Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரஸ் ஆட்சிக்கு ஆப்பு?

Featured Replies

இதுவரை வெளியிலிருந்து ஆதரவளித்து வந்த சமாஜ்வாதிக்கட்சி காங்கிரஸ்ஆட்சிக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரலாம்என எதிர்பார்க்கப்படுகிறது.

  • தொடங்கியவர்

New Dehli: The Samajwadi Party is on the verge of announcing its withdrawal of crucial support to the Congress party-led United Progressive Alliance (UPA). According to sources, party chief Mulayam Singh Yadav, who was earlier authorised by the party’s parliamentary board to make the decision on the issue, may make a formal announcement to this effect soon after the festival of colours Holi, which will be celebrated on Tuesday. Such a move could force early general elections after the Dravida Munnetra Kazhagam (DMK), which was a major constituent of the UPA, pulled out of the coalition last week. On Sunday the party announced it would not even extend its outside support to the government. “We have withdrawn support to the UPA and have decided not to offer even outside support to the UPA,” DMK leader Tiruchi Shiva said after the party’s executive meeting in the Tamil Nadu capital Chennai. http://gulfnews.com/news/world/india/india-samajwadi-party-quit-government-1.1162668

1,டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பின்னணியில் நடைபெற்ற தகவல்களை நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் (ஜேபிசி) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தனக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் அ. ராசா கடிதம் மூலம் வலியுறுத்தியது வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் கூலம் இ. வாகனவதி தவறான தகவலை கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்டம் ஒதுக்கீடு விவகாரத்தில் எழுந்த முறைகேடு தொடர்பான ஜேபிசி அறிக்கை நாடாளுமன்றத்தில் மே மாதம் தாக்கல் செய்யப்படும் என்று குழுவின் தலைவர் பி.சி. சாக்கோ கடந்த 23-ம் தேதி கூறினார். அந்த அறிக்கையில் ராசாவின் எழுத்துப்பூர்வ விளக்கத்தைப் பதிவு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், ராசா என்ன கூறினார் என்பதை வெளியிட சாக்கோ மறுத்து விட்டார். இந்த நிலையில், சாக்கோவுக்கு ராசா எழுதிய 17 பக்க கடிதத்தின் விவரம் தெரிய வந்துள்ளது. சாக்கோ எழுப்பிய ஐந்து கேள்விகளுக்கான பதிலை ஐந்து பக்கங்களில் தனியாகவும், அட்டர்னி ஜெனரலின் வாக்குமூலம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பின்னணியை விவரிக்கும் நிகழ்வுகளை 12 பக்கங்களிலும் ராசா விவரித்துள்ளார். 2007-ம் ஆண்டில், 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் கேட்டும், கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யக் கோரியும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பான வழக்கை மத்திய தொலைத்தொடர்பு வழக்குகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (டிடிசாட்) 2007 அக்டோபரில் விசாரித்தது. சொலிசிட்டர் ஜெனரல் ஆஜர் அந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் அப்போதைய சொலிசிட்டர் ஜெனரல் (கூலம் இ. வாகனவதி) ஆஜராகி வந்தார். அந்த அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து, அப்போதைய வெளியுறவு அமைச்சர் (பிரணாப் முகர்ஜி), சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருடன் 2007 டிசம்பரில் ஆலோசனை நடத்தினேன். செய்திக்குறிப்பில் திருத்தம் அப்போது தனது கருத்தை விளக்கி வெளியுறவு அமைச்சரிடம் சொலிசிட்டர் ஜெனரல் ஒரு குறிப்பை அளித்தார். அதை பிரதமருக்கு வெளியுறவு அமைச்சர் அனுப்பி