Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூட்டமைப்பின் அலுவலகத்தை தாக்கியவர்கள் யார்? தமிழர் தரப்பு என்ன செய்யலாம் ?

Featured Replies

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்களுக்காக கூட்டம் நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அங்கு தீடீரென வந்த கும்பல் ஒன்று சரமாரியாக கற்களை வீசி குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளது.


இந்த சம்பவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குழப்பம் விளைவித்த அனைவரும் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 



  • தொடங்கியவர்

தாக்குதல்களை நிறுத்துவதற்கு இடைக்கால நிர்வாகமே தீர்வு; கஜேந்திரகுமார் தெரிவிப்பு

 

சர்வதேசத்தின் மேற்பார்வையில் வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படுவதே இவ்வாறான தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கும், தமிழர்கள் பாதுகாக்கப்படுவதற்கும் ஒரே வழி. இந்தப் பொறுப்பையாவது சர்வதேச சமூகம் உணர்ந்து விரைவாகச் செயற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கிளிநொச்சியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் அவர்களைச் சந்திக்கச் சென்ற பொதுமக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

இந்தச் சம்பவத்தைத் தனியொரு சம்பவமாக நோக்க முடியாது. முஸ்ஸிம்கள் மீதும் இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சர்வதேச மட்டத்தில் இலங்கை கவனிக்கப்படும் ஒரு நாடாக உள்ள நிலையிலும்,  இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னரும் இவ்வாறான தாக்குல் சம்பவங்கள் இடம் பெறுகின்றன.

இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை வெறுமனே கண்டித்துக் கொண்டிருப்பதால் பயனில்லை. எங்களை தமிழர்களை பாதுகாக்க நாங்கள் வழிமுறைகளைத் தேட வேண்டும். இலங்கை அரசால் தமிழர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதைச் சர்வதேச சமூகம் உணர வேண்டும்.

பாதிக்கப்படும் சமுகம் சர்வதேசத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பொறுப்பைச் சர்வதேசம் நிறைவேற்ற வேண்டும்.

இறுதிப் போரில் இங்கு நடத்தப்பட்டுக் கொண்டிருப்பது இனப் படுகொலைதான் என்பதை நாம் பலமுறை சொல்லியும் சர்வதேசம் கேட்கவில்லை. சர்வதேசம் தனது பொறுப்பிலிருந்து தவறியது.

இனியாவது சர்வதேசம் தனது பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும். இங்கு தொடரும் தாக்குதல்களிலிருந்து தமிழர்களை பாதுகாக்கக் கூடிய ஒரேவழி இடைக்கால நிர்வாகம்தான்.

சர்வதேச சமுகம் தனது இந்தப் பொறுப்பை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=562521934631714750

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் நாடாத்தியவர்களின் ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட அடையாள அட்டை இராணுவ  புலநாய்வு பிரிவினரது என்றும் அவர் சம்பவம் நடந்த நேரம் தான் வந்தார் என இராணுவ தரப்பு மழுப்பியதும் யாவரும் அறிவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.