Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பகுதிகளில் அரச அராஜகம் நீடித்தால் வீண் விபரீதம் ஏற்படும்! - மூதூரில் இரா.சம்பந்தன் உரை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதிகளில் அரச அராஜகம் நீடித்தால் வீண் விபரீதம் ஏற்படும்! - மூதூரில் இரா.சம்பந்தன் உரை!!

 

'தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும், அவர்களை அச்சுறுத்தும் விதத்தில் அராஜகங்கள் புரிவதையும் அரச படைகளும், சிங்கள மக்களும் உடன் கைவிடவேண்டும். இல்லையேல் வீண்விபரீதங்களைச் சந்திக்க வேண்டி நிலை ஏற்படும்.'

 

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

 

மூதூர் பிரதேசத்துக்குட்பட்ட படுகாடு, முதலைமடு ஆகிய பகுதிகளில் தமிழ் மக்கள் விவசாயம் செய்த காணிகளை சிங்கள மக்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களைச் சேர்ந்த தமிழ் விவசாயிகளை நேற்று வெள்ளிக்கிழமை மதியம் கங்குவேலியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்தனர்.

 

இதன்போது இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு உரையாற்றும்போது மேலும் தெரிவித்தவை வருமாறு:

 

 

 

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் வீட்டுக் காணிகள், விவசாயக் காணிகள் நாளுக்குநாள் அரச படைகளினாலும், சிங்கள மக்களினாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் அரச தரப்பினரிடம் நாம் பல தடவைகள் எடுத்துக்கூறியும் அவர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

 

அதேவேளை, இந்த நில ஆக்கிரமிப்புக்கு எதிராக எமது தமிழ் மக்கள் அஹிம்சை ரீதியில் போராட்டங்களை நடத்தும்போது அவர்களை அச்சுறுத்தும் வகையில் அரச படையினர் அராஜகங்களை மேற்கொண்டு வருகின்றனர். தட்டிக் கேட்பார் எவரும் இல்லை என்ற துணிவில் அவர்கள் செயற்படுகின்றனர்.

 

பேரினவாதத்தின் இந்த நில ஆக்கிரமிப்பில் தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் அமைந்துள்ள படுகாடு, முதலைமடு ஆகிய பகுதிகளும் சிக்கியுள்ளன. இதனால் 2009 ஆம் ஆண்டிலிருந்து குறித்த பகுதிகளில் பல கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் விவசாயம் செய்யமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

 

இதன் வலி இங்கு வந்திருக்கும் எமது விவசாயிகளுக்குத்தான் தெரியும். இதனை உணர்ந்தும் எமது விவசாயிகள், தொழிலின்றி அமைதியாக இருக்கின்றார்கள். ஆனால், அரச படைகளுடன் சேர்ந்து சிங்கள மக்கள் எமது நிலங்களை விழுங்கி அட்டகாசம் புரிகின்றனர். இது இன ஒற்றுமைக்கு நல்லதல்ல என்பதை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.

 

எனவே, தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும், அவர்களை அச்சுறுத்தும் விதத்தில் அராஜகங்கள் புரிவதையும் அரச படைகளும், சிங்கள மக்களும் உடன் கைவிடவேண்டும். இதனை மீறி அரச படைகளும், சிங்கள மக்களும் செயற்படுவார்களாயின் வீண்விபரீதங்களைச் சந்திக்கவேண்டி வரும். அரசு இதனைக் கவனத்தில் கொண்டு இனியாவது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்' - என்று தெரிவித்தார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.

 

 

 

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவருமான க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினருமான சி.தண்டாயுதபாணி, கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜெ.ஜெனார்த்தனன், கு.நாகேஸ்வரன், கூட்டமைப்பின் மூதூர் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கங்குவேலி, பட்டித்திடல், மல்லிகைத்தீவு, மேன்காமம், மணற்சேனை, பாரதிபுரம் . கிளிவெட்டி, பெரியவெளி, புளியடிச்சோலை போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 

அன்று புலிகளுக்கு எதிராக செயற்பட்ட இங்கு பெயர் குறிப்பிடப்பட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இப்போது ஏன்  அங்கிலாய்க்கிறார்கள்????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ தமிழர்களுக்கு ஒரு கேள்வி: தமிழ் ஈழம் யாருக்கு? வடக்கே வாழும் தமிழர்களுக்கு மட்டுமா ? அல்லது சிங்கலநூடு இயந்து வாழும் தமிழர்களுக்கு சேர்த்தா ? அல்லது அணைத்து தமிழ் பேசும் மக்கள்குமா (தமிழ் முஸ்லீம்ஸ் இணைத்து ). வட தமிழர்கள் தான் விடுதலைஇகு போராடினார்கள் அவர்கள் இழந்தது கொஞ்சம் நஞ்சம் அல்ல அவர்களே தமிழ் ஈழம் பெறதகுதியானவர்கள் என நான் கருதுகிறேன். உங்களின் கருத்து என்ன ? எவ்வாறு உங்களின் நிலை எனது கருத்து ஒற்றுமைஇல் இருந்து விலகி இருக்கின்றது.

தமிழ் மக்கள் தான் போராடினார்கள் என்றாலும், ஈழமண்ணில் சிங்கள அரசுகளால் திட்டமிட்டு குடியேற்றப்படாத சிங்களவர்களும், தமிழரின் அல்லது பொதுக் காணிகளை  அடாத்தாக கைப்பற்றாத, பரம்பரையாக வாழ்ந்துவரும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் வாழலாம்.



ஈழ தமிழர்களுக்கு ஒரு கேள்வி: தமிழ் ஈழம் யாருக்கு? வடக்கே வாழும் தமிழர்களுக்கு மட்டுமா ? அல்லது சிங்கலநூடு இயந்து வாழும் தமிழர்களுக்கு சேர்த்தா ? அல்லது அணைத்து தமிழ் பேசும் மக்கள்குமா (தமிழ் முஸ்லீம்ஸ் இணைத்து ). வட தமிழர்கள் தான் விடுதலைஇகு போராடினார்கள் அவர்கள் இழந்தது கொஞ்சம் நஞ்சம் அல்ல அவர்களே தமிழ் ஈழம் பெறதகுதியானவர்கள் என நான் கருதுகிறேன். உங்களின் கருத்து என்ன ? எவ்வாறு உங்களின் நிலை எனது கருத்து ஒற்றுமைஇல் இருந்து விலகி இருக்கின்றது.

 

Sri Lankan navy wiping off Tamil From sign boards in Trincomalee which Tamils name as capital city of Tamil Eelam. Please send it to all Indian MLAs and ask them what Tamils should do ?

 

483454_441119495963419_1668103389_n.jpg



மும்மொழிகள் ஊடாக சமாதானம் எட்டப்படும் என்ற அப்துல் கலாம் அவர்களுக்கு சமப்ர்ப்பணம் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.