வைத்தார். அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புக் கொள்கை முடிவுகள் குறித்து பிரதமருக்கு 2007 டிசம்பர் 26-ம் தேதி உள்ளிட்ட பல்வேறு தேதிகளில் கடிதங்களை எழுதினேன். அந்தப் பின்னணியில்தான் அலைக்கற்றை விண்ணப்பங்கள் பரிசீலனை தொடர்பாக 2008 ஜனவரி 7-ம் தேதியிட்ட குறிப்பை மத்திய தொலைத்தொடர்புத் துறையினர் தயாரித்தனர். மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கொள்கை தொடர்பான கருத்தை அறிவதற்காகத்தான், சொலிசிட்டர் ஜெனரலின் பார்வைக்கு அந்தச் செய்திக்குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், "குறிப்பைப் பார்த்து விட்டேன்; எல்லாம் வெளிப்படையாகவும் நியாயமான முறையிலும் உள்ளன' என்று அவர் குறிப்பு எழுதியிருந்தார். முன்னதாக, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான தொலைத்தொடர்புத் துறையினர் தயாரித்த குறிப்புக்கு நான் ஒப்புதல் தெரிவித்தேன். அப்போது, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் நான் கூறியதற்கு முரணாக வரைவுச் செய்திக்குறிப்பின் கடைசி பத்தி இருப்பது தெரியவந்தது. வானகவதி கூறுவது பொய் அதனால், "திருத்தப்பட்ட செய்திக்குறிப்பு' என்ற வாசகத்தை அதில் நான் எனது கைப்பட பேனாவில் எழுதினேன். அதன் பிறகு மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலர் மூலம் அந்த வரைவுச் செய்திக்குறிப்பு சொலிசிட்டர் ஜெனரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே, சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவர் தற்போது கூறுவது போல, அவர் பார்வையிட்ட பிறகு வந்த குறிப்பில் நான் திருத்தம் செய்ததாகக் கூறுவது தவறாகும். சொலிசிட்டர் ஜெனரலிடம் சிபிஐ விசாரித்தபோது, 2007 டிசம்பரில் வெளியுறவு அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. அந்தக் கூட்டம் தொடர்பான குறிப்பு வெளியான பிறகுதான், அந்த நிகழ்வு நடைபெற்றதை சொலிசிட்டர் ஜெனரல் நினைவு கூர்ந்தார். அப்போதும் கூட அந்தக் கூட்டம் முத்தரப்பாக அல்லாமல் வெளியுறவு அமைச்சருடன் அவரும் நானும் தனித்தனியாகப் பேசியதாக வாகனவதி கூறினார். ஆனால், அவர் கூறியதற்கு முரணாக, நாடாளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றதை வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தினார். மேலும் உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றம், தொலைத்தொடர்புத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் ஒருமுறை கூட மத்திய தொலைத்தொடர்புத் துறையின் வரைவுச் செய்திக்குறிப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தனக்குத் தெரியாமல் நடைபெற்றது என வாகனவதி கூறவில்லை. இந்த உண்மையை தற்போது அவர் மறைப்பது அதிர்ச்சி அளிக்கிறது. விளக்கம் தர விருப்பம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான செய்திக் குறிப்பு விவகாரம் மட்டுமின்றி அலைக்கற்றை நுழைவுக் கட்டணம், அலைக்கற்றைக் கட்டணம், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் நிர்ணயம், கூடுதல் அலைக்கற்றை அனுமதிக்கான நடைமுறை, இரட்டை தொழில்நுட்ப அனுமதி வழங்குதல் போன்ற பல நடவடிக்கைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. அலைக்கற்றை விண்ணப்பதாரர்களின் தகுதியை நிர்ணயிப்பது தொடர்பான விவகாரத்தில் கூட சொலிசிட்டர் ஜெனரல் கூறிய கருத்தை நாம் கவனிக்க வேண்டும். இதுபோன்ற பல விஷயங்களின் பின்னணியை நேரில் விளக்க விரும்புகிறேன். எனவே, நாடாளுமன்றத்தில் ஜேபிசி அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பு இந்த உண்மைகளை நேரில் விளக்க எனக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று தனது கடிதத்தில் ராசா கூறியுள்ளார்.


Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/25/india-2g-scam-raja-accuses-vahanvati-telling-172111.html

 

