Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் தொடர்பில் பொது வாக்கெடுப்பு: தமிழக சட்டமன்ற தீர்மானத்தை நிராகரித்தார் சல்மான் குர்ஷித்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் தொடர்பில் பொது வாக்கெடுப்பு: தமிழக சட்டமன்ற தீர்மானத்தை நிராகரித்தார் சல்மான் குர்ஷித்!

 

தமிழீழம் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நிராகரித்துள்ளார்.

 

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சிக்கு இன்று வழங்கிய செவ்வியிலேயே இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் இச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

 

 'ஈழத்தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு 'தனி ஈழம்' குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும்,

 

இலங்கை நாட்டை 'நட்பு நாடு' என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்துகின்ற போதிலும், இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பில் தமிழகத்தில் கடுமையான உணர்வுகள் இருப்பதை நான் கவனத்தில் கொண்டுள்ளேன். ஏனைய கட்சிகளிடம் மட்டுமன்றி எமது கட்சியில் கூட இத்தகைய கடுமையான உணர்வு காணப்படுகின்றது. ஆனால் உலகிலுள்ள பலரின் நிலைப்பாட்டுடன் இந்த உணர்வுகள் முற்று முழுதாக ஒத்துப் போகவில்லை.

 

அதேவேளை, பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதேபோன்று சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம். அதற்கு சம முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

 

இலங்கையை நட்பு நாடு இல்லை என்பது தொடர்பில் முடிவெடுப்பது குறித்து உடனடியாக ஆலோசனை நடத்தும் திட்டம் இல்லை. அதேபோன்று இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கும் எண்ணமும் இல்லை.

 

இத்தீர்மானத்தை இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவையே நிறைவேற்றியுள்ளது. இதேபோன்று இந்தியாவில் மேலும் பல சட்டப்பேரவைகள் உள்ளன. இத்தீர்மானத்துக்கு இந்தியாவின் ஏனைய பகுதிகளில் ஆதரவு இல்லை.

 

அதேவேளை, இத்தீர்மானத்துக்கு இந்தியா முழுவதிலும் ஆதரவு இருந்தால், அது வேறொரு விவகாரமாக இருந்திருக்கும். ஆனால் இலங்கைத் தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பிலான ஒரு மாநிலத்தின் ஆதரவை எம்மால் அதன் உணர்வாகவே கருத்தில் எடுக்க முடியும்.

ஆனால் அவர்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை' என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இச்செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

தமிழீழம் தொடர்பில் இலங்கைத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக சட்டசபையில் கடந்த 27ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=3fe98ed7-b922-40a3-bc85-7a56098d8f95

தமிழீழத்துக்கான தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்திலும் வேண்டும் என்கின்றனர் மாணவர்கள்

 

தமிழக சட்டபையில் நிறைவேற்றிய தனித் தமிழீழ வாக்கெடுப்புக்கான தீர்மானம் இந்திய நாடாளு மன்றத்திலும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தமிழக மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 

 

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் மீது,இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் தீர்மானம், தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது.

சட்டசபையில், இரண்டாவது முறையாக ஈழப் பிரச்சினை குறித்து நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் குறித்து, மாணவர்கள் தெரிவித்தவை வருமாறு;


எங்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து, சட்ட சபையில் இலங்கைக்கு எதிரான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை மனதார வரவேற் கிறோம். அதேபோல், ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, நாடாளுமன்றத்திலும், எங்களின் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்.


அரசு ஒத்துழைப்பு இல்லாமல், மாணவர்கள் போராட்டம் நடத்த முடியாது. ஒரு சில இடங்களை தவிர, பெரும்பாலான இடங்களில், காவல்துறையினரும் ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.

 

மாணவர்கள் கல்வி தொடர வேண்டும் என வலியுறுத்தி, முதல்வர் ஜெயலலிதா போராட்டத்தைக் கைவிடமாறு அறிவுத்தியுள்ளார். இருந்தாலும், அமைதியான முறையில், எங்கள் போராட்டம் தொடரும்என்றனர்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=767381929629846779

juy600.jpg

தமிழக மக்களின் ஏகோபித்த குரலை நிராகரிப்பவர்களை தமிழகம் முற்றாக நிராகரிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை!

