் இருந்து இலங்கையைத் தடை செய்ய வேண்டும் என இந்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

ஆசிய தடகள விளையாட்டு போட்டியைப்போல் இலங்கை இனவெறி வீரர்கள் பங்கு பெறும் ஐபிஎல் போட்டிகளுக்கும் சென்னையில் நடைபெறுவற்கு அனுமதி வழங்க கூடாது. தமிழகம் இருளில் தவித்திருக்கும் போது ஐபிஎல் போட்டிகளுக்கு வழங்கப்படும் தடையில்லா மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

தமிழக மாணவர்களே! தமிழக இளைஞர்களே! ஒன்றிணைந்து போராடுவோம். தமிழக, இந்திய அரசுகளை மக்கள் மன்றத்தில் பணியவைப்போம். 2013 ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதை நம் போராட்டங்களால் தடை செய்வோம்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
mudthaiya.jpg
 
 

 

 

"ஒரு தமிழனாக இருபது வருடங்கள் நான் சிறிலங்காவிற்கு விளையாடினேன். எனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. இப்பொழுது அங்கே போர் முடிந்துவிட்டது..மக்கள் மிகவும் நிம்மதியுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர்."-முத்தையா முரளீதரன்.

இது இன்று NDTV இல் இலங்கை விளையாட்டு வீரர்களை, தமிழ் நாட்டிற்கு எந்த எதிர்ப்பையும் காட்டாமல், BCCI தடை விதித்தது குறித்து ஒரு பேட்டியின்பொழுது முரளீதரன் கூறியதன் தமிழாக்கம். இவர் கூறுவதன் அர்த்தம் யாதெனில் சிங்களவர்கள் நல்லவர்கள் என்பதுபோலவும் சிங்களம் நம் மேல் தொடுத்த போர் நியாயபூர்வமானதென்றும் புலிகளால்தான் அங்கே மக்களுக்குப் பிரச்சனை இருந்ததுபோலவும், இப்போ புலிகள் அழிக்கப்பட்டுள்ளநிலையில் (அப்படித்தான் சிங்களம் சொல்கிறது) எல்லோரும் நிம்மதியாக இருக்கிறோமாம். இவனை இனிமேல் யாராவது தமிழன் என்று சொன்னால்....இருக்கு..

 

fb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவன் சிங்கள பிச்சைகார நன்றிகெட்ட எருமைகளின் செல்ல பிள்ளை. இன்றுமுதல் மானங்கெட்ட முரளிதரன் என்று உண்மையான தமிழர்களால் காரி காரி துப்பப்படுவாய்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ipls.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

cartoon_27_03_2013.jpg

கிரிக்கெட்ல கைய வெச்சா தான் நம்ம பிரச்சனை என்னனு காது கொடுத்து கேட்க ஹிந்திய மக்கள் வராங்க...

 

அதனால சிங்கள வீரர்களுக்கு இங்கு விளையாட தடை விதிப்பது பெரிதும் வரவேற்க படவேண்டியது...


ஜெயா'க்கு இந்த விஷயத்துல பாராட்டு கிடைப்பது ஒரு இயற்கையான விஷயம்...

 

ஜெயாவை பாராட்டுவது பெரிய குற்றம்ன்னு பேசும் திமுகவினருக்கு நான் கேட்கும் ஒரே கேள்வி

 

"இந்த ஆணிய நீங்க ஏன் புடுங்கல டெசோ பாய்ஸ் ? "


@Vikkranth Uyir Nanban

சென்னையில் நடக்க இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கச் செல்லும் ரசிகர்களே , மாணவர்களே . தயவு செய்து இது போன்ற பதாகைகள் , வாசகங்கள் எழுதிய அட்டைகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அதை விளையாட்டின் போது காட்டுங்கள். இதன் மூலம் இந்தியாவில் உள்ள மற்ற மக்களுக்கும் நமது செய்தியை கொண்டு போகலாம் !

 

164281_598874230124606_1398549717_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12777384.jpg
 
fb
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
iplvilyadduuuuuu.jpg
 
fb

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.