Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் படுகொலை ஆதாரங்களை வைத்து விரைவில் திரைப்படம் இயக்குவேன் - பாரதிராஜா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
bharathiraja-310313-seithy-150.jpg

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்குற்ற ஆதாரங்கள் என்பவற்றை வைத்து இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தான் விரைவில் ஈழத் தமிழர் தொடர்பான திரைப்படமொன்றை இயக்கவுள்ளதாக தெரிவித்தார். சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் மற்றும் பிற ஊடகவியலாளர்களும் இணைந்து இயக்குனர், உணர்வாளர் பாரதிராஜாவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். நேற்று இரவு நடைபெற்ற இச் சந்திப்பில், ஈழத்தில் தமிழர்களின் இன்றைய நிலை குறித்து பாரதிராஜாவுக்கு விளக்கப்பட்டது. பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) அழைப்பை ஏற்று லண்டன் வந்துள்ள பாரதிராஜா அவர்கள், இன்றைய தினம் நடக்கவுள்ள கலாச்சார நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளார்.

  

ஈழத்தில் நடந்த கொடுமைகள் பற்றியும், அங்கே நடத்தப்பட்ட இன அழிப்பு தொடர்பாகவும் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று புலம்பெயர் ஊடகவியலாளர்கள் கூட்டாக அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பாரதிராஜா அவர்கள் தான் விரைவில் ஈழத் தமிழர் தொடர்பான படத்தை இயக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே சாதிவெறி, இனவெறி, தொடர்பான பல படங்களை இயக்கி முன்னுதாராணமாகத் திகழ்கிறார்.

 

குறிப்பாக பாரதிராஜா அவர்கள் எடுத்த பல திரைப்படங்கள் விருதுகளையும் தேசிய விருதுகளையும் தட்டிச்சென்றுள்ளதும் , குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். புலம்பெயர் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் தமிழகத்தின் நிலைப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்குற்ற ஆதாரங்கள் சிலவும் பாரதிராஜாவிடம் ஊடகவியலாளர்களால் கையளிக்கப்பட்டது. அவை தான் எடுக்கவிருக்கும் திரைப்படத்திற்கு ஊன்றுகோலாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமே (IATAJ) இச் சந்திப்பினை மேற்கொள்ள அனைத்து வசதிகளையும், ஏற்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=79422&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.

 

ஈழ தமிழர்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் படம் எடுக்கும்போது அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து எடுக்கவேண்டும் என்று திரு பாரதிராஜா அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். 

ஈழத் தமிழர் பற்றி படம் எடுப்பேன் என்று புலம்பெயர் நாடுகளுக்கு வருகின்ற தமிழ்நாட்டு இயக்குனர்கள் சொல்வது வழமையான ஒன்றுதான்.

படம் எடுத்து அதில் உங்கள் இரத்தத்தில் தவிர்க்க முடியாது ஓடும் சினிமா மசாலாக்களைக் கலந்து அதை கேவலப்படுத்துவதிலும் பார்க்க எடுக்காமல் இருப்பது மேலானது.

படம் எடுப்பதாயின் அதை உரியமுறையில் டுயட்டுக்கள், காமம், காதல், கொச்சை நகைச்சுவை  ....... இன்றி பொறுப்புடன் எடுக்க வேண்டும்.

இதுவரை எடுக்க முயன்ற அனைவரும் யதார்த்தை பிரதிபலிக்க தெரியாமல் மிக மோசமாக தோற்றுவிட்டார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.