2,லக்னெள: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்தாலும் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை வாபஸ் பெறும் முடிவில்தான் இருக்கிறது முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி. ஹோலி முடிந்த பின் மத்தியில் ஆட்சியை கவிழ்த்துவிட்டு மூன்றாவது அணி அமைக்க திடீர் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார். எதிர்காலம் மூன்றாவது அணிக்குத்தான்... இந்த வார்த்தை சில நாட்களுக்கு முன் டெல்லி வந்த உ.பி முதல்வரும் முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ் சொன்னது. அதற்கான முஸ்தீபுகள் இப்போது அரங்கேறி வருகின்றனவோ என்று எண்ணும் வகையில் இருக்கின்றன முலாயம் சிங் யாதவ் மேற்கொள்ளும் நடவடிக்கைகள். மூன்றாவது அணியில் யார் யார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக விலகிய பின்னர் என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறது. அதேபோல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், தற்போது அதிருப்தி நிலையில் இருக்கிறார். இவர்களை மூன்றாவது அணியில் இணைக்கும் முயற்சியில் முலாயம் சிங் யாதவ் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஐ.மு கூட்டணி அரசில் இருந்து முதலில் பிரிந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும் அவப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் நிலையில் மராட்டிய மாநிலத்திற்கு சென்றிருந்த முலாயம் சிங் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரையும் சந்தித்து பேசியுள்ளார். அதே போல இந்தக் கூட்டணிக்குள் திமுக, தெலுங்கு தேசம் கட்சிகளை இழுக்கவும் முலாயம் திட்டமிட்டுள்ளார். தேவகவுடாவின் விருப்பம் இதனிடையே மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் நிறுவனரான தேவகவுடா மூன்றாவது அணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, மூன்றாவது அணி அமைக்கவேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது என்கிறார். தற்போது கர்நாடக மாநில தேர்தலை சந்திக்க தயாராகி வருவதாகவும், அதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தங்களின் பலத்தை நிரூபிக்க தயாராகி வருவதாக கூறியுள்ள குமாரசாமி, மூன்றாவது அணியில் தங்களின் மதசார்பற்ற ஜனதா தளம் மிகப்பெரிய பங்காற்றும் என்றும் கூறியுள்ளார். ஆளப் போவது காங்கிரஸ், பாஜாக, கிடையாது... அடுத்த தேர்தலுக்குப் பின் இந்தியாவை ஆளப்போவது காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியின் தலைமைதான் என்று கூறி வரும் முலாயம் சிங் ஆதரவாளர்கள் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் முலாயம் தான் என்று உறுதியாக கூறி வருகின்றனர். ஹோலி முடிந்த உடன் கவிழ்ப்பு வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை வட மாநிலங்களில் பிரசித்தி பெற்றது. அந்த கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் இறங்கலாமா என்று யோசிக்கிறாராம் முலாயம் சிங் யாதவ். எதிர்காலத்தில் என்ன நடக்கும் இனி இந்தியாவில் தனிக் கட்சி ஆட்சி என்பது சாத்தியமில்லை. எந்த கட்சியும் தனித்து பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியாது. கூட்டணி ஆட்சிதான் சாத்தியப்படும் என்று மகாராஷ்டிராவில் பேசிய முலாயம்சிங் யாதவ் கூறியுள்ளார். அகிலேஷ் யாதவ் அதிரடி இந் நிலையில் தொலைக்காட்சி ஒன்றிர்க்கு அளித்த பேட்டியில் கூட ஏற்கனவே ''மத்தியில் இனி மூன்றாவது அணிதான் ஆட்சி அமைக்கும். எதிர்காலம் மூன்றாவது அணிக்குத்தான் என்று கூறிவரும் அகிலேஷ் யாதவ் நேற்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "பெரும்பாலான ஊழல்களுக்கு காங்கிரஸ் கட்சியே காரணமாக இருப்பதால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து கொடுத்து வரும் ஆதரவை வாபஸ்பெற திட்டமிட்டுள்ளோம். அக்டோபரில் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க சமாஜ்வாடி கட்சி தயாராக உள்ளது. மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றதும் தேர்தல் வியூகம் பற்றி விவாதிக்கப்படும். எங்களை பொறுத்தவரை அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் அது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அதிரடி பட்டாசு ஒன்றினை கொளுத்தி போட்டுள்ளார். ஜெயலலிதா, மாயாவதி கனவு என்னவாகும்? இதனிடையே செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து செங்கோட்டைக்கு போகும் கனவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார். அவரது கணக்கு என்னவாக இருக்கிறது என்பதை அரசியல் நோக்கர்களால் சரியாக கணிக்க முடியவில்லை. அதேபோல் பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் மாயாவதிக்கும் பிரதமர் ஆகும் கனவு இருக்கிறது. எது எப்படியோ ஹோலி முடிந்த உடன் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் ஜோலியை முடிக்க திட்டமிட்டுள்ளார் முலாயம் சிங் என்கிறார்கள்.


Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/25/india-akhilesh-yadav-talks-pulling-plug-on-upa-172139.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.