அதன் பின்னர் இதுபோன்ற தமிழின விரோதிகளின் அறிக்கைகள் தமிழக மக்களின் மீது எந்தவொரு தாகத்தையும் ஏற்படுத்தாது.

 

 

உடன் படாதவர்கள் விடயங்களில் தமிழ் மக்களின் போக்கு எப்பொழுதுமே அந்த நபரைஅல்லது அமைப்பை எதிர்ப்பதாகவே 

More@ http://tamilwhiteelephant.blogspot.co.uk/2013/03/blog-post_30.html

<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/v4KqlGu1zls?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe>

 

உடன் படாதவர்கள் விடயங்களில் தமிழ்

 

மக்களின் போக்கு எப்பொழுதுமே அந்த நபரைஅல்லது அமைப்பை எதிர்ப்பதாகவே

இருந்து வருகின்றது .

இதனை reactive politics என சொல்வார்கள் .

 

நாம் Proactive Politics ஆரம்பிக்க  

 

 

Continued @  http://tamilwhiteelephant.blogspot.co.uk/2013/03/blog-post_30.html

 

 

இந்த நிலைமை தமிழர்களுக்கே இருந்து வந்தது, கூட்டமைப்பு மற்றும் தமிழக தலைமைகள் மத்திய நடுவண் அரசு சார்ந்தே கொள்கைகளை முன்னெடுத்தனர். முடிவு - ஏமாற்றமே !

 

எனவே மாணவர்கள் புரட்சியால் நடுவண் அரசு தமிழக மக்கள் சார்பாக கொள்களைகளை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சல்மான் குர்ஷித் பதவி விலக வேண்டும்: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உடனடியாக பதவி விலக வேண்டும்" என்று பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

 

‘இலங்கையை நட்பு நாடு அல்ல என்று அறிவிக்க வேண்டும். அந்நாட்டின் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும். தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்‘ என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தெரிந்ததே.


இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்த மூன்று கோரிக்கைகளையும் நிராகரிப்பதாக கூறினார்.

 

மேலும், இந்தக் கோரிக்கைகளை ஏற்கும் கேள்விக்கே இடமில்லை. ஒரு மாநிலம் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை ஆதரித்தால் அந்த உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அதை அப்படியே ஏற்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை என்று கூறியிருந்தார்.


அவரது இந்த பதில் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. நேற்று மதுரை வந்த பழ.நெடுமாறனிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டனர்.

 

 

அப்போது, "அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் இந்தப் பேச்சை கடுமையாகக்  கண்டிக்கிறேன். ஈழத் தமிழர் பிரச்னையை வெறுமனே ஒரு மாநிலத்தின் பிரச்னைபோல பேசியிருப்பதன் முலம், அவர் மத்திய அமைச்சராக இருக்கவே தகுதி இல்லாதவர் என்பதை நிரூபித்துள்ளார். உடனடியாக அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்றார்.

 

http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13381

526460_444363332310467_539206857_n.jpg



தனி ஈழமா ? தனித் தமிழ் நாடா ? இந்தியாவே முடிவு செய் !

 

 

தமிழக சட்டமன்ற தீர்மானத்தை புறக்கணித்த இந்திய அரசுக்கு தமிழர்கள் நாம் கொடுக்கும் கடைசி வாய்ப்பு . இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளது. ஒன்று தமிழக சட்டமன்ற தீர்மானம் முன்மொழிந்த தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்புக்கு இந்தியா துணை செய்ய வேண்டும் அல்லது தமிழ் நாட்டை தனி நாடாக இந்தியா அறிவிக்க வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை இந்தியா தேர்வு செய்தாக வேண்டும்.


இனி தமிழர்களின் (மாணவர்களின் ) கோரிக்கையாக இதுவாகவே இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.